இதன் பெயர் நாங்க சிக்கன் வைத்து செய்தாலும், மட்டன் வைத்து செய்தாலும், காய் கறி வைத்து செய்தாலும். முட்டை ரொட்டி என்று தான் சொல்வோம். ஆனால் வெப் உலகில் வந்த பிறகு தான் இதுக்கு மலேஷியன் முர்தபா என்று எனக்கு தெரியும். இது எங்க இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் விஷேஷ சமையலில் இதுவும் ஒன்றாகும்.
இது சென்னையில் உள்ள பிர்தவுஸ் ஹோட்டலில் ரொம்ப பேமஸ்.
பரோட்டாவிற்கு
மைதா = இரண்டு கப்
உப்பு = சிறிது
டால்டா உருக்கியது = ஒரு மேசை கரண்டி
முட்டை = ஒன்று
பில்லிங்கிற்கு
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
சிக்கன் கீமா = 200 கிராம் (இதில் மட்டன் கீமா, பீஃப் கீமா எது வேண்டுமானாலும் போடலாம்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
சீரகத்தூள் = அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
வெங்காயம் = கால் கிலோ
தக்காளி = ஒன்று
கரம் மசாலா தூள் = அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் = இரண்டு
கொத்து மல்லி தழை = ஒரு கைப்பிடி
முட்டை = மாவில் தடவ தேவையான அளவு
எண்ணை + டால்டா (அ) பட்டர் = சுடத்தேவையான அளவு
செய்முறை
முதலில் மாவு தயாரிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து சிறிது தளர்த்தியாக குழைத்து பெரிய உருண்டகள் போட்டு ஓவ்வொன்றிலும் எண்ணை தடவி ஊறவைக்கவும்.
எண்ணையை காயவைத்து வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், அடுத்து தக்காளி, கொத்துமல்லி தழை சிறிது சிகக்ன் , மசாலா வகைகள் இப்படி எல்லா வற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கி கடைசியாக கரம் மசாலா,கொத்துமல்லி தூவி கிளறி கலவையை ஆறவிடவும்.
இப்போது மாவு நன்கு ஊறி இருக்கு அதை பெரிய வட்டவடிவமாக திரட்டவும்.
மாவில் தடவ தேவையான அளவு முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து கலக்கி கொள்ளவும்.
வட்டமாக திரட்டிய மாவில் முட்டை கலவையை பரவலாக தடவி, ஆறிய சிக்கன் பில்லிங்கை ஒன்னறை மேசை கரண்டி அளவு வைத்து நல்ல பரவாலாக வைத்து சதுர வடிவமாக மடிக்கவும்.
தவ்வா சூடானதும் எண்ணை ஊற்றாமல் முதலில் சதுர வடிவமாக தயாரித்ததை போட்டு லேசாக சூடானதும் திருப்பி போட்டு நன்கு கையால் அழுத்தி விடவும் இப்படி செய்வதால் எல்லா பக்கமும் சமமாக இருக்கும்.
இப்போது எண்ணை கலந்த டால்டாவை சுற்றிலும் ஊற்றி நன்கு வெந்து சிவந்து வரும் போது ஒரு தட்டில் எடுத்து வைத்து ஒரு பக்கம் மட்டும் குறுக்கும் , நெடுக்குமாக முழுவதும் வெட்டாமல் லேசாக நான்கைந்து லைன் போட்டு விடவும். அப்ப தான் சாப்பிடும் போது துண்டு துண்டாக பிச்சி சாப்பிட வசதியாக இருக்கும்.
சாப்பிடும் முன் சிறிது பெப்பர், லெமன் பிழிந்து கெட்சப்புடன் சாப்பிடவும்.
( இது டயட் செய்பவர்கள் சாப்பிட முடியாது என்று என்ன வேண்டாம், டால்டா, முட்டை மஞ்சள் கரு தவிர்த்து செய்து சாப்பிடலாம்)
காய் கறிகள் முட்டை கோஸ், கேரட், உருளை, சேர்த்து இதே போல் முர்தபா தயாரிக்கலாம்.
Tweet | ||||||
29 கருத்துகள்:
அக்கா, ஒரு நாளாவது உங்கள் கையால் செய்த சமையலை சாபிடனும். இப்படி எச்சூருதே!
That looks simply superb..Really mouthwatering
ஜலீலா ஸ்டெப் பை ஸ்டெப் போட்டிருந்தால் நல்ல இருக்கும்.நிச்சயம் ட்ரை பண்ணனும்.
அசல் மலேசியன் முர்தபா சென்னையில் சாப்பிடுவதென்றால் சர் தியாகராஜா சாலை(பாண்டிபஜார்)யில் உள்ள பெலிந்தா நாஸிகண்டார் என்ற உணவகத்தில் கிடைக்கும்.பிர்தவுஸ் ஹோட்டல் எங்கே இருக்கின்றது?அருமையான இஸ்லாமிய உணவு.
First time here.Looks delicious.
முர்தபா நேக்கு சாப்பிட ஒரு
தபா செஞ்சு கொடுங்கக்கா
அருமையான ரொட்டி. முர்தபா என்ற பெயர் இப்பொ தான் தெரியும்.
நான் இது சாப்ட்டு இருக்கேன் அக்கா...நல்ல இருக்கும்...பெயர் இப்போதான் தெரியும்...நல்லக்கு ...தேங்க்ஸ்...
அஸ்ஸலாமு அலைக்கும்
ஜலீலா லாத்தா நலமா ஊரில் இருந்து வந்துவிட்டீர்களா நாங்களும் இது போலதான் செய்வோம் நீங்க ஸ்டெப் பை ஸ்டெப்பா சொல்லி இருந்தால் அனைவரும் நன்கு புரிந்துக்கொள்வார்கள் நல்ல குறிப்பு முடிந்தால் என் ப்ளாக்கிற்கு போய் பாருங்கள் இப்பொழுதுதான் நான் பண்ணி இருக்கேன் பெரிசா ஒன்றும் இருக்காது பின் உங்களுக்கு மெயில் பண்ணுகிறேன் இன்ஷாஅல்லாஹ்
அன்புடன்
ஜூலைஹா
http://nahasha.blogspot.com/
ஆகா ஆகா ஆகா
சகோதரி சூப்பர் - அவசியம் செய்து சாப்பிடுகிறேன்.
ஆகா முர்த்தபாவும் போட்டாச்சா. இன்னும் ஒரு மாசம் ஓடனுமேன்னு கவலையா இருக்கே.
இந்த குறிப்பு போனமாதமே போட்டு வைத்து, ஸ்டெப் பை ஸ்டெப் போடலாம் என்று ஆனால் இப்போதைக்கு முடியல பிறகு படங்கள் சேர்க்கிறேன். ஆசியா, ஜுலைகா.
ரெம்ப ரெம்ப நல்லாருக்கு .......
சலாம் ஜலீலா
லாப்பை[முர்தபா] சூப்பர்
இதை எங்க ஊரில் லாப்பை என்பார்கள் முர்தபா ரவுண்டா இரண்டு வள்ர்த்து செய்வார்கள்
ஆமாம் தாஜ் எங்க அம்மா ரவுண்டா இரண்டு செய்து தான் இந்த பில்லிங் வைப்பாங்க, என் மாமியார் சதுரமா செய்வாங்க எனக்கு இது தான் ஈசி.
செய்து பார்த்துடலாம், இங்கே இது மாதிரியே ’முத்தப்பக்’ என்ற பெயரில் கிடைக்குது.
ரொம்ப நல்லா இருக்குபா பார்கும் போதே சாப்பிட தோணுது. நான் என்ன பண்ணேனு தெரியலை முன்னாடி எழுதின கமெண்ட் டெலிட் ஆகிட்டு
சித்ரா வாங்க ஒரு நாள் செய்து கொடுத்துட்டா போச்சு
Thank you sarah navin
ஸ்டெப் பை ஸ்டெப் அடுத்த முறை செய்யும் போது இனைக்கிறேன் ஆசியா.
தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி.
ஸாதிகா அக்கா முர்தபா செய்ய உங்கள் கிட்ட நிற்க முடியாது, லேயர் முர்தபா எல்லாம் செய்வீர்கள்.
சென்னை டில் இருக்கு
திவா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ, நிறைய பேருக்கு முர்தபா என்றால் என்ன என்று தெரியாது.
கருவாச்சி ஓ செய்து ஒரு தபா என்ன இரண்டு தபா கூட செய்து தறேன்/
ஆமாம் விக்கி நிறைய பேர் முர்தபாவை இப்ப தான் கேள்விபடுகிறார்கள்.
வாங்க சீமான் கனி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
வாங்க ஜுலைகா வாஅலைக்கும் அஸ்ஸலாம். பிள்ளைகள் நலமா?
உங்கள் பிலாக் பார்த்தேன் நல்ல இருக்கு தொடருங்கள்
வாங்க ஜமால் கண்டிப்பா செய்து பார்த்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
நவாஸ் ஊருக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கா, எதன்னு தான் அவர்களிடம் செய்து கேட்பீர்கள். (நீங்கள் சொன்ன ஜோக் உடனே ஞாபகம் வருது, ஊருக்கு போனதும் பெட்டிய திறப்பேனோ இல்லையோ உங்கள் பிலாக்கை முதல்ல திறப்பேன் என்றது)
மகா வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.
akka supera irukku!!
ஆஜர்
உங்கள் பாராட்டுக்கு நன்றி சுஸ்ரீ
அண்ணாமலையான் ஆஜர் ஆனதிற்கு மிக்க நன்றி.
அருமை,ரொம்ப நல்லா இருக்கு
எங்க ஊர்ல இது பாப்புலர்
ஜலீலாக்கா, படங்களையும் குறிப்பையும் பார்த்தேன், உடனேயே சாப்பிடவேணும்போல இருக்கு.
நான் கடையில் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன், இதுவரை செய்து பார்த்ததில்லை. சூப்பர் குறிப்பு.
அதிரா வாங்க வாங்க வந்தது ரொம்ப சந்தோஷம்.
இது மிகவும் சுவையான சத்தான ரிச்சான குறிப்பு செய்து இறட்டையரை அசத்துங்கள்.
romba thanks ithu enga oorla (koothanallur) seivanga aana murthaba nu thaan solluvom
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா