Tuesday, April 12, 2011

சிக்கன் பஜ்ஜி - chicken bajji



தேவையானவை

போன்லெஸ் சிக்கன் - கால் கிலோ
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
உப்பு -தேவைக்கு
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
லெமன் சாறு - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - அரை தேக்கரண்டி
பஜ்ஜி மாவு கலக்க

மைதா மாவு - 100 கிராம்
கார்ன் மாவு - 30கிராம்
பேக்கிங்பவுடர் - ஒரு தேக்கரண்டி
எண்ணை - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
செய்முறை
சிக்கனை கழுவி சுத்தம் செய்து சின்ன சின்னதா நீளவாக்கில் அரிந்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு ,லெமன் சாறு, மிளகாய் தூள்,கரம்மசாலாதூள் , சோயா சாஸ் சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

பஜ்ஜி மாவு கலக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு தயிர் பதத்துக்கு ஃபிலபியாக கட்டி தட்டாமல் அடித்து வைக்கவும்.

எண்ணையை காயவைத்து மிதமான தீயில் ஊறிய சிக்கன் துண்டுகளை மாவு கலவையில் முக்கி பொரித்து எடுக்கவும்,.
சுவையான சிக்கன் பஜ்ஜி ரெடி.

டிஸ்கி :இது என் பெரிய பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.நோன்பு காலஙக்ளில் இதுவும் சூப்பும் செய்து கொடுப்பேன்.இப்ப  சின்ன பையனில் பேவரிட் ஆகிவிட்டது.ஊரில் இருந்து பெரியவன் வந்ததும்  எப்போதும் இதை செய்து கொடுப்பேன். மற்ற நாட்களிலும் நோன்பு கஞ்சி போட்டு இதை செய்வேன், இப்ப அவன் ஊரில் இருக்கிறான். 
இன்று அவனுக்கு பிறந்த நாள் ஆண்டவன் அவன் எங்கு இருந்தாலும்நீண்ட ஆயிளையும், நோய் நொடி இல்லாத வாழ்வையும் பயனுள்ள கல்வி அறிவையும், நல்ல ரிஸ்கை (சாப்பாட்டை) தர துஆ செய்கிறேன்.
முன்பு செய்தது ரீபோஸ்ட் செய்துள்ளேன்.



22 கருத்துகள்:

R.Gopi said...

ஜலீலா மேடம்...

உங்கள் பெரிய மகன் அவர்களுக்கு என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

இன்று போல் அவர் என்றும், எல்லா வளமும் பெற்று வாழ்வில் அனைத்து துறைகளிலும் சாதனை முத்திரை பதிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

Unknown said...

பஜ்ஜி வழக்கம் போல் சூப்பர்..

உங்கள் பெரிய மகனுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்துக்கள்

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

பிறந்தநாளுக்கு பஜ்ஜியா ஜலீலாக்கா.... சூப்பர்... ஆனா சாப்பிடப்போவது நீங்கள் தானே?:))).

உங்கள் மூத்த மகனுக்கு எம் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது..

உங்களுடைய மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

என்ன ஆச்சு ...ரொம்ப நாளாக போஸ்டிங்க எதுவும் போடமாட்டுறிங்க...

Chitra said...

SUPER!!!!!!!!!!!!! Thank you for the recipe.

Asiya Omar said...

உங்கள் மகனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.நான் சிறிது கடலை மாவும் சேர்த்து செய்வேன்.பார்க்கவே சூப்பர்.சின்ன மகன் பிறந்த நாளுக்கு ப்ரெட் பஜ்ஜி போட்டதாக நினைவு,இப்ப சிக்கன் பஜ்ஜியா? சூப்பர்.

ராஜ நடராஜன் said...

புது ஐடியா!முயற்சித்துப் பார்க்கிறேன்:)

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

பஜ்ஜியே நெம்ப பிடிக்கும்

அதிலும் சிக்கனா

பேஷ் பேஷ் ...

Menaga Sathia said...

பஜ்ஜி ரொம்ப நல்லாயிருக்கு..

தங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

அந்நியன் 2 said...

பஜ்ஜி அருமை அக்காள்.

எனக்கு பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் இல்லைக்கா அதுநாளே உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நீடுழி வாழ அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன்.

ஆண்டவன் என்பது முடிந்து போன சொல் மாதுரி தெரியுதுக்கா.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Happy Birthday to your son...

ஊருக்கு போயிட்டு வந்து full swing ஆ சமையல் களத்தில் இறங்கிட்டீங்க போல இருக்கே அக்கா...;)

Vikis Kitchen said...

Birthday wishes to your son. May him be blessed with all the best things and have a wonderful future ahead.Prayers and well wishes.

சிக்கன் பஜ்ஜி சூப்பர் ஒ சூப்பர் அக்கா. உங்களுக்கு சில அவார்ட்கள் காத்திருக்கின்றன. உங்களை பற்றி 7 தகவலும் சொல்லணும்...அதை படிக்க நான் ஆவலாய் இருக்கிறேன்:)

http://elitefoods.blogspot.com/2011/04/awards-and-me-me.html

Geetha6 said...

வாழ்துக்கள்!

Unknown said...

தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இறைவன் எல்லா நலனும் கொடுக்கட்டும்...
அந்த பஜ்ஜி மிளகாய் போட்டு பார்சல்

Jaleela Kamal said...

வாங்க கோபி பிற்ந்த நாள் கொண்டாடுவதிலலை இருந்தாலும் அவன் ஞாபக அர்த்தமா ஒரு பதிவு போட்டேன், வாழ்த்துக்கு நன்றி

வாஙக் பாயிஜா எப்படி இருக்கீங்க பிள்ளைகள் நலமா?
வருகைக்கு மிக்க நன்றி

அதிரா இது இப்ப சுட்ட பஜ்ஜி முன்பு சுட்ட பஜ்ஜி மகன் தேட்டம் அதான் நீங்க<ள் மட்டும் மெயில் பண்ணல அவ்வளவு தான்..

நன்றி கீதா ஆச்சல்

நன்றி சித்ரா தாயம்மா

ஆசியா பொதுவா பஜ்ஜி நாலே எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.

முயற்சித்து பாருஙக் ராஜ நடராஜன்

Jaleela Kamal said...

வாங்க நட்புடன் ஜமால் ரொமப் நாள் ஆச்சு ஹாஜர் நல்ல இருக்க்காங்களா/

மிக்க நன்றி மேனகா

அந்நியன் நாங்களும் கொண்டாடுவதில்லை, அவன் இங்கில்லை இப்ப அதான் அவன் பிற்ந்த நாள் அன்று இந்த பஜ்ஜி பிடிக்குமெம் அபப்டியே உஙக்ள் துஆக்கலையும் கொள்ளயடிச்சிக்கலாம் என்று தான்...


அப்பாவி தஙக்மணி இல்ல பா ஃபுல் ஸ்விங்கில் இரங்கல, எல்லாம் ஏற்கனவே ரெடி செய்து வைத்தது தான் அப்ப அப்ப எடுத்து விடுவது.



விக்கி விருதுகளுக்கு மிக்க்க நன்றி முடிந்த போது பதிவ போட்டுரேன் ஏற்கன்வே நிறைய என்னை பற்றி எழுதியாச்சு ,,

நன்றி கீதா

நன்றி சிவா

Anonymous said...

தம்பிக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கவும்..

Malar Gandhi said...

Wow, you are such a gifted cook...I am a chicken fanatic...will try this out for sure. And thank you so much for all those lovely words at my space, much appreciated:)

Angel said...

அடடா .கொஞ்சம் லேட் ஆகிவிட்டது
Belated Birthday wishes to your son .

Jaleela Kamal said...

நன்றி மஹா விஜெய்

நன்றி மலர் , எல்லாம் தினம் செய்வதுதான் மலர்
பாராட்டுக்கு மிக்க நன்றி

நன்றி எஞ்சலின் பரவாயில்லபா முடிந்த போது வாங்க ,

ஸாதிகா said...

நோன்புகாலங்களில் அடிக்கடி செய்யும் பஜ்ஜி

ஸாதிகா said...

மகனுக்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா