Saturday, April 17, 2010

தர்பூசனி ஜுஸ் - watermelen juice




கோடையில் குளு குளுன்னு இருங்க‌ ரொம்ப‌ தாக‌த்தை தீர்க்கும் த‌ர்பூஸ் உட‌லுக்கு ரொம்ப‌ ந‌ல்ல‌து.ரொம்ப‌ ப‌சியா உள்ள‌வ‌ர்க‌ள் தர்பூஸ் நாலு துண்டு சாப்பிட்டாலும் ந‌ல்ல‌ வ‌யிறு பில்லிங்கா இருக்கும், ப‌சி எடுக்காது,
தேவையான‌வை

தர்பூசனி துண்டுகள் = நான்கு

சர்க்கரை (அ) தேன் = சிறிது

மிளகு தூள் = ஒரு சிட்டிக்கை

சுக்கு தூள் = கால் தேக்கரண்டி

உப்பு = அரை சிட்டிக்கை

ஐஸ் கியுப்ஸ் = 6

செய்முறை
படத்தில் காட்டியுள்ள் துண்டு போல் நான்கு துண்டு தர்பூசனி எடுத்து கொள்ளவும்.
பழத்தை கழுவி, அதில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக அரியவும்.
மிக்சியில் ஐஸ்கியுப்ஸ்,சர்க்கரை,உப்பு,மிளகு தூள், சுக்கு தூள் பழம் அனைத்தையும் போட்டு நன்கு அடித்து பெரிய‌ துளையுள்ள‌ வ‌டிக‌ட்டியில் வ‌டித்து குடிக்கவும்.அப்ப‌டி வ‌டி க‌ட்ட‌ முடிய‌வில்லை என்றால், மிக்சியில் அடித்த‌தை ஒரு பாத்திர‌த்தில் ஊற்றிவைத்தால் அடியில் கொட்டைக‌ள் த‌ங்கிடும், மிக‌வும் க‌ல‌க்காமால் அப்படியே தெளிந்த‌ மாதிரி ட‌ம்ள‌ரில் ஊற்று ப‌ருக‌வும்.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ‌ அப்பாஆஆஅ என்ன‌ ஒரு புத்துண‌ர்வு.க‌ண்ணேல்லாம் குளிர்ந்து விடும்.

குறிப்பு
//த‌ர்பூசனி ந‌ல்ல‌ ஒரு நீராகார‌ம், தாக‌த்தை த‌ணிக்கும். இதை நாம் அப்ப‌டியேவும் சாப்பிட‌லாம்( அமைச்சரே இது எங்களுக்கு தெரியதான்னு கேட்பது புரியுது), பிள்ளைக‌ளுக்கு அப்ப‌டியே பெரிய‌ அரை நிலா சைஸில் பிடித்து சாப்பிட‌ ரொம‌ப் பிடிக்கும்.
இனிப்பில்லாத‌ த‌ர்பூச‌னி ப‌ழ‌த்தை சின்ன‌தா க‌ட் செய்து அதில் ச‌ர்க்க‌ரை சேர்த்து குளிர‌ வைத்து குடித்தாலும் ந‌ல்ல‌ இருக்கும்.
இதில் பால் சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம் பால் சேர்க்கும் போது வெரும் ஐஸ் கட்டி, சர்க்கரை மட்டும் போதும். மாதுளை சேர்த்தும் செய்து குடிக்க‌லாம்//

க‌வ‌னிக்க‌

//இந்தியாவில் தெருவிற்கு தெரு த‌ள்ளு வ‌ண்டியில் த‌ர்பூஸ் கிடைக்கும், ஆனால் தெருவில் வாங்கி சாப்பிட்ட‌ ஒரு சின்ன‌ குழ‌ந்தைக்கு எயிட்ஸ் வ‌ந்து விட்ட‌தாம்.எல்லாம் டெஸ்ட் செய்து பார்த்த‌தில் ,த‌ள்ளு வ‌ண்டிகார‌ர் த‌ர்பூஸ‌ க‌ட் ப‌ண்ணும் போது அவ‌ன் கையில் வெட்டு ப‌ட்டு வெட்டியதில் கையில் வெட்டி ரத்தம் வந்து , அந்த பழத்தில் விழுந்து இருக்கு, த‌ர்பூசில் ப‌ட்டுள்ளுள்ள‌து .அந்த‌ ப‌ழ‌த்தை தான் அந்த‌ குழ‌ந்தை சாப்பிட்டு இருக்கு, த‌ர்பூஸ் கார‌னுக்கு எயிட்ஸாம். இனி தெருவில் வாங்கி சாப்பிடுப‌வ‌ர்க‌ள் உஷாராக‌ வாங்கி சாப்பிடுங்க‌ள்.(இது இர‌ண்டு வ‌ருட‌ம் முன் நான் கேள்வி ப‌ட்ட‌து)///
மேலும் கோடைக்கு ஏற்ற ஜிலு ஜிலு பானம் கீழே உள்ள லிங்குகளில் பார்க்கலாம்

இதன் தோலை வீனாக்காமல் சாம்பார் வைக்கலாம். தர்பூஸ் வெட்டியதும் முழுவது தோலிலிருந்து வெட்டி எடுக்க முடியாது அதற்கு ஒரு மேசை கரண்டி கொண்டு வழித்தெடுத்தால் ஈசியாக வந்துவிடும்.

கேரட் ஜூஸ்


ரோஸ் மில்க்


முக்கனி ஜூஸ்

ரிச் ஃப்ரூட் பாலுதா

தர்பூசனியை கட் செய்து பிரிட்ஜில் வைத்தால் தண்ணீர் அதிகமாக விடும், அது கெட்டியாக கிரிப்பாக இருக்க அரிந்ததும் பீரிஜரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் தண்ணீர் விடாமல் கிரிப்பாக இருக்கும்

43 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

உப்பு ஓக்கே

மிளகு தூள் இது புதுசுங்கோ ஜூஸுக்கு.

---------

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍கடைசி வரில இப்படி பயமுறுத்துறீங்க‌

Jaleela Kamal said...

தெருவில் தள்ளு வண்டியில் வாங்கி சாப்பிடுபவர்கள் கவனமாக இருக்க்க தான் ஓ அந்த வரிய குறிப்பிடலையா?

வாங்க கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சகோ.ஜமால்

எப்போதும் ஜூஸில் சுக்கு தூள், மிளகு தூள், உப்பு , சேர்த்து தான் தயாரிப்பேன்.,

டேங்க் கரைத்தால் கூட மிளகு தூள் போடுவேன், சளி பிடிக்காமல் இருக்க/

SUFFIX said...

மசாலா பால் மாதிரி மசால ஜூஸா? சுக்குத்தூள், மிளகுத்தூள்...ரைட்டு ட்ரை பண்ணிடுவோம்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

பாக்கவே ஜிலு ஜிலுன்னு .. கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு..
ட்ரை பண்ணிற வேண்டியது தாங்க.. மிளகு ஐடியா சூப்பர்..நன்றி.
படமும் அருமை

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

பாக்கவே ஜிலு ஜிலுன்னு .. கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு..
ட்ரை பண்ணிற வேண்டியது தாங்க.. மிளகு ஐடியா சூப்பர்..நன்றி.
படமும் அருமை

Jaleela Kamal said...

ஆமாம் ஷபிக்ஸ் சூப்பராக இருக்கும், சுக்கு தூள் இல்லை என்றால் இஞ்சி கூட சேர்த்து அடிக்கலாம், ஆள இல்ல ஜூஸ,

நீண்ட நாள் சைனஸ் பிராப்ளத்தால் ஒரே தலை சுற்றல், மயக்கமா இருந்தது எனக்கு, (முன்பு)இத அடிக்கடி குடித்ததில் சரியாகி கண்ணுக்கும் ரொம்ப குளிர்ச்சியாகி, மயக்கமும் தெளிந்தது.

Jaleela Kamal said...

வாங்க ஆனந்தி நெசமாவே இத பார்த்தாலே ஒரு குளிர்சி சாப்பிட்டால் அத விட குளிர்ச்சிதான் குடிச்சி பாருங்க ஜுல்லுன்னு ....

Menaga Sathia said...

இப்பவே குடிக்கனும் போல் இருக்கே....

Ahamed irshad said...

குளிர்ச்சியா இருக்கு..

Ann said...

I too love this juice, so perfect for summer. Please forgive me for writing in English :(

Chitra said...

அக்கா, சிறிது இஞ்சி சேர்த்து குடிச்சு இருக்கேன். மிளகு தூள் அண்ட் சுக்கு பொடி, புதுசு.
குழந்தைக்கு AIDS என்பதை, மருத்துவர் யாராவது தான் தெளிவாக விளக்க வேண்டும். (maybe that child had an open wound in the mouth or in the hand) It is a new information for me.

Jaleela Kamal said...

மேனகா யாருக்குமே இத பார்த்தான் உடனே பசிக்கும். உடனே ஓடோடி வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

அஹமது இர்ஷாத் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

Ann, no problem, thanks for your valuable comment.

Jaleela Kamal said...

சித்ரா, ஆமாம் சுக்கு தூள், மிளகுதூள் சேர்த்து பல ஜூஸ் களில் இப்படி தான் செய்வது.

என் பிள்ளைகளுக்கு அடிக்கடி ஃபுரூட் ஜூஸ் செய்வதால் ஏதாவது முன்று பழம் சேர்த்து அல்லது இது போல் செய்வேன்,

அது ஒரு சின்ன விழிப்புனர்வு தான், ரோட்டோர கடைகளில் வாங்கினால் பார்த்து ஜாக்கிரதையா வாங்கி சாப்பிடனும். தொடர் வருகைக்கு மிக்க நன்றி ,இதற்காக வே தினம் குறிப்பு போடனும் போல இருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

கோடைக்கேத்த பானம்.கொஞ்சூண்டு ச்சாட் மசாலா மட்டும் தூவி சாப்பிட்டாலோ,ஜூஸில் கலந்தாலோ கூட டேஸ்ட்டா இருக்கும்.

ஸாதிகா said...

ஜூஸ் அருமை.கவனிக்க..அதைவிட அருமை.நல்ல எச்சரிக்கை.

சைவகொத்துப்பரோட்டா said...

ஜூஸ் நல்லா இருக்கு.

செ.சரவணக்குமார் said...

அடிக்கிற வெயிலுக்கு பொருத்தமான பதிவு அக்கா. கடைசி பாரா மிக முக்கியமான எச்சரிக்கையை விடுக்கிறது.

ஜெய்லானி said...

ஹி..ஹி... ஜலீலாக்கோவ் , ஸூஸு எல்லாம் சரிதேங் . தோல வச்சி எதுனா செய்ய முடியுங்கலா. ஏன்னா. நம்ம மங்கு தோல் மட்டுமே சாப்பிடும் அத்தாங் கேட்டேன்.ஹி..ஹி...

ஜெய்லானி said...

வெய்யில் காலத்தில் குளூ..குளூ ஜுஸ் அருமை.

சீமான்கனி said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ‌ அப்பாஆஆஅ என்ன‌ ஒரு புத்துண‌ர்வு.க‌ண்ணேல்லாம் குளிர்ந்து விட்டது.
//தெருவில் தள்ளு வண்டியில் வாங்கி சாப்பிடுபவர்கள் கவனமாக இருக்க்க///
அப்போ அக்கா நீங்களே உங்க கையால ஒரு கப் அனுப்பிருங்க...

Jaleela Kamal said...

ஜெய்லானி அத சொல்ல மறந்துட்டேன், தோல வச்சி நம்ம மேனகா சாம்பார் செய்துடுவாங்க, அமைச்சருக்கு அத கொடுத்துவிடலாம்.

Jaleela Kamal said...

அமைதி சாரல் நீங்கள் சொல்வது போல் செய்து பார்க்கிறேன்,

நான் மிக்ஸ்ட் ஃப்ரூட்டில் தான் சாட் மசாலா ஆட் பண்ணுவேன்.

Jaleela Kamal said...

ஸாதிகா நீங்கள் கருத்து தெரிவித்ததும் அருமை

Jaleela Kamal said...

ரொம்ப நன்றி சை.கொ.ப

Jaleela Kamal said...

வாங்க செ.சரவணன். வருகைக்கும் கருத்து தெரிவித்தமைகும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jaleela--//ஜெய்லானி அத சொல்ல மறந்துட்டேன், தோல வச்சி நம்ம மேனகா சாம்பார் செய்துடுவாங்க//

நல்ல வேளை ரசம் செய்வாங்கனு சொல்லலையே!!!

ஜெய்லானி said...

@@@Jaleela--//ஜெய்லானி அத சொல்ல மறந்துட்டேன், தோல வச்சி நம்ம மேனகா சாம்பார் செய்துடுவாங்க, அமைச்சருக்கு அத கொடுத்துவிடலாம்.//

குடுத்தால் வானான்னு சொல்லும். அதுவா வந்து ஓசில கேட்டா தரலாம். பத்து நாளைக்கு ஃபீரீஸர்ல ( கவனிக்க: ஃப்ரீஸர்ல ) வச்சி பின்ன தரலாம்.

Anonymous said...

//இந்தியாவில் தெருவிற்கு தெரு த‌ள்ளு வ‌ண்டியில் த‌ர்பூஸ் கிடைக்கும், ஆனால் தெருவில் வாங்கி சாப்பிட்ட‌ ஒரு சின்ன‌ குழ‌ந்தைக்கு எயிட்ஸ் வ‌ந்து விட்ட‌தாம்.எல்லாம் டெஸ்ட் செய்து பார்த்த‌தில் ,த‌ள்ளு வ‌ண்டிகார‌ர் த‌ர்பூஸ‌ க‌ட் ப‌ண்ணும் போது அவ‌ன் கையில் வெட்டு ப‌ட்டு த‌ர்பூசில் ப‌ட்டுள்ளுள்ள‌து அந்த‌ ப‌ழ‌த்தை தான் அந்த‌ குழ‌ந்தை சாப்பிட்டு இருக்கு, த‌ர்பூஸ் கார‌னுக்கு எயிட்ஸாம். இனி தெருவில் வாங்கி சாப்பிடுப‌வ‌ர்க‌ள் உஷாராக‌ வாங்கி சாப்பிடுங்க‌ள்.(இது இர‌ண்டு வ‌ருட‌ம் முன் நான் கேள்வி ப‌ட்ட‌து)//

அட கடவுளே..

-----------------------------------

குளு குளு தர்பூஸ் ஜூஸ் சூப்பர்.

பித்தனின் வாக்கு said...

ஜலில்லா பதிவு அருமை. நான் முழு தர்ப்பூசை வாங்கி வந்து ஒருத்தனாவே சாப்பிடுவேன்.

அப்புறம் நீங்க கேள்விப்பட்டது வதந்தி. இதுபோல வதந்திகளை நம்பாதீர். எய்ட்ஸ் கிருமிகள் 28 முதல் 29 டிகிரியிலதான் உயிர் வாழும். நம் நாட்டின் சூழ்னிலை குறைந்தது 32 ஆதலால் உடலை விட்டு வெளி வந்து சிறிது நேரத்தில் இறந்துவிடும். குளிர் ஊட்டப் பட்ட ஊசி அல்லது அறை வெப்ப நிலையில் உள்ள ஊசியின் மூலமாகத்தான் பரவும். அதுக்குத்தான் ஸ்டெரில்லைஸ் செய்வாங்க. காலரா, டீபீ. ஜாண்டீஸ் போன்ற வியாதிகள் ஈக்கள் மூலமாக பரவும். தெருவேர கடைகளில் சாப்பிட்டால் இந்த நோய்களையும் சேர்த்து வாங்கலாம். ஆனா எய்ட்ஸ் அப்படி இல்லை.

பாத்திமா ஜொஹ்ரா said...

வழக்கம் போல ஜில்லுனு அசத்திட்டீங்க அக்கா,அருமை

Kanchana Radhakrishnan said...

கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு..

மங்குனி அமைச்சர் said...

///அந்த‌ ப‌ழ‌த்தை தான் அந்த‌ குழ‌ந்தை சாப்பிட்டு இருக்கு, த‌ர்பூஸ் கார‌னுக்கு எயிட்ஸாம். இனி தெருவில் வாங்கி சாப்பிடுப‌வ‌ர்க‌ள் உஷாராக‌ வாங்கி சாப்பிடுங்க‌ள்.(////


சரியான செய்தி மேடம் , நன்றி , அப்புறம் உங்க பதிவ பாத்தா வுடன் கீழ போய் இரு தர்பூசணி ஜூஸ் சாப்ட்டு வந்தேன் , அவ்வளவு ஆசையா கிளபிடுச்சு உங்கபதிவு

Jaleela Kamal said...

ஜெய்லானி அமைச்சருக்கு இங்க பேச பயமா இருக்காம்,

நன்றி அம்மு மது

சுதாகர் சார் நாங்களும் அப்ப்ப்டி தான் முழு பழத்த வாங்ககி மொத்தத்துக்கு உட்கார்ந்து போட்டி போட்டு முடிப்போமுல்ல.

இந்த மேட்டர் நான் கேள்வி பட்டது மற்ற படி ஒன்றும் தெரியாது,


பாத்திமா வருகைக்கு மிக்க நன்றி

காஞ்சனா தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

அமைச்சரே உங்களுக்கு மட்டும் இல்ல இத பார்த்தா எல்லோருக்கும் உடனே சாப்பிடனும் போல இருக்கும். கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

GEETHA ACHAL said...

அருமையான தர்பூசணி ஜுஸ்...அனவருக்கும் பயன்படும் கவனிக்க பகுதி...நானும் இதனை மெயிலில் படித்து இருக்கின்றேன்...நன்றி...

Vikis Kitchen said...

ஜூஸ் சூப்பர் பா. மிளகு தூள் சேர்க்கும் பக்குவத்திற்கு நன்றி. பயனுள்ள தகவல்கள் எப்போதுமே தருகிரீர்கள்.

(Now saraswathy's blog comment is functional. Hope its due to some blogger problem. I am also facing the same sometimes.)

Priya Suresh said...

Juice looks tempting...paathathume kudikanam pola irruku...

r.v.saravanan said...

வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான டிப்ஸ்

நன்றி மேடம் என் தளத்திற்கு வருகை தந்ததற்கு

r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

Nithu Bala said...

Watermelon juice enaku roombha pidikum..ana nan konjam lemon juice add pannuven..watermelon thol la en patti sambar vaipangha..nan ethuvarai seidhathu illai..oru nal seiyanum..

Jaleela Kamal said...

நன்றி கீதா ஆச்சல்

நன்றி விஜி

நன்றி பிரியா

நன்றி சரவனன் சார் வருக்கைக்கு மிக்க நன்றி

நீத்து பாலா உஙக்ள் வருகைக்கும் மிக்க நன்றி, லெமென் ஜூஸ் நான் இதில் சேர்த்ததில்லை அடுத்த முறை முயற்சி செய்து பார்க்கிறேன்.

R.Gopi said...

ஜலீலா மேடம்...

இதில் சிறிதளவேனும் இஞ்சி தட்டி போடலாமா? அதுவும் சளி பிடிப்பதை தடுக்குமே!! சுவையும் கூடும்...

பதிலில் சொல்லவும்...

Umm Mymoonah said...

Looks very refreshing. Thank you for linking with Any One Can Cook.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா