Thursday, August 30, 2012

தர்பூசணி பிங்கர்ஸ் (குழந்தைகளுக்கு) - Watermelon Fingers



தர்பூசணி பிங்கர்ஸ் (குழந்தைகளுக்கு)
தேவையானவை

தர்பூசணி பெரிய துண்டு – 1
சுக்கு பொடி – ஒரு பின்ச்
குளுக்கோஸ் – 1 தேக்கரண்டி
செய்முறை
தர்பூஸ் பழத்தில் உள்ள தோலையும் கொட்டைகளை நீக்கவும்.
பழங்களை ஒரு விரல் நீள அளவிற்கு வெட்டவும்.
அதில் சுக்கு தூள் மற்றும் குளுக்கோஸை தூவ்வும்.
வேண்டிய வடிவில் தட்டில் அழகாக அடுக்கிவைக்கவும்.
தர்பூசணி கலருக்கும் பார்த்த்தும் எடுத்து சாப்பிடும் வண்ணம் இப்படி ரெடியாவைத்தால் குழந்தைகள் மட்டும் இல்ல பெரியவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.


பார்ட்டி, வீட்டில் விருந்தாளி என்றாலே நான் முதலில் யோசிப்பது குழந்தைகளை தான் பிறகு தான் மற்ற மெனுவை பற்றி யோசிப்பது.
இது இரண்டு பேருக்கு தேவையான அளவு , பார்ட்டி ஏற்றவாறு நிறைய தர்பூசணி வாங்கி இப்படி அழகாக பரிமாறலாம்.





டிப்ஸ்:
சுக்கு தூள் தூவுவது சளி ஏற்படுத்துவதை கட்டுப்படுத்தும். இனிப்பு சுவை குறைவாக உள்ள பழங்களில் சர்க்கரை தூவி சாப்பிடலாம் , சர்க்கரைக்கு பதில் குளுக்கோஸ் சேர்ப்பது மிகவும் நல்லது.


டிஸ்கி: ஆங்கில தளங்களில் தான் நிறைய ஈவண்டுகள் நட்த்தி கொண்டு இருக்கிறார்கள். இப்போது முதல் முறையாக தோழி பாயிஜா ஆரம்பித்து இருக்காங்க. இது கண்டிப்பாக எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளுக்கும் வித விதமாக செய்து கொடுக்கலாம்.

நாமும் இங்கு தமிழ் வலைகளிலும் நிறைய் தோழிகள் இருக்கிறார்கள்.நாமும் நட்த்தினால் என்ன் என்று சில மாதங்கள் முன்பு தான் நானும் ஆசியாவும் சந்திக்கும் போது இதை பற்றி பேசி கொண்டு இருந்தோம்.கூடிய விரைவில் ஆரம்பிப்போம். இப்ப பல வேலைகளில் பிஸியாக இருப்பதால் கொஞ்ச நாட்கள் கழித்து ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு வலையில் சமையல் குறிப்பு எழுதாத தோழிகளையும் அன்புடன் அழைக்கிறேன். எல்லாரும் கலந்து கொள்ளனும்.





7 கருத்துகள்:

Priya Suresh said...

Azhaga irruku intha fingers..

'பரிவை' சே.குமார் said...

simply super akka.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Unknown said...

ரொம்ப சிமிபிளாகவும் அதே சமையம் குழந்தைகளுக்கு பிடித்தது போல் இருக்கு.. .. ....thanks for linking this recipe to my event and using the logo. Expecting more recipes from you

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படி அழகாக கொடுத்தால் எந்தக் குழந்தை தான் சாப்பிடாது... நன்றி சகோ...

Menaga Sathia said...

சூப்பரா இருக்கு,நிச்சய்ம் எல்லோருக்கும் பிடிக்கும்....

Angel said...

பார்க்கவே சூப்பரா இருக்கு
சுக்கு தூள் சேர்ப்பது நல்ல ஐடியா .
பாய்சா நல்ல ஒரு விஷயத்தை ஆரம்பிச்சிருக்காங்க ..
பலரும் அவங்க ஐடியாஸை பகிர ஒரு சந்தர்ப்பம் .,வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

துளசி கோபால் said...

சூப்பரு!!!!!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா