Tuesday, December 8, 2009

சப்ஜி பிரியாணி (இரண்டு வகை) Two types of vej biriyani



வெஜ் பிரியாணி (குக்கரில் செய்வது), வெஜ் பச்சடி, சாலட்






குக்கர் முறை

தரமான பாசுமதி அரிசி ‍ ஒன்னறை ஆழாக்கு (1 1/2டம்ளர்)
எண்ணெய் ‍ கால் டம்ளர்
நெய் ‍ அரை மேசை கரண்டி
ப‌ட்டை, கிராம்பு, ஏல‌ம் - த‌லா ஒன்று
வெங்காயம் ‍ முன்று
இஞ்சி பூண்டு = ஒன்னறை மேசை கரண்டி
ப‌ச்சை மிள‌காய் - இர‌ண்டு
கொத்தமல்லி தழை ‍ சிறிது
புதினா ‍ சிறிது
ப‌ழுத்த‌ த‌க்காளி = முன்று
உருளை ‍ ஒன்று
கேரட் ‍ ஒன்று
ப‌ட்டாணி, பீன்ஸ், கார்ன் ‍= தலா ஒரு மேசை கரண்டி
மிள‌காய் தூள் - ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
உப்பு - ருசிக்கு தேவையான‌ அளவு
தயிர் ‍= கால் கப்
எலுமிச்சை பழம் ‍ அரை பழம்


அரிசியை களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும், வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். உருளை கேரட்டை பொடியாக அரிந்து கொள்ளவும். மற்ற காய் களையும் ரெடியாக வைத்து கொள்ளவும்.



குக்கரில் எண்ணை + நெய் ஊற்றி பட்டை கிராம்பு,ஏலம் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு கலர் மாறும் வரை வதக்கவும்.



வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும், பிறகு கொத்துமல்லி, புதினா, பச்சமிளகாய்,தக்காளி சேர்த்து நன்கு கிளறவும்.





உருளை, கேரட்டை சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு, பிறகு மற்ற காய்கறிகளை சேர்க்கவும்.



அடுத்து மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு தூள் சேர்த்து தயிரையும் சேர்த்து கிளறி தீயின் அளவை சிம்மில் வைத்து கிரேவி கெட்டியாகி எண்ணை தெளிந்து வரும் போது ஒரு டம்ளருக்கு ஒன்னறை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஊறிய அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து சேர்த்து எலுமிச்சை பழத்தையும் பிழிந்து கொதிக்கவிட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு உடனே இரக்கவும்.

இது குக்கரில் இருந்து இரக்கியதும் உடனே வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விடனும், இல்லை என்றால் கெட்டியாகிவிடும்.



தம் போட்டு செய்யும் முறை



வெஜ் பிரியாணி (தம் போட்டு செய்வது),சிக்கன் லாலி பாப், தயிர் பச்சடி,ஊறுகாய்,ஸ்வீட் லஸ்ஸி.










இதே குக்கரில் தண்ணீர் அளந்து விட்டு செய்யாமல் கிரேவி தனியாக தாளித்து சாதத்தை முக்கால் பதமாக வடித்து கிரேவியில் கொட்டி 20 நிமிடம் தம் போட்டு இரக்கவும்.


.







இந்த இரண்டு வகையுமே சுவை வித்தியாசப்படும். இதே பிரியாணியை அரைத்து விட்டும் புலாவ் போல செய்யலாம்.
















வெஜிடேரியன்கள்,காலிபிளவர் 65 வுடன் சாப்பிடலாம்.










Posted by Picasa

46 கருத்துகள்:

suvaiyaana suvai said...

akka supera irukku ungka dam veg biriyani!!!

Saraswathy Balakrishnan said...

Super duper dum veg briyani pa..feel like have some now:)

Asiya Omar said...

உங்க ப்ளாக் வந்தால் ரொம்ப ஹோம்லியாக இருக்கு.very casual.so nice.வெஜ் பிரியாணி இரண்டும் அருமை.

பாவா ஷரீப் said...

ஜலீக்கா படமே படம் காட்டுது பிரியாணி பத்தி சொல்லனுமா என்ன

Sarah Naveen said...

wow!!! yummy biryani..Thats a great meal..

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஜலீலா,

இன்று மதிய சாப்பாட்டிற்கு வெஜ் பிரியாணி குக்கர் இரண்டு விசில் அடிக்கிற முறையில் செய்ய போகிறேன். மாலை மீண்டும் பின்னூட்டம் கொடுக்கிறேன்.

வாழ்க வளமுடன்

Malini's Signature said...

ரொம்ப ஈசியா இருக்கு ஜலீலா அக்கா ....அருமை

Jaleela Kamal said...

மிக்க நன்றி சுவையான சுவை.


ஆமாம் சரஸ்வதி பார்த்ததும் உடனே சாப்பிடனும் போல் இருக்கும்.


thank you sarah navin.


சகோதரர் ஹைஷ் ரொம்ப சந்தோஷம் செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். குக்கரில் செய்யும் போது அதிக தனல் வைக்கக்கூடாது. தனலை மீடியமாக வைத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் அடி பிடிக்கும்.

செய்து முடித்து குக்கர் ஆவி அடங்கியதும். உடனே வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விடனும் இல்லை என்றால் சாப்பாடு கெட்டியாகிவிடும்.


அன்பு சகோதரி ஆசியா உங்கள் அன்பான தொடர் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

கருவாச்சி உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.


ஹ‌ர்ஷினி அம்மா குழ‌ம்பு சாத‌ம் பொரிய‌ல் வைப்ப‌தை விட‌ இது நிமிஷ‌த்தில் ரெடி ஆகிவிடும்.

சாருஸ்ரீராஜ் said...

ஜலீலா அக்கா உங்க பிரியாணியும் சூப்பர் , படமும் சூப்பர்

SUFFIX said...

பிரியாணியும், வகை வகையா எப்படி செய்வது, படங்கள் அனைத்தும் சுவையோ சுவை!!

S.A. நவாஸுதீன் said...

கொஞ்சம் லேட்டா வந்தேன் சகன் காலியாயிடுச்சே.

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஜலீலா, எதிர்பார்ததைவிட நன்றாகவே வந்தது. வரும் 15 டிசம்பரில் சரியாக ஒரு வருடம் ஆகப் போகிறதே (சமையல் கற்று). அருமையான சுவை. மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

மாதேவி said...

ஜலீலா, வெஜ்பிரியாணி படங்களுடன் அருமை.

Chitra said...

ஜலீலா அக்கா, டைப் அடிக்க முடியவில்லை. வாயில் ஊறிய தண்ணி ஓடுது அக்கா.......

சீமான்கனி said...

வெஜும் நான்-வெஜும் ஒரே பதிவில் நல்ல இருக்கு அக்கா...கலக்கல்...ஊர்திரும்பியாச்சா??? வாழ்த்துகள்...

Jaleela Kamal said...

உங்க‌ள் பாராட்டுக்கு மிக்க‌ ந‌ன்றி சாருஸ்ரீ

Jaleela Kamal said...

ஷ‌பிக்ஸ் , இதில் இர‌ண்டு முறை இருக்கு, ஏற்கனவே, மட்டன், மீன் பிரியாணி போட்டுள்ளேன். இன்னும் ஒன்று ம‌சாலாக்க‌ளை அரைத்து ஊற்றி செய்வ‌து.

Jaleela Kamal said...

ச‌கோத‌ர‌ர் ந‌வாஸ் ச‌க‌ன் காலி ஆனா என்ன‌ இன்னொரு ச‌க‌ன் ரெடி ப‌ண்ணிட்டா போச்சு.

Jaleela Kamal said...

சகோதரர் ஹைஷ் ரொம்ப சந்தோஷம். நீங்கள் கை தேர்ந்த குக்காகி விட்டீர்கள், சும்மாவா ஒரு வருடமா எல்லா சமையல்களையும் செய்து கலக்கி இருக்கீங்கம். உங்கள் மனைவி ரொம்ப கொடுத்துவைத்தவங்க.

என் பக்கத்திற்கு வருகை தந்து இனைந்ததும் இல்லாமல், பின்னூட்டம் கொடுத்து அதை செய்தும் பார்த்ததற்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

மாதேவி வாங்க, உங்கள் பாரட்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சித்ரா வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி, இப்ப‌டி சொல்ல‌லாமா சித்ரா உட‌னே செய்து சாப்பிடுங்க‌ள்.

Jaleela Kamal said...

சீமான் கனி ஆமாம் ஊர் திரும்பியாச்சு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

Vikis Kitchen said...

Romba azhagaga explain panni irukkinga. Biryani perfect aa irukku. Vungal blog romba nalla irukku. Ini thinamum ingu varuven. (eppadi Tamil type seytheenga?)

Uma Madhavan said...

மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள். படங்கள் அருமை. தங்களின் சேவை தொடரட்டும்.

என் புதிய பதிவை படித்து கருத்துச் சொல்லவும்.

http://snehiti.blogspot.com/

VENNILLA said...

Hi friend this is vennilla here.. ur doing a really good job.. can we exchange links..

sbshirin said...

ஜ்லீலா அக்கா பிரியாணி ரொம்ப அருமையா இருக்கு நான் பேசாம் கிளம்பி அபுதாபி வ்ந்துடாலாம்னு இருக்கேன் உங்க கை ருசிரொம்ப நல்லா இருக்கு நான் எல்லாம் டைரி போட்டு எழுதுகிரேன் எல்லாம் தின்மும் பார்ப்பேன் உங்க ப்ளாக் புதுசா என்ன போட்டு இருக்கீங்க்னு பார்ப்பேன் பார்த்து உடனே நோட் பண்ணிப்பேன் எனக்கு செட் செட்டா கொடுங்க அக்கா அப்ப்தான் இந்த குழ்ம்பு செய்தால் இந்த தொட்டுக்க செய்லாம்னு தெரியும் முடியும் போது கொடுங்க அக்கா உங்க ப்ளாக் எனக்கு ரொம்ப usefulaஇருக்கு

Menaga Sathia said...

பிரியாணி சூப்பராக இருக்கு.படத்தை பார்க்கும்போதே சாப்பிடனும்போல் இருக்கு ஜலிலாக்கா..

Jaleela Kamal said...

வாங்க விக்கி அடிக்கடி வந்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.த‌மிழ் டைப்பிங் உங்க‌ள் பிலாக்கில் வ‌ந்து சொல்கிறேன்.

Jaleela Kamal said...

உமா மாதவன் வருகைக்கும் உங்கள் பாரட்டுக்கும் மிக்க நன்றி.
நேரம் கிடைக்கும் போது உங்கள் பக்கத்துக்கு வருகிறேன்.

Jaleela Kamal said...

வெண்ணிலா வாங்க வருகைக்கும் உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி,

Jaleela Kamal said...

sbs shrinநீங்கள் என் சமையல் மூலம் பயனடைவது குறித்து சந்தோஷம். அபுதாபி இல்ல துபாய்.

Jaleela Kamal said...

மேனகா எப்படி இருக்கீங்க, ஷிவானி நலமா? தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி.

Chitra said...

jaleela akka, என் blog பக்கம் வந்து எனக்கு தந்த ஆதரவுக்கும் ஆதரவான வார்த்தைகளுக்கும் நன்றி. எங்க அப்பா சொன்ன மாதிரி, சமையலில் முக்கியமா அன்பும் கரிசனமும் இருக்கணும். அப்போதான், ருசிக்கும். உங்க சமையலில் அது நிறையவே இருக்கு, அக்கா.

அண்ணாமலையான் said...
This comment has been removed by the author.
அண்ணாமலையான் said...

என்ன மாதிரி பேச்சலர்தான் பாவம். நாக்கு ஊறுது. படம் பாத்தா பசியாறுமா?

Anonymous said...

paakkave supera iruku.apdiye eduthu sapdanum pola iruku.

Sakthi said...

getting hungry when i see this..

Jaleela Kamal said...

//எங்க அப்பா சொன்ன மாதிரி, சமையலில் முக்கியமா அன்பும் கரிசனமும் இருக்கணும். அப்போதான், ருசிக்கும். உங்க சமையலில் அது நிறையவே இருக்கு, அக்கா.//
உங்கள் பாராட்டுக்கு நன்றீ சித்ரா

Jaleela Kamal said...

நன்றி அம்மு

Jaleela Kamal said...

சக்தி வேல் வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

தாஜ் said...

சலாம் ஜலீலா

பார்க்கும்போதே சாப்பிட தோனுது

my kitchen said...

Briyani simply superb

Jaleela Kamal said...

வா அலைக்கும் அஸ்ஸலாம் தாஜ், கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

My kitchen, Thank you very for coming.

Anonymous said...

ஹாய் அக்கா உங்க தம் வெஜ் பிரியாணி செய்யலாம்னு இருக்கேன் 25 பேருக்கு அளவு சொல்ல முடியுமா வீகெண்ட் எங்க வீட்டுல பார்ட்டி

Thanks
Meenu

Jaleela Kamal said...

Meenu

aLavu threen mail id kodungka

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா