Showing posts with label பீர்னி. Show all posts
Showing posts with label பீர்னி. Show all posts

Sunday, January 1, 2012

முந்திரி , ரவை கீர் - Cashew soji kheer

welcome to chennai plaza இந்த லின்க்க கிளிக் செய்து பாலோவராக ஆட் ஆகிக்கொள்ளுங்கள் டிசைன்ஸ் சென்னை ப்ளாசா வெப் சைட்டில் அப்டேட் செய்வேன்.

www.chennaiplazaik.com

ரவை முந்திரி பீர்னி

தேவையானவை

லோ பேட் மில்க் -
முந்திரி - 8
சர்க்கரை - 75 கிராம்
ரவை - 25 கிராம்
ஏலக்காய் - 1

செய்முறை

முந்திரியை அரைத்து கொள்ளவும். பாலில் ஏலக்காய், அரைத்த முந்திரி ரவையை கலக்கிகொள்ளவும்.
தீயின் தனலை குறைவாக வைத்து  கட்டி தட்டாமல் கிளறி  கொதிக்க விடவும். கடைசியாக சர்க்கரை சேர்த்து இரக்கவும்.

சுவையான ரவை முந்திரி கீர்.

பார்டிக்கு செய்வதாக இருந்தால் சர்க்கரை பாதி, ஸ்வீட்டன் கண்டென்ஸ்ட் மில் பாதி சேர்க்கவும். மேலும் 5 முந்திரியை நெய்யில் வறுத்து போடவும்.

இது பஞ்சி தோசை, குட்டி பன்,இட்லி ,இடியாப்பம் , ஆப்பத்துக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கனும்.

முஸ்லீம் திருமணங்களில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் சுவையான பிர்ணி இது , இதை வெள்ளை பீர்னி  ,மஞ்சள் பீர்னி ன இருவகைகளாக தயாரிப்போம். வெள்ளை பீர்ணி என்பது ரவை முந்திரி சேர்த்து செய்வது அல்லது அரிசி , முந்திரி, பாதாம் அரைத்து செய்வது ஒரு வகை, மஞ்சள் பீர்னி என்பது ரவை பாதம் சாப்ரான் சேர்த்து அரைத்து செய்வது அல்லது அரிசி பாதாம் , சாஃப்ரான் சேர்த்து அரைத்து செய்வது. கொஞ்சம் கலர் பொடியும் சேர்த்து செய்யலாம், இது மற்றொரு வகை.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

சென்னை ப்ளாசா.

Monday, November 1, 2010

பிஸ்தா கீர்(பீர்னி) - पिस्ता खीर - pista kheer

கீர் பல வகையாக தயாரிக்கலாம். இது சிம்பிளாக அரைத்து செய்யும் கீர் இதில் நெய் கூட சேர்க்கவில்லை. டயபட்டீஸ் உள்ளவர்கள் கூட இதை லோ பேட் பாலில் செய்து சுகர் பிரி சேர்த்து செய்து சாப்பிடலாம். இது வாய் புண் மற்றும் வயிற்று புண் உள்ளவர்களுக்கு வெரும் பஞ்சி தோசைக்கு வைத்து கொடுக்க்லாம், மெயினாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை பிஸ்தா சேர்க்காமல் வெரும் பாலில் ரவை சேர்த்தும் செய்யலாம்
.

தேவையானவை

பிஸ்தா – 25 கிராம்
அரி்ி - 1 மேசை க்்்்ி
பிஸ்தா – பொடியாக அரிந்த்து (ஒரு மேசை கரண்டி)
பால் - அரை லிட்டர்
ரவை – ஒரு மேசை கரண்டி
ஏலக்காய் – 2
பிஸ்தா எஸன்ஸ் – ஒரு துளி
சர்க்கரை – 50 கிராம்
கண்டென்ஸ்ட் மில்க் – சிறிய டின்

செய்முறை
அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும், பிஸ்தாவை வெண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்து தோலை எடுக்கவும்.
பிஸ்தாவையும் , அரிசியையும் அரைத்து எடுக்கவும்।

பாலில் ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைத்து அரைத்த பேஸ்டை சேர்க்கவும்.
தீயின் தனலை குறைத்து ரவை தூவி கட்டி இல்லாமல் கிளறவும்.

கொதித்து திக்காகும் போது ஒரு துளி பிஸ்தா எஸன்ஸ் ஊற்றி பொடியாக அரிந்த பிஸ்தாவை தூவி இரக்கவும்.

தோசை ,குட்டி பன்னுடன் சாப்பிட அருமையாக இருக்கும்

முஸ்லீம் திருமணங்களில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் சுவையான பிர்ணி இது , இதை வெள்ளை பீர்னி  ,மஞ்சள் பீர்னி ன இருவகைகளாக தயாரிப்போம். வெள்ளை பீர்ணி என்பது ரவை முந்திரி சேர்த்து செய்வது அல்லது அரிசி , முந்திரி, பாதாம் அரைத்து செய்வது ஒரு வகை, மஞ்சள் பீர்னி என்பது ரவை பாதம் சாப்ரான் சேர்த்து அரைத்து செய்வது அல்லது அரிசி பாதாம் , சாஃப்ரான் சேர்த்து அரைத்து செய்வது. கொஞ்சம் கலர் பொடியும் சேர்த்து செய்யலாம், இது மற்றொரு வகை.

இதை பன், நாண், தோசை, இடியாப்பம் ஆகியவைக்கு பக்க உணவாக வைத்து சாப்பிடலாம்.

This recipe goes to umm mymoon's celebrate sweets kheer event