Monday, March 18, 2013

கிரிஸ்பி பட்டர் பிளை ப்ரான்ஸ்- Crispy Butterfly Prawns



பட்டர் பிளை கிரிஸ்பி ப்ரான்ஸ்




இது சீனா நாட்டில் பிரத்தி பெற்ற உணவு.

தேவையானவை
ஊறவைக்க
ப்ரான் - இறால் பெரியது - 8
வெயிட் பெப்பர் - 1 தேக்கரண்டி
சோயாசாஸ் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
பூண்டு பொடி - 1/2 தேக்கரண்டி
கோட்டிங் செய்ய
  

கார்ன் மாவு  - தேவைக்கு
முட்டை  - ஒன்று
பிரட் கிரம்ஸ் -  தேவைக்கு


செய்முறை

பெரிய இறாலை சுத்தம் செய்து அதில் வயிற்றிலும் முதுகிலும் உள்ள அழுக்குகளை எடுத்து விட்டு வால் பக்கம் கொஞ்சம் பிரிக்க வேண்டாம்
இறாலை  வட்ட வடிவமாகநடுவில்  பட்டர் பிளை ஷேப்பில் கட் செய்யவும்.
மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து பொருட்களையும் இறாலில் போட்டு பிரட்டி 15 நிமிடம் ஊறவைக்கவும்
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து வைக்கவும்
ஊறிய இறாலை கார்ன்பிளார் மாவுல் தொய்த்து, முட்டையில் பிரட்டி, அடுத்து ப்ரட் கிரம்ஸில் கோட்டிங் செய்யவும்.



ஒரு தவ்வாவில் எண்ணையை சூடு படித்தி தீயின் தனலை மீடியமாக வைத்து கருகாமல் இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு சிவற பொரித்து எடுக்கவும்.

 வெயிட் பெப்பர் கிடைக்காதவர்கள் கருப்பு மிளகு தூளை பயன் படுத்தலாம். 

அடிக்கடி செய்வது தான் ,இறால் , சிக்கன் ரெசிபி எல்லாம் செய்தால் போட்டோ எடுபபதற்குள் காலி யாகிடும், இது போல் நிறைய குறிப்புகள் போட்டோ எடுக்க முடியாமல் போய்விட்டது.
இதை என் மசாலாவிலும் அடிக்கடி செய்வது போட்டோ தான் எதில் வைத்துள்ளேன் என தெரியவில்லை. தாய் தெம்புரா பவுடர் சேர்ர்த்து செய்தால் இன்னும் கிரிஸ்பியாகவரும்.கிழே உள்ளது தாய் தெம்புரா பவுடர் சேர்த்து செயதது.




Prawn Fry with Thai Tempura




Prawn Fry with Dry methi


Linking to Faiza's Passion on Plate


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

போட்டோ எடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை... குறிப்புகள் இருக்கே... நன்றி...

Unknown said...

Ennaku romba romba piditha prawn ... intha murai il seithu parkuren.. super.

ஸாதிகா said...

அவசியம் இந்த முறையில் செய்து பார்த்திடணும் ஜலி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா