பாலக் ஜாலர் ஆப்பம் /மலேஷியன் கிரீன் நெட் பேன்கேக்
Malaysian Green net Pancake
Malaysian Green net Pancake
Iron : Palak
Preparation Time : 30min
Cooking time : 30 min
இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையல் முத்துபேட் , காரைகால், நாகூர் போன்ற பல ஊர்களில் இது பிரத்திபெற்ற சமையல், மலேஷியாவிலும் இது ரோட்டர கடைகளில் மிகவும் பிரத்தி பெற்ற சமையல். திருமணம் பெருநாள் போன்ற நாட்களில் செய்வார்கள். இது சிறிது என் ஸ்டைலில் மாற்றி கீரை சேர்த்து செய்துள்ளேன்
மைதா – 200 கிராம்
முட்டை – 3
தேங்காய பால் – 200 மில்லி
சின்ன வெங்காயம் - 3
சோம்பு – அரைதேக்கரண்டி
உப்பு – சிறிது
பச்ச மிளகாய் ஒன்று
பாலக் கீரை – 100 கிராம்
செய்முறை
பாலக், சின்ன வெங்காயம் , பச்சமிளகாய்,சோம்பு சேர்த்து நன்கு அரைத்து ஜூஸை வடிக்கவும்.
மைதா , தேங்காய் பால் , முட்டை சேர்த்து நன்கு கலக்கவும், அரைத்து வைத்த ஜூஸையும் கலக்கவும்.மாவு ரொம்ப் தண்ணீயாகவும் இருக்க கூடாது கட்டியாக வும் இருக்க கூடாது. பதம் மீடியமாக இருக்கனும்.
//இந்தஜாலர் செய்வதற்கு தனியாக் ஐந்து அல்லது முன்று துளையுள்ள கப் விற்குது அதில் தால் இதை செய்ய முடியும். இந்த கப் இல்லாதவர்கள் பேப்பர் கப் அல்லது பாட்டல் முடியில் முன்று துளை போட்டு அதில் ஊற்றி சுட்டு எடுக்கலாம்.//
தவ்வாவை சூடு படுத்தி ஜாலர் கப்பில் கலக்கி வைத்த மாவை ஊற்றி பூ போல வேண்டிய டிசைனில் சுட்டு எடுக்கவும்.
சுவையான ஜாலர் ஆப்பம் ரெடி வெஜ் அ சிக்கன் கொஃப்தாவுடன் அல்லது அசைவ அல்ல்து சைவ சால்னாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
This is my entry for #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.
This is my entry for #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.
Tweet | ||||||
2 கருத்துகள்:
பார்க்க நன்றாக இருக்கிறது. சுவைக்க வழியில்லை.
இதில் முட்டை சேர்க்காமலும் செய்யலாம் வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா