Saturday, November 14, 2009

புளிசாதம் - க‌ட்டு சாத‌ம் - 5 types of Tamarind Rice


இதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன்
ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக.
ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப்பு கொண்டைக்கடலையும் போட்டு செய்துள்ளேன்.








செய்முறை


அரிசி = கால் கிலோ



தாளிக்க



நல்லெண்ணை (அ) ஆலிவ் ஆயில் = இரண்டு மேசைகரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
கடலை பருப்பு = ஒரு தேக்கரண்டி
வேர்கடலை = இரண்டு மேசை கரண்டி
உளுத்தம் பருப்பு = அரை தேக்கரண்டி
பொருங்காயப்பொடி = கால் தேக்கரண்டி
கருவேப்பிலை = இரண்டு முன்று ஆர்க்
காஞ்ச மிளகாய் = இரண்டு
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
புளி = ஒன்ன‌றை எலுமிச்சை சைஸ்
வெந்த‌ய‌ம் = ஐந்து
எண்ணையில் வறுத்து பொடிக்க
எண்ணை = ஒரு தேக்கரண்டி
காஞ்ச‌ மிள‌காய் = 5
வெந்த‌ய‌ம் = கால் தேக்க‌ர‌ன்டி
த‌னியா = ஒரு தேக்க‌ர‌ண்டி




தேவையான‌ பொருட்க‌ள்




சாத‌த‌தை உதிரியாக‌ வ‌டித்து ஆற‌வைக்கவும்.



எண்ணையில் வ‌றுக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை வ‌றுத்து ஆறிய‌தும் பொடித்து வைக்க‌வும்.



புளியை லேசான‌ சுடு வெண்ணீரில் ஊற‌வைத்து க‌ட்டியாக‌ ஒரு ட‌ம்ள‌ர் வ‌ருவ‌து போல் க‌ரைத்து கொள்ள‌வும்.




தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து க‌ரைத்த‌ புளி த‌ண்ணீரை சேர்த்து உப்பு போட்டு கொதிக்க‌ விட‌வும்.



தீயின் அள‌வை சிறிது மீடிய‌மாக‌ வைத்து கொள்ள‌வும்.



பாதி கொதிக்கும் போது வ‌றுத்து பொடித்த‌ பொடியை சேர்த்து கொதிக்க‌ விட‌வும்.



ந‌ன்கு கொதித்து எண்ணை மேலே திரியும் அப்போது அடுப்பை விட்டு இர‌க்கி ஆற‌வைத்து , சாத‌த்தை சேர்த்து கிள‌ற‌வும். கிள‌றும் முன் சிறிது கூட்டை எடுத்து வைத்து விட்டு கிள‌ற‌வும்.




தேவைப்ப‌ட்டால் எடுத்து வைத்த‌தையும் சேர்க்க‌லாம் இல்லை என்றால் பிரிட்ஜில் வைத்து அடுத்த‌ முறை ப‌ய‌ன் ப‌டுத்த‌லாம்.



இந்த‌ புளி கூட்டை மொத்த‌மாக‌ நிறைய‌ கூட‌ செய்து வைத்து கொள்ள‌லாம். தேவைக்கு அப்ப‌ அப்ப‌ எடுத்து ப‌ய‌ன் ப‌டுத்தி கொள்ள‌லாம்






.இதற்கு தொட்டுகொள்ள வெரும் அப்பளம், மசால் வடை, முட்டை பிரை (கள்ளுகடை முட்டை)வருத்த கறி, சாப்பஸ் ம‌ட்ட‌ன் பிரை,சிக்கன் பிரை எல்லாம் பொருந்தும்.




குறிப்பு








இந்த‌ புளியோதுரையை ஐந்து வ‌கையாக‌ த‌யாரிக்க‌லாம்.









1. மேலே கூற‌ப‌ட்டுள்ள‌ முறை/
type - 1




2. காஞ்ச‌மிள‌காயிக்கு ப‌தில் மிள‌கு சேர்த்து செய்தால் அது மிள‌கோத‌ரை.type 2








3. காஞ்ச‌ மிள‌காய் + எள் சேர்ர்த்து செய்வ‌து எள்ளோத‌ரை type 3








4. மீதியான‌ சாத‌த்தில் அந்த‌ கால‌த்தில் இர‌வே அந்த‌ சாத‌ம் கெட்டு போக‌மால் இருக்க‌ புளியை உப்பு சேர்த்து க‌ரைத்து சாத‌த்தில் ஊற‌வைத்து விடுவார்க‌ள். அதை காலையில் எண்ணை + காஞ்ச‌மிளகாய்+ கடலை பருப்பு+ உளுத்த‌ம் ப‌ருப்பு+க‌ருவேப்பலை+ பெருங்காய‌ப்பொடி போட்டு தாளித்து சாத‌த்தில் க‌ல‌ந்து விடுவார்க‌ள்.
type - 4





அந்த‌ சுவையும் பிர‌மாத‌மாக‌ இருக்கும். ஆனால் ரொம்ப‌ சிர‌ம‌ம் இல்லாத ஈசியான புளிசாத‌ம்.













5. வ‌றுத்து பொடிக்க‌ முடியாத‌வ‌ர்க‌ள். type - 5.




தாளிக்கும் போது எண்ணை + காஞ்ச‌மிளகாய்+ கடலை பருப்பு+ உளுத்த‌ம் ப‌ருப்பு+க‌ருவேப்பலை+ பெருங்காய‌ப்பொடி தாளித்து விட்டு அதில் மிள‌காய் தூள், சிறிது வெந்த‌ய‌ தூள், கால் தேக்க‌ர‌ண்டி த‌னியாதூள் (கொத்தும்ம‌ல்லி தூள்) சேர்த்து ந‌ன்கு எண்ணை தெளிய‌ விட்டும் சாத‌ம் சேர்த்து கிள‌றலாம்.





இந்த‌ க‌ட்டுசாத்தின் ருசி ரொம்ப‌ அபார‌மாக‌ இருக்கும்.


எல்லோருக்கும் ரொம்ப‌ப்பிடித்த‌து. ரூர்,ப‌ள்ளி, ஆபிஸ் போகிற‌வ‌ர்க‌ளுக்கு ரொம்ப‌ ஈசியா த‌யாரித்து கொண்டு போக‌லாம், இது இர‌ண்டு நாள் ஆனாலும் கெட்டு போகாது.





உம்ரா , ஹ‌ஜ் போகிற‌வ‌ர்க‌ள் , இர‌ண்டு நாட்க‌ள் ர‌யில் ப‌ய‌ண‌ம் செல்கிற‌வ‌ர்க‌ளுக்கு ஏற்ற‌ சூப்ப‌ரான‌ புளியாதுரை.





இதில் க‌ட‌லைப‌ருப்பிற்கு ப‌தில் கொண்ட‌க்க‌ட‌லை போட்டு செய்வ‌து ஒரு ஹெல்தியும் கூட‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு ப‌ல்லில் போய் மாட்டி கொள்ள‌லாம‌ல் க‌டித்து சாப்பிட‌ தோதுவாக‌ இருக்கும்.










21 கருத்துகள்:

Saraswathy Balakrishnan said...

my favorite dear...yummy with fish fry or curry.yummy yum yum:)

SUFFIX said...

நம்மளோட ஃபேவரைட் ஆச்சே, இது கூட மாசி துவையலும் இருந்தா ஒரு வெட்டு வெட்டிடுவோம்.

S.A. நவாஸுதீன் said...

புளிச்சோறு, கட்டுச்சோறுன்னாலே குடும்பத்தோடு இரயில் பயணம்தான் நினைவுக்கு வருகிறது. ரொம்ப எளிமையா சொல்லி இருக்கீங்க.

சாருஸ்ரீராஜ் said...

எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவு .

R.Gopi said...

சூப்ப‌ர் புளியோத‌ரை....

ஜ‌லீலா இதுல‌ 4/5 வெரைட்டி வேற‌யா?

ம்ம்ம்... ஜ‌மாய்ங்க‌....

டைட்டில் கொஞ்ச‌ம் மாத்துங்க மேட‌ம்....

(5 types of Tramind Rice) to 5 types of Tamarind Rice)

ந‌ன்றி.....

Menaga Sathia said...

எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப பிடித்த சாதம்..

பாவா ஷரீப் said...

புளி சத்தத்தில் கடலை போட்டு சாப்பிடுறது செம டேஸ்டுக்கா

சீமான்கனி said...

ம்ம்ம்....சுப்பர்...அதுல கொஞ்சம் கோழி குருமா போட்டு சாப்ட்டா எனக்கு ரெம்ப பிடிக்கும்...நன்றி அக்கா..

சிங்கக்குட்டி said...

ரொம்ப நல்லா இருக்கு ஜ‌லீலா.

பாத்திமா ஜொஹ்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு jaleelaa sister

GEETHA ACHAL said...

300வது பதிவுக்கு நான் தான் முதல் வாழ்த்துகள் ...

எல்லா இடத்திலும் ஒரே கலக்கல் தான் போங்க அக்கா நீங்க..

சூப்பர்...இன்னும் பல நூறு ஆயிரம் பதிவுகள் இட வாழ்த்துகள்.

வீட்டில் அனைவரும் நலமா...

நாஸியா said...

அட்டகாசம் அட்டகாசம்

my kitchen said...

சூப்ப‌ர் புளியோத‌ரை,ரொம்ப நல்லா இருக்கு ஜ‌லீலா

Anonymous said...

புளியோதரை சூப்பர்.

பித்தனின் வாக்கு said...

புளியோதரை, எள்ளேதரை, ஆகா ஜலில்லா மாமி எப்படி இப்படி கலக்குகின்றீர்கள்.
புளிசாதம் நல்லா இருக்குங்க. அப்படியே பார்சல் பிளிஸ்.
நன்றி.

Malar Gandhi said...

My all time favourite...like the way you presented it with vathals..like it:)

Jaleela Kamal said...

1. சரஸ்வதி ஆமாம் இது எல்லோருக்கும் ரொம்ப பேவரிட்

2. ஷஃபிக்ஸ் இதுகூட நீஙக் மாசி துவையல் சேர்த்து சாப்பிடுவீஙக்ளா? இன்னும் நல்ல இருக்கும்.

3. நவாஸ் என் கட்டு சோறு மூலம் உங்கள் இரயில் பயணம் நினைவுக்கு வந்தது ஆமாம் இது போல் சுவாரஸ்யமான நிகழவு நினைக்க்கும்போது ரொம்ப நல்ல மனதுக்கு ரொம்ப நல்ல இருக்கும்.


4.சாருஸ்ரீ எங்க எந்த ஒரு அவசரத்துக்கும்ம்ம் கட்டுசாதம் புளிய்ஞ்சாதம் தான் சூப்பர்.

5. கோபி கருத்துக்கும், பிழையை சுட்டி காண்பித்ததற்கும் மிக்க நன்றி, திருத்தியாச்சு.

6. மேனகா நன்றி ரொம்ப பிடுக்குமா?ச‌ந்தோஷ‌ம்.

7. புளிசாத‌த்தில் க‌ட‌லை ரொம்ப‌ சூப்ப‌ரா இருக்கும்.

8. சீமான் க‌னி ஓ கோழி குருமா உட‌னா ஆச்ச‌ரிய‌மா இருக்கு..

9. ந‌ன்றீ பாத்திமா ஜொஹ்ரா
10. ந‌ன்றி சிங்க‌க்குட்டி

11. கீதா ஆச்ச‌ல் உங்க‌ல் வாழ்த்துக்கு மிக்க‌ ந‌ன்றி. என்ன‌ ஸ்பெஷ‌ல் போடுவ‌து300 வ‌து ப‌திவிற்கு என்று ப‌ய‌ங்க‌ர‌ யோச‌னை.விட்டில் அனைவ‌ரும் ந‌ல‌மே.

12.
ந‌ன்றி நாஸியா


13. ந‌ன்றி My kitchen

14. நன்றி அம்மு


15. சுதாக‌ர் சார் சின்ன‌ வ‌ய‌திலிருந்து மாமிக‌ளோடு வ‌ள‌ர்ந்த‌தால் இப்ப‌டி இஸ்லாமிய‌ ச‌மைய‌ல் + பிர‌மன‌ ஆத்து ச‌மைய‌ல். பார்ச‌ல் எத்த‌னைபாக்கெட் வேண்டும்.


16. Malar Gadhi , thank you for youcomment.
my children like to eat This way ( rice with vaththals).

பாத்திமா ஜொஹ்ரா said...

I am expecting more from you...........
really superb

Priya Suresh said...

Wow kalakuringaa Jaleela, romba arumaiya irruku tamarind rice..

Jaleela Kamal said...

பாத்திமா மிக்க நன்றி

Jaleela Kamal said...

Thank you Priya

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா