கேரட் = முன்று கிலோ
சர்க்கரை = ஒன்னறை கிலோ
ஸ்வீட்டன் கண்டென்ஸ்ட் மில்க் = 400 மில்லி டின்
பால் பவுடர் = 16 தேக்கரண்டி ( 5 டம்ளர் )
பாதம் = 100 கிராம்
பட்டர் = 125 கிராம்
நெய் = 100 கிராம்
உப்பு = ஒரு சிட்டிக்கை
ஏலப்பொடி = இரண்டு தேக்கரண்டி
பாதம்,பிஸ்தா,முந்திரி, கிஸ்மிஸ் = 200 கிராம் (பொடியாக அரிந்தது)
கேரட்டை துருவி பட்டரில் பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
பால் பவுடரில் 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 டம்ளராக வற்றும் வரை காய்ச்சி அதையும், ஏலப்பொடி, சிறிது நெய்யையும், பட்டரில் வதக்கிய கேரட்டில் ஊற்றி வேக விடவும்.
வெந்து பால் வற்றும் போது பாதத்தை வெண்ணீரில் போட்டு தோலை எடுத்து முற்றிலும் அரைக்காமல் துருவியது போல் மிக்சியில் போட்டு அதையும் சேர்த்து வேக விடவும்.
பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரை சேர்த்ததும் தண்ணீர் விடும், வற்ற நேரம் எடுக்கும்.
Tweet | ||||||
8 கருத்துகள்:
Never tried this halwa ..Looks very nice :)
//கேரட் = முன்று கிலோ
சர்க்கரை = ஒன்னறை கிலோ
ஸ்வீட்டன் கண்டென்ஸ்ட் மில்க் = 400 மில்லி டின்
பால் பவுடர் = 16 தேக்கரண்டி ( 5 டம்ளர் )
பாதம் = 100 கிராம்
பட்டர் = 125 கிராம்
நெய் = 100 கிராம்
உப்பு = ஒரு சிட்டிக்கை
ஏலப்பொடி = இரண்டு தேக்கரண்டி
பாதம்,பிஸ்தா,முந்திரி, கிஸ்மிஸ் = 200 கிராம் (பொடியாக அரிந்தது)//
இவ்வளவையும் சாப்பிட்டா எங்க பின்னூட்டம் போட !!!
//கேரட் = முன்று கிலோ
சர்க்கரை = ஒன்னறை கிலோ//
டையட் போல !!!!
ஜலி,எங்கள் வீட்டில் பெருநாளைக்கு கேரட் ஹல்வாதான்.கண்டென்ஸ்ட் மில்க் சேர்ப்பதற்கு பதில் ஸ்வீட் லெஸ் கோவா சேர்ப்பதால் அதிக அளவில் செய்யும் பொழுது அளவில் அதிகமாக கிடைக்கும்.சுவையும் தூக்கலாக இருக்கும்.
ஓட்டு போட மறப்பதே இல்லை,,,,
இனிய பக்ரித் நல்வாழ்த்துக்கள்,,,,
கேரட் ஹல்வா ரொம்ப பிடிச்ச ஒன்னு. பெருநாளைக்கு முன்னாடியே பார்க்க முடியாமப் போச்சே. சரி இனி வெள்ளிக்கிழமைதான் முயற்சி பண்ணனும்.
மேனகா விருதிற்கு மிக்க நன்றி.
சித்ரா இது என் அம்மாவீட்டு ஸ்பெஷல் ஸ்வீட் (கேரட் & பாதம் ஹல்வா)
ராஜ் குமார் டய்ட் இல்லை இது ஈத், கல்யாண விஷேஷத்தில் மொத்தமா இந்த அளவு செய்வது. இவ்வளவும் ஒரே ஆளுக்கு இல்லை அவ்வளவு தான் சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்த நான் பொருப்பல்ல.
ஸாதிகா அக்கா நாங்களும்ஸ்விட் லெஸ் கோவா தான் சேர்ப்போம், எனக்கு துபாயில் கிடைக்கல அதான் பால் பவுடர் + கண்டென்ஸ்ட் மில்க்.
போனி பேஸ் மறக்காமல் ஓட்டு போட்வதற்கு மிக்க நன்றி.
பக்ரீத் வாழ்த்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ.
சகோதரர் நவாஸ் பெருநாளுக்கு முன் பார்த்து இருந்தால் இத செய்து இருப்பீங்க.இல்லையா? செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா