Tweet | ||||||
Tuesday, May 3, 2011
குபூஸ் - kuboos
குபூஸ்(அரெபியன் ரொட்டி)
துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ். இந்த குபூஸ் இல்லாமல் அவர்களுக்கு சாப்பாடு கிடையாது. எல்லா வகையான சாண்ட் விச்சுக்கும் இந்த ரொட்டி தான் உபயோகபடுத்துவார்கள்.
தேவையான பொருட்கள்
மைதா - முன்று டம்ளர்
ஈஸ்ட் - ஒரு பின்ச்
சர்க்கரை - இரன்டு தேக்கரண்டி
சூடான பால் - அரை டம்ளர்
உப்பு - அரை தேக்கரண்டி
பட்டர் - ஐம்பது கிராம்
செய்முறை
சூடான தண்ணிரில் உப்பு,சர்க்கரை,சூடான பால் ,ஈஸ்ட், பட்டரை உருக்கி போட்டு கலக்கி கோதுமை,மைதா கலவையில் கலக்கவும்.
ஒரு கட்ட கரண்டி வைத்து கலக்குங்கள் அப்ப தான் கையில் மாவு ஒட்டாது கலக்கி நல்ல குழைத்து முன்று மணி நேரம்
அப்படியே வைக்கவும்.
மாவை சற்று தளர்த்தியாக குழைக்க வேண்டும்.
பிறகு அதை எடுத்தால் புஸ் என்று உப்பி இருக்கும்.
அதை எடுத்து மறுபடியும் குழைத்து ஒரு கமலா பழம் சைஸ் உருண்டை எடுத்து நல்ல நிறைய மைதா மாவு தடவி நடுவிலிருந்து உருட்டவும்.
தேய்க்கும் போதே நல்லா சூப்பரா ரவுண்டு ஷேப் வரும் அதை எடுத்து தவ்வவில் போட்டு சுட்டெடுக்கவும்.
நல்ல பொங்கி வரும்.
சூப்பரான குபூஸ் ரெடி.
குறிப்பு:
இதற்கு தொட்டு கொள்ள எல்லாவகையான குருமாக்கள், சிக்கன், ஹமூஸ், கார்லிக் பேஸ்ட், கிரில்ட் சிக்கன் எல்லாமே பொருந்தும்.
இந்த குபூஸுடன் வெரும் ஹமூஸ் இருந்தாலே கூட வாழைப்பழத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்
கிரில்லில் சுடும் சிக்கன் அயிட்டங்களுக்கும்,BBQ அயிட்டங்களுக்கும் தொட்டு சாப்பிடலாம். சில்லி சிக்கன்,பட்டர் சிக்கன் போன்றவைக்கும் தொட்டு கொள்ள நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு பட்டர் தடவியும் கொடுக்கலாம். இதை கோதுமை மாவிலும் செய்யலாம்.
குபூஸுக்கு சரியான காம்பினேஷன் சிம்பில் அண்ட் ஈசி குபூஸ் - ஆஃப் பாயில்
குறிப்பு : இதை பல முறை செய்து இருக்கேன், பட்டர் சேர்க்காமல் செய்தால் ஓவ்வொரு முறை செய்யும் போது தவ்வா மாவு பட்டு கரியும் , அப்ப சுத்தமா துடைத்து கொள்ளனும், அதுக்கு தான் பட்டர் சேர்த்துள்ளேன், பட்டர் சேர்ப்பதால் கரிந்து போகாது. இன்னும் விபரஙக்ள் பிற்கு எழுது கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
24 கருத்துகள்:
அருமையாக இருக்கு..பார்க்கும் போதே சாப்பிட தோனுது!!
சூப்பரா இருக்கு ஜலீலா அக்கா
குப்ஸ் இனி தான் செய்து சாப்பினனும்.. சூப்பர்
Never tried this,I have to try it out...Thanks for sharing.
so easy !!!
நல்லா இருக்குதுங்க!!
ஹோம் மேட் குபூஸ் சூப்பர் ஜலீலா.
superb. Bookmarked:-)
kurinjikathambam, Event: HRH-Healthy Summer, Roundup: HRH-Puffedrcie
ஓவன்ல பேக் பண்ண வேணாமா இதை? அடுப்புல சப்பாத்தி மாதிரி செஞ்சா கொஞ்சம் ரப்பர் மாதிரி இருக்காதாக்கா?
இல்லை பட்டர் நாண் போல அடுப்பில் நேரடியா சுடலாமா?
ஹுஸைனாம்மா கடைகளில்
மாவு குழைக்க, கட்டிங் செய்ய, மிஷின், பத்து பத்து குபூஸா சுட்டு எடுக்க, தந்தூரி அடுப்பு
ஆனால் நான் தவ்வாவில் தான் சுடுவேன்,
முன்பெல்லாம் முயற்சி செய்த புதிதில் பட்டர் இல்லாம சுடுவேன்.
கிடாய் அப்ப அப்ப்ப கரியும் டிஸ்ஸுவால் துடைத்து விட்டு அடுத்த்டது சுடுவேன்.
பிறகு பட்டர் சேர்த்து சுட்டதும் நல்ல இருக்கு
ஓவன் இருந்தா
இரண்டு நிமிடம் வைத்து எடுக்க்கலாம்
பகிர்வுக்கு நன்றி .இது வரை குபூஸ் சாப்பிட்டதில்லை .உங்கள் ரெசிபி எளிமையாக இருக்கு .செய்து பார்க்கிறேன் .
//குபூஸ்(அரெபியன் ரொட்டி)துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ். // கண்ணாபின்னாவெனெ எதிர்க்கிறேன்.
குபூஸ்(அரெபியன் ரொட்டி)துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் மற்றும் வெளிநாட்டு இளைஞர்கள் (திருமணம் ஆகாதவர்கள்) உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ் என்று இருக்க வேண்டும் சகோ.
வித்தியாசமான முயற்சி. நன்றி சகோ
இனி குபூஸுக்கு மாறிட வேண்டியதுதான்..:))
செய்யணும், ஈஸியா இருக்கே.
Kuboos looks so interesting and that banana leaf plate is very cute too.
romba nalla iruku...Superb...
என்ன ஜலீலாக்கா.. குஷ்பூ வின் பெயரை தப்புத்தப்பா எழுதியிருக்கிறீங்க கர்ர்ர்ர்:).
சூப்பர் ரொட்டி.
///குபூஸ்(அரெபியன் ரொட்டி)துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் மற்றும் வெளிநாட்டு இளைஞர்கள் (திருமணம் ஆகாதவர்கள்) உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ் என்று இருக்க வேண்டும் சகோ.//
okee okeee done
என்ன இந்த வாரம் முழுவதும் என்னிடம் எல்லோரும் குஷ்புவ பற்றி கதைக்கிறார்கள்.
உங்களுக்கு ரொம்ப தான் குசும்பு என்றால் என்ன குஷ்புவான்னு,
இப்ப அதிரா குபூஸ் என்றால் குஷ்பு,
என்ன ஆச்சு பூஸாருக்கு கண்,,,,,,,,காஅர்ர்ர்ர்ர்ர்ர்
ஜூப்பரா இருக்குதே.. செய்யவும் சுலபமாத்தான் இருக்கு.
வாங்க மேனகா தொடர் வருகைக்கு மிக்க நன்றி மேனகா/
நன்றி சசி
பாயிஜா செய்து பாருங்க ஈசி தான்
பிரேமா வாஙக் முயற்சி செய்து பாருங்க சுவை அருமையாக இருக்கும்
சகோ.ஜமால் நன்றீ
வாங்க தெய்வசுகந்தி, நன்றி
நன்றி ஆசியா
வாங்க் குறிஞ்சி கண்டிப்பா செய்து பாருங்கள்.
ஏஞ்சலின் இங்கு முடியலனா உடனே குபூஸ் ஆஃப் பாயில் தான்
இல்லை குபூஸ் வெங்காய முட்டை
இல்லை ஏதேனும் கிரேவி யுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
ராஜ கிரி ஹாஜா மைதீன் வாங்க வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
இத பற்றி நிறைய எழுதனும் ஆனால் நேரமிலலததால் சுறுக்கமா முடித்தேன்.
னீங்க சொல்வது சரிதான் அனைத்து பேச்சுலர்களுக்கும் இது அருமையான ஈசியான உணவு, எளிதில் யாரும் தயாரித்து விடலாம்.
தேனக்கா மாறுங்கள் மாறுஙக்ள்
வாங்க அமுதா முடிந்த போது செய்து பாருஙக்ள்
ஆமாம் விக்கி அந்த பனானா டிரே எனக்கும் ரொம்ப பிடித்ததும்.
நன்றி கீதா ஆச்சல்
நன்றி அதிரா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா