பொதுவாக அடை என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும்.பார்லி கொள்ளு அடை, பருப்படை, ஹெல்தி அடை என்று பல விதமாக சுடலாம். அதில் எங்க வீட்டில் எங்க டாடிக்கு ரொம்ப பிடிச்ச அடை கடலை பருப்பு அடை, நல்ல மொருகலாக கடலை பருப்பும் வெங்காயமும் சேர்ந்ததை சுடும் போது வரும் வாசனை மிக அருமையாக இருக்கும். இதற்கு தொட்டுகொள்ள வெரும் சர்க்கரை மற்றும் வெல்லம் போதும் இருந்தாலும் டாடிக்கு தேங்காய் புளி சட்னி, அம்மாவுக்கு பொட்டுகடலை துவையல் வைத்து சாப்பிட பிடிக்கும், ஆனால் எனக்கு பிடித்தது புதினா சட்னி.
கடலை பருப்பு அடை
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - கால் படி
அரிசி - கால் படி
துவரம் ப்ருப்பு, பாசி பருப்பு, உளுந்து - தலா ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 3 பொடியாக அரிந்தது
பச்ச மிளகாய் - 2 பொடியாக அரிந்தது
உப்பு - தேவைக்கு
காஞ்சமிளகாய் - 4
பொடியாக அரிந்த கொத்துமல்லி கருவேப்பிலை - கால் கப்
இஞ்சி பூண்டு விழுடு - ஒரு தேக்கரண்டி
செய்முறை
அரிசி பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து காஞ்ச மிளகாய் சேர்த்து முக்கால் பதத்துக்கு கொர கொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவில் பொடியாக அரிந்து வெங்காயம், பச்சமிளகாய், கொத்துமல்லி புதினா, இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
கணமான தோசைக்கல்லை காயவைத்து கட்டியாக ஒரு பெரிய கரண்டி அளவு ஊற்றி தேசைகளாக வார்த்து தேவைக்கு எண்ணை சுற்றிலும் ஊற்றி திருப்பி போட்டு இரண்டு பக்கமும் மொருகலானதும் இரக்கவும். எல்லா மாவுகளையை இதே போல் வார்த்து எடுக்கவும்.சுவையான சூப்பரான கடலைபருப்பு அடை ரெடி
Gayatri's Walk through memory lane hosted by Asiya
Tweet | ||||||
9 கருத்துகள்:
அடையும் புதினா சட்னியும் சூப்பர்.இணைப்பிற்கு நன்றி.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கடலைபருப்பு அடையும், புதினா சட்னியும் மிக மிக அருமை.
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜலீலா.
படங்கள் எல்லாம் அழகு.
எங்கள் வீட்டிலும் தேங்காய் புளி சட்னி அரைப்போம். என் அப்பா, என் கணவருக்கு எல்லாம் அது தான் பிடிக்கும்.
Adai looks yummy!
ருசியான அடை குறிப்புக்கு பாராட்டுக்கள்..!
இரண்டுமே மிகவும் பிடிக்கும்... செய்முறைக்கு நன்றி சகோதரி...
பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!
Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html
கடலைப் பருப்பு அடை புதினா சட்னி... அருமையான காம்பினேசன்....
ஜலீலா.. பார்க்கவே இப்ப சுட்டு சாபிடணும்னு ஆசையா இருக்கு படங்களில் அடை.
புதினாச் சட்னி சூப்பர் காம்பினேசன்...:)
ஆமா ஏன் இங்கை நீங்க படி கணக்கில அளவு தந்திருக்கீங்க...:(
நான் எங்கை போக.. எந்தப் படில அளக்க..:)).
சூப்பர் ஜலீலா.. நல்ல குறிப்பு. மிக்க நன்றி...:)
த ம.3
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா