இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
#Rajma, Cancer cure
#Rajma uppuma common south Indian Tiffin
#Rajma pizza for kids and lunch box-ராஜ்மா பிட்சா சாண்ட்விச்
#Rajma mini Burger for kids lunch box/ராஜ்மா மினி ஸ்லைடர்
#Rajma Soup for all age groups and weight loss
#Rajma masala (saurashtira style)ராஜ்மா மசாலா (சௌராஷ்டிர முறை) #Ramja puli kuzambu/ராஜ்மா புளிக்குழம்பு
#Rajma salad Weight loss/கலர்ஃபுல் ராஜ்மா சாலட்
#Rajma Paratha /ராஜ்மா பராத்தா
#Rajma cutlets for parties/ராஜபோக ராஜ்மா கட்லெட்
#Rajma Pulav common Festival Veggie Food for functions-ராஜ்மா புலாவ்
Thank you very much Aval Vikatan team for giving me the opportunity.
கேரட்டையும் தக்காளியையும் காஞ்சமிளகாய் உப்பு சேர்த்து அரைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள்வைககளை தாளித்து அரைத்து வைத்த தக்காளியை ஊற்றி நன்கு சுருள கிளறீ இரக்கவும்.
வறுத்த சேமியா - 3/4 கப்
லேசாக கருகாமல் வறுத்த பாசி பயிறு - 1/4 கப்
நெய் - 2 தேக்கரண்டி
ஜாதிக்காய் - ஒரு சிட்டிக்கை
பால் - அரை டம்ளர்
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
சர்க்கரை அல்லது ப்ரவுன் சுகர் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய முந்திரி - சிறிதளவு
ஒரு வயது குழந்தைக்கு இந்த சேமியா பொங்கலை கொடுக்கலாம் சப்பு கொட்டி கொண்டு சாப்பிடுவார்கள்
குக்கரில் பாசிப்பயிறை சிறிது நேரம் ஊறவைத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேகவைக்கவும்.
வெந்ததும் சேமியாவை சேர்த்து வேகவைக்கவும். 10 நிமிடத்திற்குள் சேமியா வெந்துடும்.
இப்ப பால்,சர்க்கரை,ஜாதிக்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசியாக முந்திரியை நெய் யில் வறுத்து சேர்த்து கிளறி பரிமாறவும்.
Semiya pongal
roasted Semiya - 3/4 cup roasted yellow moong dal - 1/4 cup ghee - 2 tspn milk - 1/2 cup nutmeg powder - pinch cardamom powder - 1/4 tspn sugar - 1/4 cup / brown sugar chopped cashew nuts - few
In a cooker add roasted yellow moong dal add 1 cup of water and close the cooker lid and cook the moong dhall, after pressure releases add roasted semiyaa and cook for 5 to 10 minutes. Now add milk ,sugar, nutmeg powder,cardamom powder and cook well. Finally roast the cashew nuts in ghee and pour it in semiya pongal and mix it well. Semiya pongal is ready you can serve it with methu vada (urad dal vadai).
காலை உணவோ அல்லது ,லன்ச் பாக்ஸ் கோ, அல்லது இரவு உணவோ ஈசியா செய்துடலாம் பாஸ்தா, குழந்தைகளுக்கும் இந்த வடிவம் அவர்களை சாப்பிட தூண்டும். இதை மட்டன் மற்றும் சிக்கன் அல்லது இறால் போன்றவையுடன் செய்து கொடுக்கலாம். இல்லை விருப்பமான காய்கறிகள் சேர்த்தும் பனீர் சேர்த்தும் செய்யலாம்.
பாஸ்தாவை தனியாக வேகவைத்து தண்ணீரை வடித்து சிறிது எண்ணை சேர்த்து பிசறி வைக்கவும்.
பாலக்கீரையை வேகவைத்து தண்ணீரைவடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி தண்ணீரை வடிகட்டவும்.
பாலக் கீரையுடன் வால்நட், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சமிளகாய், சேர்த்து அரைக்கவும்.
குக்கரில் எண்ணை+ பட்டர் சேர்த்து அரைத்த விழுது மற்றும்உப்பு சேர்த்து நன்கு கிளறி ,மட்டன் துண்டுகளை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வேகவைக்கவும்.
கீரை + மட்டன் ஒன்று சேர்ந்து சிறிது நேரம் வெந்ததும். வெந்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி மேலும் 5 நிமிடம் வேகவிட்டு இரக்கவும்.காலை டிபனுக்கு ஏற்ற சுவையான சத்தான மட்டன் பாலக் பாஸ்தா ரெடி.
கவனிக்க:மட்டனில் மிளகாய் தூள்கால் தேக்கரண்டி, மஞ்சள் தூள் சிட்டிக்கை, உப்புகால் தேக்கரண்டி, இஞ்சி பூண்டுகால் தேக்கரண்டி சேர்த்து வேகவைத்து கொள்ளவும்..இதை மீதியான பொரிச்ச கறியிலும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு பள்ளிக்கு எடுத்துசெல்ல சத்தான பாலக் மட்டன் பாஸ்தா.
( வீடியோ வாக எடுத்தததால் மெயின் பிச்சர் சரியாக வரவில்லை,)
My You tube channel please visit and like , comment, subscribe and share with your friends/ மேலே உள்ள லின்க் என் யுடியுப் சேனல் யார் யார் பார்க்கிறீங்கன்னு தெரியல என் சேனல் ஓப்பன் செய்ததும் பக்கத்தில் சிவப்பு கலரில் சப்ஸ்கிரைப்ன்னு இருக்கும் அதை கிளிக் செய்து சப்ஸ்கிரைப் செய்து விட்டு அதற்கு பக்கத்தில் இருக்கும் பெல் பட்டனையும் கிளிக் பண்ணிடுங்கள். இப்படி செய்தால் நான் போடும் பதிவுகள் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்கும்.
Please Subscribe My Channel and like, comment and share with your friends
மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் , எப்படி இருக்கு சரியா பேசி இருக்கேனான்னும் தெரியல , சில பேர் என் குரல் மெதுவாக இருக்கு என்று சொல்கிறார்கள், எனக்கு கேட்டா கரெக்டா இருக்கமாதிரி தான் தெரியுது. நீங்க பார்த்து கமெண்டில் நிறை குறைகளை சொன்னால் தான் எனக்கு சரி செய்து கொள்ள முடியும். தொடர்ந்து இந்த பிலாக்குக்கு வருகைதந்து ஆதரளித்தது போல என் சேனலுக்கும் தொடர்ந்து வந்து லைக் , கமென்ட் , சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டு கொள்கிறேன். ==========================================***
மறந்து போன பழங்காலத்து சிறு தாணிய வகைகள் மீண்டும் இப்போது அனைவரும் பயன் படுத்த ஆரம்பித்து உள்ளனர். ரொம்ப நல்ல விஷியம், அரிசி உணவை தவிர்த்து , குதிரை வாலி, சாமை, வரகரிசி, தினை, கம்பு, கேழ்வரகு என்று பயன் படுத்தினால் சர்க்கரை வியாதி, கேன்சர் வியாதி, ஹார்ட் பிராப்ளம் போன்ற பல வியாதிகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
இதில் நான் பயன் படுத்தி இருப்பது குதிரைவாலி Kuthirai vaali என்ற தாணியம், அந்த அளவுக்கு அரிசிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை மிகவும் நன்றாக இருந்தது.
மஞ்சள் பாசி பருப்பு சேர்ப்பதை விட கொஞ்சம் ஹெல்தியாக முழு பாசி பயிறு சேர்த்து பாருங்கள் இன்னும் சுவை அதிகமாக இருக்கும்.
இதில் பொங்கல் போல பல காய்களைபயன் படுத்தியும் செய்யலாம்.
மேலே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் வீடியோவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குதிரை வாலி அரிசி + பாஸ்மதி அரிசி - முக்கால் டம்ளர்
முழு பாசி பருப்பு - கால் டம்ளர்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
எண்ணை + நெய் - 4 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி பொடியாக
அரிந்த பச்சமிளகாய் - ஒரு தேக்கரண்டி துருவிய
இஞ்சி - அரை தேக்கரண்டி பொடியாக அரிந்து
வறுத்த முந்திரி - ஒரு மேசைகரண்டி
கருவேப்பிலை - 5, 6 இதழ்
செய்முறை
முழுபாசிபயிறை இரவே. அல்லது8 மணிநேரம் ஊற வைக்கவும்.
முழுபாசி பருப்பு மற்றும் குதிரை வாலி அரிசியை களைந்து ஊறவைக்கவும்.
குக்கரில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் ஊறிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து முன்று
விசில் விட்டு இரக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும், சிறிது நெய் விட்டு கிளறி இரக்கவும்.
கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகலை சேர்த்து வெந்த பொங்கலில் சேர்த்து கிளறி இரக்கவும்.
இதில் இன்னும் இனிப்பு பொங்கல், அடை, கொழுக்கட்டை, ரொட்டி போன்றவை தயாரிக்கலாம். நோன்பு கஞ்சி செய்தவதில் அரிசிகூட இந்த குதிரை வாலியும் பாதிக்கு பாதி சேர்த்து செய்யலாம்.இல்லை கஞ்சியே இந்த தாணியத்தில் செய்யலாம். நான் செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது. இதில் கிச்சிடி, முறுக்கு , சத்துமாவு, பாயசம் போன்றவை தயாரிக்கலாம்.
கவனிக்க: இந்த தாணியவகைகள் கிடைக்கும் இடம் சென்னையில் நீல்கிரீஸ் , ஒரு கிலோ 65 ரூபாய் என்று நினைக்கிறேன்.
ஆயத்த நேரம்: 10 நிமிடம் + ஊறவைக்கும் நேரம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு - 3 நபர்களுக்கு
இது வீடியோவாக எடுத்ததால் போட்டோ எடுக்கல ஸ்கீர்ன் ஷாட் தான் போஸ்ட் பண்ணி இருக்கேன்.
ஏற்கனவே முந்தய பதிவுகளில் தேங்காய் பவுடர் தயாரிக்கும் முறையை விளக்கி இருந்தேன் அந்த லிங்க் கிழே கொடுத்துள்ளேன். Cococnut Flour Coconut Bread
http://samaiyalattakaasam.blogspot.ae/2017/12/how-to-to-prepare-coconut-flour-for.html
http://samaiyalattakaasam.blogspot.ae/2017/12/paleo-bread-with-coconut-flour.html
தேங்காய் பவுடர் - அரை கப்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணை - 3 தேக்கரண்டி
உப்பு ஒரு சிட்டிக்கை
டார்க் சாக்லேட் - ஒரு மேசைகரண்டி
பட்டை பொடி - கால் தேக்கரண்டி
முட்டை - ஒன்று
பால் (அ) தண்ணீர் (அ) காபி - ஒரு மேசைகரண்டி
நட்ஸ் தேவைப்பட்டால்
தேன் சிறிது - மெயிண்டனன்ஸ் டயட்டில் இருப்பவர்கள் சேர்த்து கொள்ளலாம்.
செய்முறை
முட்டை தேங்காய எண்ணை யை ஒன்றாக அடிக்கவும்
டார்க் சாக்லேட்டை உருக்கி சேர்த்து அடிக்கவும்.
பட்டை பொடி, தேங்காய் பவுடர் , பேக்கிங் பவுடர் உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்துசலித்து கொள்ளவும்.
முட்டை கலவையில் சிறிது சிறிதாக தேங்காய் பொடி கலவையை சேர்த்து கலக்கி தேவைக்கும் சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து கலக்கவும். காபி சுவை பிடித்திருந்தால் காபியாக கலக்கி சேர்த்துகொள்ளலாம்
ஓவனை பிரீ ஹீட் செய்வது போல குக்கரில் அடியில் உப்பை கொட்டி பரப்பி விட்டு சிறு தீயில் வைத்து பிரீஹீட் செய்யவும்.
கலக்கிய கேக் கலவையை ஒரு கேக் ஓவன் அல்லது கண்ணாடி டம்ளர் அல்லது பேப்பர் கப்பில் ஊற்றி உள்ளே வைக்கவும்.
ஒரு முக்கியமான விஷியம் இதில் கவனிக்க வேண்டியது குக்கர் உள்ளே இருக்கும் வாசரை எடுத்து விடவேணும் ,
வாசரை எடுத்து விட்டு மூடி போட்டு வெயிட் போடாமல் சிறு தீயில் 20 நிமிடம் ஓவனில் வைப்பது போலவே வைத்து வேகவைக்கவும்.
சுவை கொஞ்சமும் மாறாதா ஓவன் கேக் போலவே இருக்கும்.
உங்கள் விருப்பத்துக்கு என்ன ப்ளேவர் கேக் வேண்டுமானாலும் வைக்கலாம்.
சுவையான தேங்காய் பூ கேக் ரெடி..
Coconut Flour Paleo Cake Without oven cooker method
போன பதிவில் தேங்காய் பூ மாவு செய்யும் முறையை சொல்லி இருந்தேன் இப்போது அதை வைத்து அருமையாக பிரட், பேன் கேக் பிஸ்கட் போன்றவை தயாரிக்கலாம்
தேங்காய் மாவு - ஒரு கப்
முட்டை - 3
தேங்காய் எண்ணை - 2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை சிட்டிக்கை
பட்டை பொடி - கால் தேக்கரண்டி
பாதாம் பவுடர் - சிறிது தேவைபட்டால்
nigella seeds or fennel seed lhalf tspn - ( optional)
முட்டையை நன்கு நுறை பொங்க அடித்து அதில் தேங்காய் எண்ணை தேங்காய் பூ சக்கை, பேக்கிங் பவுடர், உப்பு , பட்டை பொடி. சேர்த்து ஓவனில் 200 டிகிரியில் செட் செய்து 20 நிமிடம் பிரீஹீட் செய்து 25 லிருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
பேலியோவில் இல்லை என்றால் சிறிது நட்ஸ் பவுடர் சேர்க்கலாம்
முக நூல் மற்றும் பிலாக்கர் அறுசுவை தோழி ஹுசைனாம்மா பேலியோ ரெசிபிகள் பற்றி பேசும் போது இப்படி ஈசியாக செய்யலானு ரெசிபி லின்க் கொடுத்து அவர்களும் செய்து போட்டு இருந்தார்கள் , நானும் ச்ய்துசில பொருடகள் ஆட் செய்து பார்த்தேன் ரொம்ப நல்ல வந்ததும்
இதற்குதொட்டுகொள்ள்பக்கஉணவுஏதும்தேவைபடாது, வேண்டுமானால். தக்காளிசட்னி, ஊறுகாய்தொட்டுசாப்பிடலாம்.இல்லை வெங்காய முட்டை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
//இந்த பதிவ படிக்கும் ரங்கமணிகளே உங்கள் தங்கமணிகளுக்கு கண்டிப்பாக இந்த டிப்ஸை சொல்லலுங்கள்.// எல்லா பெண்களும் வெளியில்...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.