தினம் அரிசி மாவு தோசை சாப்பிடுவதற்கு பதில் இப்படி கேழ்வரகு அல்லது கோதுமை மாவில் தோசை சுட்டு சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
கேழ்வரகில் அயர்ன் சத்தும் நிறைய இருக்கிறது.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 150 கிராம்
கோதுமை மாவு - 50 கிராம்
ரவை - 1 மேசைகரண்டி
சிவப்பு பச்ச மிளகாய்
சின்ன வெங்காயம் - 10
கருவேப்பிலை - 5 இதழ் பொடியாக அரிந்தது
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசை கரண்டி
செய்முறை
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் அடை பதத்துக்கு கரைத்து 5 நிமிடம் ஊற்விடவும்.
ஒரு கரண்டி மாவு எடுத்து அடை போல ஊற்றவும்.
திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணை விட்டு சற்று மொருகவிட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையான சத்தான கேழ்வரகு அடை ரெடி
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
6 கருத்துகள்:
நல்லதொரு சமையல் குறிப்பு...
வாழ்த்துக்கள் அக்கா...
அருமையான கேழ்வரகு அடை.
கேழவரகு அடை மட்டும் மூடி சுட வேண்டும் அப்போது வெள்ளையாக பின் பக்கம் இருக்காது.
மிக்க நன்றி சே.குமார்
கோமதி அக்கா நல்லதொரு டிப்ஸ் சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி
நல்ல குறிப்பு..இந்த அடை மாவுடன் முருங்கை கீரையை எண்ணெயில் வதக்கி சேர்த்து செய்வோம்..
ராஜி செந்தில் வருகைக்கு மிக்க நன்றி
இங்கு முருங்கைக்கீரை கிடைப்பது அபூர்வம், சேர்ப்பதாக இருந்தால் பாலக் மட்டும் தான் சேர்த்து சமைக்க முடியும்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா