| Tweet | ||||||
Showing posts with label கேழ்வரகு. Show all posts
Showing posts with label கேழ்வரகு. Show all posts
Thursday, February 11, 2016
இதய வடிவ கேழ்வரகு இட்லி & தக்காளி கேரட் சட்னி
ஆரோக்கிய சமையல்.
இதய வடிவ கேழ்வரகு இட்லி & தக்காளி கேரட் சட்னி
தேவையான பொருட்கள்
ஆச்சி மசாலா கேழ்வரகு மாவு - 200 கிராம்
இட்லிமாவு - இரண்டு குழிகரண்டி அல்லது அரிசிமாவு - 3 மேசைகரண்டி
உளுந்து - 100 கிராம்
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து மையாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த உளுந்துடன் ஆச்சி கேழ்வரகு மாவு, இட்லி மாவு, உப்பு சேர்த்து கலக்கி 8 மணி நேரம் பொங்க விடவேண்டும்.
பிறகு நன்குகலக்கி இட்லி தட்டில் எண்ணை அல்லது நெய் தடவி 10 நிமிடம் அவித்து எடுக்கவும்.
அவித்தது எடுத்ததும் பிஸ்கேட் கட்டரால் இதயவடிவில் அல்லது வேண்டிய வடிவில் கட் செய்து எடுக்கவும்
இதற்கு தொட்டுகொள்ள கொத்துமல்லி சட்னி அல்லது தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும்.
தக்காளி கேரட் சட்னி
அரைக்க
பழுத்த தக்காளி - 3 பெரியது
காரட் - ஒன்று
முழு சிவப்பு மிளகாய் - 2
ஆச்சி சிவப்பு மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறியதுண்டு (கால் இன்ச் சைஸ்)
வெல்லம் - சிறியது துண்டு ( கால் இன்ச் சைஸ்)
உப்பு - தேவைக்கு
தாளிக்க
எண்ணை - 1 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
செய்முறை
முதலில் அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்த்து எண்ணை கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு தண்ணீர் சிறிது வற்றியதும் இரக்கவும்.
ராகி இட்லியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
ஹெல்தி டயட் டிபன்.
டிப்ஸ்: சர்க்கரை வியாதி வந்தவுடன் தான் ராகி சம்பந்த பட்ட உணவுகள் சாப்பிடனும் என்றில்லை, குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கேழ்வரகு சமையல் உணவுகளை செய்து கொடுத்து சாப்பிட பழக்கனும், பெரியவர்களும் அடிக்கடி இது போல் ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம்
Labels:
கிராமத்து உணவு,
கேழ்வரகு,
சட்னி வகைகள்,
டயட் சமையல்
Monday, December 28, 2015
ராகி பீட்ரூட் தோசை & புதினா துவையல்
Healthy Diet Ragi Beet Dosa & Mint Chutney.
ராகி பீட்ரூட் தோசை & புதினா துவையல்
ராகி பீட்ரூட் தோசை & புதினா துவையல்
தேவையான பொருட்கள்
- ராகி மாவு - 100 கிராம்
- அரிசி மாவு - ஒரு மேசைகரண்டி
- ரவை - ஒரு தேக்கரண்டி
- துருவிய பீட்ரூட் - முன்று மேசைகரண்டி
- பொடியாக நருக்கிய பச்சமிளகாய் - ஒன்று
- உப்பு - தேவைக்கு
- தண்ணீர் -தேவைக்கு
- வெங்காயம் - இரண்டு மேசைகரண்டி பொடியாக நருகியது
- கொத்தும்மல்லி தழை பொடியாக அரிந்தது சிறிது
- நல்லெண்ணை அல்லது ஆலிவ் ஆயில் - தோசை சுட தேவையான அளவு
செய்முறை
- ராகி மாவுடன் எண்ணை தவிர மற்ற அனைத்துபொருகளையும் தேவைக்கு தண்ணீர்சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலக்கி 10 நிமிடம் ஊற்வைக்கவும்.
- பிறகு தோசை தவ்வாவில் தோசைகளாக வார்த்து சுற்றிலும் எண்ணை சிறிது ஊற்று முடி போட்டு இரணடுபக்கமும் வேக விட்டு எடுக்கவும்.
- இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல் மற்றும் இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.
- காலை டிபன் அல்லது இரவு டிபனுக்கு ஏற்றது,
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
| Tweet | ||||||
Saturday, October 11, 2014
கேழ்வரகு அடை - Ragi Adai
தினம் அரிசி மாவு தோசை சாப்பிடுவதற்கு பதில் இப்படி கேழ்வரகு அல்லது கோதுமை மாவில் தோசை சுட்டு சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
கேழ்வரகில் அயர்ன் சத்தும் நிறைய இருக்கிறது.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 150 கிராம்
கோதுமை மாவு - 50 கிராம்
ரவை - 1 மேசைகரண்டி
சிவப்பு பச்ச மிளகாய்
சின்ன வெங்காயம் - 10
கருவேப்பிலை - 5 இதழ் பொடியாக அரிந்தது
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசை கரண்டி
செய்முறை
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் அடை பதத்துக்கு கரைத்து 5 நிமிடம் ஊற்விடவும்.
ஒரு கரண்டி மாவு எடுத்து அடை போல ஊற்றவும்.
திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணை விட்டு சற்று மொருகவிட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையான சத்தான கேழ்வரகு அடை ரெடி
| Tweet | ||||||
Subscribe to:
Posts (Atom)









