இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
Simple and Easy Recipes and Traditional Recipes ஆரஞ்சு பழமா இல்ல அகர் அகராHow to Make Orange fruit Agar Agar/ Samaiyal_attakaasam#ramadan
China grass /kadal paasi /Agar Agar - 10gram water - 400ml sugar - 10 tspn fresh fruit juice - 100 ml
********** கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு சைவ உணவு. இதை ஜெல்லியை போல் ஹோட்டல்களில் பாலுடா மற்றும் விதவிதமான ஸ்வீட் வகைகளில் பயன்படுத்துவார்கள். இது நோன்பு பிடிக்கும் போது ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும். கடல் பாசியை பல வகையாக செய்யலாம், ப்ளைனாக செய்து அதில் வேண்டிய புட்கலர் சேர்த்து நட்ஸ் தூவி கொள்ளலாம். இல்லை பழ வகைகளை நறுக்கி போட்டு செய்யலாம். பால், ஜவ்வரிசி, கடல்பாசி சேர்த்து காய்ச்சி செய்து சாப்பிடலாம். ரூ ஆப்ஷா மற்றும் டேங்க் பவுடர், தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம் இதை நோன்புகாலதில் தான் என்றில்ல்லை மற்ற சீசன் களிலும் சாப்பிடலாம். வயிற்றுபுண் வாய் புண்ணிற்கும் ஏற்ற நல்ல ரெசிபி,
ஆரஞ்சு சைனா கிராஸ் **************************** சைனா கிராஸ் - 10 கிராம் ஆரஞ்சு பழ சாறு - 100 மில்லி சர்க்க்ரை -10 தேக்கரண்டி தண்ணீர் - 400 கிராம் ஆரஞ்சு பழத்தை வட்ட வடிவமாக அரிந்து விட்டு சாறு எடுத்து விட்டு பழத்தோலை வைக்கவும்,
சைனா கிராசை கட் செய்து 400 மில்லி தண்ணீரில் கொதிக்க விடவும் கெட்டியாகி வரும் போது அதில் சர்க்கரை மற்றும் ஆரஞ்சு பழ சாறை கலந்து கலக்கி கொதிக்க விட்டு சிறிது ஆறியதும் பிழிந்த ஆரஞ்சு பழ தோலை வட்ட வடிவமாக அப்படியே அதன் வடிவிலேயே வைத்து அதை ஒரு கோப்பையில் வைத்து தயார் செய்த ஆரஞ்சு பழ சைனா கிராசை அதில் ஊற்றவும். மீதி உள்ளதை மற்ற கிண்ணங்களில் ஊற்றி கொள்ளலாம்.நன்கு குளிர விடவும். சில ஆரஞ்சு பழம் சில ரொம்ப புளிப்பாக இருக்க்கும் அதற்கு நாம் இப்படி செய்தால் புளிப்பு சுவை தித்திப்பாக மாறிடும். ஆரஞ்சு பழ சுவையில் சூப்பரான் அகர் அகர் - சைனா கிராஸ் ரெடி.
அகர் அகர் என்னும்
கடல் பாசியை தண்ணீரில் ஊறவைத்து வடிக்கடி
அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைய கொதிக்க விடவும்.
பிறகு பால் சேர்த்து கொதிக்க விடவும்.
நுங்கை மேல் தோல்
எடுத்து விட்டு பொடிப்பொடியாக அரிந்து சிறிது
பால் சேர்த்து ஒன்றும் பாதியுமாய் அரைக்கவும். சர்க்கரை + ஸ்வீட்டன் கன்டென்ஸ்ட் மில்க்
சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
ஒரு பெரிய தாம்பாளதட்டில் அகர் அகர் கலவையை ஊற்றி ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்கவும்.மேலே பிஸ்தால்
அல்லது உங்களுக்கு விருப்பட்ட நட்ஸ் தூவி விடவும். .இரண்டு மணி நேரம் குளிர வைத்தால்
போதுமானது, வேண்டிய வடிவில் கட் செய்து பரிமாறவும்.
( நுங்கு சீசன்டைமில் தான் கிடைக்கும் அதை இது போல கடல் பாசியாக செய்து சாப்பிட்டால் சுவை அபாரமாகஇருக்கும்)
உளுந்து வடை தமிழ் நாட்டின் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டியும் காலை நேரம் டிபனும் ஆகும். இதை தயிர் வடை, சாம்பார் வடை , மோர் குழம்பு வடை, ...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.