Showing posts with label மலேசியா உணவு. Show all posts
Showing posts with label மலேசியா உணவு. Show all posts

Monday, September 4, 2017

பாலக் ஜாலர் ஆப்பம் /மலேஷியன் கிரீன் நெட் பேன்கேக்


பாலக் ஜாலர் ஆப்பம் /மலேஷியன் கிரீன் நெட் பேன்கேக்
Malaysian Green net Pancake




Iron : Palak
Preparation Time : 30min
Cooking time : 30 min

இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையல் முத்துபேட் , காரைகால், நாகூர் போன்ற பல ஊர்களில் இது பிரத்திபெற்ற சமையல், மலேஷியாவிலும் இது ரோட்டர கடைகளில் மிகவும் பிரத்தி பெற்ற சமையல். திருமணம் பெருநாள் போன்ற நாட்களில் செய்வார்கள். இது சிறிது என் ஸ்டைலில் மாற்றி கீரை சேர்த்து செய்துள்ளேன்
Eid Special Malaysian Net Pancake 

மைதா – 200 கிராம்
முட்டை – 3
தேங்காய பால் – 200 மில்லி
சின்ன வெங்காயம் - 3
சோம்பு – அரைதேக்கரண்டி
உப்பு – சிறிது
பச்ச மிளகாய் ஒன்று
பாலக் கீரை – 100 கிராம்



செய்முறை
பாலக், சின்ன வெங்காயம் , பச்சமிளகாய்,சோம்பு சேர்த்து நன்கு அரைத்து ஜூஸை வடிக்கவும்.
மைதா , தேங்காய் பால் , முட்டை சேர்த்து நன்கு கலக்கவும், அரைத்து வைத்த ஜூஸையும் கலக்கவும்.மாவு ரொம்ப் தண்ணீயாகவும் இருக்க கூடாது கட்டியாக வும் இருக்க கூடாது. பதம் மீடியமாக இருக்கனும்.

//இந்தஜாலர் செய்வதற்கு தனியாக் ஐந்து அல்லது முன்று துளையுள்ள கப் விற்குது அதில் தால் இதை செய்ய முடியும். இந்த கப் இல்லாதவர்கள் பேப்பர் கப் அல்லது பாட்டல் முடியில் முன்று துளை போட்டு அதில் ஊற்றி சுட்டு எடுக்கலாம்.//

தவ்வாவை சூடு படுத்தி ஜாலர் கப்பில் கலக்கி வைத்த மாவை ஊற்றி பூ போல வேண்டிய டிசைனில் சுட்டு எடுக்கவும்.

 சுவையான ஜாலர் ஆப்பம் ரெடி வெஜ் அ சிக்கன் கொஃப்தாவுடன் அல்லது அசைவ அல்ல்து சைவ சால்னாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
 This is my entry for  #livogenironchef the Iron Chef contest on IndiBlogger. 

Palak jalar appam, Malaysian green net pancake
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, August 22, 2015

டவுன்பாண்டன் இலை கடல்பாசி - Pandan Leaves Agar Agar with Coconut Milk and Egg



டவுன்பாண்டன் இலை கடல்பாசி 08.07.15

பான்டன் இலை, தேங்காய் பால் மற்றும் முட்டை கடல்பாசி
 இஸ்லாமியர்கள் நோன்பு காலங்களில் விதவிதமாக கடல் பாசி வகைகள் செய்வோம்அதில் இது மலேசியாவில் பிரத்தி பெற்ற புது வகையான கடல்பாசிடவுன் பாண்டன் இலை சேருவதால் மிகவும் வாசனையுடன் இருக்கும்.

தேவையானவை

அகர் அகர் – 10 கிராம்
டவுன் பான்டன் இலை -  3 இன்ச் அகலம் , 5 இஞ்ச் உயரம் உள்ளது
கட்டி தேங்காய் பால் – 200 கிராம்
முட்டை ஒன்று
ப்ரவுன் சுகர்சர்க்கரை – 50 கிராம்
தண்ணீர் 300 மில்லி
பிஸ்தா இலாச்சி எசன்ஸ்இரண்டு துளி
https://www.facebook.com/jaleela.kamal

செய்முறை
அகர் அகரை தண்ணீரில் ஊறவைத்து அத்துடன் டவுன் பாண்டன் இலைய சேர்த்து நன்கு காய்ச்சவும்.இரண்டு வகை சர்க்கரை மற்றும் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து அத்துடன் தேங்காய் பாலையும் சேர்த்து அடிக்கவும்.

முட்டை தேங்காய் பால் கலவையை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கடல் பாசியில் சேர்த்து லேசாக கொதிக்க வைக்கவும்.

பிறகு ஒரு பெரிய தாம்பாள தட்டில் ஊற்றி டவுன் பாண்டன் இலையை எடுத்து விட்டு ஆறவைத்து வேண்டிய வடிவில் துண்டுகளாக போடவும்.


தட்டில் ஊற்றி ஆறவைத்ததும் கிழே கலர் + கடல்பாசி தனியாகவும், மேலே தேங்காய் பால் முட்டை கலவை தனியாக வும் செட்டாகி இரண்டு லேயராக கிழே டார்க் கலராகவும், மேலே லைட் கலராகவும் இருக்கும் ..பார்க்க அழகாக இருக்கும். குளிர வைத்து நமக்கு தேவையான வடிவில் துண்டுகள் போட்டு சாப்பிடவும்

இந்த நட்சத்திர கடல் பாசி எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது.




இஸ்லாமியர்கள் நோன்பு காலங்களில் விதவிதமாக கடல் பாசி வகைகள் செய்வோம், அதில் இது மலேசியாவில் பிரத்தி பெற்ற புது வகையான கடல்பாசி, டவுன் பாண்டன் இலை சேருவதால் மிகவும் வாசனையுடன் இருக்கும்.


அகர் அகர், கடல்பாசி, சைனா கிராஸ், நோன்பு கால‌ ச‌மைய‌ல், மலேசியா உணவு, முட்டை சமையல் 

சென்னை ப்ளாசா முகநூல் பேஜ் : லைக் செய்து ஷேர் செய்யுங்கள்

சமையல் அட்டகாசங்கள் முகநூல் பேஜ்

ஆங்கில வலைதளம் : cookbookjaleela

www.chennaiplazaki.com
www.chennaiplazaik.com

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, December 11, 2014

தெம்பே தவ்ஹு ப்ரய் - Tempe Tauhu Fry


Anchovies, Soy Beans & Tofu Fry

தெம்பே/தவ்ஹு ப்ரய்
சோயாபீன்ஸ் தோஃபு ப்ரய்
Malaysian Traditional food /Tempe/Tauhu Fry
தேவையான பொருட்கள்:

2 தவ்ஹு(சிறிதாக நறுக்கவும்) Tofu
2 தெம்பே (சிறிதாக நறுக்கவும்) soy bean
6 சிவப்பு மிளகாய் (அரைத்து) ground red chilli paste
தேவயான அளவு உப்பு/salt
1/2 கப் நெத்திலி கருவாடு/Dry Anchovies
1/2 கப் வேர் கடலை/Peanuts
1 உருளைகிழங்கு(நீட்டமாக நறுக்கவும்)/Potato
1 பெரிய வெங்காயம் (சிறிதாக நறுக்கவும்)/
4 துண்டு பூண்டு (இடிச்சு)/Garlic
2 டேபிள் ஸ்பூன் மிளகாய் சாஸ்/Chilli Sauce
1 டேபிள் ஸ்பூன் சக்கரை/sugar
தேவயான அளவு எண்ணெய்/oil



Tofu & Soy Beans


செய்முறை

முதலில்,  நறுக்கிய தவ்ஹு,தெம்பே,உருளைகிழங்கு,நெத்திலி கருவாடு,மற்றும் வேர் கடலையை எண்ணெயில் தனி தனியாக பொரித்து வைக்க வேண்டும்.

பின்னர், சட்டியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் மற்றும் இடிச்ச பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும். அதில், அரைத்த சிவப்பு மிளகாய், உப்பு, சக்கரை, மற்றும் மிளகாய் சாஸ் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

கடைசியாக பொரித்து வைத்த பொருட்களை அதில் கொட்டி, வறுவல் பதம் வரும் வரை நன்றாக கிளறி இரக்கவும்

இதை சாதததுடன் சேர்த்து சாப்பிடலாம்.



 One of my fb friend  Ayisha Who is living in Malaysia shared this Malaysian Traditional Recipe
Malaysia Traditional Food.
Tauhu Tempe Fry
Tofu Soy Beans Fry

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/