இது அடையார் கிராண்ட் ஸ்வீட்ஸில் இந்த பச்சமிளகாய் தட்டை ரொம்ப பிரபலம்.தட்டை பலவகையான சுவையில் அவரவர் விருப்பப்படி செய்யலாம், நான் காரத்திற்கு பச்சமிளகாய் சேர்த்து செய்து இருக்கிறேன்
அரிசி மாவு = ஒரு ஆழாக்கு
உளுத்தம் பருப்பு = ஒரு மேசை கரண்டி முழுவதும்
கடலை பருப்பு = ஒரு மேசை கரண்டி முழுவதும்
பெருங்காயப்பொடி = கால் தேக்கரண்டி
பச்ச மிளகாய் = முன்று
உப்பு = தேவைக்கு
பட்டர் = ஒன்னறை மேசை கரண்டி
கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.உளுத்தம் பருப்பை கருகாமல் வருத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்.
பச்சமிளகாயை கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
அரிசிமாவில், பொடித்த உளுத்தம் பருப்பு, ஊறிய கடலை பருப்பு, உப்பு, பெருங்காயப்பொடி, அரைத்த
பச்ச மிளகாய், பட்டர் சேர்த்து நன்கு கலந்து கொஞ்சமாக தேவைக்கு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக போட்டு கொள்ளவும்.
ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டைகளை தட்டவும்.இதை கார்ன்பிளேக்ஸ் கவர் ரொம்ப சூப்பரா தட்ட வந்தது.
தட்டிய தட்டைகளை பொரித்தெடுக்கவும்.
இதன் சுவையும் மணமும் சொல்ல வார்த்தகள் இல்லை. இதுபோல் காஞ்ச மிளகாய், மிளகு என்று அவரவர் விருப்பமான கார வகைகளைசேர்த்தும் செய்யலாம், பெருங்காயத்துக்கு பதில் சோம்பு (அ) பூண்டும் செய்யலாம்.
18 தட்டைகள் வந்தது அவசரத்தில் உருட்டியதால், இன்னும் பொடியாக தட்டினால் 25 தட்டைகள் வரும்.
எனக்கு தெரிந்து இத்துடன் சிறிது கருவேப்பிலையும் சேர்த்து கொண்டால் இன்னும் மணமாக இருக்கும்.
23 கருத்துகள்:
ஷ்...ஆ....பார்க்கும் போதே நாக்கில் கார சுவை ஊறுதே! செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்.
ரேகா ராகவன்.
.
ஜலி அக்கா மணப்பாறை முர்க்கு மேரி சும்மா மொரு மொருநு கீதுக்கா
அக்கா...இதுதான்..தட்டை வடையா ....
சூப்பர்...
அடையார் கிராண்ட் ஸ்வீட்டில் பிரபலமான தட்டையை நல்ல விளக்கத்துடன் தந்து இருக்கின்றீர்கள்.
அக்கா நல்லா இருக்கு, இன்னும் மெல்லிசா தட்டனும். நீங்களே அவசரத்தில் தட்டியதான் வந்துவிட்டது என்று சொல்லிவிட்டீர்கள்.
எனக்கு 18 ல் ஒரு ஆறு தட்டைகளை அனுப்பி வையுங்கள். வார இறுதியில் நல்ல சைடு டிஷ் ஆக இருக்கும். நல்ல காரசாரமான பதிவு. நன்றி.
ரேகா ஆமாம் சும்மா சொல்ல கூடாது மணம் நேற்று முழுவதும் என்கைய விட்டுபோகல்.
உங்கள் கருத்த்துக்கு மிக்க நன்றி.
கருவாச்சி அய்யா அப்படியா கீது, ரொம்ப சந்தோஷம்ப்பா....
மணப்பாறை முருக்கா நா துண்ணதில்லையே,,,
பாட்டு தான் தெரியும் மணப்பாறை மாடு கட்டி மாயவரம்.. ஹி ஹி
ஆஹா தட்டை வடைக்கிட்டீங்களா?
சீமான் கனி
ஸாதிகா அக்கா ஆமாம் ஒரு வித்தியாசமா கொடுக்கனும் என்று தான் போட்டேன்
பித்தனின் வாக்கு ஆமாம் அவசரமா செய்தது.
ஆனா இதே செம்ம மணம், இன்னும் மெல்லியதான் ஜவ்வரிசி வத்தல் போல் தட்டனும்.
அடுத்த முறை மறுபடி செய்யும் போது வேறு ஏதாவது அயிட்டம் இதனுடன் சேர்த்து செய்யனும்.
எத்தன வேணும் நாலும் எடுத்துகக்லாம்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
ஆகா. பார்க்கவே சூப்பரா இருக்கே. ஊருக்கு போனவுடன் பொட்டி ஓப்பன் பண்றதுக்கு முன்னாடி உங்க சைட் ஓப்பன் பண்ணி காமிச்சிட்டுத்தான் மறுவேலை. இந்த வெகேசன்ல நிறைய வேலை இருக்கு அவங்களுக்கு. (எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம், ஆமாம்)
அளவை எடையில் சொன்னால் நல்லா இருக்கும். ஆழாக்கு நான் அறிந்ததில்லை.
சுட சுட சாப்பிட ஆசை
Super looks beautiful!!!!!!!
ஜலிலா உங்கள் தட்டை சூப்பர்
பச்சை மிளகாயில் தட்டையா??அவசியம் செய்து பார்த்துடனும்.நல்ல காரசாரமா இருக்கும்போல..
//ஆகா. பார்க்கவே சூப்பரா இருக்கே. ஊருக்கு போனவுடன் பொட்டி ஓப்பன் பண்றதுக்கு முன்னாடி உங்க சைட் ஓப்பன் பண்ணி காமிச்சிட்டுத்தான் மறுவேலை. இந்த வெகேசன்ல நிறைய வேலை இருக்கு அவங்களுக்கு. (எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம், ஆமாம்)//
நவாஸ் நீங்க போட்ட பதிவ பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சாச்சு, ஆனால் பல்லு உடையல.
முதலில் போனதும் என் பிலாக்கை காமிங்க அவர்கலுக்கு இன்னும் செய்யனும் ஆசை வருமே தவிர , அதிக வேலை என்று நினைக்க மாட்டார்கல்.
நாளும் நலமே தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
அளவு எப்படி சொல்வது. அரை கிலோ என்பது இரண்டறை ஆழாக்கு.
200 கிராம் போடுங்கள், கிளாஸ் அளவு என்றால் சின்னதா ஹோட்டலில் காபி கொடுப்பார்களே அதில் இரண்டு டம்ளர் வரும் இதே அளவு என்றால்
பச்சமிளகாயுடன் சிறிது கருவேப்பிலை சேர்த்து கொள்ளுங்கள். ருசி அபாரமாக இருக்கும்.
நன்றி சுவையான சுவை.
நன்றி கோகுலராணி
ஆமாம் மேனகா காரசாரம் என்று சொல்ல் முடியாது, பச்சமிளகாய் வாசம் தூக்கலாக இருக்கும் கார சாரம் என்றால் இன்னும் ஒரு பச்ச மிளகாய் சேர்க்கனும், இது சரியாக இருந்தது.
வீட்டுல இன்னைக்கே போட்டு பார்த்திடனும். நல்ல டிஷ்!!
ஷபிக்ஸ் செய்து பாருங்கள், நல்ல இருக்கும், செய்துட்டு கட தட்டை மாதிரி வரலையேன்னு வந்து கேட்ககூடாது.
இதை நான் பெரிய உருண்டைகள் போட்டு இருக்கேன் கொஞ்சம் சிறிய உருண்டையா போட்டு கொள்ளுங்கள்.
இன்னும் மெல்லியதாக தட்டி கொள்ளுங்கள்
Looks very crispy and delicious.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா