Friday, June 23, 2017

ஏழு கறி சைவ நோன்பு கஞ்சி 7 Veggie Ramadan Soup


கஞ்சி இல்லாத நோன்பா! அதுவும் நோன்பு காலங்களில் இஸ்லாமிய இல்லங்களிலும் பள்ளிவாசலில் கொடுக்கும் கஞ்சிக்கும் முஸ்லீம்கள் என்றில்லை முஸ்லீம் அல்லாதவர்களும் இதற்கு அடிமை. அப்படியே பெரிய சட்டியில் (தேக்‌ஷாவில்) 500 ,  1000 பேருக்கு தயாரிக்கும் போது அதன் ருசியே தனி. ஆனால் சைவம் சாப்பிடுபவரகளுக்கு இதை பற்றி அறிந்திருந்தாலும் அந்த கஞ்சி எப்படி செய்வார்கள் என்ன ருசியில் இருக்கும் அதை சாப்பிட்டு பார்க்கனும் என்ற ஆர்வம் கண்டிப்பாக இருக்கும், இதோ சைவ விரும்பிகளுக்காக மட்டன் சிக்கன் சேர்த்து செய்யும் அதே ருசியில் அதற்கு பதிலாக காய்கறிகளை சேர்த்து செய்துள்ளேன். 

சைவ நோன்பு கஞ்சி ( வெஜிடேபுள் நோன்பு கஞ்சி)
 ஏழு கறி சைவ நோன்பு கஞ்சி

பரிமாறும் அளவு : 5 நபர்களுக்கு

தேவையான பொருகள்
பச்சரிசி – 100 கிராம்
பாசி பருப்பு – 25 கிராம்
கடலை பருப்பு – 1 மேசைகரண்டி
பர்கல் அரிசி(உடைத்த சம்பா கோதுமை ரவை) – 1 மேசைகரண்டி
வெந்தயம் – ½ தேக்கரண்டி



காய்கறிகள் (7 Veggie)

  1. சோயா  - 6
  2. பலாக்காய் – 25 கிராம்
  3. கேரட் – 25 கிராம்
  4. காலிப்ளவர் – 5 சிறிய பூ
  5. பீன்ஸ் – 25 கிராம்
  6. முட்டை கோஸ் – துருவியது – 2 மேசைகரண்டி
  7. கேப்சிகம் – சிறிது


வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி
பச்சமிளகாய் – 3
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
எண்ணை – 6 தேக்கரண்டி





செய்முறை

அரிசி பருப்பு வகைகளை களைந்து ஊறவைக்கவும்
சோயாவை கழுவி ஊறவைத்து பொடியாக அரிந்து கொள்ளவும்.
மற்ற காய் வகைகளை கட் செய்து தயாராக வைக்கவும்.

குக்கரில் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் கழுவி வைத்துள்ள அரிசி,பருப்பு,பர்கல், வெந்தயம் போன்றவைகளை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு வேகவிடவும்.

ஒரு பேனில் எண்ணையை சூடாக்கி பட்டை கிராம்பு போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி , பச்சமிளகாய், கொத்து மல்லி புதினா சேர்த்து வேக விடவும்.
சோயா , பலாக்காயை பொடியாக அரிந்து  சேர்த்து வதக்கி வேக விடவும்.
மேலும் மற்ற காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து மிளகாய் தூள் , மஞ்சள் தூள் தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கி நன்கு வேக விடவும். வெந்து   கொண்டு இருக்கும் அரிசியுடன் சேர்க்கவும்.
தேங்காய் பால் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு வேகவிட்டு இரக்கவும். சுவையான சைவ நோன்பு கஞ்சி ரெடி.
இதற்கு தொட்டு கொள்ள மசால் வடை, சமோசா, கட்லட், புதினா துவையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


Seven Veggie Ramadan soup,

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

2 கருத்துகள்:

கோமதி அரசு said...

நோன்பு கஞ்சி அருமை.

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

மிக்க நன்றி கோமதி அக்கா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா