இஸ்லாமிய திருமணங்களில் பிரியாணியுடன் செய்யும் இனிப்பு வகையில் இந்த மிட்டாகானா மிகவும் பிரசத்தி பெற்ற இனிப்பு வகையாகும். இதற்கடுத்து தான் கேசரி, பிரெட் ஹல்வா எல்லாம்
தேவையான பொருட்கள்
நல்ல தரமானபாசுமதி அரிசி – கால் கப்
கேசரிகலர் மஞ்சள் (அ) சிவப்பு
உப்பு – அரை சிட்டிக்கை
இனிப்பில்லாத கோவா – ஒரு மேசை கரண்டி
சர்க்கரை – அரைகப்
நெய் – இரண்டு மேசை கரண்டி
தாளிக்க
பட்டை – சிறிய துண்டு
முந்திரி , ரெயிசின்ஸ் – தலா ஆறு
செய்முறை
முதலில் அரிசியை களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் தண்ணீர் கொதிக்க வைத்து சாதம் வடிப்பது போல் உதிரியாக வடிக்கவும்.(தண்ணீர் கொதித்து அரிசி தட்டியதும் அதில் கலர் பொடி + உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிக்கவும்.
நெய்யை உருக்கி முந்திரி ரெயிசின்ஸ் கருகாமல் வறுத்து எடுத்துவிட்டு, அதில் பட்டை தாளித்து வடித்த சாத்த்தை கொட்டி கிளறி சர்க்கரை சேர்த்து சாதம் உடையாமல் கிளறவும்.
சர்க்கரை உருகும் போது கோவாவை சேர்த்து கிளறி சேர்ந்து வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி ரெயிசன்ஸை சேர்த்து கிளறி இரக்கவும்..
கோவா கிடைக்கவில்லை என்றால், இரண்டு மேசைகரண்டி நீடோ பால் பவுடரை அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிகக் விட்டு சுண்டி கோவா பதம் வந்ததும் அதை எடுத்து சேர்க்கவும்.
குறிப்பு:
கல்யான பிரியாணிக்கு ஏற்ற ஸ்வீட் (மிட்டாகானா) இதை நிறைய கல்யாணத்துக்கு செய்யும் போது பாதி டால்டா பாதி நெய் சேர்த்து செய்வார்கள். இதில் கொடுத்துள்ள அளவு முன்று பேர் சாப்பிடும் அளவு.
நிறைய செய்ய இந்த அளவு.
அரிசி – அரை கிலோ(நல்ல தரமான வசனை பாசுமதி அரிசி)
மஞ்சள் (அ) ரெட் கலர் பொடி – கால் தேக்கரண்டி உப்பு – கால் தேக்கரண்டி சர்க்கரை – ஒரு கிலோ இனிப்பில்லாத பால்கோவா - 100 கிராம்
டால்டா - 100 கிராம்
தாளிக்க
நெய் – 25கிராம்முந்திரி - 100 கிராம் கிஸ்மிஸ் பழம் – 25 கிராம்
பட்டை - ஒரு இரண்டு அங்குல துண்டு
அனைவருக்கும் ஈத் முபாரக்
55 கருத்துகள்:
புதுசு புதுசா எல்லாம் சொல்றீங்க.
very nice sweet, happy ramzan!!
ஈத் முபாரக்
------------------
கோவான்னா?
அருமை.
இமா இது புதுசு இல்ல இஸ்லாமிய இல்லங்களில் பழங்காலம் முதல் தொன்று தொட்டு செய்து வரும் இனிப்பி,
வருகைக்கு நன்றி இமா
நன்றி மேனகா
சகோ ஜமாம், இனிப்பில்லாத பால் கோவா
கடைகளில் ஸ்வீட் செய்வதற்கென்றே தனியாக விற்கும்
வருகைக்கு நன்றி புவனேஷ்வரி
புதுசு புதுசா சொல்றீங்களே...
ஈத் முபாரக்
மிட்டா கானா.
ஏனுங்க... இதுக்கு தமிழில் பேரு இல்லையா ? ஹிந்தியில் வைத்துள்ளிர்களே.?
சரிப் பரவா இல்லை,மிட்டா கானாவை டேஸ்ட் பண்ணிட வேண்டியதுதான்.
kelvi padatha recepie , happy ramzan
super sweet rice.
ஈத முபாரக்...சூபப்ப்ர் ஸ்வீட்...
பெருநாள் ஸ்வீட் சூப்பருக்கா.
அனைவருக்கும் ஈத் முபாரக்.
ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்..
மிட்டா கானா அருமை,ஜலீலா.அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.
happy eid to you and all brothers ans sisters celebrating eid.
மிட்டா கானா முதல்ல வந்திருக்கு .. அப்போ மெயின் டிஷ் வந்துகிட்டு இருக்கா..!!! :-))
என்னது ஓட்டு பொட்டிய கானோம் எடுத்துட ஒளிச்சி வச்சிட்டீங்களா..!!!
:-)))
ஜலீலாக்கா இது இனிப்பா இருக்குமா?? ஹி.. ஹி.. சும்மா தான் கேட்டேன்.
ஜெய்லானி :::
// என்னது ஓட்டு பொட்டிய கானோம் எடுத்துட ஒளிச்சி வச்சிட்டீங்களா..!//
பாஸ் அதுக்குள்ளே தான் மிட்டா கானா இருக்காம். நாமெல்லாம் வந்தா "இட்டுக்கின்னு" போயடுவமாம்
அதானால தான் ஒளிச்சி வச்சுட்டாங்களாம். ஹி..ஹி..
♥Olá, amiga!
Passei para uma visitinha...
Deliciosas receitas com belas fotos dos pratos.
Boa semana!♥
Beijinhos.
Itabira♥
♥♥♥ Brasil
ஈத் நல் வாழ்த்துக்கள்.மிட்டாகானா இனிப்புடன் பெருநாள் சிறக்கட்டும்.
Eid Mubarak dear. I too posted a dish for the festival:) Mitta ghana looks fabulous. Never tasted it before. Bookmarking it.
Akka,mitta khana looks fabulous,tempting,
pesaama ramzanku dubai kilambi unga vitukku vanthuralaamnu oru idea.
ஈத் முபாரக் ஜலீலாக்கா!
மிட்டாகானா பார்க்கவே சூப்பரா இருக்கு.:P:P
ரமலான் திருநாள் வாழ்த்துக்கள், அக்கா.
மீட்டாகானா....
இதை சாப்பிட்ட நினைவு இருக்கிறது..
மிகுந்த சுவையுடன் இருக்கும்....
ஜலீலா, குடும்பத்தார் மற்றும் வலையுலக இஸ்லாமிய தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய ஈத் முபாரக் வாழ்த்துக்கள்
நன்றி வெறும்பய.
வாழ்த்துக்களுக்கு நன்றி
நாட்டம அதுக்க்கு பேர் சின்ன வயதில் இருந்து எங்க வீட்டில் இப்படி தான் சொல்வாங்க ஆகையால் மிட்டாகானா
சாரு இது சென்னையில் பிரபலம்
நன்றி விஜி இத கண்டிப்பா செய்து பாருங்கள்
நன்றி கீதா ஆச்சல்
நன்றி மலிக்கா உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்
நன்றி ஆசியா , இனிய பெருநாள் வாழ்த்துக்கள்
நன்றி ஏஞ்சலின்
ஜெய்லானி நேரமில்லையேன்னு ஸ்வீட் மட்டும் போஸ்ட் செய்தேன்.
இன்னும் வந்து கொண்டு இருக்கான்னதும், வேறு மெயில் டிஷ் போடனும் போல் இருக்கு
என்னது ஓட்டு பொட்டிய கானுமாஅ. அதற்குள் யார் தூக்கி கொண்டு போனது மங்குனி அமைச்சர தான் ரொம்ப நாளா கானும் அவரா இருக்குமோ
எம் அப்துல் காதர், மிட்டா ந்னு படிச்சிட்டு இனிப்பான்னு கேட்கியேளே.
இதென்ன///
Magia da Inês said...
♥Olá, amiga!
Passei para uma visitinha...
Deliciosas receitas com belas fotos dos pratos.
Boa semana!♥
Beijinhos.
Itabira♥
♥♥♥ Brasil
Thank you for visit
உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப சந்தோஷம் ஸாதிகா அக்கா
விக்கி கண்டிப்பா செய்து பாருங்கள் சுவை அள்ளும்.
ராஹிலா வாங்க எப்படி இருக்கிங்க குட்டிகள் நலமா?
வாங்க வாங்க அப்படியே ருபியோடு சேர்ந்து கொண்டாடலாம்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகி
பெருநாள் வாழ்த்துக்கு நன்றி சித்ரா ,
கோபி இதை சுவைத்து இருக்கிறீர்களா?
இது மெயினா கல்யானத்தில் செய்வது.ஈத் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றீ
அன்புள்ள ஜலீலா!
இனிப்பு சாதம் பிரமாதம்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
என் இதயங்கனிந்த ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள்!
ஈத் முபாரக், உள்ளம்கனிந்த இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்,
Supera irruku eid special meethakhana..kanna parikuthu pakkura pothey..
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஆஹா miss பண்ணிட்டேனே!!!!!!
பெருநாளைக்கு முன்னமே இதை பார்த்திருந்தா?அன்னிக்கி செய்து பார்த்திருக்கலாம்.
வணக்கம்...
உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.
மிட்டாகானா குறிப்பைத்தான் தேடிக்கவண்டிருந்தேன் அருமையான குறிப்பு நன்றி ஜலி
இந்த குறிப்பை எப்படியே தேடி பிடிச்சி எடுத்து இருக்கீங்க ஸாதிகா அக்கா, மிக்க நன்றி, செய்து பார்த்து எப்படி இருந்தது என்று வந்து சொல்லுங்கள்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா