Thursday, January 19, 2012

மழலை உலகம் மகத்தானது – 2

மழலை உலகம் மகத்தானதுமுதல் பாகம் இங்கு சென்று பார்க்கவும்.
ஹகீம், டிக்‌ஷா, ரஹீத்

மழலை உலகம் மகத்தானது – 2
முதல் பாகத்தில் பர்ஸ்ட் பேட்ச் பசங்க பார்த்தீங்க.
குட்டன் , ஷெரில் முதலில் வந்தார்கள்.
குட்டன் காலை 7.30 மணிக்குவந்தால் மதியம் 2 மணிக்கு திரும்ப போவான்.
மாலை 4 மணிக்கு வந்தால் இரவு 8 சில நேரம் 8.30 யும் ஆகும்.
ஷெரில் ( எங்களுக்கு ரொம்ப பிடித்து இருந்த்து. ) ஷெரில் காலை 7.30 க்கு வந்தால் மதியம் 2.30 க்கு போய் விடுவாள்.
பிள்ளைகள் தினம் வருவதால் அவர்களுக்கு கைக்கு எட்டும் தூரத்தில் எந்த சாமான் களையும் கீழே வைக்க முடியாது. ஒன்லி விளையாட்டு பொருட்கள் தான் ஹகீம் ரஷீத் கார் பிரியர்கள் ( ஆண் குழந்தைகள் எல்லாமே குட்டி குட்டி கார் என்றால் ரொம்ப பிரியபடுவார்கள்) அத வாங்கி கொடுத்துட்டா போதும் அதை வைத்து ட்ராபிக் மேக் பண்ணுவது, ஓட்டுவது. அவர்கள் இருவருக்கும் ஓட்டும் ரோடே தலையணை தான்.
சில நேரம் அழும் குட்டன் அவங்க இருவரும் பேசி கொள்வதை வேடிக்கை பார்ப்பார் அந்த நேரத்தில் கட க்டன்னு சில வேலைகளை முடித்து கொள்வது.
எவ்வளவு வாங்குவது சே முன்ன பின்ன யாரிடமாவது விசாரித்து இருக்கலாம். நீங்களே வெளியில் என்ன வாங்குகிறாங்களோ அதை கொடுங்க என்றதும், போதுமே ஆக குறைவாக ஒரு 65% பணம் தான் கொடுத்தார்கள்.
பிறகு 4 மாத்தில் வெளியில் விசாரித்து விட்டு ரொம்ப ஆத்திரமாக இருந்த்து.
சரி என்ன செய்வது முதலாவதாக வந்த 2 மாத  குழந்நதை ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று விட்டு விட்டோம். அதே அந்த மகராசி சில நேரம் காசு கொடுக்க் மறந்துடுவாங்க. நானும் கேட்க அசிங்க பட்டு பேசாமல் இருப்ப்பேன். 15 தேதி வரும் போது மெதுவாக காசு கொடுக்கலையே என்றேன். ம்ம்ம் நான் கொடுத்துட்டேன்னு நினச்சிக்கிட்டேன், இல்ல கொடுக்கல, ஒகே என் மாலை என் ஹஸ் வந்தால் கொடுக்க சொல்றேன் அது அப்படி மறந்து போய் முன்று நாட்கள் ஆச்சுன்னு சொல்லுங்க.

ஷெரில் அம்மா அப்பா ரொம்ப டீசெண்ட் எல்லாத்துலேயும் பர்ஃபெக்ட்..

குழந்தைய கொண்டு வந்து விடுவதிலும், சாப்பாடு வைப்பதிலும், காசு கொடுப்பதிலும், எங்க்ளிடம் கனிவாக பேசுவதிலும் , எங்களுக்கு ரொம்ப பிடிச்சி இருந்த்து...

அடுத்து டிக்‌ஷா கீ கீ கீ எப்ப பார்த்தாலும் ஆண்டி ஆண்டி ஆண்டி பேச ஆரம்பிக்கல ஓரிரி வார்த்தைகள் ஆக்‌ஷனோடு சொல்வாள், சில நேரம் ரொம்ப அழுதாலும் அடிக்கடி சிரிக்கும் படியா ஏதாவது செய்து கொண்டே இருக்கும். அவள் தூங்கி எழுந்து வரும் போது பொருப்புள்ள அம்மாமார்கள் எழுந்திருக்கும் போது எழுந்த்தும் சுறு சுறுப்பாக கிச்சனுக்கு ஓடி போய் வேலை செய்வது போல ஒரு பாவனை காட்டும்.
டிக்‌ஷா அம்மா டிக்‌ஷாவுக்கு மாலை டிபனுக்கு மங்க்ளூர் சூப்பரான மங்ளூர் போண்டா வும், சுண்டலும் சுட சுட வரும்.மதியம் அவங்க 1.30 மணிக்கு கூப்பிட்டு போய் சாதம் ஊட்டி கொண்டுவருவாங்க இருந்தாலும் ஒரு பேப்பரை விரித்து எல்லா பிள்ளைகளை ஒன்றாக உட்காரவைத்து தான் சாப்பாடு கொடுப்போம். என் பையனையும் உட்காரவைத்து விடுவேன். அவன் சாப்பிட ரொம்ப நேரம் ஆகும். எந்த பிள்ளைகளை காக்கா குருவி காண்பித்து ஊட்டும் பழக்கத்த படுத்தல, ஏனான்ன ஏற்கனவே இப்படி என் பையன் சாப்பிடன்னு ஓவ்வொரு நாளைக்கு ஓவ்வொரு காகம், பூனை  மாடு ஆடு என வேடிக்கை காண்பித்தால் தான் கொஞ்ச்மாவது சாப்பிடுவான். ஆகையால் வ்ந்த பிள்ளைகளை கரெக்டாக சாப்பாடு நேரத்துக்கு மொத்தமா உடகாரவைத்து விடுவது அதை பார்த்தாவது இவன் சாப்பிட்ட்டும் என்று.தான்.

அடுத்த்து சாதியாவுக்கு  எல்லாமே இங்கேயே முடித்து அனுப்பனும் காலை பால் , டிபன் , ஜூஸ், மதிய சாப்பாடு, என்று 1.30 மனிக்கு கூப்பிட்டு போய் மறுபடி மாலை கொண்டு வந்து விடும் போது மாலை பால் , ஓட்ஸ் நாங்களே காய்ச்சுகொடுக்கனும்.அவளுக்கு உடம்பு சரியில்லை என்றால் கொடுக்க் வேண்டிய சாப்பாட்டை கொடுத்து தான் அனுப்பனும்.
என் ஹஸ்ஸுக்கு சாப்பாடெல்லாம் சுட சுட இருக்கனும் , ஆகையால் அப்பவே மைக்ர்ரோ வேவ் வாங்கி விட்ட்தால் எல்லா பிள்ளைகளுக்கும், அவ்ர்கள் கொண்டு வந்த ஆறி போன சாப்பாட்டை சூடு படுத்தி நாம் சாப்பிடுவது போல் தான் கொடுப்பது, கூட எங்க சமையலும் பிடிக்கும் இடையில் தேவைப்பட்டால் அதையும் கொடுத்து கொள்வோம்.

அங்க இங்க நகர முடியாது நோட்டம் போட்டு கொண்டே இருக்கனும்.எல்லாரையும் அனுப்பிட்டு மதியம் 2.30க்கு தான் சாப்பிடுவேன்.
இதற்கிடையில் சளி , ஜுரம், இருமல், வந்தால் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒட்டிக்கொள்ள்ளாதவாறு தனித்தனியாக வைத்து கொள்ளனும்.
நிறைய பலூன் வாங்கி வைத்துகொள்வேன். அங்க அங்க தொங்க விட்டுடுவேன்.
நிறைய அனிமல் டாய்ஸ் , கப் சாசர், டீ செட் இது போல் பிள்ளைகளுக்கு விளையாட வைத்து கொள்வது. அதை கொட்டுவது அடுக்கிவைப்பதுமே பெரிய வேலை.அதில் கூர்மையான டாய்ஸ் இல்லாம பார்த்துக்கனும்.. இப்படி நாள் ஓடி கொண்டு இருந்த்து. இரவு 8.30 க்கு மேல் தான் பிரி, வாரம் ஒரு நாள் தான் விடுமுறை..

இப்படி போய் கொண்டு இருக்கும் போது ஒரு நாள் குட்டனை தூங்கிகொண்டு இருக்கும் போது மெதுவா படுக்க வைத்து  விட்டு கிச்சனுக்கு வந்தேன் அங்கு வெளியில மற்ற பசங்க எல்லாம் என் கண்ணெதிரில் வைத்து கொண்டு கிச்சனில் வேலை பார்த்து கொண்டு இருந்தோம். எதிர் பார்க்கவே இல்லை குட்டன்  மெதுவா வந்து நான் நிற்கும் இட்த்தில் கேஸ் டேபிள் கீழே உள்ள கபோர்டை திறந்து அங்குள்ள ஜாம்பாட்டில் ஏதோசாமான் வைத்து இருந்தேன். எடுத்து நான் பார்த்துட்டேன் என்றதும்  தொப்புன்னு அப்படியே போட்டுட்டான்., பாட்டில் உள்ளே உள்ள பொருளுடன் சிதறி விட்ட்து, எனக்கு எப்படி இருந்திருக்கும், நான் என்ன செய்து இருப்பேன், குட்டன் என்ன செய்து இருக்கும். பே பே பே பக் பக்க பக்கு..

இனி என்ன நடந்த்து என அடுத்து முடிந்த போது எழுதுகிறேன்.











22 கருத்துகள்:

Priya Suresh said...

Lovely post..enjoyed reading.

ஸாதிகா said...

அனுபவம் சுவாரஸ்யமாக உள்ளது ஜலி.

Asiya Omar said...

ஜலீலா நல்லாயிருக்கு.தொடர்ந்து எழுதுங்க.

Angel said...

குட்டன் என்ன செய்திருக்கும் நீங்க என்ன ஆனீங்க ....சஸ்பென்ஸ்
சீக்கிரமே சொல்லிடுங்க .சிறு குழந்தைகளை பேபி சிட்டிங் செய்வது மிக கடினம் .
அந்த பெற்றோர் கொஞ்சமேனும் அதனையுணர்ந்து அதற்கேற்ற தொகை அளிக்க வேண்டும் .என்ன செய்யஇவர்களை

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஹா.. ஒவ்வொரு குழந்தையின் குறும்பும் ஒவ்வொரு விதம்.. படிக்க படிக்க சுவாரஸ்யம்.

அடுத்த பாகத்தையும் போடுங்கோ.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆமாம் எங்கட சனங்கள் எங்கே ஓசியில தள்ளலாம் என்றுதான் ஓடித்திரிவார்கள்.... இப்படியான வேலைக்கெல்லாம் கரெக்ட்டா ஒரு நோட் புக் வைத்து சைன் வாங்கோணும், இல்லையெனில் சரிவராது.

சிநேகிதன் அக்பர் said...

சுவாரஸ்யமான அனுபவம்.

Unknown said...

அனுவப பகிர்வு அருமை அக்கா

ஹேமா said...

குழந்தைகள் சந்தோஷம் என்றாலும் அவர்களைக் கவனிப்பது கஸ்டமான விஷ்யம்தான்.என் தோழி தன் பிள்ளைகளோடு சத்தம் போடுவாள் “சம்பளம் வாங்கிக்கொண்டு 200% வேலை செய்யலாம் எங்கையெண்டாலும்.இதுகளைக் கட்டியவிழ்க்ககேலாது”எண்டு !

திண்டுக்கல் தனபாலன் said...

படிக்க படிக்க ஆனந்தம்! தொடருங்கள் சகோதரி! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! நன்றி!

Jaleela Kamal said...

மிக்க நன்றீ பிரியா

Jaleela Kamal said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றீ ஸாதிகா அக்கா

Jaleela Kamal said...

ஆமாம் ஏஞ்சலின் என்ன செய்வது எங்களுக்கும் இவ்வளவு கொடுத்து தான் ஆகனும் என்று கரா ராக கேட்க மனசு வரல.

Jaleela Kamal said...

//ஆமாம் எங்கட சனங்கள் எங்கே ஓசியில தள்ளலாம் என்றுதான் ஓடித்திரிவார்கள்.... இப்படியான வேலைக்கெல்லாம் கரெக்ட்டா ஒரு நோட் புக் வைத்து சைன் வாங்கோணும், இல்லையெனில் சரிவராது.//

ஹா ஹா அதிரா அது கடைசியில் தான் உரைத்தது.. ஹிஹி

Jaleela Kamal said...

சிநேகிதன் அக்பர் வருகைக்கு மிக்க நன்றீ

Jaleela Kamal said...

மிக்க நன்றீ பாயிஜா

Jaleela Kamal said...

ஆமாம் ஹேமா குழ்ந்தைகளை வளர்த்து ஆளாக்குவது மிக்ச்சிரமாமான விஷியம் , உங்கள் தோழி போல் தான் நிறைய பேர் புலம்புவார்கள்,

அக்கரைக்கு இக்கரை பச்சை

வருகைக்கு கருத்துக்கும் மிக்க ந்ன்றி

Jaleela Kamal said...

திண்டுக்கல் தனபாலம் வருகைக்கு மிக்க நன்றி

தளிகா said...

Nice post Jaleelakkaa.innum 3part ezhudhunga

குறையொன்றுமில்லை. said...

ஆஹா.. ஒவ்வொரு குழந்தையின் குறும்பும் ஒவ்வொரு விதம்.. படிக்க படிக்க சுவாரஸ்யம்.

Jaleela Kamal said...

நன்றி தளிகா நன்றி லஷ்மி அக்கா

ம்ம் நேரம் கிடைக்கும் போது கண்டிபாக எழுதிடுறேன் தளி..

ஜெய்லானி said...

//நிறைய அனிமல் டாய்ஸ் , கப் சாசர், டீ செட் இது போல் பிள்ளைகளுக்கு விளையாட வைத்து கொள்வது. அதை கொட்டுவது அடுக்கிவைப்பதுமே பெரிய வேலை. //

ம்.... இதுல ஏகப்பட்ட அனுபவம் எனக்கு ...இதுலயே மண்டை காய்ஞ்சுடுமே :-))))

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா