வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லனும்.
வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.
அடுத்து வியர்வையுடன் உள்ள சட்டையை எடுத்து அப்படியே பீரோவில் மாட்டாதீர்கள். அது அப்படியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்ததும் அதை மறுபடி மறுநாள் ஆபிஸுக்கு போட்டு செல்லாதீர்கள்/
பயங்கர கப் அடிக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவதால், எதிரில் நிற்பவர்களுக்கு அல்லது, நீங்கள் சரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக ஸ்மெல் வரும்.ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிரமம் பார்க்காமல் துவைத்து பயன் படுத்துவது நல்லது.
அடுத்து சாக்ஸ் சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள், வெளி நாடுகளில் ஃபுட் பவுடரே விற்கிறதாம் முடிந்தால் அதை வாங்கி கொள்ளுங்கள் , இல்லை என்றால் பியுட்டி பின்க் பான்ஸே போதுமானது.
தலையில் (cap)கேப்போ, சன் கிளாஸோ அணிந்து கொள்ளலாம்.
அடுத்து நைட் ஷிஃப்ட்க்கு போகிறவர்கள், மதியம் குளிக்க எழுந்திருக்கும் போது தண்ணீர் டீ போடும் வெண்ணீர் ஆகிடும், அவசரமா டாயிலட்டுக்கு போய் விட்டு பிறகு அவஸ்தையாகிடும்.ஒரு பக்கெட்டில் வெயில் காலம் வரை கொஞ்சம் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.
வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கீரிம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். பேர் அன்ட் லவுலி அழகு கிரீம் மட்டும் அல்ல நல்ல சன் புரட்க்ஷனும் கூட அதை கூட சிறிது போட்டு கொள்ளலாம்.அப்ப்டி நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதிங்க முகத்தில் கீழிருந்து மேலாக சர்குலர் மூமெண்டில் தடவுஙக்ள்.இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே கிழவர் தோற்றம் வந்துடும்.
வெயில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல், அந்த காலத்தில் பையன் ஊருக்கு போகிறான் என்றதும் அம்மா மார்கள் "ராசா வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து குளி ராசா என்பார்கள்" அது நிறைய பேருகு சிரிப்பு வரும். ஏன் சொல்கீறார்கள் என்று யோசிப்பது கிடையாது.
எண்ணை தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தனிகிறது.தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்ற்கும் நல்லது.
எண்ணை தேய்த்து குளிக்கிறேன்னு பாத்ரூம் முழுவதும் எண்ணையாக்கிடாதீங்க. அடுத்து நுழைபவரை விழ வைத்து மண்டைய பிளந்துடாதீங்க.
துணி துவைக்க ஊறபோட்டு விட்டு அபப்டியே மறந்து பிளாக்கில் மெய்மறந்துடாதீங்க.
கர்சீப், சாக்ஸ் போன்றவைகளை அப்ப குளியல் சோப் கொண்டே கசக்கி பிழிந்துடலாம், நல்ல மணமாக இருக்கும்.
நிறைய பேருக்கு வெயில் சூட்டினால் ஃபைல்ஸ், மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வரலாம்.
பேச்சுலர்கள் ஈசியாக சாலடுகள் தயாரித்து சாப்பிடலாம்
1. கேரட்,குகும்பர், வெங்காயம், தக்காளி, இவைக்ளை வட்ட வடிவமாக அரிந்து சால்ட், பெப்பர், லெமென் பிழிந்து சாப்பிடலாம் ஈசியன சாலட் உடனடி சாலட்.
2. அல்லது மாங்காய் சாலட் ஏற்கனவே குறிப்பில் கொடுத்து இருக்கேன்.
3.மாங்காய் வேர்கடலை சாலட், வேர்கடலையை ஊறவைத்து முடிந்தால் மைக்ரோவேவில் கூட வேகவைத்து கொள்ளலாம், அதில் கேரட், வெள்ளரி தக்காளியை பொடியாக அரிந்து சாட் மசாலா, தேன், லெமன் பிழிந்து சாப்பிடலாம்/
4. இதே போல் கொண்டைகடலையிலும் செய்யலாம்
Tweet | ||||||
67 கருத்துகள்:
நல்ல பயனுள்ள தகவல்......
(1)இரவு ஒரு பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அந்த தண்ணீர் குடிக்கலாம் .
(2) மருதாணி தலைக்கு வைக்கலாம்,
(3)வெயிலிருந்து வந்ததும் சீனி + உப்பு கலந்து குடித்தால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும் . தேவைப்பட்டால் லெமன் கலந்து.
(3)பெப்ஸி , கோக் குடிப்பதால் எந்த பயனும் இல்லை . அதுக்கு பதில் கேழ்வரகு கூழ் செய்து அதில் உப்பு அல்லது சீனி கலந்து குடிக்கலாம்.
இதனால் சர்கரை வியாதி , பிரஷ்ர் உள்ளவர்களுக்கு கோடையில் எநத பாதிப்பும் வராது.
மற்ற படி ஆல் இன் ஆல் சொல்வதும் ரொம்ப முக்கியம்...
நல்ல டிப்ஸ்!!
சூப்பர்ப் டிப்ஸ்....அருமை....
மிக உபயோகமான தகவல்கள்
நன்றி சகோதரி
விஜய்
நல்ல அருமையான டிப்ஸ்.
//துணி துவைக்க ஊறபோட்டு விட்டு அபப்டியே மறந்து பிளாக்கில் மெய்மறந்துடாதீங்க.//
இது எனக்கு தான்...வாசிங் போட்டுட்டு அப்டியே மணிகணக்கா இருந்துடுவேன்...நல்ல டிப்ஸ் அக்கா...நன்றிகள்...
அக்கா, வெயில் காலத்துக்கு மட்டும் அல்ல, அதில் சில டிப்ஸ் எல்லா காலத்துக்கும் பொருந்தும்.
Jaleela சொன்னது…
நீங்க எவ்வள்வு பெரிய பருப்பா இருந்தாலும் சாம்பார் வைக்க முடியாதே//////
உங்களாலே சாம்பார் வைக்க முடியாதுன்ன பின்ன யாரு வைப்பா? இதுவே எனக்கு பெருமை...என்ன யாரும் ஒன்னியும் பண்ண முடியாது...ஹ ஹ ஹா ...
நன்றி தங்கள் வருகைக்கும்..மற்றும் என் முதல் FOLLOWER நீங்க தான்...இதனால் சரித்திரத்தில இடம் புடிச்சிட்டீங்க..வாழ்த்துக்கள்
Good Tips..if you need to put more tips on cooking, general things i'll ready to help u...ok i'll give u my first tip on "How to make Hot water easily"
summa thanks for the tips..
ஆல் இன் ஆல் இதனை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டு வருகின்றீர்கள் ஜலி.
நல்ல நல்ல குறிப்புகள் சகோதரி...ஜெய்லானி சொல்வதுபோல் பெப்ஸி,கோக் குடி்பபதால் ஒரு பயனும் இல்லைதான். வாழ்க வளமுடன்.வேலன்.
ஆஹா!!!
எளிமையான குறிப்புகள்,
நன்றி.
நல்ல கருத்துக்கள் ஜலில்லா, மிகவும் அருமை. அண்களுக்கு சொன்னதில் ஒன்னை மட்டும் விட்டு விட்டீர்கள். இத்தனையும் செய்ய சோம்பலாக இருக்கக் கூடாதுன்னு. அதான் என்னைப் போன்றவர்களுக்கு ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கின்றது.
//துணி துவைக்க ஊறபோட்டு விட்டு அபப்டியே மறந்து பிளாக்கில் மெய்மறந்துடாதீங்க.//
நிஜமாவே பெரிய்ய ஜோசியர் நீங்க..
நன்றி..
நல்ல டிப்ஸ்..
very nice tips.. :)
பயனுள்ள ... மிகவும் முக்கியாமான தகவல் நன்றி..
இந்த ஆள் ஆல் இன் ஆல் தான் போங்கோ!
வெயில் தாளாமல் சினப்பு வருதே - இதுக்கு எதுனா சொல்லுங்கோ!!!
மாங்கா + அன்னாசி - இது ஜூடு இல்லையா?
நல்ல டிப்ஸ் ஜலீலா!
நல்ல பயனுள்ள டிப்ஸ்
//எண்ணை தேய்த்து குளிக்கிறேன்னு பாத்ரூம் முழுவதும் எண்ணையாக்கிடாதீங்க. அடுத்து நுழைபவரை விழ வைத்து மண்டைய பிளந்துடாதீங்க.//
அம்மணிகிட்ட வாங்கி கட்டிக்கிற இந்த ஒரு டிப்ஸ் தவிர ஒன்று கூட எனக்கு உதவியில்லை:)
நல்ல டிப்ஸ் அக்கா
ஆண்களே ஃபாலோபண்ணிக்கோங்க
அக்கா இதையும் பாருங்க
http://fmalikka.blogspot.com/2010/04/blog-post.html
ஜெய்லானி இத பற்றி எழுத இன்னும் நிறைய பதிவு இருக்கு அதுக்குள்ள அவசரம் (குடு குடுன்னு வந்து டிப்ஸ் கொடுத்துட்டீங்க.ஹி ஹி
இது ஏற்கவனே டிப்ஸில் கொடுத்து இருக்கேனே, மோரில் வெந்தயம். இது ரூமில் சமைக்காமல் இருப்பவர்க்ளுக்கு சரியாக இருக்கும்.
ராகி, ஓட்ஸும் அடிக்கடி சொல்வது தான், ஆனால் செய்து சாப்பிட சோம்பேறி தானப்படுவார்களே/
நாடோடி வாங்க வருகைக்கு மிக்க நன்றி
மேனகா, கீதா ஆச்சல் , ஆசியா, சித்ரா , மிக்க நன்றி
விஜய் வாங்க ரொமப் நாள் கழித்து வந்து இருக்கீங்க> கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
சீமான் கனி ஆமாம் அப்ப்டியே ஊற வைத்து விட்டால் துணி நாள்டைவில் இத்து போகிடும். இல்லை என்றால் சோப்பு ஒரு பக்கமா உறைந்து நின்னுடும்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
பருப்பு உங்கள் டிப்ஸ் சூப்பர், முதல் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
நானும் முடிந்த போது வருகிறேன்.
ஸாதிகா அக்கா அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ரொம்ப நாளா எல்லோரும் கேட்டு கொண்டதால் யோசித்து போட்டேன்.
வேலன் சார் வாங்க தொடர் வருகைக்கு மிக்க நன்றி.
எப்பவும் போல!! ;-)))
சை.கொ.ப. கருத்து தெரிவித்தமைக்கு மிக்கநன்றி
சுதாகர் சார் , சோம்பேறிகளை சொல்லி ஒன்றும் பிரொயோஜனம் இல்லை//
தொடர்ந்து வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.
கூல் பாய் வாங்க உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
ஜோசியர் எல்லாம் இல்லைங்க மனதில் பட்டது.
ஆனந்தி வருகைக்கு மிக்க நன்றி.
சகோ.ஜமால். கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
சினப்பு க்கு உடல் சூட்டினால் வருவது ஜூஸ் வகைகள் நிறைய குடிங்கோ,
அன்னாசி சூடு தான் அதில் தயிரை குடித்தால் ஈக்வல் ஆகிடும்
அதிரை அபூ வாங்க ரொமப் நாள் கழித்து வந்து கருத்து தெரிவித்து இருக்கீங்க வருகைக்கு மிக்க நன்றி.
சாருஸ்ரீ, மனோ அக்கா, மலிக்கா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
மலிக்கா பிறகு வரேன் பா,
ராஜ நட்ராஜன், உங்கள் முதல் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி. தேவை படுபவ்ர்களுக்கு உதவும்
Useful Tips... Thanx...
ஆஹா ஆண்ககளுக்காகவும் பல பயனுள்ள தகவல்களை தந்திருக்கிறீர்கள் . மிகவும் நன்றி
நன்றி பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு
வந்தாச்சி மின்மினி.. இனி கலாய்த்தல்தான்.
அழகோடு அழகு அழகான அழகு குறிப்புகள்.
மேடம் உங்க சமூக அக்கறைய பாக்கும் பொது எனக்கு உடபெல்லாம் புல்லரிச்சு போச்சு , என்னாத்துக்கு இவ்வளவு வேல , பேசாம காஸ்மீர் போய் எவனையாவது போட்டு தல்னம்னா , அங்க புடிச்சு உள்ள வசுருவாணுக , அங்க சில்லுன்னு இருக்கும் சாப்பாடு வேற பிரி , எப்பூடி ................... ( நம்ம வூட்டு பக்கம் வந்து போங்க (மங்கு இந்த பொழப்புக்கு மருந்த குடிச்சு சாவலாம்டா)
ஸ்ப்பா என்னா வெயிலு.. ஆங் ஜலீலா சொன்ன டிப்ஸ் டிரை பண்ணி பாக்கலாம் போல...
சுட்டு எரிக்கும் கோடையை சமாளிக்க நல்ல ஆலோசனை. well done.
அமீராகத்தில் அதிக குளிர், அதிக வெயில் இரண்டுமே ஒரு சுவாரசியம்.
"அடுத்து சாக்ஸ் சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள்..."
சரியாகச் சொன்னீர்கள்.
நைலோன் சொக்ஸ் போட்டு Allergy, ezema என அவதிப்படும் பலருக்கு சிகிச்சை செய்ய நேர்கிறது.
@@@மங்குனி அமைச்சர்-//என்னாத்துக்கு இவ்வளவு வேல , பேசாம காஸ்மீர் போய் எவனையாவது போட்டு தல்னம்னா , அங்க புடிச்சு உள்ள வசுருவாணுக , அங்க சில்லுன்னு இருக்கும் சாப்பாடு வேற பிரி , எப்பூடி ................... ( நம்ம வூட்டு பக்கம் வந்து போங்க (மங்கு இந்த பொழப்புக்கு மருந்த குடிச்சு சாவலாம்டா)//
மாட்டினா நீதான் போட்டுதள்ள சொன்னேன்னு சொன்னா போதும் அப்புறம் ரெண்டு பேறுமே வருஷம் பூரா உள்ள் களி தின்ன வேண்டியதுதான்.
ஃப்ர்தா போட்டு வாக்கிங் போக முடியவில்லை .டிப்ஸ் plz
அடடா... என்ன ஒரு பொறுப்புணர்ச்சி.... முதலில் எல்லா டிப்சுக்கும் நன்றின்னு ஒரு வார்த்தைல சொல்லி முடிக்க விரும்பல....
ரொம்ப சந்தோசமா இருக்கு... ச.. எம்புட்டு அக்கறை...
//சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள்//
சாக்ஸ் வெள்ளை வெள்ளையா ஆய்டாதா... முக்கியமா கருப்பு சாக்ஸ் போட்டா???
//ராசா வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து குளி ராசா//
இன்றும் அடிக்கடி போனில் உம்மா கேட்கும் கேள்வி இது.... எண்ணை தேச்சு குளிச்சியானு.... பதில் ஆல்வேஸ் நோ தான்.... என்ன பண்றது.... லீவ் வந்தாலே பொண்டாட்டிய விட்டு நகரவே முடில.... அட என்னங்க அப்புடி பாக்குறீங்க.... எங்க வீட்டுல ஏன் லேப்டாப்பை அப்புடி தான் சொல்றாங்க.... ஹி ஹி ;-)....
உனக்கு அதான் முதல் பொண்டாட்டி மாதுரி இருக்கு, எப்போ பாரு அதையே கட்டிட்டு அலுவுறேனு அப்பப்போ அம்முனி கூட கோச்சுப்பாங்க.... பாக்கலாம் அநேகமா எல்லாம் அவங்க வந்தப்புறம் சரி ஆகும் நினைக்குறேன்... இல்லேனா சோறு கிடைக்காதாமாம்... :-)
ஜெய்லானி said... //ரெண்டு பேறுமே வருஷம் பூரா உள்ள் களி தின்ன வேண்டியதுதான்//
கவலை படாதீங்க பங்காளி... கேஷ்மீருல களியெல்லாம் இல்ல... ரொட்டி தான் போடுவைன்கலாம்.... பயப்புடாம மங்க நம்பி எறங்குங்க.... ;-)
ஜலீலாக்கா நல்லா பாத்துகோங்க.... சந்தடி சாக்குல டிப்ஸ் அள்ளி வீசிட்டாறு நம்ம ஜெய்லானி... அதுவும் பின்னூட்டத்துலையே... அநேகமா அன்னிக்கி நீங்க சொன்னத நிரூபிக்கிற மாதுறியே இல்ல...? போட்டி போட்டுகிட்டு டிப்ஸ் தராங்கனு.. ஐயம்... அவுட் ஒப் தி கேம்... இப்போ தெரியுதா சகோ ஜெய்லானி போட்டி போடுறது யாரு கூடன்னு..... ஹ ஹ....
(ஏதோ நம்பளால முடிஞ்சது.... ;-))
மலர் என்ன சொல்ல வறீங்க,
நடக்கும் போது கால் சிக்குதா இல்ல்லை ரொம்ப வேர்குதா?
ஒரு பியுர் காட்டன் பர்தா வாஙகி தச்சிக்கஙக்.
அப்படி இல்லை ஷாட் சுடி காட்டனில் போட்டு கொண்டு , புர்காவுடன் நடங்க.
நல்ல கவர் செய்த சுடிதார் , தலையில் ஸ்கார்புடன் சுபுவிலோ, இல்லை இஷாவிற்கு பிறகோ நடக்கலாமே
அஹமது இர்ஷாத வருகைக்கு மிகக் நன்றி
பனித்துளி சங்கர் உங்கள் தொடர் வருகைக்கு மிகக் நன்றி
ஆர்.வி , சரவனன் குடந்தை வாஙக் வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்சி.
வாங்க மின்மினி உம்மா வீட்டுக்கு போய் சட வாரியாச்சா//
வருகைக்கு மிக்க நன்றி, உங்கள் பக்கம் பிறகு வருகிறேன்
அமைச்சரே ஒரு மாதிரியாதான் அலையுறீர். உங்கலுக்கு நீங்களே சூனியம் வைத்ததால் வந்த விதி போல , அதான் காஷ்மீர் கன்னியா குமாரின்னு புலம்பு ரீங்க ...
போங்க ஜெய்லாணி களி திங்க கூப்பிடுரார் பாருஙக்
தாஜுதீன் வாஙக் வருகைக்கும் க்ருத்து தெரிவித்தமைக்கும்மிக்க நன்றி.
அன்பு தோழா, வந்து பார்ட் பார்ட்டா பதில் சொன்னதுக்கு மிக்க நன்றி
//சாக்ஸ் வெள்ளை வெள்ளையா ஆய்டாதா... முக்கியமா கருப்பு சாக்ஸ் போட்டா???//
நீங்க என்ன சினிமாவில் நடிக்க மேக்கப்பா போட போறீங்க, இல்ல ஷூக்கு மேலே சாக்ஸ போட ப்போறீஙக்ளா?
கொஞ்சமா எடுத்து ஸ்பெரெட் செய்து தடவுங்க.
ஸ்டார்ஜன் வாஙக் முயற்சி செய்து பாருங்கள் எல்லாம் பயனுள்ளதா இருக்கும். தொடர் வருகைக்கு மிக்க நன்றி
ஜலீலா மேடம்...
வழக்கம் போல மற்றுமொரு பயனுள்ள பதிவு....
அதுவும், இது எங்களுக்கான ஸ்பெஷல் என்பதில் மிக்க மகிழ்ச்சி...
தொடர்ந்து நல்ல பல பதிவுகளை எழுதுவதால் உங்களுக்கு என் பாராட்டுக்கள்...
தலையில் ஸ்கார்ப் சுற்றி நடக்கும் போது கழுத்து பகுதியில் ரொம்ப வேர்த்து டாக்டருக்கு அடிக்ககடி மொய் வைக்க வேண்டி இருக்கு.
தலையை சுற்றி போடாதீங்க.
முக்கோன வடிவில் உள்ளதை கழுத்துக்கிட்ட பின் பண்ணி கொள்ளலாம்
வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
ஜொலிக்கும் பெண் சிற்பிகள்
அன்புடன்
சம்பத்குமார்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா