தாளி தட்டில் உள்ளது
நேந்திரம் பழ பஜ்ஜி
மைதா முட்டை தோசை
அவித்த வேர்கடலை
ராகி பாணம்
படியான்
தேங்காய் ரொட்டி
இங்கு துபாயில் உள்ள மலையாளிகள் டீக்கடையில் இந்த பழம் பொரி கண்டிப்பாக இருக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.முட்டை வேண்டாம் என்றால் சிறிது பேக்கிங்பவுடர் மற்றும் தயிர் சேர்த்து கரைத்துகொள்ளலாம்.
சுவைக்கு தேவைப்பட்டால் பட்டை பொடி மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கலாம்.
கேரளா பழம்பொரி/ நேந்திரம்பழ பஜ்ஜி
தேவையான பொருட்கள்
மைதா - ஒரு கப்
முட்டை - 1
சர்க்கரை - கால் கப்
உப்பு - ஒரு சிட்டிக்கை
நேந்திரம் பழ - 2
அரிசிமாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணை பொரிக்க தேவையான அளவு
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் பஜ்ஜி மாவு பத்துக்கு கரைக்கவும்.
நேந்திரம் பழத்தை நீளவாக்கில் , அல்லது வட்ட வடிவமாக வேண்டிய வடிவில் வெட்டி வைக்கவும்
எண்ணையை காய்வைத்து மிதமான தீயில் நேந்திரம் பழத்தை மைதா கலவையில் தோய்த்து பொரித்து எடுக்கவும்.
சுவையான கேரளா ஸ்பெஷல் பழம் பொரி ரெடி
நோன்பு கால சமையல், இஃப்தார்.பஜ்ஜி வகைகள்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
3 கருத்துகள்:
அருமை சகோதரி...
பழம்பொறி பிடிக்காத ஆள் உண்டா? லுலுவிற்குப் போனால் உணவுகள் செக்ஷனில் முதலில் தேடுவது பழம்பொறி தான்.... அருமையான சத்தான உணவு
அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (18/06/2015)
தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா