Bread uththaappam
தேவையானவை
தோசை மாவு ஒரு கப்
ப்ரெட் ஸ்லைஸ் 6
பொடியாக அரிந்த வெங்காயம் 2
பொடியாக அரிந்த பச்ச மிளகாய் 2
கருவேப்பிலை சிறிது
எணணை + நெய் (அ) பட்டர் சுட தேவையான அளவு
செய்முறை
தோசைமாவில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சமிளகாய், கருவேப்பிலையை கலக்கவும்.
தோசை தவ்வாவை காயவைத்து எண்ணை + பட்டர் ஊற்றிதோசை மாவில் ப்ரட் ஸ்லைஸ்களை இருபுறமும் தோய்த்து சுட்டெடுக்கவும்.
வித்தியாசமான சுவையுடன் ப்ரட் ஊத்தாப்பம் ரெடி
தோசை மாவில் தோய்க்க வரவில்லை என்றால் ப்ரட்டை தவ்வாவில் வைத்து கரண்டியால் ஒரு கரண்டி அளவிற்கு அள்ளி ஊற்றலாம்.
பிரட் ஊத்தாப்பத்துடன் சாம்பார் காம்பினேஷனில் சுவை சூப்பரோ சூப்ப்ராக இருக்கும்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam