குளிருக்கு இதமான மிளகு கறி. இந்த சுவை சொல்ல வார்த்தைகள் இல்லை.அத்தனை மணமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஆத்தூர் மிளகு கறி
மட்டன் - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
மஞ்சள் தூள் - அரைதேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
அரைக்க
**********
மிளகு ஒரு - மேசை கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் - இரண்டு
முழு தனியா - ஒரு தேக்கராண்டி
பட்டை - ஒரு அங்குல
கிராம்பு - முன்று
ஏலம் - ஒன்று
தேங்காய் - ஒரு பத்தை
முந்திரி - ஐந்து
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
முன்று ஐந்து பற்கள்
தாளிக்க
********
எண்ணை
எண்ணை - மூன்று மேசை கரண்டி
சின்ன வெங்காயம் - ஐந்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - பத்து இதழ்
கொத்து மல்லி தழை - சிறிது (கடைசியில் மேலே தூவ)
செய்முறை
மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடித்து அதில் அதை மஞ்சள் தூள், உப்பு தூள்,வெங்காயம், தக்காளி பொடியா அரிந்து போட்டு நன்கு பிசைந்து வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை முதலில் தண்ணீர் ஊற்றாமல் திரித்து பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து மட்டனில் சேர்க்கவும்.
கலந்து வைத்த மட்டன் கலவையை பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ஊறிய மட்டன் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி தியை ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
பிறகு குக்கரிலோ அல்லது வெளியிலோ நன்கு வேகவிட்டு கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.
குறிப்பு:இதற்கு பிளெயின் சாதம், கட்டி பருப்பு, தோசை, ரொட்டி,ஆப்பம் போன்றவற்றிற்கு அருமையான சைட் டிஷ் ஆகும்.
Tweet | ||||||
12 கருத்துகள்:
படத்தையும் செய்முறை விளக்கத்தையும் பார்க்கும் பொழுது உடனே செய்து சாப்பிடத்தூண்டுகிறது.அருமையாக செய்து காட்டி இருக்கீங்க ஜலி. த.ம 1
காரசாரமாக இருக்கு மிளகு கறி.. எனக்கு மிளகு கறி ரொம்ப பிடிக்கும் சமைத்தவுடனே கொஞ்சம் தட்டில் எடுத்து வைத்து சாப்பிட்டுவிடுவேன்...
ஆஹா... குருமா சூப்பர்...
நன்றி...
ஸாதிகா இந்த மிளகு கறி எனக்கும் ரொம்ப் பிடிக்கும்.
பாயிஜா நானும் தான் முதலில் கொஞ்சம் எடுத்து ருசி பார்ப்பதே நான் தான்..
இது ப்ரட்டில் வைத்து சாப்பிட கூட அருமையாக இருக்கும்
அருமையாக இருக்கின்றது.
ஆஹா இந்த குளிருக்கு சூப்பரா இருக்குமே...
Very nice curry akka. Love this:)
அக்கா , என் ப்லொகில் எரொர் வருவதாக சொல்லியுளீர்கள் .அதை சரி செய்ய விரும்புகிறேன். என்ன வகையான எரர் மெசேஜ் என்று ஞாபகம் இருந்தால் சொல்லுங்கள் . தகவல் சொன்னதற்க்கு நன்றி.
எனக்கும் மிகவும் பிடிக்கும்.விரைவில் உங்க முறைப்படி செய்து பார்க்க வேண்டும்.அருமை.இப்படி கூட்டோடு இருந்தால் சுடு சோறில் கலந்து சாப்பிடக் கூட சூப்பராக இருக்கும்.மிளகு கறி வைத்த பாத்திரத்தைக் கூட நான் விடுவதில்லை.
Spicy milagu fry Sis..Love all ur home style dishes..Fab Sis
Very spicy milagu kurma...
http://recipe-excavator.blogspot.com
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா