Thursday, April 7, 2011

தில் கீரை ஃபிலாஃபில் சாண்ட்விச்,குபூஸ் - dil leaves filafil sandwich, kuboosஃபிலாபில் மெயினாக எஜிப்ஷியன், லெபனீஸ் ஸ்னாக்ஸ், அரபிகளின் பிரசத்தி பெற்ற உணவுகளில் ஒன்றும் கூட.நம்ம ஊர் பாஷையில் கொண்டை கடலை வடை
இதை நான் பலமுறை இந்தியன் டைப்பிலும் அரபிக் டைப்பிலும் செய்து விட்டேன், சாதாரன மசால் வடைய விட மொரு மொருப்பு அதிகமாக இருக்கும்.


ஹமூஸ் இது அரபு நாடுகளில்
குபூஸ், கிரில் உணவு களுக்கு ஷவர்மா, பிலாபில் சாண்ட் விச் களுக்கு ஊற்றி  சாப்பிடும் பக்க உணவு. இதை ஏற்கனவே ஹமூஸ் ரெசிபி போட்டு இருக்கேன். அது கெட்டியாக இருக்கும்,இது சாண்ட் விச்க்கு கொஞ்சம் தண்ணியா ஊற்றி செய்ய இது போல் செய்யலாம்.


அரபிகள் செய்வது போல் 100% செய்ய முடியாது ஏதோ நமக்கு தெரிந்த வாறு என் ருசிக்கு கொடுத்துள்ளேன்.
டில் கீரை ஃபிலாபில்

வெள்ளை கொண்டை கடலை -  200 கிராம்
தில் கீரை   ஒரு கட்டு
பூண்டு முன்று பல்
சீரகம் ஒரு மேசை கரண்டி
வெள்ளை எள் 1 ½   தேக்கரண்டி +1 ½ தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
உப்பு தேவைக்கு
பேக்கிங்க் பவுடர் ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் ஒன்று பெரியது


செய்முறை
கொண்டை கடலையை இரவே ஊறவைக்கவும்.
தில் கீரை புல் போல் இருக்கும் அயர்ன் சத்து அதிகம். தில் கீரை அலசி பொடியாக் நருக்கவும். சீரகத்தை வறுத்து கொள்ளவும்.
ஊறிய கொண்டை கடலையுடன் கீரை, வறுத்த சீரகம், வெங்காயம்,பச்சமிளகாய், வறுத்த எள்ளில் பாதி,பேக்கிங் பவுடர், பூண்டு , உப்பு சேர்த்து  முக்கால் பதம் வரை அரைக்கவும்.
அரைத்த்தில் மீதி எடுத்து வைத்துள்ள வறுத்த எள் சேர்த்து சிறிய லெமன் சைஸ் பாலாக உருட்டி வடையை போல் நல்ல தட்டமல் லேசாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான டில் கீரை ஃபிலாஃபில் ரெடி

%%%%%%%55555555555%%%%%%%%%555555555555%%%%%%%%%%%%%%%%

ஹமூஸ் - 2
வெள்ளை கொண்டைக்கடலை அரை கப்
வெள்ளை எள்ஒரு மேசை கரண்டி
வெள்ளை வெஙகாயம் - 1
வெள்ளை  மிளகு தூள் ஒரு தேக்கரண்டி
பூண்டு முன்று பல்
தயிர் ஒரு மேசை கரண்டி
மையானஸ் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
லெமன் சாறு ஒரு மேசை கரண்டி
ஆலிவ் ஆயில் - தேவைக்கு

வெள்ளை கொண்டை கடலை யை இரவே ஊற வைக்கவும்.
ஊறவைத்த கொண்டை கடலையை குக்கரில் 5 விசில் விட்டு வேக வைக்கவும்
வெந்த கொண்டை கடலை யுடன் பூண்டு வறுத்த் வெள்ளை ,எள், வெள்ளை வெங்காயம் சேர்த்து அரைத்து அத்துடன் கடைசியாக தயிர், மையானஸ்,வெள்ளை மிளகு தூள், உப்பு , லெம்ன் சாறு சேர்த்து அரைத்து எடுக்கவும்.கடைசியாக ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கி வைக்கவும்
சுவையான ஹமூஸ் ரெடி

%%%%%%%%%%55555555%%%%%%%%%%%%%5555555%%%%%%%%%%%
Kuboosகுபூஸ்
குபூஸ் முடிந்தால் செய்துக்கலாம், இல்லை ரெடி மேட் ஆக வாங்கிக்கொள்ளலாம்.இல்லை சப்பாத்தி , ரொட்டி போலும் செய்து கொள்ளலாம்.
குபூஸ் என் பசங்க ருசிக்கு அடிக்கடி செய்து கொள்வது.
அரை டம்ளர் வெண்ணீரில் ஈஸ்ட்,சர்க்கரை உப்பை சேர்த்து பத்து நிமிடம் வைத்து அதை மைதா மாவு மற்றும் கோதுமை மாவில் கலந்து சிறிது பால்,பட்டர், தேவை பட்டால் முட்டை சேர்த்து சப்பாத்தி மாவை விட சற்று தளர்வாக கிளறி, கொஞ்சம் தடிமனான சப்பாத்தி போல் போட்டு சுட்டெடுக்கவும்.
.%%%%%%%%55555555555%%%%%%%%%%%%%%%%%%%%55555555555%%%%%%


இதில் உள்ள குபூஸ் நான் செய்த்து,

Filafil sandwich


குபூஸில் , ஹமூஸ் தடவி, அதில்  ஃபிலாஃபில் இரண்டாக அரிந்து வைத்து சாலட் காய்களை வைத்து மேலே சிறிது ஹமூஸ் ஊற்றி சாண்ட்விச் போல் சுறுட்டி வைக்கவும்.
சுவையான ஃபிலாஃபில் சாண்ட் விச் ரெடி.

உள்ளே சாலட்டுக்கு கேரட், குகும்பரை, சிவப்பு குடை மிளகாய் தேவைக்கு நீளவாக்கில் அரிந்து வைக்கவும். கேரட் ,குகும்பர்ர், கொட மிளகாய இரண்டு நாள் முன்பே உப்பில் ஊற வைத்தும், மாவடு போலும் வைக்கலாம்,

சுவை அருமையாக வந்த்து, இவர் ஆபிஸுக்கு கொடுத்து அனுப்பினால் எல்லோரும் சாப்பிட்டு விட்டு இரண்டு நாள் கூட  ஆகல அதற்குள் ஒன்ஸ் மோர்.மோர் மோர் மோர் தான். என் இரண்டு பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடித்து போச்சி. .
தில் கீரை/Dill leaves , Arabic Sandwich
.%%%%%%%%%%%%5555555555555555%%%%%%%%%%%%%%%%%%%555555


டிஸ்கி: இது நான் ஓவ்வொரு  முறையும் செய்து கண்டு பிடிச்சது, யாராவது காப்பி அடிச்சி முக்கு சந்துல மாத்தி அமைச்சு கடை போட்டிங்க அவ்வளவு தான் , என் அருவாளுக்கு வேலை வச்சிடாதீங்க, சொல்லிபூட்டேன்.சே
 எவ்வள்வு சொன்னாலும் திருந்தமாட்டீங்களா என்ன ஜென்மங்களோ.8.12.12
Linking this to Nithu's Healthy food for Healthy Kids hosted by asiya.

34 கருத்துகள்:

தமிழ்வாசி - Prakash said...

ஜலீலக்கா அருமையான ரேசிபிக்கள்... நாக்குல எச்சில் ஊறுது.


எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

Chitra said...

புது மாதிரியான ரெசிபிகள். படங்களும் நல்லா வந்து இருக்கின்றன. பாராட்டுக்கள்!

Priya said...

Wat a beautiful spread,attakasama irruku.

சிங்கக்குட்டி said...

பார்கவே அழகா இருக்கு :-).

எங்க இருந்துதான் இப்படி பெயர் எல்லாம் கண்டு பிடிக்கிறீங்களோ ...!

Chitra said...

Nice recipes. new to me.looks yumm

Chitra said...

Nice recipes. new to me.looks yumm

Geetha6 said...

"தில் கீரை ஃபிலாஃபில் சாண்ட்விச்,குபூஸ்
பெயர் பார்த்து விட்டு வேறு தளம் மாறி வந்து விட்டோமா !! என்று நினைத்தேன்.ஹா ஹா!

GEETHA ACHAL said...

romba nalla iruku jaleela akkaa...superb...

அன்னு said...

hmm... inga irunthu jolluthaan vida mudiyum. munbu naanga chicagola irunthappa niraiya arab restaurant irunthathu, gyro, baba ganoush, falafil, pita appuram peppermint tea, kalyaana biriyani saappitta rangeukku fill senjidum. inga arab restaurant onne onnuthan irukku. athuvum halal kidaiythu. athanaala ithai kandippa senju paakkanum.


oorla irunthu vanthathum eppadi ivvalavu seekiram back on track aayidareenga akkaa... enakku sollungalen, enakku vantha pin oru maasam aanaalum ethaiyum seyyave thonaathu, thirumba ponum polave irukkum :(

அன்னு said...

as salam akka,

naan munname ezutha ninaichen. ungga pathivai ezuthi photo vaaga convert senjidunga. antha photovai flickr.com poyi pro account signup senjukkunga. ($24.95 yearly fees!!). but neenga sign pannitta unga recipe photo, type panna recipe (athaiyum image aagave veyyunga) ithaiyellaam flickr prola save senju vechukkalaam. anga irunthu copy panna veru white photovaaga than varum. enna senjaalum copy seyya mudiyaathu. athe pola avan/aval recipeyai copy seyyanumnaalum ukkaanthu paarthu paarthu ezuthinaathaan undu. copy senju vera engayum appidiye paste seyya mudiyathu. unga photos linkai vera engum thara mudiyaathu. ippadi niraiya vasathi irukkuthu. ungalai thavira vera yaarum fotovai downloadum seyya mudiyaathu. try senju paarunga. ethum doubtnna sollunga.


for ex: intha photovai save panna mudiyuma paarunga. (http://www.flickr.com/photos/kimberlyfaye/5595067498/)
wa salam,

Jaleela Kamal said...

அன்னு இப்ப வந்து ஒன்றும் செய்ய்லபா
இப்ப ஒரு வேலையும் செய்ய முடியல,
ஏற்கனவே எல்லாம் செய்து போட்டு வைத்திருந்தது தான் பப்லிஷ் கொடுத்தேன்,

நான் ஊர் நினைவு விட்டு திரும்பவே கொஞ்சம் டைம் பிடிக்கும்

Anonymous said...

Falafel is my favourite snack. அதை உதிர்த்தி ஹூமூஸ் சேர்த்து ரொட்டி, பாண் (பிரட்டு), சப்பாத்தி, ஏன் சாதம் கூட சாப்பிடுவேன். எந்த வகை சாதத்துக்கும் இரண்டு ஃபலாஃபில் உதிர்த்தி போட்டு சாப்பிட்டால், யம் யம். சில கடைகளில் நடுவில வட்டமான குழி போட்டு பொரிப்பார்கள். நல்ல மொறு மொறுன்னு இருக்கும். சில இடங்களில் வெள்ளை எள்ளு தூவி பொரிப்பார்கள். யம்

Anonymous said...

pudhusa eruku...
paarka romba nalla eruku..

Priya Sreeram said...

good one !

S.Menaga said...

ஆஹா எல்லாமே அருமை அக்கா!!

மனோ சாமிநாதன் said...

ஃபிலாபில் சாண்ட்விச் பற்றிய விளக்கமான குறிப்பு அருமை ஜலீலா! புகைப்படங்களும் அழகு.

இர‌ன்டு மாத‌ங்க‌ளாக‌ ஊரில் இல்லாத‌தால் உங்க‌ள் வ‌லைப்பூவிற்கும் மற்ற‌‌ தோழ‌மைக‌ளின் வ‌லைப்பூக்க‌ளுக்கும் ஒழுங்காக‌ வ‌ன்து பார்வையிட‌முடிய‌வில்லை. அப்பாவைப்ப‌ற்றி நேற்றுதான் ப‌டித்தேன்.
அப்பாவுக்கு உடல் நலமில்லாமல் போனதையும் அறுவை சிகிச்சையைப்பற்றியும் படித்தேன். வருத்தமாக இருந்தது. எந்த அளவு மன உளைச்சலில் இருந்திருப்பீர்களெனப் புரிகிறது. விரைவில் அப்பா பூரண நலம் திரும்பப்பெறுவார்கள். கவலைப்படாதீர்கள்.

siva said...

அக்கா நீண்ட நாட்களாக வர முடிய வில்லை
மன்னிக்கவும்,

நீங்கள் செய்வபவை யாவும் மிக அருமை
செய்து சாப்பிட முடியாவிட்டாலும் பார்த்தாவது சந்தோஷ பட்டு கொள்கிறேன்
படங்கள் நன்றாக இருக்கு
ப்ளாக் கூட நல்ல இருக்கு

அமைதிச்சாரல் said...

அருமையான குறிப்புகள்..

மாதேவி said...

பிலாஃபில் நன்றாக இருக்கிறது.

நம்ஊரிலும் கொண்டை கடலை வடைதான்.

ஜலீலா உங்கள் ப்ளாக் மூன்று தடவையின் பின் தான் இறங்குகிறது:(

asiya omar said...

சூப்பர் ஜலீலா,நானும் செய்வதுண்டு,சிறிய மாற்றத்துடன்.ப்ரெசெண்டேஷன் அருமை.

அந்நியன் 2 said...

அருமையாக இருந்தது எல்லாமே.

பகிர்வுக்கு நன்றி சகோ.

ராஜ நடராஜன் said...

சரியான ஃபிலாபில்க்கு கொண்டை கடலை,அப்புறம் சப்பட்டையா இன்னொரு கடலை சேர்க்கிறார்கள் என நினைக்கிறேன்.ஸ்பிரிங்க ஆனியன்,பார்சிலி,கொத்துமல்லி அப்புறம் நீங்க சொல்ற தில் ன்னு நினைக்கிறேன் அல்லது புல் மாதிரி பேர் நினைவு இல்ல:).இதெல்லாம் சேர்த்து வடை பதத்துக்கு அரைச்சு எள் விதைய கொஞ்சம் தொட்டு எண்ணையில வருத்தால் தான் ஒரிஜினல் ஃபிலாபில் வரும்:)

இவங்க பிலாபில் எண்ணையில போட மெஷின் வச்சிருக்காங்க.என்னதான் இருந்தாலும் கையால நம்மூர் வடை மாதிரி சுடுறதுக்கு இவங்களுக்கு கைப்பக்குவம் போதாது:)

R.Gopi said...

ஜலீலா அவர்களே...

அரபி ரெசிப்பி போட்டு அசத்திட்டீங்க...

//டிஸ்கி: இது நான் ஓவ்வொரு முறையும் செய்து கண்டு பிடிச்சது, யாராவது காப்பி அடிச்சி முக்கு சந்துல மாத்தி அமைச்சு கடை போட்டிங்க அவ்வளவு தான் , என் அருவாளுக்கு வேலை வச்சிடாதீங்க, சொல்லிபூட்டேன்.சே எவ்வள்வு சொன்னாலும் திருந்தமாட்டீங்களா என்ன ஜென்மங்களோ//

பொருள் வேதனையா இருந்தாலும், உங்களின் யூஷுவல் ஸ்டைலில் இருந்ததால், சிரிக்காமல் இருக்க முடியவில்லை...

அதுவும் அந்த அருவாளுக்கு வேலை வச்சுடாதீங்கன்னு சொன்னத படிச்சதும் எனக்கு பகீர் மற்றும் டெர்ரர் ஆகிப்போனது... யப்பா.....

அந்நியன் 2 said...

நண்பர்களே.

தயவுசெய்து இந்த காவல்துறை அதிகாரி துவங்கி இருக்கும் இந்த தளத்தில் இணைந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

http://cpolicing.blogspot.com/2011/02/blog-post_10.html

Malar Gandhi said...

Dear,

I have some awards waiting for you at my blog. Please feel free to collect them. And I will be delighted to see your Honest 7 Facts. Happy Blogging:)

இராஜராஜேஸ்வரி said...

தவற விடக்கூடாத பதிவல்லவா தங்கள் பதிவு.அருமையாய் பல உணவுகளை சுவையுடன் பகிர்ந்துகொண்டதற்குப் பாராட்டுகளும்,வாழ்த்துக்களும்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ரெசிபி அருமை.. யாருடா அப்பிடி காப்பி பண்ணுறது..ஜலீலா..

எனக்கு ஷவர்மா., ஃபிலாஃபல்., குபூஸ் பார்த்ததும் ஷார்ஜா ஞபகம் வந்துருச்சு..:))

Jaleela Kamal said...

நன்றி தமிழ் வாசி இது அருமையாச ரெசிபி , உஙக்ள் கருத்துக்கு நன்றி


சித்ரா இது கடந்த முன்றூ வ்ருடங்களாக செய்கீறேன் கடைசியா எனக்கு திருப்தியா இருந்தது அதான் போட்டேன்

உஙக்ள் தொடர் ஊக்கத்துக்கு மிக்க நன்றி சித்ரா

பிரியா உஙக்ளூக்கு ரொம்ப பிடித்து விட்டதா.வருகைக்கு மிக்க நன்றி

சிங்கக்குட்டி வாங்க ரொம்ப நாளா ஆலையே கானும்

வந்தது ரொம்ப சந்தோஷம்

வாஙக் சித்ரா உங்கள் கருத்துக்கு மிக்கநன்றி
ஹ ஹா என்ன் கீதா தளம் மாறியா ஹிஹி
வருகைக்கு நன்றி பா

நன்றி கீதா ஆச்சல்


அன்னு செய்து பாருஙக் விடவே மாட்டீஙக்

Jaleela Kamal said...

அனாமிகா இதில் எள் தூவி தான் பொரித்து இருக்கேன்,.
பிலாபில் ஒரிஜினல் செய்ய முடியாது, இது ஓரளவுக்கு திருப்தியா இருந்தது.
வருகைக்கு மிக்க நன்றீ

மிக்க நன்றீ மஹா விஜெய்

உஙக்ள் கருத்துக்கு மிக்க நன்றி பிரியா ஸ்ரீராம்

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க ந்ன்றி மேனகா

Jaleela Kamal said...

மனோ அக்கா நீங்க வந்திருப்பதை ஸாதிகா அக்கா சொன்னாங்க.
என்னால் யாருடனும் பேசும் மனனிலையில் அப்ப நான் இல்லை
மிகுந்த சந்தோஷம் மனோ அக்கா என்பக்கம் வந்த துக்கு,

Jaleela Kamal said...

தம்பி சிவா என்ன இது பெரிய வார்த்தை எல்லாம், எல்லோருக்கும் எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப வருகிறார்கள் அவ்வளவ்து தான் நான் ஒன்றும் நினைபப்தில்லை,
நினைவு கூர்ந்து வந்தமைக்கு மிக்க நன்றி

நன்றி அமைதிசாரல்


மாதேவி வாஙக் ஏன் சரியா ஓப்பன் ஆகைலையா இதற்கு மேல் மாற்ற பயமா இருக்கு ஏதும் டெலிட் ஆகிடுமோன்னு

Jaleela Kamal said...

நன்றீ ஆசியா,

நன்றி நாட்டம

ஆமாம் இராஜ நடராஜன், அதற்கென ஒரு மிஷின் வைத்து இருப்பார்கள் சுட்டு வைக்க அழகான கண் வட்டு அந்த வானலியை சுற்றி இருக்கும் பார்க்கவே நல்ல இருக்கும், கொத்துமல்லி இலை இல்லை கொத்துமல்லியை போல உள்ள இலை, நம்மூர் கை பக்குவம் வராது தான் வருகைக்கு மிக்க நன்றீ

Jaleela Kamal said...

கோபி என் பையனுக்கு அரபி சாப்பாடு தான் பிடிக்கும் காரமில்லாம தக்காளி இல்லாம இருப்பது அதான் அவனுக்காக சில அயிட்டங்கள் அடிக்கடி செய்வது.

என்ன செய்ய எல்லா வலை தளம் போல் ஆரம்பித்து சமையலுக்கு சுளுவா இத காப்பி செய்து போட்டு கொள்கிறார்கள்,
அதான் அப்ப சொன்ன லாவது புரியுதான்னு பார்ப்போம்


மல்ர் காந்தி உஙக்ள் தொடர் வருகைக்கும் அவார்டு களுக்கும் மிக்க நன்றி.

இராஜராஜேஷ்வரி என் பதிலை பார்த்து ஓடோடி வந்தமைக்கு ரொமப் சந்தோஷம்

தேனக்கா வாஙக் , மற்ற வ்லைதள்ம் நடத்துபவர்கள் என்ன செய்ய,யாரும் திருந்த மாட்டுரானுங்க...

Asiya Omar said...

Thanks for linking Jaleela.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா