தேவையான பொருட்கள்
கருப்பட்டி குழி பணியாரம்
பச்சரிசி – அரை டம்ளர்
மைதா – அரை டம்ளர்
கருப்பட்டி வெல்லம் – முக்கால் டம்ளர்
துருவிய தேங்காய் – இரண்டு மேசை கரண்டி
பல்லாக நருக்கிய தேங்காய் – இரண்டு மேசை கரண்டி
ஏலக்காய் பொடி – அரை தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
வருத்த முந்திரி – 6 ( பொடியாக அரிந்து கொள்ளவும்)
முட்டை – ஒன்று (விருப்ப பட்டால்)
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
செய்முறை
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து அத்துடன் மைதா ,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.அரைத்த மாவில் பொடியாக அரிந்த் தேங்காய், முட்டை,துருவிய தேங்காய் ஏலக்காய் பொடி இட்லி சோடா கலந்து வைக்கவும்.
கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கரைந்த்தும் அதை கலக்கிய மாவில் வடிகட்டவும்.குழி பணியார சட்டியை காய வைத்து எண்ணை + நெய் சிறிது ஊற்றி மாவை முக்கால் பாகம் இருக்குமாறு ஊற்றவும்.தீயின் தனலை மிதமாக வைக்கவும், இல்லை என்றால் கரிந்து விடும்.இரண்டு முன்று நிமிட்த்தில் வெந்து விடும்,ஒரு பக்கம் வெந்த்தும் திருப்பி போட்டு மறுபக்கமும் வேகவிட்டு இரக்க்வும்.
சுவையான கருப்பட்டி குழிபணியாரம் ரெடி.
காலை உணவிற்கு(காரம்+ இனிப்பு) குழிபணியாரத்துடன் சுண்டலும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். குட்டியாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.எத்தனை உள்ளே போகுதுன்னே தெரியாது செட்டி நாடு ஸ்பெஷல் குழிபணியாரம்.இது என் சுவைக்கு ஏற்ப செய்துள்ளேன் சுவைத்து மகிழுங்கள்
தேங்காய் பல்லாக கீறிய தேங்காயாக இருந்தால் இன்னும் நல்ல இருக்கும், இதில் துருவிய தேங்காய் சேர்த்துள்ளேன்.
Tweet | ||||||
19 கருத்துகள்:
ருசியான கருப்பட்டி பணியாரம் .எங்கப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் .என்னிடம் அந்த பணியார சட்டி இல்லை வாங்கி செய்து பார்க்கிறேன்
romba superr..
சூப்பராக இருக்கு அக்கா
நல்ல பகிர்வுகள் நண்பரே வாழ்த்துக்கள்
எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன் (3) மெக்காலேயின் பல்லக்கு
ரெஸிபி சூப்பர் சகோதரி...
ஆனால் எங்கள் ஊரில் கருப்பட்டி வெல்லம்தான் கிடைக்காது...
வாழ்க வளமுடன்
வேலன்.
அருமையாக இருக்கு ஜலி.
Super paniyarams,rendu yeduthukalama..
படங்களுடன் அருமையாக இருக்கு ரெசிப்பி.
பார்க்க அழகாய்த்தான் இருக்கு ஜலீலஅ !
ஏஞ்சலின் அப்ப்பாவுக்கு ரொம்ப பி்டிக்குமா செய்து கொடுங்கள்
கல்பனா தொடர் வருகைக்கு மிக்க்நன்றி
நன்றி பாயிஜா
கோவிந்த ராஜ் வருகைக்கு மிக்கநன்றி
நம்ம வீட்டிலும் குழிப் பணியாரம் உண்டு. கருப்பட்டி போடுவார்களோ தெரியவில்லை. இல்லாவிட்டால் சொல்கிறென்.
வாங்க வேலன் சார் ரொம்ப நாள் கழித்து என் பதிவு பக்கம் மிக்க சந்தோஷம்
மிக்க நன்றி ஸாதிகா அக்கா
பிியா இரண்டு இல்ல் பிளேட்டோடு எடு்த்துக்கஙக
உங்கள் கருத்துககுக்கு மிக்க நன்றி ஆசியா
தொடர் வருகைக்கு மிக்க நன்றி ஹேமா .
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா