Saturday, August 4, 2012

சைனா கிராஸ் (கடற்பாசி) அகர் அகர்



////கடற் பாசி என்னும் சைனா கிராஸ் இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உனவு களில் இதுவும் ஒரு வகையாகும்.

இது புட்டிங், ஐஸ் கிரீம், பாலுதா, ஸ்வீட்ஸ்க்கு பயன் படுத்துவது, ஜெல்லி ஆகியவற்றிற்கு ரெஸ்டாரண்ட்களில் அதிகமாக பயன் படுத்துவார்கள்

வயிறு எரிச்சல், அல்சர் , வயிற்று புண் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் அருமையான டெசர்ட் அயிட்டம் இந்த கடல் பாசி. தினம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

கடற்பாசியை ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பால் சேர்த்தும் செய்யலாம்,

விருப்பமான  கலர்கள் சேர்த்து தனித்தனியாக செய்து கலந்து கலர்புல்லாகவும் செய்யலாம்

இளநீரில் (அ) தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம், இளநீரில் செய்தால் சாப்பிட நுங்குபோல் இருக்கும்.

நட்ஸ் வகைகள் அதிகமாக சேர்த்து நட்ஸ் கடல் பாசியும் தயாரிக்கலாம்.

ஜூஸுக்கு கரைக்கும் டேங்க் பவுடர் சேர்த்து வித விதமான சுவையில் செய்யலாம்.

பழங்கள் சேர்த்து ஃபுரூட் கடல் பாசியாகவும் செய்யலாம்.


பாலுதாவில் ஜெல்லிக்கு பதில் இதை சேர்க்கலாம்.
இது ஒரு வெஜ்டேரிய‌ன் உண‌வு தான்









டேங்க் க‌ட‌ற்பாசி

க‌ட‌ற்பாசி = ஒரு கை பிடி அள‌வு
ச‌ர்க்க‌ரை = ஒரு மேசைக‌ர‌ண்டி அள‌வு
ஏதாவ‌து ஒரு பிளேவ‌ர் டேங்க் ப‌வுட‌ர் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி அளவு
த‌ண்ணீர் = இர‌ண்டு ட‌ம்ளர்
செய்முறை

ஒன்ன‌றை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ட‌ற்பாசியை க‌ரைத்து ஊற‌வைத்து ச‌ர்க‌க்ரை சேர்த்து ந‌ன்கு காய்ச்ச‌வும்.
ந‌ன்கு க‌ரைந்து வ‌ரும் போது டேங்க் ப‌வுட‌ரை க‌ல‌ந்த்து ஊற்றி ஒரு டிரேயில் ஊற்றி தேவையான நட்ஸ் வகையை ஊற்றி ஆற‌விட‌வும்.
ஆறிய‌தும் பிரிட்ஜில் வைத்து குளிற‌வைத்து சாப்பிட‌வும்.

இது காய்ச்சி பிளாஸ்டிக்கில் ஊற்ற‌ வேண்டாம் சில்வ‌ர் டிப‌னில் ஊற்றி வைத்தால் ந‌ல்ல‌து.









இள‌நீர் க‌ட‌ற்பாசி


இள‌நீர் = ஒன்று முழுவ‌தும்
ச‌ர்க்க‌ரை = ஒரு மேசை க‌ர‌ண்டி
தேவையான‌ ந‌ட்ஸ் = 4 பாத‌ம் (அ) பிஸ்தா, முந்திரி ‍
க‌ட‌ற் பாசி = ஒரு கைபிடி அள‌வு

க‌ட‌ற்பாசியை அரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் பொடியாக‌ அரிந்து போட்டு ஊற‌வைத்து ந‌ன்கு க‌ரையும் வ‌ரை காய்ச்சி சர்க்கரை சேர்த்து இள‌நீரை ஊற்றி உட‌னே அடுப்பை அனைக்க‌வும்.ஒரு டிரே (அ) த‌ட்டில் ஊற்றி மேலே ந‌ட்ஸ் வ‌கைக‌ளை தூவி ஆற‌வைத்து குளிற‌வைத்து சாப்பிட‌வும்.
இது சாப்பிட‌ சாப்பிட‌ நிறைய‌ சாப்பிட‌னும் போல் தோன்றும் அவ்வ‌ள‌வு ருசியாக‌ இருக்கும்.






ரூ ஆப்ஷா என்பது பாக்கிஸ்தானியர்கள் பயன் படுத்துவது இது பாலில் கரைத்து குடிக்கும் பானம் இது உடல் சூட்டை தணிக்கும், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.




க‌ட‌ற்பாசி = ஒரு கைபிடி அள‌வு
ச‌ர்க்க‌ரை = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி அள‌வு
பால் = ஒரு ட‌ம்ள‌ர்
ரூ ஆப்ஷா = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
பாத‌ம் = நான்கு




அரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ட‌ற்பாசியை பொடியாக‌ அரிந்து போட்டு சிறிது நேர‌ம் ஊற‌வைத்து காய்ச்ச‌வும்.
க‌ரைந்து வ‌ரும் ச‌மைய‌த்தில் அதில் பாலை ச‌ர்க்க‌ரை சேர்த்து கொதிக‌க் விட்டு வ‌டிக‌ட்ட‌வும் ந‌ல்ல‌ க‌ரைந்து விட்டால் வ‌டிக‌ட்ட‌ தேவையில்லை.அதில் ரூ ஆப்ஷாவை க‌ல‌ந்து ஒரு த‌ட்டில் ஊற்றி அத‌ன் மேல் பாத‌த்தை தோலெடுத்து பொடியாக‌ அரிந்து தூவி விட்டு ஆற‌வைத்து பிரிட்ஜில் வைத்து குளிற‌விட‌வும்.ந‌ன்கு ஆறி செட்டான‌தும் வேண்டிய‌ வ‌டிவில் துண்டுக‌ள் போட்டு சாப்பிட‌வும்.








13 கருத்துகள்:

goma said...

அகர் அகர் ரெசிபி இத்தனையா ...ஐயோடா!இத்தனையும் செய்து பார்க்கணும்

அதுக்கு ஏன் சைனா கிராஸ்ன்னு பேர் வந்துச்சு அதை முதல்ல சொல்லுங்க...

Jaleela Kamal said...

கோமா இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா எப்படி பா பதில் சொல்வது

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சமையல் குறிப்பு சகோதரி.....
அருமை...
பகிர்வுக்கு நன்றி...

கோமதி அரசு said...

அருமையான ரெசிபிகள் செய்து பார்க்க தூண்டும் படங்கள்.
அருமையான குறிப்புக்கள்.

நன்றி ஜலீலா.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

விதவிதமான அகர் அகர் ரெஸிப்பீஸ்.சூப்பர்ப்

Unknown said...

நல்ல சமையல் குறிப்பு . நன்றி

R.Gopi said...

ரமதான் கரீம் ஜலீலா....

நோன்பு எப்படி போயிட்டு இருக்கு?

வேலை பிசியில் வரவே முடிவதில்லை... மன்னிக்கவும்....

தங்கள், குடும்பத்தார் அனைவரின் நலமும் அறிய ஆவல்...

தொடர்பில் இருங்கள்.....

Jaleela Kamal said...

திண்டுக்கல் தணபாலன் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

கோமதி அரசு உஙக்ள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க ஸாதிகா அக்கா நோன்புகாலங்களில் நாம் செய்வது தானே.
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சேகர் உஙக்ள் முதல் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கோபி வாங்க ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை.

ரம்தான் வாழ்த்துக்கு மிக்க நன்றி
நோன்பு நல்லபடியாக போய் கொண்டுஇருக்கு
வருகைக்கு மிக்க நன்றி

Asiya Omar said...

ரமதான் கரீம் ஜலீலா.எல்லா கடற்பாசி ரெசிப்பியுமே அருமை.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா