Thursday, June 25, 2015

ஏன் ஹிஜாப்" - பரிசுப் போட்டி - ஆறுதல் பரிசு


ஏன் ஹிஜாப்" - பரிசுப் போட்டியின் முடிவுகள் மற்றும் வெற்றியாளர்கள் அறிவிப்பு

உலக ஹிஜாப் தினம் - February 1st World Hijab Day - மெகா பரிசு போட்டி

இஸ்லாமிய பெண்மணி நடத்திய "ஹிஜாப் ஏன்' என்ற கட்டுரை , பிப்ரவரி 1ம் தேதி உலக ஹிஜாப் தினத்தை ஒட்டி நடந்த கட்டுரை போட்டியில் எனக்கும் ஒரு ஆறுதல் பரிசு. மிகவும் சந்தோஷம்.

(மேலே உள்ள சுட்டியை  சொடுகி விபரம் அறிக)

முதல் பரிசு வென்றவரின் ஆக்கம் இதோ இந்த இனைப்பில் சென்று தெரிந்து கொள்ளலாம்.


46 கட்டுரைகளில்  முதல் முன்று இடங்கள் தவிர்த்து அடுத்து உள்ள ஆறு கட்டுரைகளுக்கு ஆறுதல் பரிசு அதில் என் கட்டுரையும்  தேர்வு செய்யப்படுள்ளது.

சென்னை ப்ளாசா சார்பாக ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு மேலே படத்தில் உள்ள பெரிய ஷால்( துப்பட்டா) பரிசாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எனக்கும் சென்னை ப்ளாசா சார்பாக ஒரு ஷால் பரிசாக கிடைத்துள்ளதுள்ளது.


  •  முதல் பரிசான ரூபாய்.7000/-த்தை  தட்டி செல்லும் அந்த அதிர்ஷ்ட நபர்: 
  •  இரண்டாம் பரிசான ரூபாய்.4000/-த்தை தட்டி செல்லும் அந்த வெற்றியாளர்:
                           

          தனக்கு சம்மந்தமில்லாத தலைப்பு என்று ஒதுங்காமல் சிறப்பாக எழுதி                 இராண்டாம் இடத்தை வென்றவர் ஒரு ஆண் என்பதில் பெரும் மகிழ்ச்சி.
  • முஸ்லிமல்லாதவர்களுக்கான பிரத்யோகமாக ஒதுக்கப்பட்ட மூன்றாம் பரிசான ரூபாய். 2000/-த்தை  வென்றவர்:                                                                                        

அடுத்ததாக ஹிஜாபினைப் பரிசாக பெரும் ஆறு நபர்களின் வெற்றிப் பட்டியல்:
http://www.islamiyapenmani.com/2015/03/blog-post_30.html
  1.  சகோதரி ஆசியா 
  2. சகோதரி பிஸ்மி ஜொஹரா 
  3. சகோதரி  ஜலீலா  கமால் 
  4. சகோதரி சில்மியா பானு 
  5. சகோதரர் ஷேக் நஸ்ருதீன்  
  6. சகோதரி உம்மு உமாரா  

இது வரை நான் இஸ்லாமிய கட்டுரைகள் போட்டிக்கு எழுதியத்தில்லை.
இங்கு பிளாகில் அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை பற்றி மட்டும் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து உள்ளேன், தேனக்காவின் வலை தளத்திலும் கெஸ்ட் போஸ்டாக கொடுத்துள்ளேன்.
இது தான் போட்டிக்கு என்று எழுதிய முதல் கட்டுரை.


கிழே உள்ளது நான் எழுதிய கட்டுரை

ஹிஜாப் ஏன்?

ஹிஜாப்/புர்கா/பர்தா

 ஹிஜாப் (hijab ) ன்னும் வார்த்தை அரபியின் ஹஜபா ( hajaba) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. ஹஜபா என்றால் பார்வையில் இருந்து உடல் கன பரிணாமங்களை (conceals a figure) மறைத்துக் கொள்வது என்ற பொருள்படும்.

ஹிஜாப் உடையில் பல இரகங்கள் உள்ளது. 

அபயா (Abaya) Burka நம் உடுத்தும் ஆடை மேல் 

ணியும் தளர்வான முழு ஆடை தான் ிஜாப்

உலகில் உள்ள அனைத்துமுஸ்லீமான
 பெண்களும் ஹிஜாபை பேணுதல் வேண்டும்

ஹிஜாப் என்பது உடல்முழுவதும் மறையும் படிஆடை அணிவதாகும்,

முழுமையான ஹிஜாப் அணிவதன் மூலம் வெயில்காலத்திலும்பனிக்காலத்திலும்கயவர்களிடம் இருந்தும், தீய பார்வைகளில்இருந்தும் நாம் காக்கபடுகிறோம்.
ஒரு ஹிஜாபை பேணும் பெண் சிப்பிக்குள் முத்து  எப்படியோ அது போல் பாதுக்காப்படுவாள்.

உங்கள் நகை சொத்து , ஏட்டியம் ார்ட் இதேல்லாம் பிறர் கண்ணில் படும் படி வைப்பீர்களா? ஒளித்து தானே வைப்பீர்கள் அதுபோல் தான் ஹிஜாப்.

இப்போது விலை உயர்ந்த மொபல் போனுக்கு ஏற்றார் போல் அதுக்கு அழகிய கவரை  தேடி தேடி வாங்கி மாட்டுகிறோம். ஏன் அந்த விலை உயர்ந்த மொபைல் பாழாகிவிட கூடாது என்று தானே? அதை போல் தான் பெண்கள் ஹிஜாபை பேணுவதும்.

ஒரு இஸ்லாமிய பெண்மணியின் அழகு அவளுக்கே சொந்த மான அவள் கணவனுக்காக மட்டும் தான்இந்த உலகுக்கு அல்ல.
ஹிஜாப் அணிந்து சென்றால் எங்கு சென்றாலும் நாம் பாதுக்காக்கப்படுவோம்.



இறுக்கமான ஆடை அணிவதையோ  உடல் ுழுவதும் கவர் பண்ணுகிறேன் 
என்று மெல்லிய ஆடை அணிவதையோதவிர்க்கவேண்டும். நம் அங்கங்களை றையும் படி ஆடை அணியவேண்டும்.

ஹிஜாப் உலகில் உள்ள ஓவ்வொரு பெண்ணிற்கும் பாதுகாப்புநம் மானத்தை காக்கிறதுமுழுமையான ஹிஜாப் அணிவதன் மூலம்வெயில்காலத்திலும்பனிக்காலத்திலும்கயவர்களிடம் இருந்தும்தீய பார்வைகளில் இருந்தும் நாம் காக்கபடுகிறோம்.

பெண்குழந்தைகளுக்கு சிறிய வயதில் இருந்தே அவர்களை நாகரீக உடை அணிந்து அழகு பார்க்காமல் முழுமையான ஹிஜாபைபேணூம் வ்ண்ணம் ஆடை அணிய கற்று கொடுக்கவேண்டியது வ்வொரு பெற்றோரின் கடமையாகும்.


//ஒரு சின்ன சம்பவம்: ரோட்டில் தினம் நடந்து செல்லும் போது வண்டிகள் அதிகம் வரும் என்று சின்ன குறுக்கு சந்தில் நுழைந்து செல்வேன், தினம் அந்த வழி தான் செல்வேன், அங்கு நிறைய கம்பேனிகளில் பின்புற வழி, சிலர் கண்டெயினரில் சாமான்களை ஏற்றி கொண்டு இருப்பார்கள், சிலர் போர்க் லிஃப்டில் அட்டை பெட்டி சாமான்களை ஏற்றி கொண்டு இருப்பார்கள், சிலர் கூட்டமாக பேசி கொண்டு இருப்பார்கள். நான் எதுவுமே என் கண்ணில் படாது நான் இரவு உணவுக்கு என்ன தயாரிப்பது, அடுத்த வேலைகள் என்ன என்ன இருக்கு லான்ட்ரி, கடைக்காக என்ன செய்யனும், யாருக்கு போன் செய்யவேண்டி இருக்கு என அதை பற்றி யோசித்து கொண்டு செல்வேன், திடீருன்னு ஒரு நாள் நடந்து கொண்டு அதே வழியில் போய் கொண்டு இருக்கும் போது அந்த அனைத்து நினைவுகளும் கலைந்து ரோட்டில் கவனம் சென்றது.ஐய்யோ இத்தனை பேர் மத்தியிலா  நடந்து போகிறோம் என் திடுக்கிட்டாலும் , ஆம் நாம் தாம் முழு ஹிஜாபில் இருக்கிறோமே என்ன பயம் என்று சட்டுன்னு ஒரு பெரிய தைரியம் அதுவும் ஒரு மாஹாராணி போலவே நான் நடந்து செல்வதை போலவும் உற்சாகமாக நடந்தேன், ஹிஜாப் அணிந்துசெல்வதின் பலனையும் முழுமையாக உணர்ந்தேன். இதே அரை குறை ஆடையில் சென்றிருந்தால் அனைவரின் பார்வையும் என்னை நோக்கி தான் இருந்திருக்கும். அன்று அந்த நிமிடம் அல்லாஹ்வே உலகில் உள்ள முஸ்லீம் பெண்களும் தங்கள் ஹிஜாபை முழுமையாக பேண கிருபைசெய்வாக என்று துஆ கேட்டு கொண்டு மீண்டும் என் நினைவுகளுடன் வீட்டைநோக்கி நடந்தேன்.//

///1.நபியே! நீர் உம் மனைவிகளுக்கும்உம் பெண்மக்களுக்கும் ஈமான் 
கொண்டவர்களின் பெண்களுக்கும்அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்மிக்க அன்புடையவன்.
அல் குர் ஆன் (33: 59) ///


2. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு,நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
 அல் குர் ஆன்  ( 24: 31).

ஆக்கம்
ஜலீலாகமால்

துபாய்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, June 18, 2015

ரமலானே வருக வருக






அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவருக்கும்.ரமலான் வாழ்த்துக்கள்

இந்த வருடம்.வெயில் கடுமையாக இருக்கிறது.அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த வருட நோன்பை இலகுவாக்குவானாக.
18.06.15

http://samaiyalattakaasam.blogspot.ae/2009/08/blog-post_3247.html


http://cookbookjaleela.blogspot.com/2013/06/avocado-mango-smoothie-with-honey-dates.html

இந்த வருடம் கடுமையான வெயில் , சூடு அதிகம் ஆகையால் கூடுமானவரை
நோன்பு திறக்க பழச்சாறு, பழ வகைகள், சூப் வகைகள் போன்றவை அதிகமாக எடுத்து கொள்வது நல்லது.


காலை நோன்பு வைக்க வயிறுக்கு இதமாக தயிர் சாதம், மோர் குழம்பு, லெமன் சாதம் போன்றவை சாப்பிடலாம்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, June 15, 2015

கேரளா பழம் பொரி - Kerala Pazham pori





தாளி தட்டில் உள்ளது

நேந்திரம் பழ பஜ்ஜி
மைதா முட்டை தோசை
அவித்த வேர்கடலை
ராகி பாணம்
படியான்
தேங்காய் ரொட்டி


இங்கு துபாயில் உள்ள மலையாளிகள் டீக்கடையில் இந்த பழம் பொரி கண்டிப்பாக இருக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.முட்டை வேண்டாம் என்றால் சிறிது பேக்கிங்பவுடர்  மற்றும் தயிர் சேர்த்து கரைத்துகொள்ளலாம்.
சுவைக்கு தேவைப்பட்டால் பட்டை பொடி மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கலாம்.

கேரளா பழம்பொரி/ நேந்திரம்பழ பஜ்ஜி

தேவையான பொருட்கள்
மைதா  - ஒரு கப்
முட்டை - 1
சர்க்கரை - கால் கப்
உப்பு - ஒரு சிட்டிக்கை
நேந்திரம் பழ -  2
அரிசிமாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணை பொரிக்க தேவையான அளவு


செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் பஜ்ஜி மாவு பத்துக்கு கரைக்கவும்.
நேந்திரம் பழத்தை நீளவாக்கில் , அல்லது வட்ட வடிவமாக வேண்டிய வடிவில் வெட்டி வைக்கவும்

எண்ணையை காய்வைத்து மிதமான தீயில் நேந்திரம் பழத்தை மைதா கலவையில் தோய்த்து பொரித்து எடுக்கவும்.
சுவையான கேரளா ஸ்பெஷல் பழம் பொரி ரெடி

நோன்பு கால சமையல், இஃப்தார்.பஜ்ஜி வகைகள்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, June 8, 2015

சிக்கன் மக்லூபா Chciken Maqlooba (upside Down Arabic Biriyani)





அரேபியர்கள் தினம் செய்யும் கப்ஸா, மந்தி, மஜ்பூஸ் போன்ற உணவுகளில் இந்த மக்லூபாவும் ஒன்றாகும்.




Chciken Maqlooba (upside Down Rice)/சிக்கன் மக்பூலா/ அரபிக் பிரியாணி / Chicken Makloubeh


தேவையான பொருட்கள்

சிக்கன் ஹோல் லெக் ‍ 4 தூண்டுகள்//மட்டன் - அரை கிலோ/சிக்கன் எலும்புடன் -600 கிராம்
அரிசி ‍ 400 கிராம் ( டோனார் லாங்க் கிரைன் அரிசி)
சிக்கன் ஸ்டாக் (அ) வெஜிடேபுள் ஸ்டாக்  ( மேகி (அ) நார் பிராண்ட்) - 1


சிக்கனில் பிரட்டி கொள்ள

லெமன் ஜூஸ் - ஒரு மேசைகரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைகரண்டி
நிஹாரி மசாலா/பாஷா கிச்சன் கிங் மசாலா - 1 tbspn
உப்பு தூள்


தாளிக்க 

பட்டர் ‍ 50 கிராம்
எண்ணை ‍ 50 கிராம்
( காய்களை பொரிக்க + தாளிக்க)
காய்ந்த லெமன்
வெங்காயம்  - 2 பொடியாக அரிந்தது
அரபிக் மசாலா - ஒரு மேசைகரண்டி ( கிழே  அரபிக் மசாலா அளவு இருக்கு பார்ககவும்)
மசாலாக்கள்

இஞ்சி பொடி  - அரை தேக்கரண்டி
சீரகதூள் - 1 தேக்கரண்டி
பட்டை தூள் - அரை தேக்கரண்டி
ஏலக்காய் - விதைகள் ( 2 ஏலக்காய்)
மிளகு தூள் - அரை தேக்கரண்டி ( ஒன்றும் பாதியுமாய் திரித்தது)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு தேவைக்கு




தனியாக வட்டவடிவமாக நறுக்கி பொரித்து வைத்துகொள்ளவும்.

கத்திரிக்காய் - பெரிய கத்திரிக்காய் ஒன்று
காளிப்ளவர் - 8 பூ
புரோகோலி - 8 பூ
கேரட் - 1
உருளைகிழங்கு - 2
கேப்சிகம் -  இரண்டு மேசைகரண்டி நறுக்கியது

கடைசியாக மேலே தூவ ( தேவை பட்டால்)
பிஸ்தா
பாதம் 
பைன் நட்ஸ்

செய்முறை:

சிக்கனை கழுவி தண்ணீரை வடித்து அதில் மேலே மேரினேட் செய்ய  கொடுக்கப்படுள்ள மசாலாக்களை சேர்த்து அரை மணி நேரம்  ஊறவைக்கவும்.( சிக்கன் மேரினேட் செய்வது எப்போதும் ஒரு நாள் முன் செய்தால் நல்ல இருக்கும்)
அரிசியை களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
கத்திரிக்காயை வட்டவடிவமாக நறுக்கி அதில் சிறிதத உப்பு தூவி பிரட்டி கண்தட்டில் வைக்கவும்.
கேரட், உருளை கிழங்கை வட்டவடிவமாக நறுக்கி ஒரு வாயகன்ற வானலியில் சிறிது எண்ணை + பட்டர் சேர்த்து பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
ப்ரோக்கோலி மற்றும் காலிப்ளவரை  பூ பூ வாக பிரித்து அதையும் அதே எண்ணையில் பொரித்து எடுத்து வைக்கவும்
சிக்கன் ஸ்டாக்கை 600 மில்லி தண்ணீரில் கரைத்து கொதிக்கவிடவும்.
மீதி உள்ள பட்டர் + எண்ணையை சூடு படுத்தி அதில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து ஊறிய சிக்கனை சமமாக பரத்தவும்.
அதன் மேல் பொரித்த காய்களை பாதியை அடுக்கி வைக்கவும்
அதன் மேல் அரிசியை தண்ணீரை வடித்து சேர்க்கவும்.
அதன் மேல் பொரித்த காய்கள் மீதியை அடுக்கி வைக்கவும்.
கொதித்து கொண்டிருக்கும் சிக்கன் ஸ்டாக் தண்ணீரை இதன் மேல் ஊற்றி அப்படியே தம்மில் 20 லிருந்து 30 நிமிடம் வரை மிகக்குறைந்த தீயில் வேக விடவும்.



தலை கீழாக கவிழ்த்தும் போது கை தவறி விட்டது, அதான் சாதம் உடைந்து விட்டது. இது தலைகீழாக கவிழ்த்தினால் எப்படி இருக்கும் என்று தோழி ஆசியா பதிவில் பார்த்து கொள்ளுங்கள்.


சிக்கன் சாதம் காய்கள் எல்லாம் ஒரு சேர சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். 

வெஜிடேரியன்கள் இதில் மட்டன் சிக்கனுக்கு பதில் மஷ்ரூம் சேர்த்து செய்யலாம்.

இங்குள்ள அல் தஜாஜ் ஜில் Al Tajaj /Taza வெஜ் மக்லூபா கிடைக்கும்.

தேவைப்பட்டால் நட்ஸ் வகைகளை சிறிது பட்டரில் வறுத்து தூவிக்கொள்ளலாம்.


அரேபியர்கள் தினம் செய்யும் கப்ஸா, மந்தி, மஜ்பூஸ் போன்ற உணவுகளில் இந்த மக்லூபாவும் ஒன்றாகும்.

இது அடிக்கடி செய்வது போட்டோக்கள் சரியாக இல்லாததால் பகிற முடியவில்லை..போன வருடம் போட்டு வைத்த போஸ்ட்,  
மட்டன் மக்பூலா (குக்கர் முறையில்)

Mutton Maqlooba ( Pressure Cooker Method)


கிழே உள்ள மட்டன் மக்லூபா குக்கரில் செய்தது , மேலே சொன்ன முறைப்படி எல்லாவற்றையும் தயாராக வைத்துகொண்டு , மட்டனை தாளித்து 10 நிமிடம் வேகவைத்து, மற்றபடி காய்கறிகள், அரிசியை லேயராக வைத்து குக்கரில் 3 விசில் விட்டு இரக்கவும்.





சிக்கன் ஹோல்லெக் மக்பூலா ரைஸ் குக்கர் மெதட்
Chicken Whole leg Maqlooba ( Rice Cooker Method) 



இது ரைஸ் குக்கரில் முன்பு செய்தது, சிக்கனை தாளித்து சிறிது வேகவைத்து விட்டு, லேயராக சிக்கன், காய்கறிகள், அரிசியை சேர்த்து ரைஸ்குக்கர் டைம் படி சமைக்கவும்.







மட்டனில், போன்லெஸ் சிக்கனில், போன்லெஸ் மட்டனில் நான் இதை   அடிக்கடி செய்து இருக்கிறேன். குக்கரிலேயே 20 நிமிடத்தில் செய்து முடித்துவிடுவேன்.

இது அழகாக சட்டியில் செய்தால் அப்படியே 30 நிமிடம் மெதுவாக வேக விட்டு, பிறகு ஒரு பெரிய தாளாவில் ( தாளி தட்டில்) கவிழ்த்தினால் அப்படியே கீழே சாதம் அடுத்து காய் வகைகள், அடுத்து சிக்கன் என சூப்பராக இருக்கும். 

Titlis Busy Kitchen  - மசலாவுக்காக கொஞ்சம் யுடிப்பும் செக் பண்ணேன். இதில் அழகாக சூப்பராக போட்டு இருக்கிறார்கள்.  கத்திரிக்காய் தனியாக உப்பு சேர்த்து வேகவைக்கனும் என்று இதில் தெரிந்து கொண்டேன்.

ஆசியா செய்துள்ள மக்லூபாவும் ரொம்ப சூப்பராக இருக்கும் அவங்க ஸ்டெப் பை ஸ்டெப் போட்டு இருப்பார்கள்.
நமக்கு கொஞ்சம் மசாலாக்கள் வேண்டும் என்று  நிஹாரி மசாலா சேர்த்து மேரினேட் செய்து சேர்த்து இருக்கிறேன்.மசாலாக்கள் நம் இஷ்டத்துக்கு சேர்த்து செய்யலாம்.

அரபிக் கரம் மசாலா இதை திரித்து வைத்து கொண்டாலும் இதிலிருந்து ஒரு மேசைகரண்டி போட்டு கொள்ளலாம்.

அரபிக் கரம் மசாலா

மிளகு -  அரை தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - இரண்டு
சீரகம் - ஒரு மேசைகரண்டி
ஜாதிக்காய் - சிறிய துண்டு
பிரிஞ்சி இலை - இரண்டு

செய்முறை 

மேற்கண்ட அனைத்து பொருட்களையும் கரகரப்பாக திரித்து கொள்ளவும்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, June 3, 2015

Latest Collection - 2015 Model Burka/Fardha/Abaya



Chennai Plaza /Dubai Burka Wholesale and retail Available

Whatsapp me the Price Details 
00971 56 2159127

or
mail me
chennaiplazaik@gmail.com



http://www.chennaiplazaki.com/




 
Double Layer Burka




Coat Model Arabic Abaya
Whatsapp me the Price Details 
00971 56 2159127



Coat Model Burka - office wear
 
 
 
 
 




சென்னை ப்ளாசா முகநூல் பேஜ் : லைக் செய்து ஷேர் செய்யுங்கள்

சமையல் அட்டகாசங்கள் முகநூல் பேஜ்

ஆங்கில வலைதளம் : cookbookjaleela

www.chennaiplazaki.com
www.chennaiplazaik.com


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam