Wednesday, August 15, 2012

மூவர்ண ஃப்ரூட்ஸ் & நட்ஸ் கடல் பாசி - Tri ColourFruits and Nuts Agar Agar


இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

அகர் அகர் , இந்த கடல் பாசிய விதவிதமா செய்வதில் எனக்கு ரொம்ப விருப்பம்.

அதுவும் இப்ப நோன்புகாலம் என்பதால் தினம் வித விதமான கடல் பாசி தான்..

அதிலும் இந்த விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.



Tri ColourFruits and Nuts Agar Agar



கடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு.உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளுக்கும் இதைசேர்த்து செய்வார்கள் .இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சிகொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம்அல்சர்வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
























தேவையான பொருட்கள்

கடல்பாசி -  (அகர் அகர்) - 15 கிராம்
தண்ணீர்  900 மில்லி (4 ½ டம்ளர்)
சர்க்கரை125 கிராம்
ரோஸ்வாட்டர் ஒருதேக்கரண்டி
எசன்ஸ் – (பச்சை மற்றும் சிவப்பு)
நட்ஸ் வகைகள் – பாதம் பிஸ்தா பிளேக்ஸ் தேவைக்கு
பொடியாக அரிந்த பழங்கள்- ஸ்ட்ராபெர்ரி, தேஙகாய் மற்றும் கிவிதேவைக்கு
பால் – 1மேசைகரண்டி
அலங்கரிக்க
யம் யம் மிட்டாய் (அ) ஜெம்ஸ் மிட்டாய்
பிரட் ஸ்டிக் (அ) சாக்லேட் ஸ்டிக்


 செய்முறை

1 தண்ணீரில் கடல் பாசியைஉதிர்த்து போட்டு  15 நிமிடம் ஊறவைத்து சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கடல்பாசி கரையும் வரை  காய்ச்சவும்.




 2 காய்ச்சி சிறிது கட்டியாகி  வரும் போது .காய்ச்சியதை முன்றாக முன்று கிண்ணங்களில் ஊற்றவும்




இரண்டு கிண்ணத்தில் சிவப்பு மற்றும் பச்சை வண்ண எசன்ஸ் ஊற்றி கலக்கவும்.







4 சிவப்பு வண்ணத்தில்ஸ்ட்ராபெர்ரிபழம்மற்றும்பாதம், பிஸ்தாபிளேக்ஸ்சேர்க்கவும்.



5.வெள்ளை வண்ணத்தில்பால், தேங்காய், பிஸ்தா ,பாதம்பிளேக்ஸ் சேர்க்கவும்





6 முன்று கிண்ணத்தில் உள்ள கலவைகளையும்  ஐஸ் கியுப் ட்ரேவில் ஊற்றி குளிரூட்டியில் குளிரவைக்கவும்.குளிர்ந்த்தும் அலங்கரித்து பரிமாறவும்





7 . சுவையான மூவர்ண ஃப்ரூட் அண்ட் நட்ஸ் அகர் அகர் ரெடி.

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 15  நிமிடம்
சமைக்கும் நேரம்: 20 நிமிடம் + குளிர வைக்கும் நேரம்

How to Make Agar Agar - Step by Step
Fruit Jelly
Indian Flag Agar Agar

சுதந்திர தின ஊத்தாப்பம்


சுதந்திர தின கடல்பாசி (பிளெயின்)



23 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... எல்லாமே நல்லாயிருக்கே.... நன்றி சகோ... வாழ்த்துக்கள்...

ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

சாந்தி மாரியப்பன் said...

பார்க்கவே ரொம்ப அழகா கலர்ஃபுல்லா இருக்கு

ஸாதிகா said...

சுதந்திரதினத்திற்கேற்ற சூப்பர் டெசர்ட்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுவையான குளிர்ச்சியான டிஷ். நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுவையான டிஷ். நன்றி.

Vikis Kitchen said...

Dear akka, Happy Independence day!
Very nice looking dish. How are you?
Have a nice day.
Love,
Viki

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் அருமையான பகிர்வு.
அழகா இருக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கண்களுக்குக் குளுமையான அழகான படங்களுடன் கூடிய ஜில்லென்ற பதிவு.

இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்.

அன்புடன்
vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

Madam, I would like to share an award with you, Please visit to my Blog:

http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

அன்புள்ள
கோபு [VGK]

இராஜராஜேஸ்வரி said...

Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

Jaleela Kamal said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க சாந்தி உஙக்ள் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா

Jaleela Kamal said...

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி விக்கி

Jaleela Kamal said...

மிக்க நன்றி சேகுமார்

Jaleela Kamal said...

வாங்க வை, கோபால கிருஷ்னன் சார் உங்கள் அருமையான பாராட்டுக்கு மிக்க் நன்றி

Jaleela Kamal said...

உங்கள் அவர்டுக்கு மிக்க நன்றி வைகோபாலன் சார்

Jaleela Kamal said...

இராஜராஜேஸ்வரி மிக்க நன்றி

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஹா சூப்பர் ஜலீலாக்கா.. போனமுறை பிளேனாகச் செய்து தெசியக்கொடி செய்தனீங்க நினைவிருக்கெனக்கு.

நானும் செய்தனே, அதை ஏன் கேட்கிறீங்க போங்கோ...:))). பின்பு சொல்றேன் புளொக்கில்.

Roopa said...

That dish looks so colorful and very apt for our Indpendence day!! Thanks for sharing.

Jaleela Kamal said...

//ஆஹா சூப்பர் ஜலீலாக்கா.. போனமுறை பிளேனாகச் செய்து தெசியக்கொடி செய்தனீங்க நினைவிருக்கெனக்கு.

நானும் செய்தனே, அதை ஏன் கேட்கிறீங்க போங்கோ...:))). பின்பு சொல்றேன் புளொக்கில்.//

என்ன பண்ணீங்க அதிரா சொதப்பலா??


சீக்கிரம் போடுங்கோ ஓ

Jaleela Kamal said...

Thank you for your visit Roopa

Unknown said...

colorful agar agar.. Thanks for linking this recipe to my event. Expecting more recipes from you - Ongoing event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா