ஏன் ஹிஜாப்" -
பரிசுப் போட்டியின் முடிவுகள் மற்றும் வெற்றியாளர்கள் அறிவிப்பு
உலக ஹிஜாப் தினம் - February 1st World Hijab Day - மெகா பரிசு போட்டி
இஸ்லாமிய பெண்மணி நடத்திய "
ஹிஜாப் ஏன்' என்ற கட்டுரை , பிப்ரவரி 1ம் தேதி உலக ஹிஜாப் தினத்தை ஒட்டி நடந்த கட்டுரை போட்டியில் எனக்கும் ஒரு ஆறுதல் பரிசு. மிகவும் சந்தோஷம்.
(மேலே உள்ள சுட்டியை சொடுகி விபரம் அறிக)
முதல் பரிசு வென்றவரின் ஆக்கம்
இதோ இந்த இனைப்பில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
46 கட்டுரைகளில் முதல் முன்று இடங்கள் தவிர்த்து அடுத்து உள்ள ஆறு கட்டுரைகளுக்கு ஆறுதல் பரிசு அதில் என் கட்டுரையும் தேர்வு செய்யப்படுள்ளது.
சென்னை ப்ளாசா சார்பாக ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு மேலே படத்தில் உள்ள பெரிய ஷால்( துப்பட்டா) பரிசாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எனக்கும்
சென்னை ப்ளாசா சார்பாக ஒரு ஷால் பரிசாக கிடைத்துள்ளதுள்ளது.
- முதல் பரிசான ரூபாய்.7000/-த்தை தட்டி செல்லும் அந்த அதிர்ஷ்ட நபர்:
- இரண்டாம் பரிசான ரூபாய்.4000/-த்தை தட்டி செல்லும் அந்த வெற்றியாளர்:
தனக்கு சம்மந்தமில்லாத தலைப்பு என்று ஒதுங்காமல் சிறப்பாக எழுதி இராண்டாம் இடத்தை வென்றவர் ஒரு ஆண் என்பதில் பெரும் மகிழ்ச்சி.
- முஸ்லிமல்லாதவர்களுக்கான பிரத்யோகமாக ஒதுக்கப்பட்ட மூன்றாம் பரிசான ரூபாய். 2000/-த்தை வென்றவர்:
அடுத்ததாக ஹிஜாபினைப் பரிசாக பெரும் ஆறு நபர்களின் வெற்றிப் பட்டியல்:
http://www.islamiyapenmani.com/2015/03/blog-post_30.html
- சகோதரி ஆசியா
- சகோதரி பிஸ்மி ஜொஹரா
- சகோதரி ஜலீலா கமால்
- சகோதரி சில்மியா பானு
- சகோதரர் ஷேக் நஸ்ருதீன்
- சகோதரி உம்மு உமாரா
இது வரை நான் இஸ்லாமிய கட்டுரைகள் போட்டிக்கு எழுதியத்தில்லை.
இங்கு பிளாகில் அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை பற்றி மட்டும் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து உள்ளேன், தேனக்காவின் வலை தளத்திலும் கெஸ்ட் போஸ்டாக கொடுத்துள்ளேன்.
இது தான் போட்டிக்கு என்று எழுதிய முதல் கட்டுரை.
கிழே உள்ளது நான் எழுதிய கட்டுரை
ஹிஜாப் ஏன்?
ஹிஜாப்/புர்கா/பர்தா
ஹிஜாப் (hijab ) என்னும் வார்த்தை அரபியின் ஹஜபா ( hajaba) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. ஹஜபா என்றால் பார்வையில் இருந்து உடல் கன பரிணாமங்களை (conceals a figure) மறைத்துக் கொள்வது என்ற பொருள்படும்.
ஹிஜாப் உடையில் பல இரகங்கள் உள்ளது.
அபயா (Abaya) Burka நம் உடுத்தும் ஆடை மேல்
அணியும் தளர்வான முழு ஆடை தான் ஹிஜாப்
உலகில் உள்ள அனைத்துமுஸ்லீமான
பெண்களும் ஹிஜாபை பேணுதல் வேண்டும்.
ஹிஜாப் என்பது உடல்முழுவதும் மறையும் படிஆடை அணிவதாகும்,
முழுமையான ஹிஜாப் அணிவதன் மூலம் வெயில்காலத்திலும், பனிக்காலத்திலும், கயவர்களிடம் இருந்தும், தீய பார்வைகளில்இருந்தும் நாம் காக்கபடுகிறோம்.
ஒரு ஹிஜாபை பேணும் பெண் சிப்பிக்குள் முத்து எப்படியோ அது போல் பாதுக்காப்படுவாள்.
உங்கள் நகை சொத்து , ஏட்டியம் கார்ட் இதேல்லாம் பிறர் கண்ணில் படும் படி வைப்பீர்களா? ஒளித்து தானே வைப்பீர்கள் அதுபோல் தான் ஹிஜாப்.
இப்போது விலை உயர்ந்த மொபல் போனுக்கு ஏற்றார் போல் அதுக்கு அழகிய கவரை தேடி தேடி வாங்கி மாட்டுகிறோம். ஏன் அந்த விலை உயர்ந்த மொபைல் பாழாகிவிட கூடாது என்று தானே? அதை போல் தான் பெண்கள் ஹிஜாபை பேணுவதும்.
ஒரு இஸ்லாமிய பெண்மணியின் அழகு அவளுக்கே சொந்த மான அவள் கணவனுக்காக மட்டும் தான், இந்த உலகுக்கு அல்ல.
ஹிஜாப் அணிந்து சென்றால் எங்கு சென்றாலும் நாம் பாதுக்காக்கப்படுவோம்.
இறுக்கமான ஆடை அணிவதையோ உடல் முழுவதும் கவர் பண்ணுகிறேன்
என்று மெல்லிய ஆடை அணிவதையோதவிர்க்கவேண்டும். நம் அங்கங்களை மறையும் படி ஆடை அணியவேண்டும்.
ஹிஜாப் உலகில் உள்ள ஓவ்வொரு பெண்ணிற்கும் பாதுகாப்பு, நம் மானத்தை காக்கிறது. முழுமையான ஹிஜாப் அணிவதன் மூலம்வெயில்காலத்திலும், பனிக்காலத்திலும், கயவர்களிடம் இருந்தும், தீய பார்வைகளில் இருந்தும் நாம் காக்கபடுகிறோம்.
பெண்குழந்தைகளுக்கு சிறிய வயதில் இருந்தே அவர்களை நாகரீக உடை அணிந்து அழகு பார்க்காமல் முழுமையான ஹிஜாபைபேணூம் வ்ண்ணம் ஆடை அணிய கற்று கொடுக்கவேண்டியது ஓவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
//ஒரு சின்ன சம்பவம்: ரோட்டில் தினம் நடந்து செல்லும் போது வண்டிகள் அதிகம் வரும் என்று சின்ன குறுக்கு சந்தில் நுழைந்து செல்வேன், தினம் அந்த வழி தான் செல்வேன், அங்கு நிறைய கம்பேனிகளில் பின்புற வழி, சிலர் கண்டெயினரில் சாமான்களை ஏற்றி கொண்டு இருப்பார்கள், சிலர் போர்க் லிஃப்டில் அட்டை பெட்டி சாமான்களை ஏற்றி கொண்டு இருப்பார்கள், சிலர் கூட்டமாக பேசி கொண்டு இருப்பார்கள். நான் எதுவுமே என் கண்ணில் படாது நான் இரவு உணவுக்கு என்ன தயாரிப்பது, அடுத்த வேலைகள் என்ன என்ன இருக்கு லான்ட்ரி, கடைக்காக என்ன செய்யனும், யாருக்கு போன் செய்யவேண்டி இருக்கு என அதை பற்றி யோசித்து கொண்டு செல்வேன், திடீருன்னு ஒரு நாள் நடந்து கொண்டு அதே வழியில் போய் கொண்டு இருக்கும் போது அந்த அனைத்து நினைவுகளும் கலைந்து ரோட்டில் கவனம் சென்றது.ஐய்யோ இத்தனை பேர் மத்தியிலா நடந்து போகிறோம் என் திடுக்கிட்டாலும் , ஆம் நாம் தாம் முழு ஹிஜாபில் இருக்கிறோமே என்ன பயம் என்று சட்டுன்னு ஒரு பெரிய தைரியம் அதுவும் ஒரு மாஹாராணி போலவே நான் நடந்து செல்வதை போலவும் உற்சாகமாக நடந்தேன், ஹிஜாப் அணிந்துசெல்வதின் பலனையும் முழுமையாக உணர்ந்தேன். இதே அரை குறை ஆடையில் சென்றிருந்தால் அனைவரின் பார்வையும் என்னை நோக்கி தான் இருந்திருக்கும். அன்று அந்த நிமிடம் அல்லாஹ்வே உலகில் உள்ள முஸ்லீம் பெண்களும் தங்கள் ஹிஜாபை முழுமையாக பேண கிருபைசெய்வாக என்று துஆ கேட்டு கொண்டு மீண்டும் என் நினைவுகளுடன் வீட்டைநோக்கி நடந்தேன்.//
///1.நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான்
கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
அல் குர் ஆன் (33: 59) ///
2. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு,நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
அல் குர் ஆன் ( 24: 31).
ஆக்கம்
ஜலீலாகமால்
துபாய்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
4 கருத்துகள்:
வாழ்த்துகள் சகோதரி...
வாழ்த்துகள் அக்கா..ஹிஜாப் குறித்து உங்கள் கருத்து அருமை
வாழ்த்துக்கள் அக்கா...
ஹிஜாப் குறித்து அருமையாக எழுதி உள்ளீர்கள் அக்கா..
என் அலுவலகத்தில் கூட சிலர் கேட்பார்கள்..என் ஹிஜாப் அணிந்து கொள்கிறீர்கள் கஷ்டமாக இல்லையா என்று இது போல் தான் நானும் பேசி புரிய வைத்தேன்.இதனை அணியும் பொழுது நாம் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறோம் என்பது நமக்கு தானே தெரியும்..
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா