நேசம் மற்றும்
உடான்ஸ் வழங்கும் கேன்சர் விழிப்புணர்வு கட்டுரை, கண்டிப்பாக நல்ல சப்ஜெக்டை எடுத்து உள்ளனர். இது இப்ப இருக்கிற கால கட்டத்தில் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய விடயம்.
---
ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை:-
ஆமினா அக்காவுக்கு,தங்கைக்கு , அண்ணன் தம்பி பெண்டாட்டிகளுக்கு எல்லோருக்கும் ஆளுக்கொரு ஒரு சேலை, உங்கள் அண்ணனுக்கும்,அக்காமாருக்கும் சேர்த்து எழுதி கொள். அப்படியே பிள்ளைகளுக்கு எல்லாம் மூவாயிரத்தில் பட்டு சேலை எடுத்து விடலாம். கல்யாண பெண்ணிற்கு கல்யாண புடவையிலேயே போய் எல்லா காசையும் போடாம , 3 பட்டு சேலை, 2 பனாரஸ், 2 மைசூர் சில்க், கொஞ்சம் சுடிதார் வகைகளும், மற்றபொருட்களும் எல்லாம் வாங்கி கொள்ளலாம். என கரீம்பாயும் ஆயிஷாவும் , எல்லா மகள்களும் சேர்ந்து, தங்கள் செல்லமான தவமா தவம் கிடந்து பெத்த கடைசி பையன் திருமணத்திற்காக லிஸ்ட் போட்டு கொண்டு இருந்தனர்.
கரீம் பாய் சிறு வயதில் இருந்து உழைத்து தம்பி தங்கைகளை கரைசேர்த்து, அவர் மகள்கள் 4பேரையும் கரைத்து விட்டு கடைசியாக கடைகுட்டி பையனுக்கு திருமணம் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார். ஆயிஷாமா தன் கணவரிடம் எல்லா கடமைகளும் முடிந்த்து , இனி நம் பையன் கல்யாணம் நல்ல் படியா நடக்கனும் யாரும் விட்டு போக கூடாது, எல்லாரையும் சரியாக அழைக்கனும். நல்ல கவனிக்கனும். கரீம் பாய் இன்ஷா அல்லாஹ், ”ஆண்டவன் கிருபையால் நல்ல படியாக நடக்கும், என்று புன்முறுவலுடன் சொன்னார்”. பையன் கல்யாணம் முடிந்ததும் நாம இரண்டு பேரும் நிம்மதியாக ஹஜ்ஜுக்கு போகலாம் என்றாள்.
இருங்க நான் உங்கள் எல்லாருக்கும் டீ கொண்டு வரேன். டீ குடிச்சிட்டு லிஸ்டை தொடரலாம் என்றாள் ஆயிஷாமா. அதற்கிடையில் மகள்கள் எல்லாம் தம்பி கல்யாணம் நிகழ்வுகளை பற்றி ஓவ்வொருத்தரும் அவங்க அவங்க அபிப்ராயத்தை சொல்ல சேரில் கரீம் பாய் மிகவும் பூரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தார்.
ஆயிஷாமா அனைவருக்கும் நிறைய டீ போட்டு கொண்டு வரும் போதே லேசாக கண்ணை இருட்டி கொண்டு தள்ளியது.
யம்மா, என்னாச்சு மா, உடனே மகள்களும் மா மா என்னம்மா, என்னன்னு தெரியலங்க இப்படி தான், அடிக்கடி இது போல் தள்ளுது, உடனே கரீம் பாய் மகள்களிடம் கலயாணத்துக்கு முன் உம்மாவை டாக்டர் கிட்ட போய் ஃபுல் செக்கப் செய்துடலாம். அதற்கு பிறகு பத்திரிக்கை வைக்க ஆரம்பிக்கலாம் என்றார்.
கரீம் பாய் ஊரில் இருந்த வரை மகள் கல்யாணத்தில் எல்லாம் 10 நாள் முன் தான் வெளியூரில் இருந்து வருவர்ர். 50 வருட காலமாக உழைத்து இப்ப ஊரோடு செட்டில் ஆகி விட்டார். கரிம் பாய் வேலை வெளியூரிலேயே என்பதால் மகள்கள் திருமணத்துக்கு ஆயிஷாமா பத்திரிக்கை வைக்க தனியாகவே யாரையாவது கூப்பிட்டு கொண்டு பஸ்ஸில் போய் தான், தன் எல்லா சொந்தங்களையும் தேடி போய் பத்திரிக்கை வைப்பார். கடைசியாக முக்கியாமனவர்கள். வீட்டுக்கு மட்டும் இருவரும் ஒன்றாக போய் அழைப்பார்கள்.
இந்த முறை கரிம் பாய் சொல்லி விட்டார் , நாம கார் புக் பண்ணிடலாம். காலையில் இருந்து இரவு வரை முடிந்த வரை 10 நாளில் முடித்து விடலாம் என்று சொன்னார். ஆயிஷாமாவுக்கு பையன் கல்யாணத்துக்கு ஜோடியாக எல்லா சொந்தங்கள் வீட்டுக்கும் போகப்போகிறோம் என்று சந்தோஷம் ஒரு பக்கம். ஆனால் மயக்கம் வேறு.இரவு தூங்கும் போது நெஞ்சு வலித்து கொண்டே இருக்கு, நாளைக்கு செக்கப்புக்கு போனா டாக்டர் என்ன சொல்வாங்களோன்னு பதட்டமாகவும் இருந்தது.
இரண்டாவது மகள் சரிங்க வாப்பா நாளைக்கே உம்மாவை நான் கூப்பிட்டு செல்கிறேன் எனறு சொன்னாள். மறுநாள் கிளம்பி ஹாஸ்பிட்டல் சென்றனர். என்னை லேடி டாக்டர் கிட்டேயே கூப்பிட்டு போ என ஆயிஷாமா சொல்ல.. அந்த ஹாஸ்பிட்டலில் லேடி டாக்டர் பார்த்து கேட்டு அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி கொண்டனர்.
ஹாஸ்பிட்டல் சென்றது வெளியில் வரவேற்பரையில் இருவரும் காத்து இருந்தனர்.
ஆயிஷா என நர்ஸ் கூப்பிட ஆயிஷாமாவும் பயந்து கொண்டே உள்ளே சென்றார். பீ பி பரிசோதனை முடிந்து டாக்டர் என்ன உடம்புக்கு என்று கேட்கும் போது தான் ”அடிக்கடி நெஞ்சு வலி போல் இருக்கு. வலது பக்கம் சரிந்தே படுக்க முடியவில்லை எனறதும். இப்ப அடிக்கடி மயக்கம் வருது தூங்கி எழுந்தால் தள்ளுது” என்றார் ஆயிஷாமா..
டாக்டர் உடனே ஒரு மேமேகிராம் டெஸ்ட் எடுத்துடலாம் , இன்னும் ஸ்கேன், இரத்த பரிசோதனை, சுகர் டெஸ்ட், ஈ சி ஜி எல்லாம் சேர்த்து எழுதி கொடுத்தாங்க.
ஆயிஷாமாவுக்கோ மனதிற்குள் ரொம்ப பதட்டம் என்ன இது புது புது டெஸ்ட்டா இருக்கே , எதுக்காக டாக்டர் என்றார்.
டாக்டர் இப்ப கேன்சர் வியாதி அதிகமாக பரவி வந்து கொண்டு இருக்கு எதுக்கும் செக் பண்ணிடலாம் என்று சொன்னார்கள்.
ஆயிஷாமா பதறி போய் அல்லாவே! கேன்சர் டெஸ்டா? போன் வருடம் தானே என் அக்கா மகளோட சம்பந்தி லிவர் கேன்சரால் இறந்து போனாங்க. அப்ப நான் பையன் கல்யாணத்த பார்க்காமலே போய் விடுவேனா? என்று மகளிடம் புலம்பி கொண்டே டெஸ்ட் எடுக்க சென்றாள். அதெல்லாம் ஒன்னும் இருக்காதுமா ஓதிக்கிட்டே வாங்க என்று கூப்பிட்டு சென்றாள்.
இருந்தாலும் ஆயிஷா மா தைரியத்துடன் என்ன நடக்கனுமுன்னு இருக்கோ அது இறைவனின் விருப்பபடி நடக்கட்டும். என்று ஆண்டவன் பேரில் பாரத்தை போட்டு விட்டு டெஸ்ட் க்கு போய் எல்லா டெஸ்ட் களையும் முடித்து கொண்டு வெளியே வந்தால் வரவேற்பரையில் பணம் கட்டி விட்டு ரிசல்ட் எப்ப வரும் என்று கேட்டனர், இன்னும் இரண்டு நாட்கள் கழித்து டாக்டரை வந்து பாருங்கள். என்று சொன்னார்கள்.
வீட்டுக்கு வந்ததும் அனைவரும் கலங்கிகொண்டே இருந்ந்தனர். டாக்டர் என்ன சொல்ல போறாங்களோன்னு இரண்டு நாள் ரிசல்ட் க்காக காத்து இருந்தனர். ஆயிஷாமாவுக்கு இரண்டு நாட்களாக தூக்கமே வரவில்லை .
இரண்டு நாள் முடிந்து மெடிக்கல் ரிசல்ட் வாங்க சென்றனர்......
டாக்டர் பார்த்துட்டு மார்பக புற்று நோய் கடைசி ஸ்டேஜ் உடனே ஆப்ரேஷன் செய்தாகனும். அப்படியே செய்தாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. ஆயிஷாமா இன்னும் 40 நாளில் என் பையன் கல்யாணம் , செய்வோம். அந்த ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று சொல்லி விட்டார்.
ஆயிஷாமா கூட போன தங்கையும் , ஆயிஷாமாவும் அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். ஆண்டவன் ஏன் இப்படி சோதிக்கிறான்.
ஆயிஷாமாவோ, ’நமக்கு இப்படி ஒரு வியாதி நமக்கு வந்து விட்டேதே’ என்று எண்ணி எண்ணி வருந்தினாள்.
”யா அல்லாஹ்” நீ தான் எல்லாத்தையும் லேசாக்கி வைக்கனும். யா அல்லாஹ் நான் தெரிந்தோ தெரியாமலோ ஏதும் தவறு செய்து இருந்தால் என்னை மன்னித்து விடு, என்று ஆண்டவனிடம் துஆ கேட்டு கொண்டாள்.
ம்ம் பொம்பல பிள்ளைகளை ஆளாக்கி எல்லாத்தையும் கட்டி கொடுக்க எவ்வளவோ கஷ்டப்பட்டார்கள். அதே போல் ஒத்தயா நின்று போராடி மகனையும் இஞ்சினியர் ஆக்கனும் என்பது நீண்ட நாள் கனவு. அதன் படி மகனை எப்படியோ செலவை சுருக்கி இஞ்சினீயராவும் ஆக்கிவிட்டாள். ஆயிஷாமாவும் வாழ்நாளில் பட்ட்தெல்லாம் கஷ்டம் தான், புது துணி, நகைகள் எதுக்குமே ஆசை படமாட்டாள் எது வாங்கினாலும் கொமருக்கு தேவை என பத்திரப்படுத்தி வைப்பாள். இவ்வளவு கஷ்ட பட்டு இப்ப தான் சந்தோஷமாக பையனுக்கு கல்யாணம் கட்டி கொடுத்துட்டு ஹஜ் போலாமுன்னு இருந்தோமே அதற்குள் அவர்களுக்கு இப்படி ஒரு பெரிய கஷ்டம் வந்து சேர்ந்து விட்டதே... என்று கலங்கினாள்
வீடே கல்யாண வீடு என்பது போய் அடுத்து என்ன ஆகுமோ என்று அழுகையும் துயரமுமாய் , ஆப்ரேஷன் பண்ணா உம்மா பிழைப்பாங்களோ இல்லையோ கல்யாணத்தையாவது பார்ப்பாங்களோன்னு எல்லா மகள்களும் கரீம் பாயும் புலம்பிக்கொண்டு இருந்தனர்.
கரீம் பாயோ, கவலை படாதேம்மா எல்லாம் சரியாகிடும். சரி முதலில் வெளியூரில் இருக்கும் மகள்களிடம் சொல்லி கொஞ்சம் சீக்கிரமாக வரசொல்ல்லாம்.
கல்யாண மாப்பிள்ளையும் மிகவும் கலங்கி விட்டான். அவனுக்கு உம்மான்னா ரொம்ப பாசம். எல்லா அக்கா மார்களும் கல்யாணம் கட்டி கொண்டு போன பிறகு உம்மாகூடவே இருந்து எல்லாவேலைகளையும் பார்த்துகொண்டு படிப்பான்.
மகனோ மா, ஒன்றும் கவலை படாதீங்கமா, முதலில் ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணுவோம். ஆனால் ஆயிஷாமா சற்றும் தளறவில்லை. தைரியமாக இருந்தார். எவ்வளவு முடியவில்லை என்றாலும் ,சாப்பிட முடியாமல் இருந்தாலும் . இறைவணக்கங்களில் ஓதல் தொழுகையை சரியாக அந்த அந்த நேரத்தில் சரியாக கடை பிடித்து வந்தாள்.
உடனே இரண்டொரு நாளில் ஒரு பக்கம் ஆப்ரேஷனும் ஆண்டவன் கிருபையால் நல்லபடியாக முடிந்தது. வலது பக்க மார்பகத்தில் நல்ல உள்ளங்கை அளவில் புற்று வளர்ந்து இருந்தது. மேலும் பரவாமல் இருக்க அதை சுற்றி உள்ள இடமெல்லாம் நரம்போடு வெட்டி எடுத்துட்டாங்க.. வலி தாங்க முடியாமல் துடித்து போனாள்.
ஏன் நமக்கு இந்த நிலை என்று எண்ணி அழுது கொண்டே பக்கத்து பெட்டின் முனகல் சத்தம் கேட்க திறைய விலக்கி உள்ள பேஷண்டுகளை பார்த்தால் சின்ன குழந்தைக்கு கண்ணில் கேன்சராம், வயது வந்த கொமரிக்கு வயிற்றில் கேன்சராம் அதை எல்லாம் பார்த்து தன்னைத்தானே தேத்திக்கொண்டாள் ஆயிஷாமா...
இப்போது சாப்பிட கூட பிடிக்கல, மறுபடி புற்றுநோய் தாக்காமல் இருக்க கீமோ தரபி ஆரம்பித்தார்கள்
கீமோ தரபி கொடுத்தால் அன்று எல்லாம் தலை வெடிக்கும், அதாவது வெளியில் பூச்சிகள் சாக பூச்சி மருந்து அடிப்பது போல் , உள்ளுக்குள் இருக்கும் புற்றுநோய் தாக்காமல் இருக்க உள்ளே செலுத்தும் மருந்து .வாய் கசப்பு என்ன சாப்பிட்ட்டாலும் ருசி இருக்காது. தலையில் யாரோ சுத்தி வைத்து அடிப்பது போல் இருக்கும்.என்ன சாப்பிட்டாலும் வாந்தி தான்
இருந்தாலும் ஆயிஷாமா தகஜ்ஜத் தொழுகையில் இருந்து இரவு இஷா தொழுகை வரை விடவில்லை எல்லாம் சரியான நேரத்தில் தொழுது வந்தார், கூட மாட கவனித்து கொண்ட மகள்களுக்கே இரவு தூக்கம் இல்லாமல் சில நேரம் எழுந்திரிக்க முடியாமல் போய்விட்டது, உம்மாவே இவ்வளவு முடியாமல் இருந்தும் எழுந்து தொழுகிறார்களே என்று மகள்களும் தூக்கத்தை உலுக்கி விட்டு தொழுதார்கள்.
ஆயிஷாமாவுக்கு ரொம்ப முடியாமல் போய்விட்டது. பிள்ளைகள் எல்லாம் உம்மா என்ன தெம்பாக அனைத்து வேலைகளையும் தானே ஒத்தயா நின்று செய்வாங்க இப்படி ஆகிவிட்ட்தே என்று ரொம்ப வேதனை பட்டு அழுது கொண்டு இருந்தார்கள்.
ஏன் இப்படி ஆகனும், .அவங்க பாட்டுக்கும் அவங்க உண்டு அவங்க வேலை உண்டு என்று இருப்பார்கள். யார் வீட்டுக்கு வந்தாலும் உபசரிப்பதில் ஆயிஷாமாவை யாருமே மிஞ்ச முடியாது. வீட்டுக்கு வருகிறவர்களும் ஆயிஷாமா வீட்டுக்கு போறாமா அங்கு அன்பு தொல்லை தாங்க முடியாது அங்கு போயே சாப்பிட்டு கொள்கிறேன் என்பார்கள்.
மறுபக்கம் மகள் களும் கரீம் பாயும் மகன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைத்து வந்தனர். சில இடங்களுக்கு மகள் மட்டும் போய் பத்திரிக்கை வைத்தனர். சில இடங்களுக்கு கரீம் பாய் மட்டும் தனியாக போய் பத்திரிக்கை வைத்தார். ஆனாலும் நம் மக்கள் ஆண்கள் சார்பா யாரும் பத்திரிக்கை வைக்க வரவில்லை என்றும், பெண்கள் சார்பாக யாரும் வரவில்லை என்று குறை பேசி கொண்டனர்.
மருந்து ஏர ஏர தலை முடி எல்லாம் ஆயிஷாமாவுக்கு கொட்ட ஆரம்பித்து விட்டது.. மகள்களும் பையனும், கரீம் பாயும் ரொம்ப துடித்து போய்விட்டனர். எல்லோரும் ஆயிஷாமாவுக்கு தெரியாமல் அழ ஆரம்பித்து விட்டனர். கல்யாண வீட்டில் ஆட்கள் வருவார்களே எப்படி இப்படி இருப்பது என்று ரொம்ப வருத்தபட்டார்கள். கடைசியில் கல்யாணத்துக்குள் உம்மா எழுந்தா போதும், சரி அடுத்து என்ன செய்யலாம். நேரத்துக்கு ஆயிஷாமாவுக்கு எதுவும் சாப்பிட் பிடிக்கலன்னாலும் உம்மாவுக்கு மகள்கள் வற்புறுத்தி இரண்டு மணிக்கொரு முறை ஏதாவது குடிப்பு , கஞ்சி என கொடுத்து குழந்தையை கவனிப்பது போல் கவனித்து வந்தனர்.
கரீம் பாயும் அப்ப அப்ப யாரும் இல்லை என்றால் தன்னால் முடிந்தது ஹார்லிக்ஸ் அடித்து கொடுத்து மறக்காமல் அப்ப அப்ப ஜூஸ் பால் என கொடுத்தார்.
ஆண்டவன் கிருபையால் 20 நாட்களில் ஆயிஷமாவும் ஓரளவுக்கு படுக்கைய விட்டு எழுந்திருக்கும் அளவுக்கு தேறினார், எல்லோருக்கும் கல்யணம் அன்றாவது மம்மி வந்து நின்றால் போதும் என்றாகி விட்டது. ரொம்ப நாளா காத்திருந்த மகன் கல்யாணமும் வந்தது.
கொஞ்சம் சிரமப்பட்டு கல்யாண சத்திரத்துக்கு கூட்டி சென்று இடை இடையில் முடியாமல் போனாலும் மகள்கள் அப்ப அப்ப ஜூஸ் ,சூப் போன்றவை கொடுத்து இளைப்பாறவைத்து மகன் திருமணமும் சிறப்பாக முடிந்தது.
ஆயிஷாமாவும் கொஞ்சம் கொஞ்சமாக டாக்டரின் அட்வைஸ் படி மாத்திரை மருந்துகள் சரியான முறையில் எடுத்து, மிகச்சரியான உணவு கட்டுபாடுடனும் , முன்று மாதம் ஒரு முறை முழு பரிசோதனையும் செய்து கொண்டும், இருந்தார்.
அதற்கும் மேல் அசையாத இறைநம்பிக்கையோடும் , தைரியத்தோடும் ,தன்னம்பிக்கையோடும் இருந்ததால் அடுத்த முன்று வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தேறி பழைய நிலைக்கு வந்து விட்டார். முடியும் நல்ல கரு கருவென வ்ளர்ந்து விட்டது.
ஆப்ரேஷன் செலவுக்கு அதிக செலவாகியதால், சில கடன்கள் காரணமாகவும் பையனை வெளியூருக்கு அனுப்பி கூடவே மருமகளையும் அனுப்பி வைத்தனர்.
ஆயிஷாமாவும், கரீம்பாயும் அவர்கள் நாடிய படி உடல் நிலை சரியில்லை என்றாலும் அழகான முறையில் ஹஜ் கடமைகளை முடித்து வந்தனர்.
ஆயிஷாமா என்றுமே எதற்குமே கலங்கியதில்லை, என்ன நடந்தாலும் அது ஆண்டவன் அதில் நமக்கு நன்மைக்கு தான் செய்வான். ஆண்டவன் தாங்க முடியாத துயரத்த தரப்போவதில்லை என்ற ஆண்டவனின் இறைவசனத்தை முழுதுமாக நம்பினாள்.
*************************
கவனிக்க:
அனைவருமே உணவில் உண்பதில் கண்டிப்பாக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
பொரித்த பழைய எண்ணையை மறுபடி மறுபடி சூடுபடுத்தில் அதில் பொரித்து சாப்பிடுவது, மீனோ, அப்பளமோ, தோசையோ மற்ற உணவு வகைகள் தயாரிக்கும் போது கரிந்து போனதை வீணாக்காமல் கொஞ்சம் காசு வீணாகுவதை நினைத்து அதை குப்பையில் போடாமல், வயிற்றில் போட்டு கேடு வரவழைத்து லட்ச கணக்கில் பணத்தை இழக்காதீர்கள். கொஞ்சம் காசு போவதை தடுக்க நினைத்து காலம் முழுவதும் தாங்க முடியாத உடல் உபாதையாலும், அனாவசிய மருத்துவ செலவாலும் காலம் முழுவது அவஸ்தயில் மாட்டிக்கொள்ளாதீர்கள் எந்த பொருள் வாங்கினாலும் சரியான காலவாதி தேதியை பார்த்து அதற்குள் பயன் படுத்த வேண்டும்.
.அதே போல் பெண்கள் உள்ளாடைகள் வாங்கும் போது கருப்பு கலர் வாங்குவதை தவிர்க்கவும், இது டாக்டரின் அட்வைஸ். புதுத்துணிகளிலும் ஏகப்பட்ட பூஞ்சைகள் இருக்கும் அதை வெண்ணீரில் ஒரு முறை அலசி பயன் படுத்துங்கள்.ஆண்களும் சரி பெண்களும் சரி உள்ளாடைகளை ஆறு மாத்த்துக்கு மேல் பயன் படுத்த வேண்டாம்.
எந்த நோயாக இருந்தாலும் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி முழு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
பல்வலி வந்தாலும் உடனே கவனியுங்கள். கவனிக்காமல் விட்டால் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பிருக்கு.40 வயதுக்கு பிறகு தான் முழு பரிசோதனை செய்யனும் என்றில்லை. எந்த நோய் வந்தாலும். இரண்டு மூன்று மாதத்துக்கு மேல் சரியாகவில்லை என்றால் உடனே சரியான மருத்துவரை அனுகி முழு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்..//
இன்னும் கேன்சர் நோயாளிகளுக்கான எனக்கு தெரிந்த சில உணவு வகைகள் மற்றும் பார்வேட் மெயிலில் வந்த உணவு பொருட்களை பிறகு வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.ஏற்கனவே பதிவு ரொம்ப நீளமாக இருப்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்.
(புற்றுநோயிக்கு தீர்வு மரணம் தான் என்றில்லை, தொடர் சிகிச்சை ,சரியான மருத்துவம், முறையான உணவு கட்டுபாடு,தன்னம்பிக்கை, தைரியம்,இறைநம்பிக்கையும் வைத்தால் புற்றுநோயை வெல்லலாம்)
ஆக்கம்
ஜலீலாகமால்
துபாய்
31 கருத்துகள்:
ஜலியின் கன்னி முயற்சி பக்குவப்பட்ட எழுத்தாளர்கள் எழுதி இருப்பதைப்போன்றே சரள நடையில் எழுதி இருக்கீங்க.ஆல் இன் ஆல் என்பது சரிதான்:)
போட்டியில் வெற்றி கிட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜலி.
இந்த கதையினை எழுதிவிட்டு என்னிடம் ஒவ்வொரு வரிகளுக்குமென்னிடம் கருத்துகேட்டதை எண்ணி சந்தோஷமாக உள்ளது.கதை வடிவில் முழுதாக உங்கள் பிளாகில் பார்க்கும் பொழுது அதைவிட சந்தோஷமாக உள்ளது.
என்ன நடந்தாலும் அது ஆண்டவன் அதில் நமக்கு நன்மைக்கு தான் செய்வான். ஆண்டவன் தாங்க முடியாத துயரத்த தரப்போவதில்லை என்ற ஆண்டவனின் இறைவசனத்தை முழுதுமாக நம்பினாள்.
இறை நம்பிக்கையும் சரியான மருத்துவ சிகிச்சையும் தீர்க்கமுடியாத நோய்களே இல்லை என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையை விதைத்த கதை அருமை..பாராட்டுக்கள்..
பரிசு பெற வாழ்த்துகள்...
சூப்பர் ஜலீலாக்கா... நல்ல எழுத்து நடை. அழகாக நகர்த்தியிருக்கிறீங்க கதையை. ஆரம்பமே அசத்தலான தொடக்கமாக இருக்கு.
முடிவில் தந்திருக்கும் டிப்ஸ்கள் மிக அருமை. எங்கட சனங்களும் இந்த விஷயத்தில மட்டும் திருந்துவார்களோ தெரியேல்லை...
அக்கா கதையும் விளக்கமும் மிகவும் அருமை... எழுத்துக்கள் மிக அழகாக இருக்கிறது... போட்டியில் வெற்றி கிட்ட வாழ்த்துக்கள் அக்கா
ஜலீலா கதையும்,பகிர்ந்த விஷயங்களும் சூப்பர்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நல்ல எழுத்து நடை. சூப்பர் ஜலீலாக்கா. வாழ்த்துக்கள்.
நல்ல கதை. எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை அழகாக தெளிவுபடுத்தினீங்க. நன்றி ஜலீலா. போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஜலீலாக்கா,போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள். கல்யாணவீட்டில் துவங்கி நல்லபடியாக சுபமாய் கதையை முடித்ததில் சந்தோஷம். விழிப்புணர்வு தரும் கதை.
நல்ல விழிப்புணர்வு கதை ! வெற்றி பெற வாழ்த்துக்கள் !
இதை ஒரு கதையா ஜீரனிக்க முடியல . உயிரோட்டமா இருக்கு .வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)
நல்ல பதிவு. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
கதை நாயகியின் தன்னம்பிக்கை நோயில் வீழும் எல்லோருக்கும் வரணும் என்று துணிச்சலாய் சொல்லப்பட்ட கதையோட்டத்தில் நாமும் ஒன்றி விடுவதால் அந்த நம்பிக்கை நமக்கும் வருகிறது. கதையிலேயே விழிப்புணர்வையும் சொல்லி, டிப்ஸாய் விளக்க டெயில் பீஸ் வேற! அசத்தல்!! வெற்றி பெற வாழ்த்துகள் ஜலீலாக்கா!
Akka, Very nice story line and informative. Like the way you narrated the story. superb writing style....keep writing more.
ஜெய்லானி சொன்னதுபோல, இத கதையா மட்டும் படிச்சுட்டுப் போகமுடியலை.
ஆயிஷாமாவுக்கு இருந்த அறிகுறிகளான தள்ளாட்டம், ஒரு பக்கம் சரிந்து படுக்க முடியாமை ஆகியவை கவனத்துல் எடுத்துக் கொள்ள வேண்டியது. பொதுவாக இவை பி.பி.யின் அறிகுறியாகத்தான் நம்பப்படுகின்றன.
அருமையான விழிப்புணர்வு கதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
ஏதோ நமக்கு நெருங்கினவங்களுக்கு நடக்குறதை நேரில் பார்த்தாப்ல உணர வெச்சிட்டுது உங்க சரளமான நடை.
கொடுத்திருக்கும் டிப்ஸும் அருமை. வெற்றி பெற வாழ்த்துகள்.
போட்டியில் வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்.
ஜலீலா, கதையின் தலைப்பு அருமை.
இறை நம்பிக்கையும், அவர்கள் தன்னம்பிக்கையும் தான் அவர்களை விரைவில் குணமடைய செய்து விட்டது.
கவனமாய் இருக்க சொல்லிய டிப்ஸ்களும் மிக பயனுள்ளது.
வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.
கதை போகும் விதம் அருமை.
பலபேரிடம் இக்கதை போனால் நல்லது.கீழே வரும் கவனிக்க பகுதி இன்னும் சிறப்பு.வெற்றிக்கு வாழ்த்துகள் ஜலீலா !
ரொம்பவே பாசிட்டிவ் கதை. நோய் வந்த மக்களுக்கு முதல் தேவை மன தைரியமும் தன்னம்பிக்கையும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது பதிவு. கடைசியில் விவரங்களும் உபயோகமானவை.
வெற்றி பெற வாழ்த்துகள்.
சலாம் ஜலீலாக்கா! உண்மை சம்பவத்தையே சொல்வதுபோல் கதை எதேர்ச்சையாக உள்ளது. வாழ்த்துக்கள்! இது வெறும் கதையாக மட்டுமில்லாமல் இதன்மூலமும் மக்கள் விழிப்புணர்வு பெறட்டும். வல்ல இறைவனும் நம்மைக் காப்பாற்றட்டும்!
அழகான நடையில் அருமையான கதை ஜலீலா. அத்துடன் முடிவில் அக்கறையுடன் தந்திருக்கும் குறிப்புகளும் சிறப்பு. மனமார்ந்த வாழ்த்துகள்!
மீலாடி நபி வாழ்த்துக்கள் ஜலீலா.
வலை உலக இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..
http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.html
இறுதியில் கொடுத்துள்ள பயனுள்ள நல்ல குறிப்புகளுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
நல்ல கதையுடன் பலப்பல தகவல்களை எங்களோடு பகிர்ந்ததுக்கு நன்றிக்கா...
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் அக்கா.
நல்ல பகிர்வு. வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை மூலம் எல்லோர் மனதிலும் ஒரு நம்பிக்கையை ஊட்டிட்டீங்க..ரொம்ப உபயோகமாக இருந்தது இவ்வளவு சிரமப்பட்ட ஆயிஷாம்மாவிற்கு நோய் நொடியில்லாத நீண்ட ஆயுளை அளிக்க இறைவனை வேண்டுகிறேன்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா