Monday, January 9, 2012

இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab




இறால் மட்டன் கீமா கபாப்




தேவையானவை



இறால் - 100 கிராம்
மட்டன் கீமா (கொத்திய ஆட்டுகறி) - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு தேவையான அளவு.
வெஙகாயம் - ஒன்று பெரியது
தேங்காய் துருவியது - முன்று மேசை கரண்டி
கொத்துமல்லி தழை - கால் கப்


முட்டை - ஒன்று
பொட்டு கடலை பொடி - கால் கப்





1.கொத்திய கறியை சுத்தம் செய்து டீ வடிகட்டியில் தண்ணீரை வடிக்கவும்.
இறாலில் முதுகிலும் வயிற்றிகும் உள்ள அழுக்கை எடுத்து சுத்தமாக கழுவிக்கொள்ளவும்.

2.கறியையும் இறாலையும் ஒன்றாக சேர்த்து அதில் மிளகாய் தூள், உப்பு தூள் மஞ்ச்ள் தூள்,கரம் மசாலா தூள் துருவிய தேங்காய்,தயிர், கொத்துமல்லி தழை,பச்சமிளகாய், வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்து 10 நிமிடம் சுருளவிடவும்.

3.எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வரட்டியதும் கலவையை ஆறவைத்து மிக்சியில் அரைக்கவும்.

4.கடைசியாக முட்டையை நன்கு அடித்து கலவையுடன் சேர்த்து , பொட்டுகடலை பொடியையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

5.வேண்டிய வடிவில் உருண்டையாகவோ, நீளவாக்கிலோ தட்டி தோசை தவ்வாவில் எண்ணையை ஊற்றி பொரித்து எடுக்கவும். கிரில் வசதி கொண்டவர்கள் கிரில் செய்தும் எடுக்கலாம்.

சாதத்துடனும் சப்பாத்தி குபூஸுடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.




http://www.chennaiplazaik.com/


14 கருத்துகள்:

Vimitha Durai said...

Thats a very different blend of meat. Looks so yum

Priya Suresh said...

Yum yuum, superaa irruku kabab Jaleela,paathathume pasikuthu.

Menaga Sathia said...

கீமாவுடன் இறால் சேர்த்து கபாப் செய்திருப்பது சூப்பர்ர்!!

ஸாதிகா said...

இறாலும் மட்டனும் கலந்து கபாபா... வித்தியாசமான முயற்சிதான்.

Unknown said...

கீமாவுடன் இறால் சேர்த்து கபாப் செய்திருப்பது சூப்பர் அக்கா

Asiya Omar said...

புதுசாக யோசித்து இருக்கீங்க ஜலீலா.நல்லாயிருக்கு.

Chitra said...

yummy treat!
Thank you.

Jaleela Kamal said...

நன்றி விமிதா

Jaleela Kamal said...

பிரியா பார்க்கும் போதே பசிக்குதா நீங்க தான் எக்ஸ்ப்ரஸ் ஆச்சே உடனே செய்து சாப்பிடுங்க

Jaleela Kamal said...

ஆம் மேனகா சுவை வித்தியசமாக இருக்கும்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா முயற்சித்து பாருங்கள்

Jaleela Kamal said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாயிஜா

Jaleela Kamal said...

உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி ஆசியா

Jaleela Kamal said...

மிக்க நன்றி சித்ரா..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா