600 ஆவது பதிவு
பிளாக் ஆரம்பித்து முன்று வருடம் முடிவடைகிறது,
ஊக்கப்படுத்தி கருத்து தெரிவிக்கும் வலை உலக தோழ தோழியர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
1 சமையல் , அசைவம், சைவம், டயட் சமையல், இனிப்பு,அயல் நாட்டு உணவு,பிலிப்பைனி, குஜராத்தி, அரபிக்
2. முத்தான துஆக்கள் -பணியாளர்களை நேசித்தல்
////எல்லாப் பெண்களுமே மகாராணிகளே.....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்;
''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்..?''
முஸ்லிம் கேட்டார்;
'உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா...?
அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா...?''
அவசர அவசரமாக மறுத்தார் அந்த ஆங்கிலேயர்...
''அதெப்படி முடியும்..? அவர்கள் மகாராணியாயிற்றே....!''
முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்;
''எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே.
அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.
எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குலுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.''
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
''உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட,
இரும்பு ஊசியால் தன்னுடைய தலையைக் காயப்படுத்திக்கொள்வது சிறந்ததாகும்." /////
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
3. கர்பிணி பெண்களுக்கு
4. குழந்தை வளர்பு:
5. மருத்துவ குறிப்பு
6. பெண்கள் பகுதி
7. ஆண்களுக்கு டிப்ஸ்
8. ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ்
9. சென்னை ப்ளாசா கடை விபரம் புது மாடல்கள் , தனியாக இந்த் வெப்சைட்டில் http://www.chennaiplazaik.com/ போட்டு இருக்கேன். பேன்சி அயிட்டம் எல்லாம் இனி இந்த வலையில் போட்டு கொண்டு இருக்கிறேன். வலை உலக தோழ தோழியர்கள் இதில் பாலோவராக இனைந்து கொள்ளும் படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
10 அவார்டு அன்பான தோழ தோழியர்கள் கொடுத்த அவார்டுகள். அனைவருக்கு் மிக்க நன்றி.
நேரமின்மையால் பல லிங்க்குகள் இங்கு என்னால் இனைக்க முடியல.
11. ......... ?????
என்னைப்பற்றி
அனைவருக்கும் மிக்க நன்றி.
டிஸ்கி: என் பதிவுகள் பூஸாருக்கு டேஷ் போர்டில்வரலையாம், இன்னும் யார் யாருக்கு என் பதிவுகள் வரன்னன்னு தெரியல தேவை படுபவர்கள் என் பிலாக்கை அன் பாலோ செய்துட்டு மீண்டும் பாலோ செய்து கொள்ளுங்கள்.
Tweet | ||||||
50 கருத்துகள்:
சுவையான அலசல்தான்.
வாழ்த்துக்கள் (4ஆம் ஆண்டு ஆரமபம்)
சென்னை பிளாசா, ஃபாலோ ஆகிறேன் இன்ஷா அல்லாஹ்!
600 வாழ்த்துகள் :)
"எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே"
அருமை ...
congratulations
அஸ்ஸலாமு அலைக்கும்,
மிகுந்த மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட என் பிரார்த்தனைகள்....
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
600 வாழ்த்துக்கள்! எனது தளத்தைப் பார்த்து கருத்துரைமைக்கு மிக்க நன்றி சகோ! மேன்மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். Advance புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நன்றி சகோ!
அஸ்ஸலாமு அலைக்கும்
வாழ்த்துக்கள்.
அடடா ஜலீலாக்கா.... எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ நான் பியிண்ட் ஆகிறேன்......:))
என்னாது 600 ஆவது பதிவோ?
நான் என் 100 ஆவது பதிவுக்கே எக்கோ வரும்படியாக சவுண்டு விட்டுக்கொண்டிருக்கிறேன்... நீங்க அடக்கொடுக்கமாக 600 ஆவது பதிவு போட்டிருக்கிறீங்க.. அவ்வ்வ்வ்வ்:)).
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
நான் ரிமூவ் பண்ணியும் போட்டுப் பார்த்திட்டேன் ஜலீலாக்கா எனக்கு உங்கள் தலைப்பு மேலே வருகுதேயில்லை...
அதுசரி இந்த “ஹலால்” என்பதன் சரியான தமிழ்க் கருத்து என்ன ஜலீலாக்கா? உணவுக்கும் ஹலால் உணவென்பார்கள்.. அப்போ புரிந்ததுபோல இருந்துதெனக்கு, ஆனா இப்போ ஹலால் இல்லாத பெண்கள் எனப் போட்டிருக்கிறீங்க.. அதனால குழம்பிட்டேன்..
Congrats jaleelaa-kka!
ஆஹா...
நைஸ் ரீவைண்ட் ஜலீலா... அதற்குள் 600 பதிவுகளா? என் மனமார்ந்த வாழ்த்துகள்..
இதற்கு பின்னணியில் இருக்கும் உங்கள் உழைப்பிற்கு ஒரு சலாம் போடுகிறேன்...
//"எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே"//
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்...
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.. எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு...
600 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.ஜலீலா.உங்கள் ஆங்கில ப்ளாக்கின் பெயரான குக்புக் என்ற பெயர் நல்ல பொருத்தம்.தொடர்ந்து சாதனை படையுங்கள் தோழி.
600-ஆ!! ஆஆஆஆஆ....
பிரமிப்பா இருக்கு. வாழ்த்துகள்!!
600th post,congrats Jaleela.
600 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ஜலீலா.
600ஆவது பதிவிற்கு என் இனிய வாழ்த்துக்கள் ஜலீலா!!
நல்ல அலசல், வாழ்த்துக்கள்!!!!
congrats Jalee.
பாராட்டுக்கள் அக்கா
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
///'எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே.
அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.///
நச் பஞ்ச்..
600 ஆவது பதிவிர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரம்
நீங்கள் இது போன்று 6000 பதிவினைத் தொட அன்புடன் வேண்டுகின்றேன்
நட்புடன் நலம் நாடும்
சம்பத்குமார்
சகோதரி அதிரா,
உங்கள் மீது அமைதி நிலவுவதாக..
ஹலால் என்பது ஒரு பொதுவான வார்த்தை. இதற்கு (இஸ்லாத்தில்) அனுமதிக்கப்பட்டது என்று பொருள். அதுபோல ஹராம் என்றால் அனுமதி இல்லாதது என்று பொருள்.
இஸ்லாம், வாழ்வின் பல்வேறு அங்கங்களுக்கும் எவை எவை ஹலால், ஹாரம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
நன்றி.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
அறுநூறாவது பதிவிற்கும், புதிய தளத்திற்கும் வாழ்த்துக்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
தொடர்ந்து பயனுள்ள நல்ல சமையல் குறிப்புகள் மட்டுமின்றி வேறு பல பயனுள்ள சிறந்த ஆக்கங்களையும் அளித்து வருதல் கண்டு மிகுந்த மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட என் பிரார்த்தனைகள்...
சகோ நிஜாமுதீன் முத்லாவதாக வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க ந்ன்றி + சந்தோஷம்.
சென்னை ப்ளாசா பாலோவராக ஆட் ஆகியமைக்கும் மிக்க நன்றி.சகோ நிஜாமுதீன்
தொடர் ஊக்கத்துக்கும் , வருகைக்கும் மிக்க நன்றி சகோ ஜமால்
நன்றி தோழி கீதா
வா அலைக்கும் ஸலாம் சகோ ஆஷிக்
உங்கள் வாழ்த்துக்களுக்கும் , பிராத்தனைகளுக்கும் மிக்க நன்றி
திண்டுக்கல் தனபாலன், தொடர் வருகைக்கும், கருத்து தெரிவித்த்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
வா அலைக்கும் ஸலாம் ஆயிஷா உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
//அடடா ஜலீலாக்கா.... எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ நான் பியிண்ட் ஆகிறேன்......:))
என்னாது 600 ஆவது பதிவோ?
நான் என் 100 ஆவது பதிவுக்கே எக்கோ வரும்படியாக சவுண்டு விட்டுக்கொண்டிருக்கிறேன்... நீங்க அடக்கொடுக்கமாக 600 ஆவது பதிவு போட்டிருக்கிறீங்க.. அவ்வ்வ்வ்வ்:)).
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
///
அதிரா சோடா ஊற்றி தெளித்து விட்டேன்
100 பதிவு என்றாலும் உங்களுடையது 500 பதிவுக்கு சம்ம் போல் தான்///
அதிரா தொடர்ந்து உங்கள் நகைச்சுவை கமெண்ட் மூலம் பாராட்டி, கருத்து தெரிவிப்பமைக்கு மிக்க நன்றி.... (உஙக்ள் கமெண்ட்களை நான் விரும்பி படிப்பேனாக்கும்........
////நான் ரிமூவ் பண்ணியும் போட்டுப் பார்த்திட்டேன் ஜலீலாக்கா எனக்கு உங்கள் தலைப்பு மேலே வருகுதேயில்லை///
///இது ஏன் என்று எனக்கு புரியாத புதிராக இருக்கு அதிரா////
பரவாயில்லை என்னை தேடி வரூவீர்கள் தானே...
நன்றி மகி
/அதுசரி இந்த “ஹலால்” என்பதன் சரியான தமிழ்க் கருத்து என்ன ஜலீலாக்கா? உணவுக்கும் ஹலால் உணவென்பார்கள்.. அப்போ புரிந்ததுபோல இருந்துதெனக்கு, ஆனா இப்போ ஹலால் இல்லாத பெண்கள் எனப் போட்டிருக்கிறீங்க.. அதனால குழம்பிட்டேன்../
அதிரா இதற்கு சகோ ஆஷிக் ஏற்கனவே பதில் கொடுத்துள்ளார்.
நானும் சொல்லி கொள்கிறேன்
உணவாக இருந்தாலும், உண்ண தகுந்த உண்வுகள் மட்டுமே. அதே போல் எல்லாவற்றிலும் ஹலால் கடை பிடிக்கனும், (பெண், வியாபாரம்,வாங்குதல் ,விற்றல் )
ஹராம் – தடுக்க பட்டவைகள், அனுமதிக்க படாதவை
ஹலால் - அனுமதிக்க பட்டவை,
வாங்க கோபி, நீண்ட இடைவெளிக்கு பிற்கு வந்து இருக்கீங்க மிக்க நன்றி.
கோபி ஆரம்பத்திலிருந்து என் பதிவுகளுக்கு சபாஷ் என்று சொல்லி ஊக்கப்படுத்தி , அழகான கருத்துகளை இட்டிருக்கிறீர்கள்.
தொடர் வருகைக்கும், உங்கள் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா//
//600-ஆ!! ஆஆஆஆஆ....
பிரமிப்பா இருக்கு. வாழ்த்துகள்!!//
மிக்க நன்றி ஹுஸைனாம்மா. இத்தனை பதிவு போடுவேன் என்று நானே எதிர் பார்க்கவில்லை. தொடர் ஊக்கத்துக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி பிரியா
மிக்க நன்றி காஞ்சனா
உங்கள் வாழ்த்துக்கு மிக்க ந்ன்றி மனோ அக்கா
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தமிழ்த்தோட்ட யூஜின்
வாங்க சம்பத் குமார், உங்கள வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
6000 ஆயிரமா.... .. இதுவே போதும் என்று நினைக்கிறேன்....
வாங்க விஜி எப்படி இருக்கீங்க உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி விஜி
வாஅலைக்கும் ஸலாம் சகோ பாஸித் , பிசியிலும் வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி......
///அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
தொடர்ந்து பயனுள்ள நல்ல சமையல் குறிப்புகள் மட்டுமின்றி வேறு பல பயனுள்ள சிறந்த ஆக்கங்களையும் அளித்து வருதல் கண்டு மிகுந்த மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட என் பிரார்த்தனைகள்//
வா அலைக்கும் ஸலாம்
சகோ.முகம்மது ஆஷிக் உங்க்ள் பின்னூட்டமும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்சி,உங்கள் பிராத்தனைகளுக்கு மிக்க ந்ன்றி
600 th post.... Congratulations!!!!
Hope to see your 1000th post soon.
600 க்கு வாழ்த்துக்கள் ஜலி.ரொம்ப சந்தோஷமாக உள்ளது
வாழ்த்துகள் ஜலீலாக்கா..
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சித்ரா/
வாங்க ஸாதிகா அக்கா உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப சந்தோஷம்.
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சாந்தி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா