Showing posts with label கேன்சர் அபாயம். Show all posts
Showing posts with label கேன்சர் அபாயம். Show all posts

Friday, February 21, 2014

புற்றைக்கொள்ளும் செந்நிற பானம்

இதை முன்பு நேசம் மற்றும் உடான்ஸ் புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகள் வைத்து விழிப்புணர்வு செய்தார்கள், இன்னும் அதிக அளவில் கேன்சர் நோய் சிறியவர்கள் பெரியவர்கள் என்றில்லாமல் அனைவரையும் ஆட்டி படைத்து கொண்டு தான் இருக்கிறது.. இது போல் உண்ணும் உணவிலாவதுகவனம் செலுத்தி ஓரளவுக்கு நாம் தடுத்து கொள்ளலாம்.

இதற்கு முன் நான் போட்டுள்ள சில பதிவுகளின் லின்குகள் கீழே உள்ள சுட்டியை சொடுகி பார்க்கவும்.

கேன்சர் நோயாளிகளுக்கான உணவு வகைகள்

புற்றை வெல்வோம் வருமுன் காப்போம் பெண்களுக்காக

ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை - கதை

சிலருக்கு கேரட் ஆப்பிள், பீட்ரூட் சேர்த்து ஜூஸ் செய்து குடிக்க பிடிக்க வில்லை என்றால் சூப் போல செய்து குடிக்கலாம்.


-- புற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்

//இது முன்பு  எல்லாருக்கும் மெயிலில் வந்தது, இதை மறுபடி ஞாபகபடுத்துகிறேன்.//


முற்காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட், பீட்ரூட், ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிசய சிவப்பு
தினமும் இரண்டு முறை சிவப்பு நிற பழங்களின் கொண்ட ஜூஸ் பருகுவதால் அதிசயிக்கத்த மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

1) 
உடம்பில் உள்ள புற்று நோய் செல்களை கட்டுப்படுத்தி புற்றுநோய்க்கான எதிர்ப்பு செல்களை அதிகரிக்கிறது.

2) 
கல்லீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடு, அல்சர் நோயை குணப்படுத்துகிறது.

3) 
நுரையீரலை பாதுகாப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

4) 
மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

5) 
கண் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது.

6) 
தசை தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது

7) 
முகப்பொலிவை அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது.

8) 
சீரணமண்டலம், தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

9) 
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.

10) 
காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.


எப்படி தயாரிப்பது :

இந்த பானத்தை தயாரிப்பது எளிது


காரட்- 1, பீட்ரூட்– 1, ஆப்பிள்– 1



மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். சுவைக்கு எலுமிச்சை சேர்த்துக்கொள்ளலாம்.



காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருகவேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் காலை உணவு சாப்பிடலாம். மாலையில் 5 மணிக்கு முன்னர் இதனை பருகலாம். உடனுக்குடன் செய்து 

பருகுவது முக்கியம்.

தினமும் இருவேளை பருகுவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சிறப்பு மிக்க இந்த பானத்தை உணவியல்துறை நிபுணர்களும் பரிந்துறைக்கின்றனர். இந்த பானம் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த அதிசய பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகியதன் மூலம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் குணமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றுமுதல் இந்த பானத்தை பருகலாம்.







இது 2 வருடம் முன்பு செய்த ஜூஸ், படங்கள் சரியாக இல்லாததால் போஸ்ட் பண்ணவில்லை. படம் சரியாக இல்லை என்றாலும் இந்த பதிவையாவது சிலர் படித்து விழிப்புணர்வு பெறவேண்டும் என்று தான் இந்த பகிர்வு.

என்னுடைய டிப்ஸ் 

இதில் பீட்ரூட்டில் பச்சை வாடை அடித்தால் சிறிது வேக வைத்து கொள்ளலாம். இல்லை இதையே பீட்ரூட், கேரட், ஆப்பிள் சேர்த்து சூப்பாக வைத்து குடிக்கலாம்.

கேக் வகைகள் செய்யும் போது கூட கலர் பொடிக்கு பதில்  பீட்ரூட்டை சாறெடுத்து ஊற்றி செய்யலாம்.

காய் கறி குருமா, பிரியாணி, சாம்பார் செய்யும் போது நான் எப்போதும் பீட்ரூட்டையும் சேர்த்து கொள்வேன். கலந்த சாதம் செய்வதற்கு பதிலாக பீட்ரூட் சாதமும் செய்து சாப்பிடலாம்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, February 8, 2012

புற்றை வெல்வோம் வருமுன் காப்போம் - பெண்களுக்கு மட்டும்


நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் கேன்சர் விழிப்புணர்வு கட்டுரை பெண்களுக்காக 





புற்றுநோயை வருமுன் காக்க பெண்களுக்கான சில குறிப்புகள்.

நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் விழிப்புணர்வு கட்டுரை.

புற்றை வெல்வோம் - வருமுன் காப்போம் -  பெண்களுக்கு மட்டும்

சமையல் மற்றும் உணவில் பெண்கள் கவனம் கொள்ளவேண்டியது
எந்த நோயிக்குமே உணவே மருந்தாகும். அளவுக்கு அதிகமான உணவும் நல்லதில்லை. அது நஞ்சே ஆகும்.அந்தகாலம் போல் எந்த உணவும் இப்போது சத்தானது கிடையாது. பாஸ்புட் மோகம் அதிகமாக இருக்கு. சில உணவு பொருட்களில் கெமிக்கல் அதிகமாக கலந்து தான் விற்பனையாகிறது.

பெரும்பாலும் 80 % பெண்கள் தான் சமைக்கிறார்கள், இப்ப காலம் மாறி போய் ஆண்களும்  சமையல் உலகில் சிறந்து விளங்குகின்றனர்.

பெரும்பாலும் உணவு பொருட்களில் யாரும் காலவாதி தேதியை பார்ப்பதில்லை.
ஒரு பிரட் வாங்கினால் கூட காலவாதி தேதியை பார்க்காமல் காலவாதி தேதி முடிந்த பிறகும்  அப்படியே சாப்பிடுகின்றனர். .சாப்பிடும் போது நுனுக்கமாக  பிரட்டை பார்த்தால் அதனுள்  பூஞ்சை இருப்பதை நாம் அறியலாம்.

அதே போல் மீன் வறுவல், மட்டன் வறுவல், சிக்கன் வறுவல்,கட்லெட், அப்பளம், வத்தல், சுட்ட கிரில் அயிட்டங்கள் இதேல்லாம் சமைக்கும் போது கண்டிப்பாக சற்று அதிகம் கவனம் கொள்ள வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும், கவனக்குறைவாக இருந்தாலும் உடனே கரிந்து போய்விடும்.
எண்ணையை அதிக சூட்டில்  அப்பளத்தை போடும் போது கூட உடனே கரிந்து விடும் அதை தூக்கி எறிய மனமின்றி வீட்டில் இருக்கும் பெண்கள் அதை சாப்பிடுவதை தவிர்க்கவும்.மற்றும் சிக்கன், மீன், மட்டன் வறுவல்கள் செய்யும் போது கருகாமல் செய்வது நல்லது.அதிக தீயை வைத்து பொரிக்காதீர்கள்.

அதே போல் ரசம் தாளிக்கும் போது எண்ணையை சூடாக்கியதும் , அதிக சூடாக இருந்தால் கடுகை போட்டதுமே ஒரு நிமிடத்துக்குள் கரிந்து விடும், ஆனால் அதையும் வேஸ்ட் பண்ண மனமில்லாமல் அப்படியே தாளித்து கொட்டுகின்றனர்.(இது சமையலில் சிலர் செய்து வரும் மிகப்பெரிய தவறு)
இதெல்லாம் சாப்பிடுவதால் சாப்பிடும் போது நல்ல தான் இருக்கும். ஆனால் நிறைய பேருக்கு நெஞ்சு கரிக்கும். கருகிய உணவை சாப்பிட்டால் என்ன ஆகும்.அடுத்து வாயு தொல்லை ஆரம்பிக்கும்.

கரிஞ்ச தீஞ்ச உணவும் கேன்ஸர் வருவதற்கு ஒரு காரணமாம். அதிக வெப்பத்தில் (க்ரில், பார்பெக்யூ, எண்ணெயை கொதிக்கவைத்து பொரிப்பது, அடுப்பு எப்பவும் பெரிய தீயில் வைத்துச் சமைப்பது...போன்றதும் கேன்ஸருக்குக் காரணமாம்...

கவனமாக தீயின் தனலை சமையலுக்கு ஏற்றவாறு வைத்து சமைக்கவும்., சமைக்கும் போது அதிக புகை போக அதை நுகர்ந்துகொண்டு சமைக்காதீர்கள் காற்றோட்டமாக ஜன்னலை திறந்து வைத்துகொள்ளுங்கள் அல்லது எக்ஜாஸ்ட் பேன் போட்டு கொள்ளுங்கள். 

ஜாம் ,, தயிர், ஊறுகாய் பாட்டில்களில் எல்லாம் சரியாக காய்ந்த கரண்டி பயன் படுத்த வேண்டும்.அப்படி பயன் படுத்தாமல் விட்டால் மேலே பூஞ்சை படிந்த்து விடும். அதை சரியாக கவனிக்காமல் மேலோடு வழித்து போட்டு விட்டு பயன்படுத்துவோரும் இருக்கினறனர். அப்படி பயன்படுத்தாதீர்கள்.பெண்கள் குடும்பத்தில் உடல் நலம் கருதி சமையலில் கொஞ்சம் கூடுதல் கவனம் கொள்ளுங்கள்.

காய்கறிகளில் கொத்துமல்லி கீரை, காலிப்ளவர், புரோக்கோலி,கீரை வகைகள் அதில் நிறைய மணல் மற்றும் பூச்சி புழுக்கள் இருக்கும், முறையாக வென்னீரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கழுவி பயன் படுத்தவும்.

ஆரோக்கியமான சமையலே நோய்க்கு நல்ல மருந்தாகும்.

 கர்பவாய், மார்பகபுற்றுநோயில் இருந்து பாதுகாப்பு பெற

 பெண்கள் ஆடைகள் விஷியத்தில் விலையுயர்ந்த  பட்டு புடவைகள் , சுடிதார் எனறு துணிகளை விலை அதிகமாக கொடுத்து வாங்குகின்றனர். ஆனால் யாரும்  உள்ளாடையில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நல்ல தரமான பருத்தி  (காட்டன்) உள்ளாடைகள் பார்த்து வாங்க வேண்டும். உள்ளாடையை ஆறு மாதம் ஒரு  முறை மாற்றுவது நல்லது. புதிய உள்ளாடைகள் வாங்கினாலும் ஒரு முறை  அலசி பயன்படுத்துவது நல்லது. (இதை யாரும் செய்வதில்லை).துவைக்கும் போது கொஞ்சம தண்ணீரில் சோப்பு போடு அதில் கொதிக்கிற வெண்ணீரை ஊற்றி அதில் ஊறவைத்து அலசவும். இப்படி செய்வதால்  அதில் உள்ள தொற்று  கிருமிகள் அழிந்துவிடும். கருப்பு நிற உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவும்.இறுக்கமான உள்ளாடைகள் வாங்குவதையும் தவிர்க்கவும். இதனால் கூட தோல்பாதிப்பு நாள்பட ஆறாத புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 பெண்கள் மாதவிலக்கின் போதும் உள்ளடைகளை துப்பரவாக வெண்ணீரில் அலசி பயன் படுத்தவும். வாஙகும் சானிடரி பேட் களும் எக்ஸ்பேரி டேட் பார்த்து வாங்கி பயன்படுத்தவும். இல்லை என்றால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் அப்படி அலர்ஜிக்கு  தேங்காய் எண்ணை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

 கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் போது அதையும் மருத்துவரிடம் சரியாக பரிசோதித்து கொள்ளுங்கள், ஒரு முறை எழுதி கொடுத்தால் மறுபடி போய் செக் பண்ணி கொள்ளவோ அதை பற்றி மருத்துவரிடம் விவாதிக்கவோ வெட்கப்பட்டு கொண்டு அதையே 10 வருடத்துக்கும் மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்

 ஒரு வருடம் ஒரு முறை மருத்துவரிடம் சென்று சாப்பிடும் மாத்திரைகளை கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.

காப்பர்டி கருத்தடை சாதனம்  பயன் படுத்தினால் கூட கேரண்டி 3 முன்று வருடம் அல்லது 5 வருடம் என்று டாக்டர் சொன்னதும் அதை பற்றி கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதையும் சரியாக ஆறுமாதம் ஒரு முறை அல்லது வருடம் ஒருமுறை செக்அப்  செய்து கொள்ளுங்கள். முன்று வருடம் ஒரு முறை கண்டிப்பாக காப்பர்டியை மாற்றி விடுங்கள். இல்லை என்றால் (அ) அதிக உதிர போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கு. கர்ப்ப பை புண்ணாகிடும்,   தற்போது புடவை கட்டினாலும் கேன்சர் வருகின்றது என்று தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ரொம்ப இருக்கமாக அழுத்தி டைட்டாக பெட்டிகோட் அணிவதை தவிர்த்து கொள்ளுங்கள். புண்ணாகி அதுவே கேன்சர் கட்டிகளாக மாற வாய்ப்பிருக்கு. சிலவிடயங்கள் முறையாக பின்பற்றினாலே தொற்று கிருமிகள் அண்டாமல் கர்பவாய் புற்றுநோயில் இருந்துபாதுகாப்பு பெறலாம்.


பல் வலி வந்தால் இரண்டு நாட்கள் அதிக வலி இருக்கும் பிறகு வலி நின்று விடும், திரும்பவும் வந்து வந்து சரியாகும், அதான் சரியாகி விட்டதே என்று விட்டு விடாமல் உடனே  உரிய மருத்துவரை அனுகுங்கள். அதே போல் வாயில் பிளந்து பிளந்து கொப்புளங்கள். இருந்தாலும் கவனம் கொள்ளவேண்டும். வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் கொப்புளம் வரும். அதுவும் நாளடைவில் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பிருக்கு.

தலை வலியோ, வயிற்று புண், வயிற்று வலி , நெஞ்ரிச்சல், வாயு பிரச்சனை இதுபோல் இரண்டு முன்று மாதத்துக்கு மேல் சரியாகாமல் தொடர்ந்தால் உடனடியாக  மருத்துவரை சந்திக்கவும். ஏதும் தீராத வயிற்று வலி , வாய் புண் கொப்புளங்கள், நீண்ட நாள் வலியில்லாமல் ஆறாத கட்டி மற்றும் புண்கள் இருந்தால் அடிக்கடி மயக்கமாக இருந்தாலும்  என்ஸ்கோபி மற்றும் மெமோகிராம்  டெஸ்ட்போன்ற மருத்துவர் சொல்லும் சிகிச்சைகளை முறையாக எடுத்து கொள்ளுங்கள்.

நான் சரியான டயட்டில் தான் இருக்கிறேன் எனக்கு ஏன் கேன்சர் வருது என்று கூட நினைக்கலாம், அனைவருக்கும் கேன்சர் நோயை உண்டாக்கும் செல்கள் இருக்கதான் செய்யுமாம். அது சிலரை இல்ல இப்ப பலரை நிறையவே தாக்கி கொண்டு இருக்கிறது. அனைவருமே இதில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
40 வயதை கடக்கும் போது புற்றுநோய்க்கான முழு பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒருவரை புற்றுதாக்கிவிட்டால் பரம்பரை பரம்பரையாக வரவும் வாய்ப்பிருக்கு. ஆகையால் கூடுதல் கனவம் கொள்ளுங்கள்

புற்றுநோய் பாதிக்கபட்டவர்கள் கவலை படாதீர்கள் அப்படியே இப்ப கீமோ, ரேடியேஷன், ஆப்ரேஷன் என செய்து இருந்தால் பொலியுஷன் நிறைந்த இடத்துக்கு போகாதீர்கள், அது உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்கும். அதே போல் சமைக்கும் போது அதிக புகையில் நிற்காதீர்கள். நிறைய ஆட்கள் இருக்கும் இடத்திற்கு போகாதீர்கள்.ஊதுபத்தி, சாம்ராணி புகை இருக்கும் இடத்தில் அந்த புகையை நுகர்ந்து கொண்டு இருக்காதீர்கள். தன்னம்பிக்கையோடு தைரியமாக முறையாக சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள்.
.

. 

வாழ்வேமாயம் படத்தில் தான் கேன்சர் பற்றியே தெரியும். அதற்கு பிறகு ஆங்காங்கே சினிமா நடிகைகளுக்கு கேன்சர் என்பது ,தெரிய வந்தது.
 ஆனால் இப்போதுஎங்கு யாரை பார்த்தாலும் என்னன்னு கேட்டாலே கேன்சர் தான்.
 கடந்த ஆறு ஏழு வருடங்களாக சந்திக்கும் நிறைய பேர் (எப்படியும் 20 பேருக்கு மேல்) கேன்சர் இதில் பலர் இறந்திருக்கிறார்கள் சிலர் புற்றை வென்றும் இருக்கிறார்கள்.

ஆகையால் சிந்தியுங்கள் பெண்களே உயிர்வாழ உணவு மிகவும் முக்கியம் அதை சரியான முறையில் சமைப்பது உங்கள் கடமை சிறிது கவனக்குறையால் என்றுமே தீராத பெரிய வியாதி, அதிக செலவு,மன உலைச்சல், மற்றவர்களுக்கு  தொந்தரவு, சந்தோஷமின்மை இதெல்லாம் தேவையா???
இதேல்லாம் மேற்கண்ட விளைவுகளால் புற்று நோய் ஏற்பட்டவர்களை  நேரில் கண்ட்தை வைத்து தொகுத்து அளித்துள்ளேன்.


 இந்த புற்றுநோய் விழிப்புணர்வு செய்தியை முடிந்த வரை தெரிந்தவர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள்.

ஆக்கம்

ஜலீலாகமால்



கேன்சர் நோயாளிகளுக்கான உணவு முறை

பதிவுலக தோழ தோழியர்களை இந்த முன்று பதிவுக்கும் உடான்ஸில் ஓட்டு போடுமாறு(விருப்பம் இருந்தால்) கேட்டு கொள்ளுங்கள்

Monday, February 6, 2012

கேன்சர் நோயாளிகளுக்கான உணவு முறை



கேன்சர் நோயாளிகளுக்கான உணவு முறை

1..ராகி (கேழ்வரகு ) பானம் அதில் பாதம் மற்றும் வால்நட் பொடித்து சிறிது சேர்த்து காய்ச்சி குடிக்கவும். இது மிகச்சிறந்த பானம், ராகி பானம் .புட்டு ,சேமியா


இதே ரொட்டி, கொழுக்கட்டை, புட்டு , சேமியா, ஸ்னாக்ஸ் என்றால்

   ராகி தட்டை முருக்கு போலும் செய்து சாப்பிடலாம்.


2.. அனைத்து காய்கறிகளையும் சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்து சூப் போல செய்து குடிக்கவும்.இல்லை கீரை சூப்   பச்சை வெஜ் குருமா போன்றவை குடிக்கலாம் நல்ல எனர்ஜியாக இருக்கும்.



3. சிக்கன் சின்ன கோழியை வாங்கி சூப்பாக சமைத்து சாப்பிடவும்.

4. முட்டை வெள்ளை கரு காலை முன்று , மாலை முன்று. ( சாப்பிட முடியாது தான்) மருந்து மாத்திரைகள் போல நினைத்து கொண்டு சாப்பிடலாமே.



5.கொத்துமல்லி எலுமிச்சை சேர்த்து துவையல் இது ரத்தத்தை சுத்த படுத்தி கொண்டே இருக்கும்.நாக்கு மறத்து போய் இருப்பதற்கு ருசி தரும்.

6.ஆப்பிள் பழம் சாப்பிடால் ரொம்ப நல்லது நல்ல எவ்வளவு வேண்டுமானலும் சாப்பிடலாம்.  ஜூஸாக தினம் காலை மாலை குடிப்பது நல்லது.

7.கீரை வகைகள் முருங்க்கீரை பொரியல், மேத்தி சப்பாத்தி, மேத்தி ரொட்டி அதிகமாக சேர்த்து கொள்ளவும்.


8. இட்லி, இடியாப்பம், ஆப்பம் , கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேக வைத்த உணவுகள் உட்கொள்ளலாம்.


9. சுண்டல் வகைகள் , சாலட் வகைகள் போன்றவை.

10. உள்ளே உள்ள புண்கள் ஆற ஜவ்வரிசி சேர்த்து காய்ச்சிய பால், கடல் பாசி, இளநீர் கடல் பாசி , ஜவ்வரிசி ரூ ஆப்ஷா ஜிகர்தண்டா போன்றவை சாப்பிடலாம்.


11 காய்கறிகளில் புரோக்கோலி பாஸ்தா ,பொரியல், புரோக்கோலி மட்டன். 

முட்டைகோஸ் பொரியல் ,கூட்டு, கொஃப்தா , ஃப்ரைட் ரைஸ் 

பீட்ரூட் ,பொரியல்,  கூட்டு, ஜூஸ், கட்லெட் 

கேரட் ஜூஸ், பொரியல், சாலட் போன்றவை மிகவும் நல்லது.



12. கருப்பு திராட்சை இது ரொம்ப நல்லது. இத்துடன் வால்நட் சேர்த்து சாப்பிடலாம்.

13.நெல்லிக்காய் இனிப்பு மற்றும் உப்பில் ஊறியது, நெல்லிக்காய் சாதம் போன்றவை நல்லது.



கவனிக்க:  புற்று ஆப்ரேஷன் செய்து கொண்டவர்கள் மேற்கொண்ட உணவு வ்கைகள் எடுத்துகொண்டால் கண்டிப்பாக மீண்டும் பழைய நிலைக்கு வரலாம். மருத்துவரையும் கலந்தாலோசித்து கொள்ளுங்கள். இதெல்லாம் எந்த பக்கவிளைவும் தராதா இயற்கையான உணவு முறை தான் கேன்சர் என்றில்லை அனைவருக்குமே பொருந்தும்.

நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் கேன்சர் விழிப்புணர்வுக்கான பதிவு. 

Tuesday, January 31, 2012

ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை





நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் கேன்சர் விழிப்புணர்வு கட்டுரை, கண்டிப்பாக நல்ல சப்ஜெக்டை எடுத்து உள்ளனர். இது இப்ப இருக்கிற கால கட்டத்தில் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய விடயம்.

---

ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை:-

ஆமினா அக்காவுக்கு,தங்கைக்கு , அண்ணன் தம்பி பெண்டாட்டிகளுக்கு எல்லோருக்கும் ஆளுக்கொரு ஒரு சேலை, உங்கள் அண்ணனுக்கும்,அக்காமாருக்கும் சேர்த்து எழுதி கொள். அப்படியே பிள்ளைகளுக்கு எல்லாம் மூவாயிரத்தில் பட்டு சேலை எடுத்து விடலாம். கல்யாண பெண்ணிற்கு கல்யாண புடவையிலேயே போய் எல்லா காசையும் போடாம , 3 பட்டு சேலை, 2 பனாரஸ், 2 மைசூர் சில்க், கொஞ்சம் சுடிதார் வகைகளும், மற்றபொருட்களும் எல்லாம் வாங்கி கொள்ளலாம். என கரீம்பாயும் ஆயிஷாவும் , எல்லா மகள்களும் சேர்ந்து, தங்கள் செல்லமான தவமா தவம் கிடந்து பெத்த கடைசி பையன் திருமணத்திற்காக லிஸ்ட் போட்டு கொண்டு இருந்தனர்.

கரீம் பாய் சிறு வயதில் இருந்து உழைத்து தம்பி தங்கைகளை கரைசேர்த்து, அவர் மகள்கள் 4பேரையும் கரைத்து விட்டு கடைசியாக கடைகுட்டி பையனுக்கு திருமணம் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார். ஆயிஷாமா தன் கணவரிடம் எல்லா கடமைகளும் முடிந்த்து , இனி நம் பையன் கல்யாணம் நல்ல் படியா நடக்கனும் யாரும் விட்டு போக கூடாது, எல்லாரையும் சரியாக அழைக்கனும். நல்ல கவனிக்கனும். கரீம் பாய் இன்ஷா அல்லாஹ், ”ஆண்டவன் கிருபையால் நல்ல படியாக நடக்கும், என்று புன்முறுவலுடன் சொன்னார்”. பையன் கல்யாணம் முடிந்ததும் நாம இரண்டு பேரும் நிம்மதியாக ஹஜ்ஜுக்கு போகலாம் என்றாள்.

இருங்க நான் உங்கள் எல்லாருக்கும் டீ கொண்டு வரேன். டீ குடிச்சிட்டு லிஸ்டை தொடரலாம் என்றாள் ஆயிஷாமா. அதற்கிடையில் மகள்கள் எல்லாம் தம்பி கல்யாணம் நிகழ்வுகளை பற்றி ஓவ்வொருத்தரும் அவங்க அவங்க அபிப்ராயத்தை சொல்ல சேரில் கரீம் பாய் மிகவும் பூரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தார்.

ஆயிஷாமா அனைவருக்கும் நிறைய டீ போட்டு கொண்டு வரும் போதே லேசாக கண்ணை இருட்டி கொண்டு தள்ளியது.

யம்மா, என்னாச்சு மா, உடனே மகள்களும் மா மா என்னம்மா, என்னன்னு தெரியலங்க இப்படி தான்,  அடிக்கடி இது போல் தள்ளுது, உடனே கரீம் பாய் மகள்களிடம் கலயாணத்துக்கு முன் உம்மாவை டாக்டர் கிட்ட போய் ஃபுல் செக்கப் செய்துடலாம். அதற்கு பிறகு பத்திரிக்கை வைக்க ஆரம்பிக்கலாம் என்றார்.

கரீம் பாய் ஊரில் இருந்த வரை மகள் கல்யாணத்தில் எல்லாம் 10 நாள் முன் தான் வெளியூரில் இருந்து வருவர்ர். 50 வருட காலமாக உழைத்து இப்ப ஊரோடு செட்டில் ஆகி விட்டார். கரிம் பாய் வேலை வெளியூரிலேயே என்பதால் மகள்கள் திருமணத்துக்கு ஆயிஷாமா பத்திரிக்கை வைக்க தனியாகவே யாரையாவது கூப்பிட்டு கொண்டு பஸ்ஸில் போய் தான், தன் எல்லா சொந்தங்களையும் தேடி போய் பத்திரிக்கை வைப்பார். கடைசியாக முக்கியாமனவர்கள். வீட்டுக்கு மட்டும் இருவரும் ஒன்றாக போய் அழைப்பார்கள்.

இந்த முறை கரிம் பாய் சொல்லி விட்டார் , நாம கார் புக் பண்ணிடலாம். காலையில் இருந்து இரவு வரை முடிந்த வரை 10 நாளில் முடித்து விடலாம் என்று சொன்னார். ஆயிஷாமாவுக்கு பையன் கல்யாணத்துக்கு ஜோடியாக எல்லா சொந்தங்கள் வீட்டுக்கும் போகப்போகிறோம் என்று சந்தோஷம் ஒரு பக்கம். ஆனால் மயக்கம் வேறு.இரவு தூங்கும் போது நெஞ்சு வலித்து கொண்டே இருக்கு, நாளைக்கு செக்கப்புக்கு போனா டாக்டர் என்ன சொல்வாங்களோன்னு பதட்டமாகவும் இருந்தது.

இரண்டாவது மகள் சரிங்க வாப்பா நாளைக்கே உம்மாவை நான் கூப்பிட்டு செல்கிறேன் எனறு சொன்னாள். மறுநாள் கிளம்பி ஹாஸ்பிட்டல் சென்றனர். என்னை லேடி டாக்டர் கிட்டேயே கூப்பிட்டு போ என ஆயிஷாமா சொல்ல.. அந்த ஹாஸ்பிட்டலில் லேடி டாக்டர் பார்த்து கேட்டு அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி கொண்டனர்.

ஹாஸ்பிட்டல் சென்றது வெளியில் வரவேற்பரையில் இருவரும் காத்து இருந்தனர்.

ஆயிஷா என நர்ஸ் கூப்பிட ஆயிஷாமாவும் பயந்து கொண்டே உள்ளே சென்றார். பீ பி பரிசோதனை முடிந்து டாக்டர் என்ன உடம்புக்கு என்று கேட்கும் போது தான் ”அடிக்கடி நெஞ்சு வலி போல் இருக்கு. வலது பக்கம் சரிந்தே படுக்க முடியவில்லை எனறதும். இப்ப அடிக்கடி மயக்கம் வருது தூங்கி எழுந்தால் தள்ளுது” என்றார் ஆயிஷாமா..

டாக்டர் உடனே ஒரு மேமேகிராம் டெஸ்ட் எடுத்துடலாம் , இன்னும் ஸ்கேன், இரத்த பரிசோதனை, சுகர் டெஸ்ட், ஈ சி ஜி எல்லாம் சேர்த்து எழுதி கொடுத்தாங்க.

ஆயிஷாமாவுக்கோ மனதிற்குள் ரொம்ப பதட்டம் என்ன இது புது புது டெஸ்ட்டா இருக்கே , எதுக்காக டாக்டர் என்றார்.

டாக்டர் இப்ப கேன்சர் வியாதி அதிகமாக பரவி வந்து கொண்டு இருக்கு எதுக்கும் செக் பண்ணிடலாம் என்று சொன்னார்கள்.

ஆயிஷாமா பதறி போய் அல்லாவே! கேன்சர் டெஸ்டா? போன் வருடம் தானே என் அக்கா மகளோட சம்பந்தி லிவர் கேன்சரால் இறந்து போனாங்க. அப்ப நான் பையன் கல்யாணத்த பார்க்காமலே போய் விடுவேனா? என்று மகளிடம் புலம்பி கொண்டே டெஸ்ட் எடுக்க சென்றாள். அதெல்லாம் ஒன்னும் இருக்காதுமா ஓதிக்கிட்டே வாங்க என்று கூப்பிட்டு சென்றாள்.

இருந்தாலும் ஆயிஷா மா தைரியத்துடன் என்ன நடக்கனுமுன்னு இருக்கோ அது இறைவனின் விருப்பபடி நடக்கட்டும். என்று ஆண்டவன் பேரில் பாரத்தை போட்டு விட்டு டெஸ்ட் க்கு போய் எல்லா டெஸ்ட் களையும் முடித்து கொண்டு வெளியே வந்தால் வரவேற்பரையில் பணம் கட்டி விட்டு ரிசல்ட் எப்ப வரும் என்று கேட்டனர், இன்னும் இரண்டு நாட்கள் கழித்து டாக்டரை வந்து பாருங்கள். என்று சொன்னார்கள்.

வீட்டுக்கு வந்ததும் அனைவரும் கலங்கிகொண்டே இருந்ந்தனர். டாக்டர் என்ன சொல்ல போறாங்களோன்னு இரண்டு நாள் ரிசல்ட் க்காக காத்து இருந்தனர். ஆயிஷாமாவுக்கு இரண்டு நாட்களாக தூக்கமே வரவில்லை .

இரண்டு நாள் முடிந்து மெடிக்கல் ரிசல்ட் வாங்க சென்றனர்......

டாக்டர் பார்த்துட்டு மார்பக புற்று நோய் கடைசி ஸ்டேஜ் உடனே ஆப்ரேஷன் செய்தாகனும். அப்படியே செய்தாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. ஆயிஷாமா இன்னும் 40 நாளில் என் பையன் கல்யாணம் , செய்வோம். அந்த ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று சொல்லி விட்டார்.

ஆயிஷாமா கூட போன தங்கையும் , ஆயிஷாமாவும் அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். ஆண்டவன் ஏன் இப்படி சோதிக்கிறான்.

ஆயிஷாமாவோ, ’நமக்கு இப்படி ஒரு வியாதி நமக்கு வந்து விட்டேதே’ என்று எண்ணி எண்ணி வருந்தினாள்.

”யா அல்லாஹ்” நீ தான் எல்லாத்தையும் லேசாக்கி வைக்கனும். யா அல்லாஹ் நான் தெரிந்தோ தெரியாமலோ ஏதும் தவறு செய்து இருந்தால் என்னை மன்னித்து விடு, என்று ஆண்டவனிடம் துஆ கேட்டு கொண்டாள்.

ம்ம் பொம்பல பிள்ளைகளை ஆளாக்கி எல்லாத்தையும் கட்டி கொடுக்க எவ்வளவோ கஷ்டப்பட்டார்கள். அதே போல் ஒத்தயா நின்று போராடி மகனையும் இஞ்சினியர் ஆக்கனும் என்பது நீண்ட நாள் கனவு. அதன் படி மகனை எப்படியோ செலவை சுருக்கி இஞ்சினீயராவும் ஆக்கிவிட்டாள். ஆயிஷாமாவும் வாழ்நாளில் பட்ட்தெல்லாம் கஷ்டம் தான், புது துணி, நகைகள் எதுக்குமே ஆசை படமாட்டாள் எது வாங்கினாலும் கொமருக்கு தேவை என பத்திரப்படுத்தி வைப்பாள். இவ்வளவு கஷ்ட பட்டு இப்ப தான் சந்தோஷமாக பையனுக்கு கல்யாணம் கட்டி கொடுத்துட்டு ஹஜ் போலாமுன்னு இருந்தோமே அதற்குள் அவர்களுக்கு இப்படி ஒரு பெரிய கஷ்டம் வந்து சேர்ந்து விட்டதே... என்று கலங்கினாள்

வீடே கல்யாண வீடு என்பது போய் அடுத்து என்ன ஆகுமோ என்று அழுகையும் துயரமுமாய் , ஆப்ரேஷன் பண்ணா உம்மா பிழைப்பாங்களோ இல்லையோ கல்யாணத்தையாவது பார்ப்பாங்களோன்னு எல்லா மகள்களும் கரீம் பாயும் புலம்பிக்கொண்டு இருந்தனர்.

கரீம் பாயோ, கவலை படாதேம்மா எல்லாம் சரியாகிடும். சரி முதலில் வெளியூரில் இருக்கும் மகள்களிடம் சொல்லி கொஞ்சம் சீக்கிரமாக வரசொல்ல்லாம்.

கல்யாண மாப்பிள்ளையும் மிகவும் கலங்கி விட்டான். அவனுக்கு உம்மான்னா ரொம்ப பாசம். எல்லா அக்கா மார்களும் கல்யாணம் கட்டி கொண்டு போன பிறகு உம்மாகூடவே இருந்து எல்லாவேலைகளையும் பார்த்துகொண்டு படிப்பான்.

மகனோ மா, ஒன்றும் கவலை படாதீங்கமா, முதலில் ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணுவோம். ஆனால் ஆயிஷாமா சற்றும் தளறவில்லை. தைரியமாக இருந்தார். எவ்வளவு முடியவில்லை என்றாலும் ,சாப்பிட முடியாமல் இருந்தாலும் . இறைவணக்கங்களில் ஓதல் தொழுகையை சரியாக அந்த அந்த நேரத்தில் சரியாக கடை பிடித்து வந்தாள்.

உடனே இரண்டொரு நாளில் ஒரு பக்கம் ஆப்ரேஷனும் ஆண்டவன் கிருபையால் நல்லபடியாக முடிந்தது. வலது பக்க மார்பகத்தில் நல்ல உள்ளங்கை அளவில் புற்று வளர்ந்து இருந்தது. மேலும் பரவாமல் இருக்க அதை சுற்றி உள்ள இடமெல்லாம் நரம்போடு வெட்டி எடுத்துட்டாங்க.. வலி தாங்க முடியாமல் துடித்து போனாள்.

ஏன் நமக்கு இந்த நிலை என்று எண்ணி அழுது கொண்டே பக்கத்து பெட்டின் முனகல் சத்தம் கேட்க திறைய விலக்கி உள்ள பேஷண்டுகளை பார்த்தால் சின்ன குழந்தைக்கு கண்ணில் கேன்சராம், வயது வந்த கொமரிக்கு வயிற்றில் கேன்சராம் அதை எல்லாம் பார்த்து தன்னைத்தானே தேத்திக்கொண்டாள் ஆயிஷாமா...

இப்போது சாப்பிட கூட பிடிக்கல, மறுபடி புற்றுநோய் தாக்காமல் இருக்க கீமோ தரபி ஆரம்பித்தார்கள்

கீமோ தரபி கொடுத்தால் அன்று எல்லாம் தலை வெடிக்கும், அதாவது வெளியில் பூச்சிகள் சாக பூச்சி மருந்து அடிப்பது போல் , உள்ளுக்குள் இருக்கும் புற்றுநோய் தாக்காமல் இருக்க உள்ளே செலுத்தும் மருந்து .வாய் கசப்பு என்ன சாப்பிட்ட்டாலும் ருசி இருக்காது. தலையில் யாரோ சுத்தி வைத்து அடிப்பது போல் இருக்கும்.என்ன சாப்பிட்டாலும் வாந்தி தான்

இருந்தாலும் ஆயிஷாமா தகஜ்ஜத் தொழுகையில் இருந்து இரவு இஷா தொழுகை வரை விடவில்லை எல்லாம் சரியான நேரத்தில் தொழுது வந்தார், கூட மாட கவனித்து கொண்ட மகள்களுக்கே இரவு தூக்கம் இல்லாமல் சில நேரம் எழுந்திரிக்க முடியாமல் போய்விட்டது, உம்மாவே இவ்வளவு முடியாமல் இருந்தும் எழுந்து தொழுகிறார்களே என்று மகள்களும் தூக்கத்தை உலுக்கி விட்டு தொழுதார்கள்.

ஆயிஷாமாவுக்கு ரொம்ப முடியாமல் போய்விட்டது. பிள்ளைகள் எல்லாம் உம்மா என்ன தெம்பாக அனைத்து வேலைகளையும் தானே ஒத்தயா நின்று செய்வாங்க இப்படி ஆகிவிட்ட்தே என்று ரொம்ப வேதனை பட்டு அழுது கொண்டு இருந்தார்கள்.

ஏன் இப்படி ஆகனும், .அவங்க பாட்டுக்கும் அவங்க உண்டு அவங்க வேலை உண்டு என்று இருப்பார்கள். யார் வீட்டுக்கு வந்தாலும் உபசரிப்பதில் ஆயிஷாமாவை யாருமே மிஞ்ச முடியாது. வீட்டுக்கு வருகிறவர்களும் ஆயிஷாமா வீட்டுக்கு போறாமா அங்கு அன்பு தொல்லை தாங்க முடியாது அங்கு போயே சாப்பிட்டு கொள்கிறேன் என்பார்கள்.

மறுபக்கம் மகள் களும் கரீம் பாயும் மகன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைத்து வந்தனர். சில இடங்களுக்கு மகள் மட்டும் போய் பத்திரிக்கை வைத்தனர். சில இடங்களுக்கு கரீம் பாய் மட்டும் தனியாக போய் பத்திரிக்கை வைத்தார். ஆனாலும் நம் மக்கள் ஆண்கள் சார்பா யாரும் பத்திரிக்கை வைக்க வரவில்லை என்றும், பெண்கள் சார்பாக யாரும் வரவில்லை என்று குறை பேசி கொண்டனர்.

மருந்து ஏர ஏர தலை முடி எல்லாம் ஆயிஷாமாவுக்கு கொட்ட ஆரம்பித்து விட்டது.. மகள்களும் பையனும், கரீம் பாயும் ரொம்ப துடித்து போய்விட்டனர். எல்லோரும் ஆயிஷாமாவுக்கு தெரியாமல் அழ ஆரம்பித்து விட்டனர். கல்யாண வீட்டில் ஆட்கள் வருவார்களே எப்படி இப்படி இருப்பது என்று ரொம்ப வருத்தபட்டார்கள். கடைசியில் கல்யாணத்துக்குள் உம்மா எழுந்தா போதும், சரி அடுத்து என்ன செய்யலாம். நேரத்துக்கு ஆயிஷாமாவுக்கு எதுவும் சாப்பிட் பிடிக்கலன்னாலும் உம்மாவுக்கு மகள்கள் வற்புறுத்தி இரண்டு மணிக்கொரு முறை ஏதாவது குடிப்பு , கஞ்சி என கொடுத்து குழந்தையை கவனிப்பது போல் கவனித்து வந்தனர்.

கரீம் பாயும் அப்ப அப்ப யாரும் இல்லை என்றால் தன்னால் முடிந்தது ஹார்லிக்ஸ் அடித்து கொடுத்து மறக்காமல் அப்ப அப்ப ஜூஸ் பால் என கொடுத்தார்.

ஆண்டவன் கிருபையால் 20 நாட்களில் ஆயிஷமாவும் ஓரளவுக்கு படுக்கைய விட்டு எழுந்திருக்கும் அளவுக்கு தேறினார், எல்லோருக்கும் கல்யணம் அன்றாவது மம்மி வந்து நின்றால் போதும் என்றாகி விட்டது. ரொம்ப நாளா காத்திருந்த மகன் கல்யாணமும் வந்தது.

கொஞ்சம் சிரமப்பட்டு கல்யாண சத்திரத்துக்கு கூட்டி சென்று இடை இடையில் முடியாமல் போனாலும் மகள்கள் அப்ப அப்ப ஜூஸ் ,சூப் போன்றவை கொடுத்து இளைப்பாறவைத்து மகன் திருமணமும் சிறப்பாக முடிந்தது.

ஆயிஷாமாவும் கொஞ்சம் கொஞ்சமாக டாக்டரின் அட்வைஸ் படி மாத்திரை மருந்துகள் சரியான முறையில் எடுத்து, மிகச்சரியான உணவு கட்டுபாடுடனும் , முன்று மாதம் ஒரு முறை முழு பரிசோதனையும் செய்து கொண்டும், இருந்தார்.

அதற்கும் மேல் அசையாத இறைநம்பிக்கையோடும் , தைரியத்தோடும் ,தன்னம்பிக்கையோடும் இருந்ததால் அடுத்த முன்று வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தேறி பழைய நிலைக்கு வந்து விட்டார். முடியும் நல்ல கரு கருவென வ்ளர்ந்து விட்டது.

ஆப்ரேஷன் செலவுக்கு அதிக செலவாகியதால், சில கடன்கள் காரணமாகவும் பையனை வெளியூருக்கு அனுப்பி கூடவே மருமகளையும் அனுப்பி வைத்தனர்.

ஆயிஷாமாவும், கரீம்பாயும் அவர்கள் நாடிய படி உடல் நிலை சரியில்லை என்றாலும் அழகான முறையில் ஹஜ் கடமைகளை முடித்து வந்தனர்.
ஆயிஷாமா என்றுமே எதற்குமே கலங்கியதில்லை, என்ன நடந்தாலும் அது ஆண்டவன் அதில் நமக்கு நன்மைக்கு தான் செய்வான். ஆண்டவன் தாங்க முடியாத துயரத்த தரப்போவதில்லை என்ற ஆண்டவனின் இறைவசனத்தை முழுதுமாக நம்பினாள்.

                                                *************************


கவனிக்க:

அனைவருமே உணவில் உண்பதில் கண்டிப்பாக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
பொரித்த பழைய எண்ணையை மறுபடி மறுபடி சூடுபடுத்தில் அதில் பொரித்து சாப்பிடுவது, மீனோ, அப்பளமோ, தோசையோ மற்ற உணவு வகைகள் தயாரிக்கும் போது கரிந்து போனதை வீணாக்காமல் கொஞ்சம் காசு வீணாகுவதை நினைத்து அதை குப்பையில் போடாமல், வயிற்றில் போட்டு கேடு வரவழைத்து லட்ச கணக்கில் பணத்தை இழக்காதீர்கள். கொஞ்சம் காசு போவதை தடுக்க நினைத்து காலம் முழுவதும் தாங்க முடியாத உடல் உபாதையாலும், அனாவசிய மருத்துவ செலவாலும் காலம் முழுவது அவஸ்தயில் மாட்டிக்கொள்ளாதீர்கள் எந்த பொருள் வாங்கினாலும் சரியான காலவாதி தேதியை பார்த்து அதற்குள் பயன் படுத்த வேண்டும்.

.அதே போல் பெண்கள் உள்ளாடைகள் வாங்கும் போது கருப்பு கலர் வாங்குவதை தவிர்க்கவும், இது டாக்டரின் அட்வைஸ். புதுத்துணிகளிலும் ஏகப்பட்ட பூஞ்சைகள் இருக்கும் அதை வெண்ணீரில் ஒரு முறை அலசி பயன் படுத்துங்கள்.ஆண்களும் சரி பெண்களும் சரி உள்ளாடைகளை ஆறு மாத்த்துக்கு மேல் பயன் படுத்த வேண்டாம்.

எந்த நோயாக இருந்தாலும் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி முழு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

பல்வலி வந்தாலும் உடனே கவனியுங்கள். கவனிக்காமல் விட்டால் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பிருக்கு.40 வயதுக்கு பிறகு தான் முழு பரிசோதனை செய்யனும் என்றில்லை. எந்த நோய் வந்தாலும். இரண்டு மூன்று மாதத்துக்கு மேல் சரியாகவில்லை என்றால் உடனே சரியான மருத்துவரை அனுகி முழு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்..//

இன்னும் கேன்சர் நோயாளிகளுக்கான எனக்கு தெரிந்த சில உணவு வகைகள் மற்றும் பார்வேட் மெயிலில் வந்த உணவு பொருட்களை பிறகு வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.ஏற்கனவே பதிவு ரொம்ப நீளமாக இருப்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்.

(புற்றுநோயிக்கு தீர்வு மரணம் தான் என்றில்லை, தொடர் சிகிச்சை ,சரியான மருத்துவம், முறையான உணவு கட்டுபாடு,தன்னம்பிக்கை, தைரியம்,இறைநம்பிக்கையும் வைத்தால் புற்றுநோயை வெல்லலாம்)







ஆக்கம்
ஜலீலாகமால்
துபாய்