Showing posts with label மட்டன். Show all posts
Showing posts with label மட்டன். Show all posts

Thursday, March 2, 2023

வறுத்து அரைத்த மிளகு சோம்பு ஈரல் #hemoglobinincreasefood





Blood increase food

என்  சமையல் அட்டகாசம் பிலாக் பார்த்து சப்போட் செய்து கொண்டு இருக்கும் அனைவரும்,  என் சேனலையும் பார்த்து சப்ஸ்கிரைப் செய்து லைக் கமெண்ட் செய்து சப்போர்ட் செய்யும் படி கேட்டு கொள்கிறேன் 

ஆத்தாடி எம்புட்டு ருசி இப்படியும் இத செய்யலாமா?#hemoglobinincreasefood
   வறுத்து அரைத்த மிளகு சோம்பு ஈரல்


#Bloodincreasefood

   • An Usual  Daily R...   #liverfryrecipe #iiraleppadiseyvathu #liverfry #samaiyal_attakaasambyjaleelakamal இது ஹிமோ குளோபின் அளவு கம்மியாக உள்ளவர்கள் இந்த ஈரல் ம அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் ஹிமோ குளோபின் குறைவாக உள்ள ஆண்களும் பெண்களும் சாப்பிடலாம் கண்டிப்பா ஹிமோகுளோமபின் அளவு அதிகரிக்கும்.

ஈரல் 150 கிராம் பச்ச மிளகாய் ஒன்று வெங்காயம் சிறிது சோம்பு ஒரு டீஸ்பூன் மிளகு முக்கால் டீஸ்பூன் சீரகம் முக்கால் டீஸ்பூன் உப்பு ஒரு டீஸ்பூன் கருவேப்பிலை முன்று மேசைகரண்டி கரம் மசாலா ‍ கால் டீஸ்பூன் (பட்டை லவங்கம் ஏலம்) இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ ஒரு டீஸ்பூன் சோம்பு சீரகம் மிளகு கருவேப்பிலையை வறுத்து ஆறவைத்து கொர கொரப்பாக திரிச்சி கொள்ளவும். பச்ச மிளகாய் வெங்காயத்தை அரைத்து வைத்து கொள்ளவும். முன்று டீஸ்பூன் நல்லெண்ணை அல்லது சன்ப்ளவர் ஆயில் அரைத்த வெங்காயம் பச்சமிளகாய் சேர்த்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். ஈரல் சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும். பொடித்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு கலக்கி 7 நிமிடம் வேகவைக்கவும். நன்கு கூட்டு பதம் வந்ததும் கிளறி கடைசியாக கொத்துமல்லி கீரை கருவேப்பிலை தூவி இரக்கவும்

Monday, August 19, 2019

மட்டன் சாப்ஸ்/Green Mutton Chops/kadai Fry/Air Fryer/Electric Charcoal G...





Restaurant Style Mutton Chops with Green Masala

மட்டன் சாப்ஸ்/Green Mutton Chops/kadai Fry/Air Fryer/Electric Charcoal Grill/ Samaiyal_attakaasam

For detail recipe please visit my you tube channel
subscribe,like,comment and share




Simple and Easy Recipes and Traditional Recipes How to Make Restaurant Style Mutton Chops with Green Masala? #மட்டன்சாப்ஸ்/#GreenMuttonChops/#kadaiFry/#AirFryer/#Electric#Charcoal #Grill/ Samaiyal_attakaasam by Jaleelakamal #howtocookmuttonchops Muttonchopsintamil/Friedmuttonchops/Whatismuttonchops/ Howtomakemuttonchops/#HowtomakeLambChops# மட்டன் சாப்பஸ் துண்டுகள் = 600 கிராம் மிளகு = ஒரு தேக்கரண்டி உப்பு = தேவையான அளவு பச்ச மிளகாய் = 2 பெரியது ஃப்ரஷ் ஆக திரித்த தனியா = ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசைகரண்டி எண்ணை + டால்டா(அ) ப‌ட்ட‌ர் = இரண்டு தேக்கரண்டி கொத்துமல்லி தழை - சிறிது அரைக்க லெமன் ஜூஸ் - 1 க‌ர‌ம் ம‌சாலா தூள் = அரை தேக்க‌ர‌ண்டி


#charcoalchopsmutton

#Airfryerchops





Mutton Chops



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Sunday, April 14, 2019

மீதியான கறி சால்னாவில் கறி கொழுக்கட்டை



/ கறி தக்குடி / மட்டன்/

மட்டன், பாரம்பரிய சமையல், நோன்பு கால சமையல் டிப்ஸ், இஸ்லாமிய இல்ல சமையல், டிபன் வகைகள்,





மீதியான கறி சால்னாவில் கறி கொழுக்கட்டை

please watch below video and like,comment,share and subscribe






























மீதியான கறி சால்னாவில் கறி கொழுக்கட்டை / கறி தக்குடி / மட்டன்/Samaiyal_attakaasam by Jaleelakamal #Howtomakemuttonthakudi# #கறிதக்குடி செய்வது எப்படி? muslim marriage tiffin#NightDinner# #Leftovermuttongravy# MUTTON POTATO SALNA LINK: https://youtu.be/UgaDfJUhHMk இந்த சால்னா மீதியானால் நாம் இதில் கறி சேமியா, கறி தக்குடி - கொழுக்கட்டை, மக்ரூனி போன்றவை செய்யலாம்/ Mutton thakkudi 1. left over mutton salna with mutton pcs one cup Roasted rice flour 200 gram + 1 tbsp( red Rice) Onion – 1 no chopped Curry leaves – ¼ cup choped Coconut grated - 3 tbsn For tempering 1. oil – 2 tspn 2.cinnamon – 1 pc 3. onion chopped – one no 4.ginger garlic paste – 1 tspn 5.coriender leaves ( cilantro) – few



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Tuesday, March 12, 2019

முஸ்லீம் வீட்டு கல்யாண பச்ச போடும் நாஷ்டா /Mutton Semiya Biriyani

#Mutton Semiya Biriyani

#முஸ்லீம்வீட்டுகல்யாண# பச்ச போடும் நாஷ்டா #பாய் வீட்டுமட்டன் சேமியா பிரியாணி# #பாய்வீட்டு# கல்யாணத்தில் செய்யும் டிபன் வகைகளில் மிகவும் பிரபலமான உணவு



இதில் ஆட்டுகறீ 1 1/4 கிலோ என்பது கல்யாண விருந்துகளுக்கு அப்படி சேர்க்கனும் சாதாரனமாக வீட்டில் செய்வதாக இருந்தால் முக்கால் கிலோ போட்டால் போதும்.டால்டான்னு சொன்னது பெரிய விருந்து களீல் டால்டா சேர்ப்பார்கள்.


தேவையான பொருட்கள்

சேமியா - 800 கிராம் பாக்கெட்
ஆட்டு கறி  -  1 1/4  கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி  - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - எட்டு தேக்கரண்டி
எண்ணெய் - அரை கப் (100 கிராம்)
நெய் - 50 கிராம் கால் கப்
மிளகாய் தூள் - முன்று தேக்கரண்டி
டால்டா or ghee - இரண்டு தேக்கரண்டி (சேமியா வறுக்க)
கொத்தமல்லி தழை - அரை கட்டு
புதினா - பத்து இதழ்
பச்சை மிளகாய் - ஐந்து
பட்டை - ஒரு அங்குலம் துண்டு இரண்டு
ஏலம், கிராம்பு - தலா இரண்டு
தயிர் - அரைகப்
உப்பு தேவைக்கு




மூஸ்லீம் வீட்டு கல்யாணடிபன் செய்வது எப்படி

சேமியாவை கருக விடாமல் சிவக்க நெய் அல்லது டால்டா  சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், போட்டு வெங்கயத்தை அரிந்து போட்டு வதக்கவும். வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி தக்களியை போட்டு மிளகாய் தூள், உப்பு சேர்த்து மூடிபோட்டு தக்காளியை வேக விடவும்.
வெந்ததும் கறியை போட்டு இரண்டு மூன்று நிமிடம் கிளறிக்கொண்டே இருக்கவும். பிறகு தீயை சிம்மில் வைத்து கறியை போட்டு வேக விடவும்.
சேமியா அளவு ஒன்றுக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் சேமியாவை கொட்டி இரண்டு மூன்று கொதி வந்ததும் சிம்மில் வைத்து வேக வைத்து அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு பத்து சிறூ தீயில் வைத்து தம்மில் விடவும், பதினைந்து நிமிடம் கழித்து பிரட்டி விட்டு பரிமாறவும்.
சுமார் 9 லிருந்து 10 பேர் சாப்பிடலாம்
இதற்கு தொட்டுக்கொள்ள புதினா துவையல், எல்லா வகையான ஊறுகாய்கள் பொருத்தமாக இருக்கும்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Saturday, November 3, 2018

பாலக் மட்டன் பாஸ்தா - Palak Mutton Pasta





காலை உணவோ அல்லது ,லன்ச் பாக்ஸ் கோ, அல்லது இரவு உணவோ ஈசியா செய்துடலாம் பாஸ்தா, குழந்தைகளுக்கும் இந்த வடிவம் அவர்களை சாப்பிட தூண்டும். இதை மட்டன் மற்றும் சிக்கன் அல்லது இறால் போன்றவையுடன் செய்து கொடுக்கலாம். இல்லை விருப்பமான காய்கறிகள் சேர்த்தும் பனீர் சேர்த்தும் செய்யலாம்.


Ingredients 

வெந்த மட்டன் துண்டுகள் - 6
போ வடிவ பாஸ்தா - 2 கப்
பாலக் கீரை - 1 கப்
வால் நட் - 3
பச்சமிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 1 
பட்டர் + எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு

#Pasta#Lunchboxrecipes , #பாஸ்தா #மக்ரூனி, டிபன், #இரவுஉணவு.


செய்முறை

பாஸ்தாவை தனியாக வேகவைத்து தண்ணீரை வடித்து சிறிது எண்ணை சேர்த்து பிசறி வைக்கவும்.

பாலக்கீரையை வேகவைத்து தண்ணீரைவடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி தண்ணீரை வடிகட்டவும்.

பாலக் கீரையுடன் வால்நட், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சமிளகாய், சேர்த்து அரைக்கவும்.

குக்கரில் எண்ணை+ பட்டர் சேர்த்து அரைத்த விழுது மற்றும்உப்பு சேர்த்து நன்கு  கிளறி ,மட்டன் துண்டுகளை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வேகவைக்கவும்.

கீரை + மட்டன் ஒன்று சேர்ந்து சிறிது நேரம் வெந்ததும். வெந்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி மேலும் 5 நிமிடம் வேகவிட்டு இரக்கவும்.காலை டிபனுக்கு ஏற்ற சுவையான சத்தான மட்டன் பாலக் பாஸ்தா ரெடி.

கவனிக்க:மட்டனில் மிளகாய் தூள்கால் தேக்கரண்டி, மஞ்சள் தூள் சிட்டிக்கை, உப்புகால் தேக்கரண்டி, இஞ்சி பூண்டுகால் தேக்கரண்டி சேர்த்து வேகவைத்து கொள்ளவும்..இதை மீதியான பொரிச்ச கறியிலும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு பள்ளிக்கு எடுத்துசெல்ல சத்தான பாலக் மட்டன் பாஸ்தா.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, August 22, 2018

பக்ரீத் ஸ்பெஷல் , Goat Roat Leg Roast, மட்டன் ரான்


மட்டன் ரான் என்பது சிக்கன் ஹோல் லெக் போல மட்டன் லெக் இத மொத்தமாக அப்படியே கிரில் செய்து குடும்பத்தோடு ஒரு தட்டில் சாப்பிடுவது .
ஹஜ் பெருநாள் நேரம் குர்பாணி மட்டன் கொடுக்கும் போது மற்றவர்களுக்கு கொடுத்தது போக மீதியை இப்படி நாம் செய்து கொள்ளலாம்.

இதில் இரண்டு வகையான செய்முறை கொடுத்துள்ளேன்/

தேவையான பொருட்கள்


மட்டன் லெக் – முக்கால் கிலோ

தயிர் – 2 மேசைகரண்டி
சிவப்பு மிளகாய் தூள் ஒரு மேசைகரண்டி
ஆச்சி கபாப் மசலா – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
எலுமிச்சை சாறு – ஒரு மேசைகரண்டி
பப்பாளி காய் பேஸ்ட் – ஒரு மேசைகரண்டி
ஆலிவ் ஆயில் + பட்டர் – 5 தேக்கரண்டி


Mutton Raan, Leg Roast -1 Samaiyal attakaasam by  Jaleelakamal

மட்டன் லெக் ஐ அங்காங்கே கீரல் போட்டு உப்பு தடவி சிறுது நேரம் ஊறவைக்கவும். பிறகு தயிரில் எல்லா மசாலாக்களையும் சேர்த்து கலக்கி  ஆலிவ் ஆயில் + பட்டரை 4 மேசைகரண்டி ஊற்றி மசாலாவுடன் சேர்த்து மேரினேட் செய்யவும். ( இரவு முழுவதும் ஊறனும்)

கிரில் ட்ரேயில் ரானை வைக்கும் முன் உங்களுக்கு பிடித்தமான காய் கறிகளை கட் செய்து பரவலாக  வைத்து அதன் மேல் மட்டன் ரானை வைக்கவும்.

பிறகு ஓவனை 200 டிகிரியில் வைத்து விட்டு நடு ட்ரேவில் ஊறவைத்த மட்டனை கிரில் பண்ணனும். குறைந்தது ஒன்னறை மணி நேரம் ஆகும்.
அரை மணி நேரம் கழித்து திருப்பி விடனும். ஒரு மணி ஆனதும் மேலும் சிறிது பட்டர் ஆலிவ் ஆயில் தெளித்து இரண்டும் பக்கமும் கால், கால் மணி நேரம் கிரில் செய்யவும்.

 மட்டன் லெக் ரோஸ்ட்













மட்டன் லெக் ரோஸ்ட் -2மட்டன் ரான்



மட்டன் ரான் என்பது சிக்கன் ஹோல் லெக் போல மட்டன் லெக் இத மொத்தமாக அப்படியே கிரில் செய்து குடும்பத்தோடு ஒரு தட்டில் சாப்பிடுவது .
ஹஜ் பெருநாள் நேரம் குர்பாணி மட்டன் கொடுக்கும் போது மற்றவர்களுக்கு கொடுத்தது போக மீதியை இப்படி நாம் செய்து கொள்ளலாம்.






Goat leg roast 2
மட்டன் லெக் ரோஸ்ட் -2

மிளகாய் தூள் - 1 மேசைகரண்டி
தனியா( கொர கொரப்பாக திரித்தது) - 1 மேசைகரன்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
பூண்டு பொடி -  1  தேக்கரண்டி
வெங்காய பொடி - ஒரு தேக்கரண்டி

வடிகட்டிய கட்டி தயிர் - 2 மேசைகரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேசைகரண்டி
பப்பாளி காய் - பேஸ்ட் - 1 மேசைகரண்டி


செய்முறை
மட்டன் லெக் ஐ அங்காங்கே கீரல் போட்டு உப்பு தடவி சிறுது நேரம் ஊறவைக்கவும். பிறகு தயிரில் எல்லா மசாலாக்களையும் சேர்த்து கலக்கி  ஆலிவ் ஆயில் + பட்டரை 4 மேசைகரண்டி ஊற்றி மசாலாவுடன் சேர்த்து மேரினேட் செய்யவும். ( இரவு முழுவதும் ஊறனும்)

கிரில் ட்ரேயில் ரானை வைக்கும் முன் உங்களுக்கு பிடித்தமான காய் கறிகளை கட் செய்து பரவலாக  வைத்து அதன் மேல் மட்டன் ரானை வைக்கவும்.

பிறகு ஓவனை 200 டிகிரியில் வைத்து விட்டு நடு ட்ரேவில் ஊறவைத்த மட்டனை கிரில் பண்ணனும். குறைந்தது ஒன்னறை மணி நேரம் ஆகும்.
அரை மணி நேரம் கழித்து திருப்பி விடனும். ஒரு மணி ஆனதும் மேலும் சிறிது பட்டர் ஆலிவ் ஆயில் தெளித்து இரண்டும் பக்கமும் கால், கால் மணி நேரம் கிரில் செய்யவும்.

Ingredients for mutton raan , mutton leg roast

Red chilli – 1tbspn
Coriander- 1 tbspn
Garam msaala – ½ tspn
Onion pwd – 1 tbspn
Garlic powder
Hung curd 2 tbspn
Lemon juice – 1 tbspn
Raw papaya paste – 1 tbspn


Mutton Raan - 2, Roasted Ran, Bakrid Special, பக்ரீத் ஸ்பெஷல் , Goat Roat Leg Roast
Eid Special recipes





மட்டன் லெக் – முக்கால் கிலோ

தயிர் – 2 மேசைகரண்டி
சிவப்பு மிளகாய் தூள் ஒரு மேசைகரண்டி
ஆச்சி கபாப் மசலா – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
எலுமிச்சை சாறு – ஒரு மேசைகரண்டி
பப்பாளி காய் பேஸ்ட் – ஒரு மேசைகரண்டி
ஆலிவ் ஆயில் + பட்டர் – 5 தேக்கரண்டி




மட்டன் லெக் ஐ அங்காங்கே கீரல் போட்டு உப்பு தடவி சிறுது நேரம் ஊறவைக்கவும். பிறகு தயிரில் எல்லா மசாலாக்களையும் சேர்த்து கலக்கி  ஆலிவ் ஆயில் + பட்டரை 4 மேசைகரண்டி ஊற்றி மசாலாவுடன் சேர்த்து மேரினேட் செய்யவும். ( இரவு முழுவதும் ஊறனும்)


கிரில் ட்ரேயில் ரானை வைக்கும் முன் உங்களுக்கு பிடித்தமான காய் கறிகளை கட் செய்து பரவலாக  வைத்து அதன் மேல் மட்டன் ரானை வைக்கவும்.



பிறகு ஓவனை 200 டிகிரியில் வைத்து விட்டு நடு ட்ரேவில் ஊறவைத்த மட்டனை கிரில் பண்ணனும். குறைந்தது ஒன்னறை மணி நேரம் ஆகும்.
அரை மணி நேரம் கழித்து திருப்பி விடனும். ஒரு மணி ஆனதும் மேலும் சிறிது பட்டர் ஆலிவ் ஆயில் தெளித்து இரண்டும் பக்கமும் கால், கால் மணி நேரம் கிரில் செய்யவும்.


My Award this year

 Bonusapp presents

Top ten Sounth Indian Food Blogger award
please click above link
இது போல லெக் ரோஸ்ட் வெளி நாடுகளில் அரபு நாடுகளில் செய்து கிரில் செய்து மந்தி, மத்பி,மக்பூலா, மஜ்பூஸ், கப்சா போன்ற உணவு வகைகளுடன் செய்து சாப்பிடுவார்கள். பாக்கிஸ்தானியர்களும் இது போல பெருநாள் (ஈத் ) ளின் போது குடும்பமாக சேர்த்து ஒன்றாக செய்து  ஒரே தட்டில் அனைவரும் ஒற்றுமையாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.

அந்த காலங்களில் குழந்தைகளுக்கு பாரம்பரியமாக  ஒற்றுமை மற்றும் பகிர்ந்து உண்ணுதல் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை பிள்ளைகளுக்கு கற்று தரும் வகையில் இது போல மொத்தமாக மட்டன் ரான் ( மட்டன் லெக் )என்றில்லை மற்ற உணவு வகைகளையும் இப்படி ஒரே தட்டில் எல்லாரும் அமர்ந்து சாப்பிடுவார்கள்.


இப்போது உள்ள அவசர உலகில் எல்லாரும் ஒன்று கூடி சாப்பிடுவதே ஒரு அதியமாக இருக்கு.. ஏன் நீங்களும் இது போல உங்கள் குழந்தைகளுக்கு பழக்க படுத்தலாமே///



அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Tuesday, April 24, 2018

Suvarotti /சுவரொட்டி என்னும் மண்பத்தை - Goat Spleen Fry

உடலில் உள்ள இரத்ததின் அளவை உடனே அதிகரிக்கனுமா வாங்க இந்த சமைத்து சாப்பிடுங்கள் கண்டிப்பாக உட்னே ஹிமோகுலோபின் லெவல் கூடும்.

சுவரொட்டி என்னும் மண்பத்தை, இது ஆட்டு உறுப்புகளில்  மட்டன் , கால் பாயா, குடல் போல இதுவும் ஒரு பகுதி ரொம்ப அருமையான இரத்தத்தின் அளவை அதிகரிக்க சூப்பரான உணவு இது.




மன்பத்தை / சுவரொட்டி - Spleen Fry
சுவரொட்டி – கால் கிலோ
சில்லி பவுடர் – ஒரு மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகு தூள் - அரைதேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் –ஒரு தேக்கரண்டி
தக்காளி – ஒன்று
கொத்துமல்லி தழை
பச்ச மிளகாய் – ஒன்று பொடியாக அரிந்தது
நல்லெண்ணை – ஒரு மேசைகர்ண்டி
நெய்- ஒரு தேக்கரண்டி

செய்முறை
சுவரொட்டியை சுத்தம் செய்து அதில் மிளகாய்தூள்:மஞ்சள் தூள், உப்பு தூள், தக்காளி, பச்சமிளகாய், கொத்துமல்லிதழை, இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லா மசாலாக்களையும் சுவரொட்டியில் சேர்த்து ஊறவைக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியைகாயவைத்து ஊறவைத்த சுவரொட்டியை சேர்த்து சிறு தீயில் வேகவைக்கவும்.
வெந்ததும் சுருள கிளறி நெய்விட்டு ஒரு நிமிடம் வதக்கி இரக்கவும்.
கவனிக்க ஹிமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு வாரம் முன்று நாட்கள் வீதம் ஒரு மாதத்திற்கு செய்து கொடுக்கவும்.
கண்டிப்பாக இரத்ததின் அளவு அதிகரிக்கும்.
ஆக்கம்
ஜலீலாகமால்
சமையல் அட்டகாசங்கள்




-- 
லைக்.பன்னுங்க ஷேர் செய்யுங்கள்
சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
#hemoclobin level கம்மியானாலே பல உடலில் பிரச்சனைகள் தலை தூக்கும்
சோர்வு,எலும்பு வலி,மயக்கம் இது போல அதுக்கு அசைவத்தில் சுவரொட்டி என்னும் மன்பத்தையை தொடந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஹிமோகுலோபின் லெவல் அதிகரிக்கும்.
#foodblogger#heathrecipe#increasehemeclobinleval#spleen#suvarotti#


My You tube channel please visit and like , comment, subscribe and share with your friends/

மேலே உள்ள லின்க் என் யுடியுப் சேனல் யார் யார் பார்க்கிறீங்கன்னு தெரியல என் சேனல் ஓப்பன் செய்ததும் பக்கத்தில் சிவப்பு கலரில் சப்ஸ்கிரைப்ன்னு இருக்கும் அதை கிளிக் செய்து சப்ஸ்கிரைப் செய்து விட்டு அதற்கு பக்கத்தில் இருக்கும் பெல் பட்டனையும் கிளிக் பண்ணிடுங்கள். இப்படி செய்தால் நான் போடும் பதிவுகள் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்கும்.

மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் , எப்படி இருக்கு சரியா பேசி இருக்கேனான்னும் தெரியல , சில பேர் என் குரல் மெதுவாக இருக்கு என்று சொல்கிறார்கள், எனக்கு கேட்டா கரெக்டா இருக்கமாதிரி தான் தெரியுது.
நீங்க பார்த்து கமெண்டில் நிறை குறைகளை சொன்னால் தான் எனக்கு சரி செய்து கொள்ள முடியும்.

தொடர்ந்து இந்த பிலாக்குக்கு வருகைதந்து ஆதரளித்தது போல என் சேனலுக்கும் தொடர்ந்து வந்து லைக் , கமென்ட் , சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, November 23, 2017

மிளகு (செட்டி நாடு ஸ்டைல்) பேப்ஷா



ஹிமோகுளோபின் கம்ம்பியாக இருப்பவர்கள், ரொம்ப அனிமியாவாக இருப்பவர்கள் இதுபோல ஆட்டு நுரை, ஈரல், கிட்னி , மன்பத்தை என செய்து வாரம் முன்று நாள் என ஒரு மாதம் சப்பிட்டால் கண்டிப்பாக அனிமியா சரியாகும் ஹிமோகுளோபினும் சரியான லெவலுக்கு வரும்.





மிளகு (செட்டி நாடு ஸ்டைல்) பேப்ஷா 


பேப்ஷா ( ஆட்டு  நுரை ஈரல்) என்பது ஆட்டு நுரைய்யிரல் இதை கத்திரிக்காய் போட்டு சால்னா செய்வோம். இல்ல பொரிச்ச கறி கூட்டு போல செய்வோம். இதை கொஞ்சம் காரசாரமாக செய்வோன்னு செட்டிநாட் டைப்பில் செய்துள்ளேன்.
ஆட்டு நுரை ஈரல் - 200 கிராம்
வெங்காயம் - இரண்டு
தயிர் இரண்டு மேசைகரண்டி

திரிக்க

சோம்பு , சீரகம் மிளகு தலா ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - ஒன்று
பட்டை ஏலம் கிராம்பு
அரைக்க
தக்காளி அரை பழம்
பாதம் முந்திரி - தலா3
தாளிக்க
நல்லெண்ணை + நெய் - 4 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை
கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - ஒன்னரை தேக்கரண்டி


செய்முறை
நுரையீரலை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்கவும். திரிக்க கொடுத்துள்ளதை திரித்து வைக்கவும்
அரைக்க கொடுத்துள்ளதைகெட்டியாக அரைத்து வைக்கவும்/
குக்கரில் நல்லெண்ணை+ நெய் ஊற்றி பிரிஞ்சி இலை கருவேப்பிலை இஞ்சி பூண்டுசேர்த்து வதக்கவும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் நுரையீரல் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். அடுத்து அரைத்த மற்றும் திரித்து வைத்துள்ள பொடிவகைகளை சேர்த்து நன்கு கிளறி தயிர் சேர்த்து குக்கரை மூடி வேகவிடவுமசு
சுவையான செட்டிநாடு ஸ்டைல் நுரை ஈரல் ரெடி.

Linking to   #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.  
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, November 19, 2017

கறி முருங்க்காய் சால்னா/Mutton Drumstick salan





பேலியோ டயட் கடைபிடிப்பவர்களுக்கு இந்த ரெசிபி உதவும். இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் அசைவ பக்க உணவுகளுடன் பேலியோவில் சொல்ல பட்ட  எண்ணை வகைகளை சேர்த்து கொண்டால் மிகவும் இலகு.

மட்டன் கூட எல்லா காய்கறிகளும் நாங்கள் சேர்த்து செய்வோம்/
மட்டன் முருங்கக்காய் சால்னா
மட்டன் உருளை சால்னா
மட்டன் கத்திரிக்காய் சால்னா
மட்டன் வெண்டைக்காய் சால்னா
மட்டன் கருனை கிழங்கு சால்னா
என்ன காய்கள் சேர்க்கும் நேரமும் வேக வைக்கும் நேரமும் மாறுபடும்

என் யுடியுப் சேனலில் முடிந்த அளவு குறிப்புகள் போஸ்ட் பண்ணி கொண்டு இருக்கிறேன்,.

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து சப்ஸ்கிரைப் செய்ய கொள்ளுங்கள்

இந்த பிலாக் ஆரம்பித்து 7 வருடங்கள் மேல் ஆகி விட்டது,


யாருக்கு என்ன குறிப்பு போடனும் என்று சொன்னாலும் செய்து வீடியோவாக தர பார்கிறேன்.


இத்தனை வருடம் ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி இனியும் உங்கள் அனைவரின் ஆதரவும் தொடரும் என நம்புகிறேன்.
என் குறிப்புகளை செய்து பார்ப்பவர்கள் அதை சுவையை இங்கே பகிர்ந்து கொண்டால் மிகவும் சந்தோஷ படுவேன்.

மட்டனுடன் மற்ற காய்கள் போடுவதை விட முருங்கக்காய் சேர்த்து செய்தால் கம கமன்னு 10 வீட்டு கதவை தட்டும்.. இந்த சாலானாவின் வாசனை...

கறி முருங்ககாய் சால்னா

தேவையான பொருட்கள்

கறி மட்டன் 1/2 கிலோ
வெங்காயம் 2
தக்காளி 2
முருங்கக்காய் 2
நல்லெண்ணை
நெய்
தயிர் கால் கப்
பட்டை ஏலக்காய் லவங்கல்
தனியா தூள் 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் ‍ 1 தேக்கரண்டி
ம்ஞ்சள் தூள் ‍ கால் தேக்கரண்டி
உப்பு ‍ தேவைக்கு
தேங்காய் ‍ கால் கப்


செய்முறை

குக்கரில் நல்லெண்ணை + நெய் போட்டு பட்டை லவங்கம் ஏலக்காய் பெரிய ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் மடங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்ச வாடை போக நன்கு வதக்கவும்.
அடுத்து தக்காளி, பச்சமிளகாய் புதினா கொத்துமல்ல்லி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்
தக்காளி மடங்கியதும் மசலா தூள் வகைகளை சேர்த்து கிளறி 5 தயிர் சேர்த்து வதக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றில் குக்கரை மூடி மட்டனை வேக விடவும், 5 விசில் விட்டு இரக்கவும்.
குக்கர் ஆவி அடங்கியதும் முருங்க்க்காயை கட் செய்து சேர்த்து தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்க விட்டு இரக்கவும். முருங்க்காய் சேர்த்ததும் 5 நிமிடத்தில் வெந்துவிடும் ரொம்ப நேரம் விட்டால் குச்சி தான் மிஞ்சும். குக்கரில் இருந்து சால்னாவை வேறு ஒரு சட்டிக்கு மாற்றி விட்டு முருங்க்கக்காய் , தேங்காய் சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.

Linking to   #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.  









https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/