Showing posts with label சைனீஸ். Show all posts
Showing posts with label சைனீஸ். Show all posts

Saturday, May 4, 2013

பிரான் மஞ்சூரியன் கிரேவி - Prawn Manchurian Gravy




இறாலில் கூட்டு மற்றும் சால்னா பிரியாணி செய்து அலுத்து போனால் இது போல் மஞ் சூரியன் கிரேவி போல் செய்தால் இரவு வேளை சாப்பாத்தி , ரொட்டி நாண் வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
ஹோட்டலில் போனால் பெருமபாலும் அநேகமாக அனைவரும் ஆர்டர் செய்வது சிக்கன் ம்ஞ்சூரியன் வெஜ் பிரியர்கள் காலிப்ளவர் மஞ்சூரியன் தான், அதே நாம வீட்டிலேயே எளிமையாக தயாரித்து விடலாம்.



பரிமாறும் அளவு : 3 Persons

பிரான் மஞ்சூரியன் கிரேவி
பிரான் (பெரியது) – கால் கிலோ
கிரேவிக்கு
எண்ணை + பட்டர் – இரண்டு மேசை கரண்டி
வெங்காயம் – ஒன்று
பூண்டு – நான்கு பல்
வெங்காய தாள் – இரண்டு ஸ்ரிக்
சோயா சாஸ் – முன்று குழி கரண்டி
கெட்சப் – இரண்டு மேசை கரண்டி
சர்க்கரை – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகாய் தூள் – அரை தேக்க்ரண்டி
கார்ன் மாவு – ஒரு மேசை கரண்டி
பிரான் பொரிக்க
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி (அ) வெள்ளைமிளகு தூள்)
உப்பு – சிறிது
மைதா – ஒரு குழிகரண்டி
கார்ன் மாவு – ஒரு மேசை கரண்டி
முட்டை – ஒன்றில் பாதி
செய்முறை
1.       பிரானை சுத்தம் செய்து அதில் பொரிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும்
2.       ஊறிய பிரானை எண்ணையில் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.



3.       எண்ணை + பட்டரை காயவைத்து வெங்காயம், பூண்டு , ஸ்ப்ரிங் ஆனியனை போட்டு வதக்கவும்.
4.       அதில் சோயா சாஸ், கெட்சப், உப்பு, மிளகாய் தூள் ,சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

5.       கடைசியாக கார்ன் மாவை முக்கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க் விடவும்
6.       பொரித்து வைத்த பிரானை சேர்த்து மீண்டு கொதிக்கவிட்டு இரக்கவும்.
7.       சுவையான பிரான் மஞ்சூரியன் கிரேவி ரெடி



8.       பரோட்டா, சப்பாத்தி, தந்தூரி ரொட்டி , பிரைட் ரைஸுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.


இந்த குறிப்பு இரண்டு வருடம் முன்பே தமிழ்குடும்பம் டாட் காமில் பகிர்ந்த குறிப்பு தான்.






Monday, March 18, 2013

கிரிஸ்பி பட்டர் பிளை ப்ரான்ஸ்- Crispy Butterfly Prawns



பட்டர் பிளை கிரிஸ்பி ப்ரான்ஸ்




இது சீனா நாட்டில் பிரத்தி பெற்ற உணவு.

தேவையானவை
ஊறவைக்க
ப்ரான் - இறால் பெரியது - 8
வெயிட் பெப்பர் - 1 தேக்கரண்டி
சோயாசாஸ் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
பூண்டு பொடி - 1/2 தேக்கரண்டி
கோட்டிங் செய்ய
  

கார்ன் மாவு  - தேவைக்கு
முட்டை  - ஒன்று
பிரட் கிரம்ஸ் -  தேவைக்கு


செய்முறை

பெரிய இறாலை சுத்தம் செய்து அதில் வயிற்றிலும் முதுகிலும் உள்ள அழுக்குகளை எடுத்து விட்டு வால் பக்கம் கொஞ்சம் பிரிக்க வேண்டாம்
இறாலை  வட்ட வடிவமாகநடுவில்  பட்டர் பிளை ஷேப்பில் கட் செய்யவும்.
மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து பொருட்களையும் இறாலில் போட்டு பிரட்டி 15 நிமிடம் ஊறவைக்கவும்
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து வைக்கவும்
ஊறிய இறாலை கார்ன்பிளார் மாவுல் தொய்த்து, முட்டையில் பிரட்டி, அடுத்து ப்ரட் கிரம்ஸில் கோட்டிங் செய்யவும்.



ஒரு தவ்வாவில் எண்ணையை சூடு படித்தி தீயின் தனலை மீடியமாக வைத்து கருகாமல் இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு சிவற பொரித்து எடுக்கவும்.

 வெயிட் பெப்பர் கிடைக்காதவர்கள் கருப்பு மிளகு தூளை பயன் படுத்தலாம். 

அடிக்கடி செய்வது தான் ,இறால் , சிக்கன் ரெசிபி எல்லாம் செய்தால் போட்டோ எடுபபதற்குள் காலி யாகிடும், இது போல் நிறைய குறிப்புகள் போட்டோ எடுக்க முடியாமல் போய்விட்டது.
இதை என் மசாலாவிலும் அடிக்கடி செய்வது போட்டோ தான் எதில் வைத்துள்ளேன் என தெரியவில்லை. தாய் தெம்புரா பவுடர் சேர்ர்த்து செய்தால் இன்னும் கிரிஸ்பியாகவரும்.கிழே உள்ளது தாய் தெம்புரா பவுடர் சேர்த்து செயதது.




Prawn Fry with Thai Tempura




Prawn Fry with Dry methi


Linking to Faiza's Passion on Plate