Wednesday, April 25, 2012

சௌராஷ்ட்ரிய சிக்கன் கிரேவி



சௌராஷ்ட்ரிய சிக்கன் கிரேவி

கோழி - கால் கிலோ 
உப்பு - தேவையான அளவு 
தாளிக்க: 
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி 
கடுகு - ஒரு தேக்கரண்டி 
கறிவேப்பிலை - ஒரு கொத்து 
வெங்காயம் - இரண்டு 
தக்காளி - ஒன்று 
அரைக்க: 
மிளகு - இரண்டு தேக்கரண்டி 
சீரகம் - ஒரு தேக்கரண்டி 
கிராம்பு - நான்கு 
கொத்தமல்லி தழை - கால் கப் (பாதி அரைக்க, பாதி மேலே தூவ) 
பூண்டு - ஐந்து பல் 
கசகசா - ஒரு மேசைக்கரண்டி





செய்முறை

முதலில் அரைக்க கொடுத்துள்ளவற்றை மையாக அரைத்து கொள்ளவேண்டும். 
தாளிக்க வேண்டியவைகளை தாளித்து கோழியை சேர்த்து உப்பு போட்டு வேக விடவும். 
பாதி வெந்ததும் அரைத்து வைத்ததை போட்டு நல்ல கிளறி சிம்மில் வைத்து நன்கு வேக விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

என் பள்ளி தோழி  (சௌராஷ்ட்ரிய தோழி) சித்ரா சொல்லி கொடுத்தது.
நாங்க கடுகு சேர்த்து அவ்வள்வா மட்டன், சிக்கன் சமைத்த்தில்லை, ஆனால் இது கொஞ்சம் வித்தியமாக இருக்கும். கொஞ்சம் கார சாரமாக இருக்கும்.
சளி தொந்தரவின் போது இப்படி செய்து சாப்பிடலாம்.
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு

21 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் said...

சுலபமான செய்முறையா இருக்கே...
செய்து பார்க்கலாம்.

Priya Suresh said...

Slurp,super spicy chicken gravy,mouthwatering here..

ஸாதிகா said...

நான் கூட ஒரு வீட்டுக்கு போய் இருந்த பொழுது சிக்கன் கிரேவியில் கடுகு தாளித்து இருந்தார்கள்.வித்த்யாசமான சுவையில் இருந்த்து.

Asiya Omar said...

அருமையாக இருக்கு ஜலீலா.பார்க்கவே சூப்பர்.

பாரணை முடிச்ச:) அதிரா said...

நான் இதுவரை சிக்கின் மட்டின் கிரேவி எதுவும் செய்ததில்லை, இது சூப்பராக இருக்கு. செய்துபார்க்கும் ஆவலைத் தூண்டுது.

திண்டுக்கல் தனபாலன் said...

அட ... ! எங்க கிரேவி ! நன்றி சகோ !

மாதேவி said...

நன்றாக இருக்கிறது ஜலீலா.

Lecker and Yummy Recipes said...

Jaleela, a BIG surprise is awaiting you at Healthy Morsels ;)
Please check one of our blogs for details ...

http://www.leckerandyummyrecipes.blogspot.de/2012/04/healthy-morsels-pregnancy-roundup.html
http://www.schmetterlingwords.blogspot.de/2012/04/healthy-morsels-pregnancy-roundup.html
http://www.tasteofpearlcity.blogspot.de/2012/04/healthy-morsels-pregnancy-roundup.html

Your Healthy Morsels Team !

schmetterlingwords said...

Dear Jaleela, congratulations on getting selected in Healthy Morsels - Pregnancy. You deserved it!!

Heartfelt thanks for your participation :)

Healthy Morsels Team

Jaleela Kamal said...

வாங்க சே.குமார் வருகைக்கு மிக்க நன்றி
பேச்சுலர்களும் சுலபமாக செய்யாலாம்
செய்து பார்த்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

Jaleela Kamal said...

ப்ரியா வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா நான் என் தோழி வீட்டுக்கு போய் இருந்த போது இதை எனக்கு செய்து கொடுத்தாஙக்.,

கடுகு தாளித்தது வித்தியாசமாக இருந்தது.

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி ஆசியா, செய்து பாருங்கள்,

Jaleela Kamal said...

அதிரா எங்களுக்கு சால்னா , கிரேவி இல்லாத சமையலே கிடையாது .

செய்து பாருங்கள்

Jaleela Kamal said...

அதிரா டூர் போய் முடிந்த டயர்டிலும் வந்து கமெண்ட் இட்டமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

திண்டுக்கல் தனபாலன் நீங்க போட்ட கமெண்ட் கவுண்டமனி சொன்னா எப்படு இருக்கும் அது போல் இருக்கு

Jaleela Kamal said...

வாஙக மாதேவி வெகு நாட்கள் கழித்து வந்து இருக்கீங்க

Jaleela Kamal said...

//// Lecker and Yummy Recipes said...
Jaleela, a BIG surprise is awaiting you at Healthy Morsels ;)
Please check one of our blogs for details ...

http://www.leckerandyummyrecipes.blogspot.de/2012/04/healthy-morsels-pregnancy-roundup.html
http://www.schmetterlingwords.blogspot.de/2012/04/healthy-morsels-pregnancy-roundup.html
http://www.tasteofpearlcity.blogspot.de/2012/04/healthy-morsels-pregnancy-roundup.html

Your Healthy Morsels Team !


///Dear Jaleela, congratulations on getting selected in Healthy Morsels - Pregnancy. You deserved it!!

Heartfelt thanks for your participation :)

Healthy Morsels Team//


ஆயிஷா, ஆயிஷாரியாஸ், ரேஷ்மி என்னை தேர்ந்தெடுத்த உங்கள் குழுவிற்கு மிக்க நன்றி

மிக்க மகிழ்சி.
இது கண்டிப்பாக எல்லா பெண்களுக்கும் பயன் படும் குறிப்பாக இருக்கும்

சாந்தி மாரியப்பன் said...

வித்தியாசமான குறிப்பு.. நல்லாருக்கு ஜலீலாக்கா.

Jaleela Kamal said...

மிக்க நன்றீ சாந்தி

Jaleela Kamal said...

உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி அருள்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா