கோடா என்பது சேமியா, மக்ரூனி, பாஸ்தா போல் வீட்டில் தயார் செய்வது கோடா என்பது வீட்டில் தயார் செய்வது. தயாரிக்கும் முறை. ஒரு கிலோ மைதா (அ) கோதுமை மாவை எடுத்து சிறிது உப்பு சேர்த்து பரோட்டாவிற்கு பிசைவது போல் சிறிது தளர்த்தியாக பிசைந்து உருண்டைகளாக போட்டு நல்ல மாவு தேய்த்து மெல்லியதாக திரட்டி ஒரு பேப்பரில் வெயிலில் காயவைக்கவும். இரண்டு பக்கமும் காய்ந்ததும் அதை குறுக்கும் நெடுக்குமாய் டைமண்ட் ஷேப்பில் கஜுருக்கு
வெட்டுவது போல் வெட்டி மறு படி நல்ல மொறு மொறுப்பாக காயவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து தேவைக்கு எடுத்து சேமியா, மக்ரூனி, பாஸ்தா, ஸ்பகதிக்கு பதில் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
இனிப்பு பால் மற்றும் தேங்காய் கோடா
இறால் கோடா, இதை மட்டன் மற்றும் சிக்கனிலும் செய்வோம்.
வெல்லம் கடலை பருப்பு நட்ஸ் கோடா
இது என் அம்மாவும், நாத்தானாரும் முன்பு ( 25 வருடம் முன்) 5 வருடமாக நிறைய செய்து பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்றார்கள்.
இந்த டிபன் எங்க வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது, இதை கோதுமையில் செய்தால் இன்னும் நல்ல இருக்கும்.இதை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு பல வடிவங்களில் செய்யலாம்.
இந்த பதிவ போட்டு வைத்து ஆறு மாதம் மேல் ஆகுது இன்னும் ஸ்டெப் பை ஸ்டெப் மாவு குழைத்து காய வைபப்தையும் விளக்கலாம் என்று இருந்தேன் ஆனால் நேரம் இல்லை பின்பு முடிந்தால் போடுகிறேன்.எப்போதும் இந்த கோடா எங்க வீட்டில் வருத்தமாவு , மாசி ஸ்டாக்கில் வைத்திருப்பது போல் இதுவும் கண்டிப்பாக இருக்கும்
டிஸ்கி: எத்தனையோ பேர் இந்த பதிவ படிக்கிறீங்க எல்லாம் பயனுள்ளது ஒரு கருத்தை தெரிவித்து இண்ட்லியிலும் ,தமிழ்மணத்திலும் ஒரு ஓட்டு போடலாமே.
மொக்க பதிவுக்கு தான் ஓட்டு போடுவீங்களா ?
Tweet | ||||||
34 கருத்துகள்:
அக்கா சிறு தொழில் சொல்லி கொடுத்திருக்கிங்க. அருமையான ஹோம் மேட் பாஸ்த்தா சூப்பர்...
பாஸ்த்தா கண்டாலே பாஸ்ட்டா போய்டுவேன் ...
ஓட்டு போட்டாச்சுங்கோ ...
ஜலீலாக்கா சூப்பர்.
super!! I did vote!
வித்தியசமாக இருக்கின்றது...ரொம்ப சூப்பர்ப்..
நேரம் கிடைக்கும் பொழுது step-by-step போட்டோஸ் எடுத்து போடுங்க..ரொம்ப பயனுள்ள பதிவு..
சென்னையில் இருந்து ஒரு முறை இந்த ஹோம்மேட் பாஸ்தா எங்க அக்கா வாங்கி வந்திரூந்தாங்க..நல்லாயிருந்துச்சு,நேரம் கிடைக்கும் பொழுது விளக்கமாக பதிவு போடுங்க..
Romba nalla irruku super recipe, can we use wheat flour instead of maida.
இதற்கு என் வோட்டு பதிவு செய்து விட்டேன்.
Jaleela Kamal said...
//அப்பா ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே இதெல்லாம் செய்யனும் முன்னு தோன்றது, இதில் பாதி இல்லை75% என் பாட்டிக்கும், அப்பாவுக்கும் பொருந்தும், ஏன் எனக்குமே காம்பினேஷனுடன் தான் பிடிக்கும்.
அடிக்கடி சொல்லிப்பது கொஞ்சம் நாக்கு நீளம் தான் என்று.
இப்ப தான் இப்ப உள்ள நோய்களை கண்டு கொஞ்சம் எண்ணெய் அளவு குறைத்து செய்ய ஆரம்பித்து இருக்கேன். பலகாரங்கள் அதுவும் அப்ப அப்ப உள்ளே தள்ளுவது தான்.
பஜ்ஜி செய்தா அதுக்கு பொட்டு கடலை துவையல் இல்லாமல் முடியாது. அதுவும் சுட சுட..அடுப்பிலுருந்தே நேராக வாயிக்கு போய் விடும்.
நீங்கள் பயன் படுத்திய சாமான்கள் நாங்களும் சின்ன வயதில் பயன் படுத்தி இருக்கோம் பித்தளை குண்டான், ஜோட்தலை, வெங்கல ஆப்பை, அம்மி ஆட்டு உரல் எல்லாம் பயன் படுத்தி இருக்கோம்.
உங்கள் சமையல் விபத்து, கேட்டு பயந்துட்டேன், அந்த நேரம் எப்படி இருந்திருக்கும்.
என் பையன்களும் டீ டம்ளர் கூட கழுவ விடமாதான் வளர்த்து இருக்கு, இப்ப தோனுது ஏதாவது வேலை செய்ய சொல்லீருக்கனும் என்று செய்ய சொல்வேன் ஆனால் அது ஒரு நாளோடு சரி.
உங்கள் எண்ணம் போல் எல்லாம் அமைய வாழ்த்துக்கள்//
தங்களின் அன்பான வருகைக்கும், அரிய பெரிய ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஆன கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
[இன்று 17.4.2011 அன்று தான் தங்களின் பின்னூட்டத்தைப்படிதேன். அதனால் பதில் அளிக்கவும் சற்று தாமதம் ஆகிவிட்டது. தவறாக நினைக்க வேண்டாம்.]
அன்புடன் vgk
ஹோம் மேட் பாஸ்தா - கோடா...
என்னன்னவோ சொல்றீங்க..ம்ம்ம்.. இருக்கட்டும்... இருக்கட்டும்...
//டிஸ்கி: எத்தனையோ பேர் இந்த பதிவ படிக்கிறீங்க எல்லாம் பயனுள்ளது ஒரு கருத்தை தெரிவித்து இண்ட்லியிலும் ,தமிழ்மணத்திலும் ஒரு ஓட்டு போடலாமே.
மொக்க பதிவுக்கு தான் ஓட்டு போடுவீங்களா ?//
ஹா...ஹா...ஹா..நிஜமாவே இந்த பதிவை விட அதற்கு நீங்கள் இட்டுள்ள இந்த டிஸ்கி மிகவும் பிடித்து இருந்தது... டிபிகல் ஜலீலா டச்...
இது ஒன்னு தான் விட்டு வச்சிருந்தீங்க ..இப்ப இதுவுமா பேஷ் பேஷ்..ரொம்ப நல்ல குறிப்புகள் படங்கள் பார்க்க சாப்பிட தூண்டவைப்பது தான் உங்க திறமை.கலக்குங்க
Thalika
இது ஒன்னு தான் விட்டு வச்சிருந்தீங்க ..இப்ப இதுவுமா பேஷ் பேஷ்..ரொம்ப நல்ல குறிப்புகள் படங்கள் பார்க்க சாப்பிட தூண்டவைப்பது தான் உங்க திறமை.கலக்குங்க
படங்களும்,குறிப்பும் அருமை ஜலி.
பெயர் வித்தியாசமா இருக்கு..சூப்பர்ர்!! அடுத்த முறை செய்யும் போது படங்கள் எடுத்து போடவும்.
வித்தியாசமான பாஸ்தா.. அடுத்தமுறை இன்னும் விளக்கமா செய்முறையோட போடுங்க.. பாஸ்தா விரும்பியான என் பெண்ணுக்கு ரொம்பவே பயனுள்ளதா இருக்கும் :-))
போஸ்டிங் நல்லா இருக்கு ஜலீ. எல்லாவற்றையும் விட //மொக்க பதிவுக்கு தான் ஓட்டு போடுவீங்களா?// சுப்பர் ;)))
ஆம் சினேகிதி ஒரு காலத்தில் இந்த பாஸ்டா தான் எங்களுக்கு கை கொடுத்தது.
செய்து பார்த்து சொல்லுங்கள்
வாங்க சகோ ஜமால், ஏன் பாஸ்ட்டா ஓடுரீங்க, ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்.
ஓட்டு போட்டமைக்கு மிக்க நன்றி
மிக்க நன்றீ அதிரா
ரொமப் பிசி போல
ஓட்டு போட்டமைக்கு மிக்க நன்றி தெய்வ சுகந்தி.
கீதா ஆச்சல் ஆமாம் கண்டிப்பாகா ஸ்டெப் பை ஸ்டெப் போடனும்
ஆசியா இது முடிந்த போது போடுரேன்
எப்படியாவது இந்த பதிவுடன் போட வேண்டியது ஆனால் முடியல
உம்மு வாங்க வருகைக்கு மிக்க நன்றி
இதை கோதுமையிலும் செய்யலாம்
நன்றி வை கோபாலா கிருஷணன்
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீ கோபி,
வேர என்ன சில பதிவு களை பார்த்தேன், காலனாவுக்கு பிரயோஜனம் இல்லாத சில தேவையில்லாத மொக்கைகெல்லாம் எல்லாரும் ஓட்டு போடுகீறார்கள்,
ஆனால் என் பதிவ எவ்ளோ பேர் பார்வை யிடுறாஙக் , கண்டிப்பா பயனுள்லதா இருக்கும்
அப்ப கருத்து, ஓட்டையும் தெரிவிக்கலாமே./
நன்றி தளி கூடிய விரைவில் இது சம்பந்த பட்ட குறிப்பு களை போடுகிறேன்
வந்தது ரொம்ப சந்தோஷம்
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா, ஊரில் இருந்து வந்தாச்சா?
நன்றி மேனகா முடியும் போது படத்துடன் போடுகிறேன்
அமைதிச்சாரல் உங்கள் மகளுககக வே கண்டிப்பாக போட முயற்சிக்கிறேன்
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ
இமா கரெக்ட்டா பாயிண்ட பிடிச்சிட்டீங்க
வருகைக்கு மிக்க நன்றி
ஜலீலா அக்கா நலமா எப்ப்டி இருக்கீங்க நான் ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களுக்கு பதிவு போடுறேன் எனக்கு ரொம்ப நாளா உங்க ப்ளாக் ஓபன் ஆக வில்லை எங்க வீட்டில் என் பாட்டி இந்த கோடாவை பூரியான் பாத்திஹா அன்னைக்கு ஆயில்ல பொரித்து வைப்பார்கள் நல்ல சுவையாக் இருக்கும் நீங்க சொன்னது போல கஞ்சி செய்வார்கள் நல்லா இருக்கும் பழைய காலத்து முறையை நீங்க எல்லாம் நல்ல பாளோ பண்றீங்க வாழ்த்துக்கள் இதனால் எல்லாரும் நல்ல க்த்துக்க முடியுது தெரிஞ்சிக்க முடியுது old is gold
புதுசா இருக்கு.. நல்லா இருக்கும் போல!!. வீட்டில் சொல்லி செய்ய சொல்லணும்..
Wow, I never knew that we could actually prepare pasta at home. Goda/koda sounds terrific. Hats off to your work. Loved that eral-pasta, super.
ஜலீலாக்கா,ஹோம் மேட் பாஸ்தா சூப்பரா இருக்கு.
வாங்க பர்வீன், ஆமா பூரி பாத்திகாவுக்கு செய்வாஙக்ளே அதே தான்
நாங்க பூரி பாத்திகா நடத்துவதில்லை,
முன்பு ஒரு வீட்டில் சாப்பிட்டு இருக்கேன்.
இது எஙக் வீட்டில் அடிக்கடி செய்வது,
வருகைக்கு மிக்க்க நன்றி
வாங்க மலர் இறால் கோடா , கறி கோடா ரொம்ப அருமையாக இருக்கும்
உங்கள் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க ந்ன்றி
வாங்க மகி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க ந்ன்றி
அருமை
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா