ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கயா ஆரம்பிச்சுட்டாங்க. யாருப்பா இந்த தொடர் பதிவ கண்டு பிடிச்சது.
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?.
ஜலீலா பானு/ஜலீலாகமால்
2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.
இவை அனைத்தும் என் சொந்த ஆக்கங்களை என் பெயரிலேயே எழுதலாம் என்று அதே பெயரில் தொடர்ந்தேன். மற்றொரு தளத்தில் என் அம்மாவின் பெயர் போட்டு விட்டு நல்ல தெரிந்தவர்கள் அக்கா உங்கள் குறிப்பு போலவே அவர்களும் போட்டு இருக்காங்க என்று சொல்ல , உடனே எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கனும் என்றும் எங்கும் ஜலீலா தான்..
.3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...
மாத நாளிதழ்,பல வெப் தளங்களில் நான் என் சமையல் டிப்ஸ்கள், குழந்தை வளர்பு, குழந்தை உணவு குறிப்புகளை கடந்த நான்கு வருடங்களாக கொடுத்து வருகிறேன்.அதெல்லாம் எங்கோ ஒரு முலையில் புதைந்துள்ளது. என் ஆக்கங்களை ஒரே இட்த்தில் எப்போது வேண்டுமானாலும் எடுத்து பார்த்துக்கொள்வதற்காக பிளாக் ஆரம்பித்த்து...
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
நான் ஒன்றும் பிரபல மடைய செய்யவில்லை. உண்மையான படைப்புகள் தானே பிரபலமாகியது தான் , பிறகு தமிலிஷ் (இண்ட்லி) மூலமாக போன வருடம் முதல் நோன்பில் நோன்புகால சமையல் டிப்ஸை அதை இங்கு சென்று காணலாம். அப்போதே எல்லா நோன்புகால சமையலையும் போட்டு விட்டேன்.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
சொந்த விஷியத்தை பகிர்ந்து கொண்டதுண்டு ஒரு மன ஆறுதலுக்காக பகிர்ந்து கொண்டேன்.சில பொதுவான நேரில் கண்ட நிகழ்சிகளையும் விழிப்புணர்வுக்காக பதிவுகள் போட்டுள்ளேன். அதன் விளைவுகள் மற்றவர்களுக்கு நல்லதா இருக்கனும்.போடும் பதிவுகள் மூலம் சிலருக்கு தெரியாத விஷியங்கள் தெரிந்திருக்கலாம்.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?..
இது வரை நான் சம்பாதித்த்தில்லை ஆனால் என் மூலம் இதை காப்பி அடித்து பிரபல செய்தி தாள்களில் போட்டு அவர்களும், சில வேலயத்த பெருசுகள் ஒரு வேலையா உட்கார்ந்து என் ரெசிபிய புக்கா போட்டும் சம்பாத்தி கொண்டு இருக்கிறார்கள். எல்லா குழுமத்துக்கும் தன் பெயரை போட்டு அனுப்பி கொண்டு இருக்கிறார் ( ஊருக்கு போய் வந்த்தில் இதை கேள்வி பட்டு அதிர்ச்சி) அதிலிருந்து குறிப்பே அவ்வளவா போடல இருக்கிற லிங்கை தான் கொடுத்தேன். இதன் மூலம் நான் சம்பாதிக்க ஏதும் வழி இருந்தால் யாராவது சொல்லுங்கள்.. வேறு யாரும் என் குறிப்ப வச்சி பொட்டி கட ரொட்டி கட போட்டு இருந்தா சொல்லிடுங்க ... சும்மா தமாசுக்கு தான்
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
நான் மொத்தம் ஐந்து வலை பதிவுகளுக்கு சொந்தக்கார்ர் 1 ஜலீலாவின் பயனுள்ள டிப்ஸுகள், 2.குழந்தை வளர்பும் உணவு முறையும்,
5 பொண்டாட்டி காரன் போல பதிவு போடுவதும் கமெண்டுக்கு பதில் அளிப்பதும் பெரும் பாடா இருந்தது, அதான் இப்ப இரண்டு மட்டும் சமையல் அட்டகாசங்கள், முத்தான துஆக்கள்.(ஆனால் அப்படி தனித்தனியாக போட்ட்து தான் பிடித்த்து)
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?..
ஆம் இழிவு படுத்தி எழுதும் பதிவுகளை படித்தால் கோபம் வரும். பொறாமை யார் மேலும் ஏற்பட்ட்து கிடையாது. எல்லோருக்கும் அவர்களுக்கென்று ஒரு தனித்திறமை உள்ளது. ஆகையால் யாரையும் பார்த்து பொறாமை பட வேண்டிய அவசியம் இல்லை. (கவிதை எழுத தெரியலையேன்னு ஒரு வருத்தம் இருக்கு கவிதை எழுதுபவர்களை கண்டால் ஆச்சரியம் தான்)
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதன்முதலில் நான் ஆரம்பித்த்து குழந்தை வளர்ர்பு டிப்ஸும், பொதுவான பயனுள்ள டிப்ஸ்களும், அதை என் எழுத்தை பாராட்டியவர்கள் சகோதர்ர்கள் நவாஸ்,ஷபிக்ஸ்,அதிரை அபூ பக்கர் தோழியர்கள் பாயிஜா,மேனகா,சுஹைனா, ஹர்ஷினி அம்மா. . நிறைய பாராட்டு கமெண்ட் இருக்கு எதன்னு சொல்வது. இப்போது என்னை ஊக்கபடுத்தி கமெண்ட் அளிக்கும் அனைவரின் அன்பான கமெண்டும், பாராட்டுமே விலைமதிக்க முடியாத்து. ரொம்ப சந்தோஷம்
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
என்னத்த சொல்வது இங்கு வலைபதிவுகள் மூலம் எல்லோருக்கும் என்னை பற்றி தெரியும்.தெரியாத விஷியம் நிறைய இருக்கு , பகிற வேண்டும் என்று தோன்றினால் பிறகு தெரிவிக்கிறேன்.
ஏற்கனவே பதிவுகளில் நிறைய சொல்லி இருக்கேன்.
தொடர் பதிவு எல்லோரும் எழுதிவிட்டார்கள்.
நான் அழைக்க போவது
டிரெங்கு பெட்டி ஹுஸைனாம்மா,
Tweet | ||||||
38 கருத்துகள்:
அட, என்னையும் துணைக்குக் கூப்பிட்டிருக்கீங்களா!! எழுதிடலாம்.
ஹஹஹ...நீங்க சம்பாதிக்கலைன்னாலும் உங்க பதிவுகளை காப்பி அடிச்சு சில பேரும் புகழும் சம்பாதிக்கிறது பெரிய காமெடி... இந்த டீல் புடிச்சிருக்கு...:)
அப்புறம் என்னை மாதிரி ஆளுங்களுக்கு சமையல் புக்கு வாங்கற செலவு மிச்சம்:))
ஆஹா! ரைட்டு ...
அசத்திட்டீங்க ..
பேட்டி அருமைங்கோய் :))
ஜலீலா அக்கா நலமா ? ..முதலே உங்க குறிப்பை அங்கே இங்கே காப்பிதான் அடிச்சாங்க...இப்ப புக்காவேவா!!!!
அசத்தல் பதில்கள்...
உங்களைப் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம். பதில்கள், நல்லா இருக்குங்க.
நல்லாயிருந்தது பதில்கள் தொடருங்கள் அக்கா..
யம்மாடி ஜலீலா 5 வலைத்தளங்களா.. ரெண்டை வச்சுக்கிட்டு நான் படுற பாடு..:))
//கவிதை எழுத தெரியலையேன்னு ஒரு வருத்தம் இருக்கு கவிதை எழுதுபவர்களை கண்டால் ஆச்சரியம் தான்)//
பக்கத்திலேயே “கொழுகட்டை”ய வச்சிகிட்டு இந்த கேள்வி கேக்குறீங்களே இது நல்லா இருக்கா..ஹா..ஹா..
//சில வேலயத்த பெருசுகள் ஒரு வேலையா உட்கார்ந்து என் ரெசிபிய புக்கா போட்டும் சம்பாத்தி கொண்டு இருக்கிறார்கள்.//
யக்கோவ் தெரிஞ்சது இத்தனை தெரியாதது இன்னும் எத்தனையோ..? கூல்... கோவப்பட்டு அப்புறம் அதுகளுக்கு ஹார்டடாக் வந்துடப்போகுது
நீங்களே ஒரு புக் போடுங்க ..அப்புரம் எங்களுக்கு வசதியா இருக்கும் :--))
நல்ல பதில்கள். ஹையோ! நம்ம நாட்டா..மை மாட்டிக்கிட்டார்.
ஜலீ சூப்பரா பிட்டு பிட்டு எழுதி தள்ளிட்டிங்க. ரொம்ப நல்லா இருக்கு. இத்தனை நாள் நல்ல சமைய்ல், குறிப்பு, டிப்ஸ் எல்லாம் எழுதுவிங்க என்று நினைத்து இருந்தேன், இதில் கூட உங்களை தோற்கடிக்க முடியாது.
கோபிக்காதிங்க. ஜஸ்ட் பார் ஜோக்.
ஜெய் சொல்வதை போல் தான் நானும் உங்களுக்கு சொல்கிறேன்.
முதல் வேலையாக ஒரு புக் ரிலீஸ் செய்யுங்க. அதுக்கு உண்டான முயற்ச்சை தொடருங்க. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
ரொம்ப சிம்பிள் தாங்க வேலை.
ஒரு ப்ப்ளிக்கேஷன்ஸ் அனுகிட வேண்டியது தான். அவஙகளே எல்லாம் பார்த்துக்குவாங்க. ஒரு திறப்பு விழா பார்ட்டி தான். மறக்காமல் எனாக்கு ஒரு அழைப்பு குடுங்க்க.ஒ.கே யா ஜலீ.
எங்கேயோ என்னை திட்டுவது போல் தெரியுது.
எஸ்கேப். மீண்டும் வருகிறேன்.
அழகாப் பதில் சொல்லிட்டீங்கள் ஜலீலாக்கா.
நான் இத்தொடர் முடிந்துவிட்டதாக்குமென நினைத்தேன், நீங்க நிறையப்பேரை மாட்டிவிட்டுவிட்டீங்க:))) கீப் இற் அப்:)))
வேறு யாரும் என் குறிப்ப வச்சி பொட்டி கட ரொட்டி கட போட்டு இருந்தா சொல்லிடுங்க ...///
மேடம் இங்க மங்குனி அமைசர் அப்படின்னு ஒரு ஆள் இருக்கான் , அவன் வீட்டுல உங்க மற்றும் ஆசியா உமர் மேடம் ரெசிபி தான் ரொம்ப நாலா ஓடிகிட்டு இருக்கு . (எச்சூமி நான்தான் போட்டு குடுத்தேன்னு சொல்லிடாதிங்க )
ஜலீலா மேடம்....
உங்களை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி...
நல்லா தான் பதில் சொல்லி இருக்கீங்க...
பாயிண்ட் நம்பர் 9 - என்னடா நம்ம பேர காணுமேன்னு நெனச்சுட்டே வந்து பதிவின் அடுத்த பாயிண்ட் வந்தா, ஆஹா... அங்க நம்ம பேரு இருக்குடோய் என்று ஆனந்தம் கொண்டேன்...
என்னையும் நினைவில் வைத்ததற்கு மிக்க நன்றி ஜலீலா மேடம்....
ஸோ..... ஹூஸைனம்மா மொதல்ல எழுத ஆரம்பிக்க போறாங்களா... பலே ஸ்டார்ட் மீஜிக்.
அழைப்பிற்கு முதலாவதாக கமெண்ட் கொடுத்தமைக்கு நன்றி ஹுஸைனாம்மா?
நாஞ்சிலாரே புக்கு வாங்குர செலவு மிச்சமா? என்ன ஏமாந்தது நான் தான்
சகோ.ஜமால் நன்றி என்ன ரைட்டு போட்டுட்டீங்க, உங்களையும் தான் அழைத்துள்ளேன்.
புதிய மனிதா வருகைக்கு மிக்க நன்றி
சை.கொ.ப நன்றி
ஹர்ஷினி அம்மா என்ன செய்ய ரொம்ப் வருத்தம்
நன்றி மேனகா
நன்றி சித்ரா
நன்றி ரியாஸ்
ஆமாம் தேனாக்கா ஆரம்பித்த புதிதில் எப்படி போடன்னு தெரியாம இப்படி போட்டுட்டேன். இப்ப சமையல் அட்டகாசம் ஒன்று தான்
வருகைக்கு நன்றீ
ஜெய்லானி இன்னும் கொழுக்கட்டைய மறக்கலையா
என்ன செய்ய பெரிய மனுசர்களே இப்படி தில்லு முல்லு செய்தால் எப்படி
//நீங்களே ஒரு புக் போடுங்க ..அப்புரம் எங்களுக்கு வசதியா இருக்கும் :--))//
பார்க்கலாம் முயற்சிக்கிறேன்.
வானதி எந்த் நாட்டமை சொல்றீங்க
அருமை தோழி விஜி உங்களை போய் கோபிக்கமுடியுமா, என் மேல் உள்ள அக்கறையில் சொல்கிறீர்கள் புத்தகமாக போட முயற்சி செய்கிறேன். நீங்க தான் வந்து ரிப்பன் கட்பண்ணனும்
அதிரா தொடர் எழுட்தாதவர்க்ளை தேடி பிடித்தேன்.
அமைச்ச்ரே எங்க இரண்டு பேர் ரெசிபிய வச்சி பொட்டி கட் போடலையே.
ரொம்ப உங்கள் வீட்டு சமையலறையில் நாங்கள் வாழ்கிறோம்.தூஆ செய்யுங்கள்
கோபி இதில் என் பதிவுகளை முதல் முதல் பாரட்டியர்கள் பற்றி கேள்வி அதான் அவர்களை குறீப்பிட்டேன்.
அனுபவஙள் பகுதியில் முதல் கமெண்ட் போட்டது நீங்கள் தான் அதை மறக்கல.
அதான் தொடர் பதிவுக்கு அழைச்சாச்சு.
தொடர்வருகைக்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றீ
@@ ஜலீலா கமால் said ..
//நான் அழைக்க போவது "ஆஹா பக்கங்கள் எம்.அப்துல் காதர்"//
வானதி said ....
// ஹையோ! நம்ம நாட்டா..மை மாட்டிக்கிட்டார். //
ஜலீலாக்கா கேள்வி எல்லாம் கஷ்டமா இருக்கே! அப்படியே காப்பி அடிச்சி பிட் அடிச்சி பரீட்சை எழுதிடவா?? நீங்களாச்சும் என்னை ஞாபகம் வச்சு கூப்பிடீங்களே. மிக்க நன்றி!! எனக்கு கண் கலங்குது. ஹா..ஹா..
கண் கல்ங்கப்படாது, வசதி எப்படியோ அப்படி எழுதவும்.
சூப்பர் கேள்விகள் சூப்பர் பதில்கள்.... ஆனா நான் உங்களை கூப்பிட்டது "கடவுளும் நானும்" ங்கற தொடர் பதிவுக்கு... உங்களோட "முத்தான துவ்வாக்கள்" பாத்து இம்ப்ரெஸ் ஆகி தான் இதை எழுத நீங்க சரியான ஆளுன்னு தோணி உங்களை இதுக்கு கூப்ட்டேன்... முடியறப்ப எழுதுங்க அக்கா. ரெம்ப நன்றி . இதோ அந்த லிங்க்... http://appavithangamani.blogspot.com/2010/08/blog-post_06.html
மிக யதார்த்தமான பதில்கள்.
தங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி சகோதரி.
நான் ஏற்கனவே இந்த தொடரை எழுதிவிட்டேன்.
keep it up pinni pedaledunga ALL THE BEST
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா