Showing posts with label பருப்பு வகைகள். Show all posts
Showing posts with label பருப்பு வகைகள். Show all posts

Monday, July 3, 2017

லெமன் தால் - Lemon Dal



அன்னபூரனா உணவகத்தில் காலை டிபன் பூரிக்கு கிழங்குடன் சட்னியும் இந்த லெமன் தாலும் கொடுப்பார்கள். கிழங்கை விட பூரிக்கு தால் சூப்பராக இருக்கும்.





லெமன் தால்
பாசி பருப்பு – 100 கிராம்
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
பச்ச மிளகாய் – 1 நீளவாக்கில் அரிந்தது
லெமன் ஜூஸ் – ஒரு மேசைகரண்டி
உப்பு தேவைக்கு
தாளிக்க
நெய் – ஒரு மேசைகரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் - - ஒன்று பொடியாக அரிந்ந்தது


செய்முறை 

பாசிபருப்பை கழுவி  தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்/
குக்கரில் ஊறிய பருப்பை சேர்த்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் ஒரு பச்சமிளகாய் சேர்த்து முன்று விசில் விட்டு இரக்கவும்
வெந்த பருப்பை லேசாக மசிக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து பருப்பில் சேர்த்து கலக்கி  லெமன் ஜுஸ் சேர்த்து கலக்கி இரக்கவும்.
பூரி சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, November 10, 2016

மொரு மொருன்னு முருங்கக்கீரை அடை




moringa leaves adai/ Moringa pancake
தேவையானவை
கடலை பருப்பு – 50 கிராம்
உளுந்து – 25 கிராம்
நவதாணியம் - 100 கிராம்
உப்பு
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
பச்ச மிளகாய்  – 3
இஞ்சி – ஒரு இன்ச் அளவு
முருங்கக்கீரை - ஒரு கப்
எண்ணை - ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணை
செய்முறை
நவதானியவகைகளை தனியாக 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பருப்பு வகைகளை தனியாக 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மிக்சியில் மிளகாய், இஞ்சி கருவேப்பிலை சேர்த்து அரைத்து அரிசி சேர்த்து அரைக்கவும்.   பருப்பு வகைகளையும் சேர்த்து கொர கொரப்பாக முக்கால்பதத்துக்கு அரைத்து எடுக்கவும்.அரைத்த மாவில் தேவைக்கு உப்பு சேர்த்து முருகக்கீரையை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்
.தோசை தவ்வாவில் தடிமனான தோசைகளாக சுற்றிலும் எண்ணை விட்டு இருபுறமும் மொருகலாக  சுட்டு எடுக்கவும்.
,இதற்கு புதினா சட்னியும் வெல்லமும் சூப்பர் காம்புனேஷன்.
.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, July 24, 2016

கடலைபருப்பு அடை - Channa Dal Adai







பொதுவாக அடை என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும்.பார்லி கொள்ளு அடை, பருப்படை, ஹெல்தி அடை என்று பல விதமாக சுடலாம். அதில் எங்க வீட்டில் எங்க டாடிக்கு ரொம்ப பிடிச்ச அடை கடலை பருப்பு அடை, நல்ல மொருகலாக கடலை பருப்பும் வெங்காயமும் சேர்ந்ததை சுடும் போது வரும் வாசனை மிக அருமையாக இருக்கும். இதற்கு தொட்டுகொள்ள வெரும் சர்க்கரை மற்றும் வெல்லம் போதும் இருந்தாலும் டாடிக்கு தேங்காய் புளி சட்னி, அம்மாவுக்கு பொட்டுகடலை துவையல் வைத்து சாப்பிட பிடிக்கும், ஆனால் எனக்கு பிடித்தது புதினா சட்னி.


கடலை பருப்பு அடை

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு - கால் படி
அரிசி - கால் படி
துவரம் ப்ருப்பு, பாசி பருப்பு, உளுந்து - தலா ஒரு தேக்கரண்டி
வெங்காயம் -  3 பொடியாக அரிந்தது
பச்ச மிளகாய் -  2 பொடியாக அரிந்தது
உப்பு - தேவைக்கு
காஞ்சமிளகாய் - 4
பொடியாக அரிந்த கொத்துமல்லி கருவேப்பிலை - கால் கப்
இஞ்சி பூண்டு விழுடு -  ஒரு தேக்கரண்டி


செய்முறை
அரிசி பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து காஞ்ச மிளகாய் சேர்த்து முக்கால் பதத்துக்கு கொர கொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவில் பொடியாக அரிந்து வெங்காயம், பச்சமிளகாய், கொத்துமல்லி புதினா, இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.


கணமான தோசைக்கல்லை காயவைத்து கட்டியாக ஒரு பெரிய கரண்டி அளவு ஊற்றி தேசைகளாக வார்த்து தேவைக்கு எண்ணை சுற்றிலும் ஊற்றி திருப்பி போட்டு இரண்டு பக்கமும் மொருகலானதும் இரக்கவும். எல்லா மாவுகளையை இதே போல் வார்த்து எடுக்கவும்.சுவையான சூப்பரான கடலைபருப்பு அடை ரெடி

Gayatri's Walk through memory lane hosted by Asiya

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam