Showing posts with label பரிசு. Show all posts
Showing posts with label பரிசு. Show all posts

Monday, March 23, 2015

Radio Salaam Ladies Day - Sambar Competition - சாம்பார் போட்டி - ஹையா பரிசு வாங்கியாச்சு



Radio Salaam Ladies Day Out Family event which happened no 20th March. 

ரேடியோ சலாம் மகளிர் தினம் கொண்டாட்டம்





பிலாக்கில் ஈவண்டுகளுக்காக  போஸ்ட் செய்து நிறைய பரிசுகள் வாங்கி இருந்தாலும் மேடையில் வாங்கும் முதல் பரிசு இதுவே, அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் ஏகவல்ல இறைவனுக்கே.


ரேடியோ சலாம், 
https://www.facebook.com/radiosalaam1065/photos/a.734108473335104.1073741828.734107146668570/812395945506356/?type=1&theater
Ladies Day out - cookery competition - Sambhar.
ஆபிஸ் போற வழியில மட்டும் தான் ரேடியோ கேட்கமுடியும். இந்த சாம்பார் போட்டியை சொல்லி கொண்டே இருந்தாங்க. வெள்ளி மட்டும் தான் விடுமுறை, அன்று முழுவதும் சென்னை ப்ளாசா வேலைகள் , போகலாமா வேண்டாமா? போனால் ஒரு நாள் வேஸ்டாகிடுமே என்று நினைத்து கடைசியில் சரி சாம்பார் தானே ரொம்ப டென்ஷன் எடுக்கல எப்பவும் செய்வது போல் செய்துட்டு மதியம் ஜும்மா தொழுகைக்கு பிறகு போனோம். 
27 பெண்கள் சாம்பார் செய்து கொண்டு வந்தார்கள் , அதில் 7 பேரை செலக்ட் செய்து நான் 5 வது ஆச்சி மசாலா கிஃப்ட் பேக் ஒன்று பரிசாக கொடுத்தார்கள்,





Key Events on Radio Salaam Ladies Day Out 2015!
1. Sambhar Competition
Participants to bring in their pre-cooked Sambhar and display it to our judges. Categorized with Taste, Presentation and style

2. Mrs UAE Pageant
UAE’s first show to choose the most talented, bold, well informed, ambitious, motivated, enthusiastic woman. Beauty is a thing seldom seen. It is held by all within the soul it lies, waiting to come out to the surface. Competition is held in three rounds. Women to dress up in their best ethnic wear!

· Round One – Fashion Walk.
We lend you the stage and you show us the walk that will impress the judges

· Round Two – Smart Lady
This goes without saying, no pageant runs without asking questions and checking the smartness. Are you the smart lady?

· Round Three – Talent show
You can gladly choose to sing or dance or juggle the bottles, up to you. Make sure you impress the judges.

3. Pattimandram
Topic: Women today prefer to have good-looking men as their life partners / Women today prefer to have intelligent men as their life partners.

4. Activities for men (husbands) and children
Dialogue delivery, singing contests and many other games and prizes family members!

It is going to be a definite family entertainer!






 ஏழு கறி சாம்பார் /காய்கறி சாம்பார்                                                 20.03.2015


தேவையான பொருட்கள்
காய் வேகவைக்க
பீன்ஸ் - 6
கேரட் - 1
கத்திரிக்காய் - 3
அவரைக்காய் - 6
முருங்கைக்காய் - 1
பூசனிக்காய் – 50 கிராம்++
பெங்ளூர் கத்திரிக்காய் சௌ சௌ (chayote) – 50 கிராம்
தக்காளி பெரியது – 2
சின்ன வெங்காயம் – 10
பச்சமிளகாய் – 2
சாம்பார் பொடி  - முன்று தேக்கரண்டி
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
வெல்லம்  - சிறிது
புளி எலுமிச்சை அளவு – கட்டியாக கரைத்து கொள்ளவும்
பருப்பு வேகவைக்க
துவரம் பருப்பு – 150 கிராம்
வெங்காயம்  - பெரியது ஒன்று
வெந்தயம் – கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி – கால் தேக்கரண்டி
மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை – 3 தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை – 20 இதழ்கள்
சின்ன வெங்காயம் – 5
கொத்துமல்லி தழை – சிறிது
அலங்கரிக்க – கொத்து மல்லி தழை

Idli & veg sambhar

செய்முறை
துவரம் பருப்பை களைந்து அதில் ஓன்னறை டம்ளர் தண்ணீர் சேர்த்து வெங்காயம்வெந்தயம்பெருங்காயப்பொடி
மஞ்சள் பொடி சேர்த்து வேகவைக்கவும்.
வெந்த பருப்பை மசித்து வைக்கவும்.
காய் கறிகளை கழுவி அரிந்து அதில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து கொதிக்க 
விட்டு அதில் சாம்பார் பொடி சேர்த்து வேகவைக்கவும்.
காய் வெந்த்தும் கரைத்த புளி சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து வெல்லம் மற்றும் வெந்த பருப்பை சேர்த்து கொத்துமல்லி தழை சிறிது கருவேப்பிலை சிறிது தூவி கொதிக்க விட்டு இரக்கவும்.
கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சாம்பாரில் சேர்த்து இரக்கி கொத்துமல்லி தழை தூவி 
பரிமாறவும்.

குறிப்புபருப்பு வகைகளில் மசூர் தால் ,மூங் தால் சேர்த்தும் சாம்பார் செய்யலாம்.
காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளுக்கு எல்லாவகையான காயும் சேர்த்து செய்தால் காய்களின் சத்து சூப் மற்றும் ஜூஸ் சாம்பாரில் இரங்கி சத்தான தாக இருக்கும்.
.நீரிழிவு நோய்கார்களுக்கு இந்த காய் கறிகளுடன் பாகற்காயைகூட சாம்பாரில் சேர்க்கலாம் கசப்பு தெரியாது



ஆச்சி ராகி பவுடர்
ஆச்சி சில்லி பவுடர்
ஆச்சி பெருங்காயப்பொடி  ( கம கமக்குது)
ஆச்சி சாம்பார் பொடி
ஆச்சி அப்பளம்
ஆச்சி ரவா கேசரி மிக்ஸ்







இது காரைக்கால் சாம்பார் ஆனால் இதில் சுண்டைக்காய் போட்டு சமைத்து இருந்தார்கள் பிரஷ்ன்டேஷன் அழகாக இருந்தது ஆனால் கசந்து விட்டது, நானும் பாகற்காய் போடலாம் என்று இருந்தேன் ,நல்ல வேளை போட வில்லை , என் சாம்பாரும் கொஞ்சம் டேஸ்ட் மாறி இருக்கும்.





அங்க டேஸ்ட் , ப்ரண்டேஷன் & ஸ்டைலுன்னு போட்டு இருந்தார்கள்.
நல்ல செய்துட்டு சரியா ப்ரண்ட் பண்ண தான் எனக்கு வராது. இதில் சாம்பாரில் கவனம் செலுத்த வில்லை, வறுத்து திரித்து செய்து இருக்கலாம் , இல்லை ஆச்சி சாம்பார் பொடி பயன் படுத்தி அந்த கவருடன் கொண்டு வந்து வச்சி இருக்கலாம்.
அங்க வைக்க இடமும் பத்தவில்லை ,

ஆனால் பரிசு பெற்றவர் அங்க ப்ளாஸ்டிக் கண்டெயினர் மூடி வைத்து நம்பர் 1 என்று எழுதி இருப்பதுக்கு தான் முதல் பரிசு. அவங்க எந்த பவுளிலும் வைத்து பிரஷன்ட் பண்ண வில்லை எதன் அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என தெரியவில்லை.


அடுத்து ஒரே வீட்டில் முன்று பேர் முன்று விதமாக செய்து வைத்திருந்தார்கள் அதில் ஒருவர் செலக்ட் ஆனார்கள்.

தெரிந்து இருந்தால் முன்று பேரை நானும் கூப்பிட்டு போயிருப்பேன் ஹிஹி

அடுத்து அங்கு இருக்கும் வடையெல்லாம் வெளியில் விற்பதை வாங்கி வைத்து விட்டார்கள் சாம்பார் மணத்துடன் வடை மணம் தான் அதிகம் அங்கு/





நடுவில் குட்டியாக ஒரு சின்ன கிண்ணம் போல் இருக்கு பாருங்கள் அவங்க அதை தான் வைத்தார்கள் அழகாக ஒரு பவுளில் வைத்து இருக்கலாம்.

Heart Shape Idli



ஹார்ட் ஷேப் ல இட்லி செய்தாலும் செய்தேன் அதை பிள்ளைகள் கிட்ட இருந்து பாதுகாப்பாதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
டிஸ்ப்ளே செய்து எல்லாரும் போய் உட்கார்ந்து விட்டார்கள் என் பிளேட் கடைசில் விழுவது போல் இருந்தது நானும் என் பையனும் மாறி பார்த்து கொண்டு இருந்தோம்.

நுழைந்ததும் முதலில் கார்னரில் இருப்பது என் சாம்பார் பிள்ளைகள் எல்லாம் உடனே இதில் டூத் பிக் சொருகி வைத்து இருந்தேன் , நேர வந்து அந்த அப்படியே  எடுக்க வந்தார்கள், நான் கொஞ்சம் பொறுங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாத்தையும் கொடுத்து விடுகிறேன், இரண்டு பழம் வைத்தேன் ஒருபையன் நே ர வந்து அபேஸ் சரி ஒகே சாப்பிடு என்று சொல்லிட்டேன்.

ஜட்ஜ்கள் வந்து சாப்ப்பிட்டு பார்த்தார்கள் கலக்கி கலக்கி குடிச்சி பார்த்தார்கள்./

அதற்குள் அங்கே பெண்கள் திறமைகள் எல்லாம் ஓவ்வொருத்தராக ஆடி, பாடி, நடித்து , கவிதை சொல்லி, மிஸ் வோல்ட் போல் கேட் வாக் எல்லாம் செய்து காண்பித்தார்கள்,. இடையிலேயே சாம்பாருக்கான வின்னர்களை அறிவித்துவிட்டார்கள், 
நம்பர்  19 ,ஜலீலா கமால், ஜலீலா கமால், ஜலீலா கமால் முன்று முறை ஆடிட்டோரியம் அலற என் பெயரை கூப்பிட்டதும் எனக்கு ஒன்றுமே ஓடல  நேராக மேடையில் போய் பரிசை பெற்று கொண்டேன்.
கடைசி வரை அங்கு இருக்க வில்லை, இருந்திருந்தால் மேடையில் அனைவருடனும் மறுபடி நிற்க வச்சி புகைபடங்கள் எடுத்து இருப்பார்கள்.
ஆனால் மக்ரீப் தொழுகைக்குள் வீடு போய் சேரனும் என்பதால் உடனே கிளம்பிட்டோம்.
போலாமா வேண்டாமா இவர் கூப்பிட்டு போவாரோ மாட்டாரோன்னு நினைத்து கலந்து கொள்ள ஆர்வம் இல்லை , கடைசி நேரத்தில் கலந்து இவர் ஒகே போகலாம் என்றதும் 
, ஒரு தோழி வின் பண்ணுகிறீரோ இல்லையோ போங்க உங்களுக்கு சென்னை ப்ளாசாவுக்கு 4 காண்டாக்ட் ஆவது கிடைக்கும் என்று சொன்னார்கள் 
அதே போல் சில ஆட்கள் அறிமுகமும் ஆனார்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இது தானா?
காலை பத்து மணிக்கு தான் செய்ய ஆரம்பித்தேன், அவசரத்தில் பிரிண்ட் எடுத்த்தில் குறிப்பில் என்ன சாம்பார் பொடி என்று எழுத மறந்துட்டேன்.

Radio salaam




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, December 12, 2014

ஃபஜீலாவுக்கு வாழ்த்துக்கள் - ஹெல்தி டயட் - முன்றாவது பரிசு



ஃபஜீலா என் பெரியாப்பா பேத்தி செயிண்ட் வில்லியம்ஸ் ஸ்கூலில் நடை பெற்ற ஹெல்தி டயட் சமையல் போட்டியில் முன்றாம் பரிசு கிடைத்து இருக்கிறது. அன்பு செல்லம் ஃபஜீலாவுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேலும் ரங்கோலி மற்றும் ட்ராயிங் போட்டிகளிலும் பரிசுகள் வென்று இருக்கிறார்.

பனீர் & ஃப்ரூட் சாலட் ரெசிபி கற்றுகொடுக்குமாறு கேட்டார்.



நான் இங்கு முன்பு போஸ்ட் செய்துள்ள லெமன் ஹனி ஃப்ரூட் சாலடும், பனீர் டிக்கா, ( சிக்கன் டிக்கா ரெசிபியை அப்படியே பனீர் டிக்காவாக மற்றி ரெசிபி கொடுத்தேன்)ரெசிபி பிறகு போடுகிறேன்.


Fazila Kalwath Daughter /Third Price/Healthy Diet

850th Post
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, May 8, 2013

பரிசு மழை


Agar Agar Halwa with Sesame -  வெள்ளை எள் அகர் அகர் ஹல்வா.



இது புதுசா முயற்சி செய்த ஹல்வா, அகர் அகர் காண்டஸ்ட் காக செய்தது போஸ்ட் பண்ண முடியாம போய்விட்டது.

இது வரை எனக்கு கிடைத்த பரிசுகள்

நான் ஆங்கில பிளாக்கில் வைத்து இருப்பது எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். இங்குள்ள குறிப்புகள் தான் சிலது போட்டு கொண்டு இருக்கிறேன், சில புது ரெசிபிகள் போட்டு கொண்டு இருக்கிறேன்.
ஆகையால் தான் அந்த லின்க் இங்கு கொடுக்கவிலலை.


இது என் ஆங்கில வலைபூ குக்புக்ஜலீலா. விருப்பம் உள்ளவர்கள் பாலோவராக ஆட் ஆகி கொள்ளலாம்.
நிறைய பேருக்கு சமையல் அட்டகாசம் பதிவு டேஷ் போர்டில் வராததால் இங்கு பதிவு போட்டது தெரியவில்லை என்கிறார்கள். குக் புக் ஜலீலாவில் ஆட் ஆகி கொண்டால் அங்கு இந்த லின்க் கொடுத்து வைத்துள்ளேன். அதன் மூலம் என்பதிவுகளை கண்டு கொள்ளலாம்.குறிப்பாக நம்ம பூஸாருக்காகவும், தனபாலன் சாருக்கும்.
http://cookbookjaleela.blogspot.in



இது என் பேஸ்புக் பேஜ். இதிலும் விருப்பம் உள்ளவர்கள் லைக்  கொடுங்கள்.
இப்ப எல்லாருக்கும் பிளாக்கை விட பேஸ் புக்கில் கமெண்ட் போடுவது தான் சுலபமாக இருக்கிறது.  முடிந்த போது எல்லா பதிவுகளையும் பதிவுகளை இணைக்கிறேன்.சமையல் குறிப்பை பற்றின சந்தேகங்கள் ஏதும் இருந்தால் அங்கே கேட்கலாம்.



இதுவரை பரிசு வாங்கியது பற்றி இங்கு தெரிவிக்கவில்லை, எல்லா லின்கும் எடுத்து போட முடியாமல் அடுத்த அடுத்த போஸ்ட் என்று தள்ளி கொண்டே போய் விட்டது.


கிழே உள்ள பரிசுகள் எல்லாம் ஆங்கில பிளாக்கில் எனக்கு கிடைத்தது.





May 2013


1. I m happy to inform everyone in that I have won as 

second winner in Hyderabadi Cuisine Roha's Giveaway  for 

her First Blog Anniversary.  Check here for  details.

Thank you very much Roha.




free glitter text and family website at FamilyLobby.com free glitter text and family website at FamilyLobby.com



இந்த அவார்டு ஹைதராபாத் சமையல் குறிப்புகள் வைத்துள்ள வலை தோழி ரோஹா கான்.
பிளாக்கில் நடத்திய ஈவண்டில் கிடைத்தது.


********************************



March 2013




ஜபாங் & கூப்போநேஷன் ஈவண்ட், வலை தோழி பாரதி நடத்திய ஸ்பைசி டேஸ்டி ஈவண்டுக்கு இரண்டு குறிப்புகள் இணைத்ததில் கிடைத்த பரிசு தொகை - ரூபாய் 1500/-



Feb - 2013 I won First Prize form Spicy Chilly & cuponation  Jabong From Barathy, for My Auththur Milaku kaRi   ஆத்தூர் மிளகு கறி & Healthy Adai.
Thank you very much Barathy.








Indiaagar -  Marine Chemical - The Agar Agar Specialist Hosted By Food Corner , Anamika
I have been Awarded as Fifth Winner in Marine Chemical - The Agar Agar Recipe Contest - During December 2012 to February 2013. -  For My Indian Flag Agar Agar


Thank you Anamika.

 
******************
 
December 2012

இந்தியா அகர் , மெரின் கெமிக்கல்ஸ் நடத்திய அகர் அகர் ரெசிபி காண்டெஸ்டில் ட்ரைகலர் அகர் அகர் க்கு 5 வது பரிசு கிடைத்துள்ளது.




I received Tarla Dalal Book for Gayathri's Walk Through Memory Lane ,hosted by Nithu , for My  Plain Flour Onion Dosa (Pancake) - December 2012
Thank you Gayathri.

இது மாதந்திர ஈவண்ட் நடத்தி கொண்டு இருக்கும் வலை தோழி காயத்ரி ஈவண்டில் கிடைத்த பரிசு.


*******************


*********************

March - 2012

போன வருடம் நேசம் மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்திய புற்று நோய் விழிப்புணர்வுக்காக  நான் எழுதிய புற்றை வெல்வோம் வறுமுன் காப்ப்போம் - பெண்களுக்காக, கட்டுரைக்கு  1000 ரூபாய் மதிப்புள்ள ஆறுதல் பரிசு, புத்தக கூப்பன் , , உடுமலை டாட் காமில் அவர்கள் கொடுக்கும் கோட்டை செலுத்தி பெற்று கொள்ள சொன்னார்கள், நான் இடையில் உடம்பு முடியாலம் இருந்த போது அவர்கள் கோட் அனுப்பியதால் நிறைய மெயில் வந்ததில் அதை கவனிக்கவில்லை, இப்ப தான் அதை பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டதே கிடைக்குமோ கிடைககாதோ என்று உடுமலை டாட் காமுக்கு ஒரு மெயில் செய்தேன், என்ன் ஆச்சரியம், உட்னே பதில் மின்னல் வேகத்தில் பறந்து வந்தது, நான் கேட்ட புத்தகங்களை அவ்ர்களே தேர்வு செய்து உடனே மெயில் அனுப்பி , எங்க கடைக்கும் அனுப்பி வைத்து விட்டார்கள்.

உடனே ஆவன செய்த மகேஸ்வரி மேடத்துக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
********************************


March  2013
 
என் இனிய இல்லம் பாயிஜா நடத்தி Passion on Plate ஈவண்டிலும் பரிசு கிடைத்துள்ளது.




 
*************
தினகரனிலும் பிளாக்கர்களை ஊக்குவிக்கும் முறையில் சில பிளாக்கர்களை அறிமுகப்படுத்து கிறார்கள் அதில் இணையத்தை கலக்கும் இலக்கிய பெண்கள் வரிசையில் என்னையும் இணைத்துள்ளார்கள், ரொம்ப சந்தோஷம்.






உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி. நீங்கள் அனைவரும்  கமெண்ட் மூலம் கொடுத்த ஊக்கம் தான் என்னை இந்த அளவுக்கு குறிப்புகள் போடவைத்தது. அனைவருக்கும் மிக்க நன்றி.


Chennai Plaza