Showing posts with label ஹல்வா. Show all posts
Showing posts with label ஹல்வா. Show all posts

Saturday, January 19, 2019

Hide and Seek Dates Halwa Samaiyal_attakaasam by Jaleelakamal













Arabic Sweet Recipes/Healthy Sweet Recipes

ஹைட் அன்ட் சீக் டேட்ஸ் ஹல்வா

தேவையான பொருட்கள்

பேரிட்ச்சை பழம் ‍ ‍ = 250 கிராம்
ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் ‍= அரை பாக்கெட்
தேன் = ஒரு மேசைகரண்டி
வறுத்த முந்திரி ‍ = 50 கிராம்
உப்பு ‍ = அரை சிட்டிக்கை
பட்டர் ‍ 3 மேசைகரண்டி
ப்ரவுன் சுகர் ‍ = 1 மேசைகரண்டி





செய்முறை

பேரிட்சைபழத்தை சுடு வெண்ணீரில் ஊறவைத்து சிறிது ஷாப்ட் ஆனது கொட்டையை எடுத்து விட்டு மிக்சியில் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

ஒரு பேனில் பட்டரை உறுக்கி அதில் அரைத்த பேரிட்சை விழுதை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்

அடுத்து ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட்டை பொடித்து சேர்க்கவும். அடுத்து உப்பு, ப்ரவுன் சுகர் சேர்த்து நன்கு ஹல்வா பதத்துக்கு கிளறி கடைசியாக தேன் மற்றும் வறுத்த முந்திரியில் 35 கிராம் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

நன்கு கிளறி பரிமாறும் பவுளில் மாற்றி விட்டு மேலே மீதி இருக்கும்  முந்திரியை கொண்டு அலங்கரிக்கவும்.





சுவையான பேரிட்சை பழ ஹைட் அன்ட் சீக் ஹல்வா ரெடி.





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Monday, January 14, 2019

My First Live cooking Experience - Sky walk Mall by Jaleelakamal



ஒரு சந்தோஷமான விசியம் பார்லிஜி பிஸ்கட் நடத்திய பண்டிகை பலகாரங்கள் சமையல் போட்டிக்கு நான் அனுப்பிய (ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் பேரிட்சை ஹல்வா மற்றும் ஹைட் அன்ட் சீக் தேங்காய் பிஸ்தா பர்பி) இரண்டும் தேர்வாகி போட்டியில் பங்கு பெற அழைப்பு வந்தது,  நான் இது வரை நேரடி சமையல் போட்டிகளில் கலந்து கொண்டதில்லை இது தான் முதல் தடவை, அங்கு சென்று மறுபடி ஹைட் அன்ட் சீக் தேங்காய் பிஸ்தா பர்பி செய்து கொண்டு போய் வைத்தேன். அதில் 75 பேர் கலந்து கொண்டனர்  21 பேர் பைனல்க்கு தேர்வாகியதில் அதில் நான் ஒன்று.








My First Live cooking Video - Please see below link and give your valuable comment


இங்கு இந்த பதிவை பார்ப்பவர்கள் அந்த லைவ் குக்குங் யுடியுப் போஸ்டில் ஒரு உங்கள் கருத்துக்களை ஷேர்செய்யலாமே..
இனிப்பு,ஹல்வா,பண்டிகை கால பலகாரங்கள்

I am very happy to say and share that I have Participated in live cooking event organized by Parle Hide and seek biscuit at Sky walk, Chennai. I was selected 21 out of 75 participants. Since it is a living cooking it was really very thrilling. Also I met Chef Rakesh Raghunathan and discussed some Traditional Recipes.
16.12.18




பிறகு அங்கு 21 பேரையும் இரண்டு பேட்சாக சமைக்க சொல்லி 20 நிமிடம் கொடுத்தார்கள்.தேவையான பொருட்களும் அவர்கள் அங்கு என்ன வைத்துள்ளார்களோ அதில் தான் செய்யனும்.
எனக்கு ஒரேடென்ஷன் செலக்ட் ஆகிறோமோ இல்லையோ ஆனால் ஏதாவது ஒரு ரெசிபி செய்துடனும் என்று ஹல்வா செய்துட்டேன். கிழே படம் இனைக்கிறேன்.

அங்கு செப்ஃப் ராகேஷ் ரகுநாதன் அவர்களை சந்தித்தோம் அவரும் ஶ்ரீ கிருஷனா ஸ்வீட்ஸ் செப்ஃப் களும் தான் அனைவருடைய பலகாரங்களையும் டேஸ்ட் செய்து மார்க் கொடுத்த்தது, அங்கு செலக்ட் ஆன ரெசிபிகள் சர்க்கரை பொங்கல் , பால் கொழுக்கட்டை மற்றும் சாக்லேட் பர்பி.
கிழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள் லைவ் குக்கிங் ,

இன்னும் நான் ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் சேர்த்து கேசரியும் செய்து எடுத்து சென்றேன், செஃப் என் ரெசிபிகளை ருசி பார்த்தார், ரொம்ப அருமையாக இருக்கிறது என்றார். பர்ஃபி,கேசரி, ஹல்வா முன்றையும் அவர்கள் ருசி பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.








அந்த பாக்ஸ் ல இருப்பது லைவ் குக்கிங்கு எனக்கு கொடுத்த  தேவையான பொருட்கள் அப்படியே மீதி எங்களுக்கு தான் வீட்டுக்கு எடுத்து செல்ல சொன்னார்கள். வீட்டுக்கு  வந்த பிறகு  அந்த பொருட்களை வைத்து மேலே உள்ள பேன் கேக் செய்துபார்த்தேன் ஆஹா இதை கூட செய்து இருக்கலாமேன்னு தோன்றியது. இது ஒரு நல்ல அனுபவம். சென்னை அடிக்கடி இது போல உணவு திருவிஷா நடக்கிறது , வீட்டில் உள்ள அனைத்து பெண்களும் சூப்பராக கலக்குகிறார்கள். 


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Tuesday, August 14, 2018

ஆஸ்திரேலிய நாவலில் என் ரெசிபி ஓமானி ஹல்வா - Australia Novel Zanzibar Wife


அன்பான தோழ தோழியர்களே எல்லோரும் நலமா?
 ஒன்னறை மாதம் விடுமுறை சென்னையில் நன்றாக கழிந்தது.
என்னுடைய ஈத் ஸ்பெஷல் ஓமானி ஹல்வா ரெசிபி பிரபல ஆஸ்திரேலிய நாவல் Zanzibar Wife enRa Novel lil இடம் பெற்றுள்ளது.

எனக்கு மஸ்கட் ல இருந்து வரும் இந்த ஹல்வா எனக்கு ரொம்ப பிடிக்கும் பாதிக்கு பாதி எல்லாமே நட்ஸ்வகைகள் ஆரோக்கியமான இந்த குறிப்பை நான் பல முறை செய்து இருக்கிறேன், இதை ஓமானியர்கள் ப்ரட் மற்றும் பன்னுடன் காலை உணவாக சாப்பிடுவார்கள்.

நீங்களும் அனைவரும் இந்த ஸ்பெஷல் ரெசிபியைஇந்த ஈத் பெருநாளுக்கு முயற்சி செய்து பாருங்கள், செய்து பார்த்து போட்டோக்களைஎன்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.கிழே லிங்க் கொடுத்துள்ளேன்.

http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/eid-special-omani-halwa.html

http://cookbookjaleela.blogspot.com/2013/03/omani-halwa-3-with-bread-sandwich.html






Eid Special Omani Halwa

http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/eid-special-omani-halwa.html




Tag:Muscat Halwa,Omani Halwa,easy nuts halwa,

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, May 27, 2014

சிறப்பு விருந்தினர் பதிவு - வெந்தயக்களி - ராபியத்துல் பஷரியா - 6

பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினர் பதிவு - ராபியத்துல் பஷரியா - வெந்தயக்களி






இந்த மாதம் பாரம்பரிய குறிப்பை நம்முடன் பகிரவுள்ள சிறப்பு விருந்தினர் முக நூல் தோழி  மற்றும் அறுசுவை டாட் காம் வாசகி + தோழி  ராபியத்துல் பஷரியா அவர்களின் குறிப்பு அதை நான் இங்கு செய்து பதிந்துள்ளேன்.

இதை சமையலில் 35 வருட அனுபவமுல்ல ராபியா அவர்களின் அனுபவ குறிப்பு. ராபியத்துல் பஷரியா மதுரையை சேர்ந்தவர்கள். ஒரு பெண் , இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் தான் மகனுக்கு திருமணம் ஆகியது, மணமக்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது, கடைசி மகன் படித்து கொண்டிருக்கிறார்.


வெந்தய களி சாப்பிடுவதின் பயன்கள் 

.வெந்தயம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புண்கள் குணமாகும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தீராத வயிற்று வலி, இடுப்பு வலி , கால் வலி க்கு இந்த களி ( வெந்தய ஹல்வா) வை செய்து சாப்பிட்டால் உடனே சரியாகும். கழுத்து நரம்பு வலி, மூட்டு வலிக்கும் நல்லது..எலும்பு வலிக்கும் நல்லது,ஆண்களும் இதை சாப்பிடலாம்.


வெந்தயக்களி  (வெந்தய ஹல்வா)


பரிமாறும் அளவு  - ஒரு நபருக்கு


தேவையான பொருட்கள்

வெந்தயம் ‍ - இரண்டு தேக்கரண்டி

நல்லெண்ணை - ‍ கால் கப்

கருப்பட்டி வெல்லம் ‍ - இரண்டு கட்டி (அ) 100 கிராம்

தண்ணீர் அரை டம்ளர் - அரை டம்ளர்

செய்முறை


  1. வெந்தயத்தை களைந்து கல் நீக்கி அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ( இரவு ஊறவைக்கவும்)
  2. கருப்பட்டியை நன்கு இடித்து பொடித்து  அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பாகு எடுத்து வடிகட்டி வைக்கவும்.
  3. ஊறிய வெந்தயத்தை நன்கு மையாக அரைக்கவும்.
  4. ஒரு வாயகன்ற பாத்திரத்தை சூடாக்கி நல்லெண்ணை அரைத்த வெந்தயம் கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு சிறிது வற்றி வரும் போது அடிபிடிக்காமல் கிளறவும். 
  5. நன்கு எண்ணை மேலே தெளிந்து  லேகியம் போல் ஆகும் வரை சுருள கிளறி இரக்கவும். 
  6. இதை பெண்கள் மாதவிடாய் வரும் முன் தொடர்ந்து முன்று நாட்களுக்கு ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிடவும்.

கவனிக்க








கசப்பு தெரிந்தால் சிறிது தேன் சேர்த்து சாப்பிடுங்கள்.
இந்த ஒரு நபருக்கு அளவு முன்று வேளைக்கு சாப்பிட வரும்.

இன்னும் சுவை கூட வெந்தயத்துடன் சிறிது அரிசியையும் ஊறவைத்து அரைக்கவும்.
மேலும் தேங்காய் பால் சிறிது சேர்த்து கிளறி செய்யலாம். 

இது தோழி ராபியத்தில் பஷரியாவின் குறிப்பு. சாட்டில் சொன்னது நான் இங்கு செய்து போட்டுள்ளேன்.
***********************
வெந்தய களி சாப்பிடுவதின் பயன்கள் - கிழே உள்ளது  என் டிப்ஸ்

வெரும் வயிற்றில் 5 வெந்ததயத்தை எடுத்து மாத்திரை போல் போட்டு தண்ணீர் அருந்தினால், எல்லாவிதமான நோயையும் சர்க்க்கரை வியாதியைவும் கட்டு படுத்தும், ( இது நான் என் பாட்டி வீட்டில் இருந்த போது அங்கு  வீட்டில் ரொம்ப வருஷமாக  வேலை பார்த்த பெண் (அவங்க இல்ல இல்லை) தினம் இதை சாப்பிடுவார்கள்.)

ஒல்லியாகனும் என்று நினைப்பவர்கள் வரும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டு தண்ணீர் அருந்தினால் நல்ல பலன் தெரியும்.


இரவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரண்டு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை கொதிக்க வைத்து ஒரு டம்ளராக்கி குடித்து வருவது கூடிய சர்க்கரை வியாதிக்கு நல்லது.

வெந்தய பொடியை கருகாமல் வறுத்து பொடியாக்கி வைத்து கொண்டு புளி குழம்புகளில் , பொரியலில் கால் தேக்கரண்டி அளவு சேர்த்து கொண்டால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

=========================************=================

நீங்களும்  உங்கள் பாரம்பரிய சமையல் குறிப்புகளை இங்கு என்னுடன் பகிர  விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகள் அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகை, மதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள், மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள்.குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம்மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. நானும் சிலரை அழைக்கிறேன்...விருப்பம் உள்ளவர்கள்  இங்கு கிழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம்  அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில்  அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.


feedbackjaleela@gmail.com or cookbookjaleela@gmail.com

முகநூல் பேஜ்: https://www.facebook.com/Samaiyalattakaasam



Special Guest post with Traditional Recipe


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, November 6, 2012

ஈத் ஸ்பெஷல் ஓமானி ஹல்வா - Eid Special Omani Halwa



இந்த ஓமானி  ஹல்வா ஓமானியர்களின் பாரம்பர இனிப்பு இது, 1920 லிருந்து ஈத் மற்றும் கல்யாண விஷேஷங்களில் கண்டிப்பாக  இந்த ஹல்வா இல்லாமல் இருக்காது. 


தேவையான பொருட்கள்

சோளமாவு – 100 கிராம்
தண்ணீர் – 200 மில்லி
ரெட் கலர் பொடி – சிறிது

சர்க்கரை  - 150 கிராம்
தேன் – 25 மில்லி
தண்ணீர் – 300 மில்லி
சாப்ரான் – ஒரு மேசை கரண்டி
ஏலப்பொடி – 1 தேக்கரண்டி

ரோஸ் வாட்டர் – 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – ஒரு தேக்கரண்டி

நட்ஸ் வகைகள்
முந்திரி – 100 கிராம்
பொடியாக நறுக்கிய பாதம் தேவைக்கு (8 பாதம்)
பிஸ்தா பிளேக்ஸ் – 2 மேசைக்கரண்டி







செய்முறை

ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் பேனில் முந்திரியை இரண்டாக அரிந்து  நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.

அதே பாத்திரத்தில் தண்ணீர் சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் சோளமாவு (கார்ன் மாவு) கலர் பொடி சேர்த்து கலக்கி வைக்கவும்.



சர்க்கரை பாகு கொதிக்க ஆரம்பிக்கும் போது கரைத்து வைத்த கார்ன் மாவை ஊற்றி தீயின் தனலை குறைத்து  வைத்து கைவிடாமல் கிளறவும்.
இடைஇடையே பட்டர் + நெய் சிறிது விட்டுகிளறவும்.
ரோஸ் வாட்டர் மற்றும் சாஃப்ரான் சேர்த்து நன்கு கிளறவும்





கடைசியாக தேன் வறுத்து வைத்துள்ள முந்திரி ,பொடியாக நறுக்கிய பாதம் , பிஸ்தா பிளேக்ஸ் சேர்த்து மேலும் கிளறி . ஒரு ட்ரேவில் பட்டர் அல்லது நெய் தடவி ஹல்வாவை கொட்டி சமப்படுத்தி ஆறவைக்கவும்.






ஆறியதும் துண்டுகள் போடவும்.,



சாஃப்ரான் மற்றும் ஏலப்பொடி மனத்துடன் நட்ஸுடன் கூடிய ரிச் ஓமானி ஹல்வா ரெடி






ஓவ்வொரு ஈத்துக்கு வழமையாக செய்யும் ஸ்வீட்டுடன் ஏதாவது ஒரு புது ஸ்விட் + கடல் பாசி செய்வது வழக்கம்.
இந்த முறை மஸ்கோத், ஓமானி ஹல்வா,  தான் செய்யனும் என்று முதலே முடிவு பண்ணிட்டேன். ஓமானி ஹல்வா கோதுமையில் செய்வார்களோ என்று நினைத்து சாஃப்ரான் நட்ஸ் சேர்த்து செய்ய இருந்தேன்.
எப்பவும் என் ஹஸ்ஸிடம்  கேட்கமாட்டேன் என்னை பொறுத்த வரை என் இழ்ட்த்துக்கு நானே தான் எல்லோரின் விருப்பமான ஸ்வீட்டை தேர்ந்தெடுத்து  செய்வேன். இந்த முறை பையனிடமும், ஹஸ் ஸிடமும் ஒரு வார்த்தை கேட்போம் என்று நாளைக்கு பெருநாளைக்கு என்ன ஸ்வீட் ஆல்ரெடி காலையில் ஷீர் குருமா. மதியம் மஞ்சள் பூசணி ஹல்வாவும் , இன்னும் ஏதாவது புதிதாக ஒரு ஸ்வீட் செய்யலாம் என்று இருக்கேன் பையன்   கேரட் ஹல்வா என்றான். ஹஸ்ஸிடம் கேட்ட்தற்கு, இது வரை பெருநாளுக்கு வெளியில் இனிப்பு வாங்கியதில்லை, எனக்கு சுளு செய்வதாக நினைத்து கொண்டு  பஜாரில் ஓமானி கடையில் ஓமானி ஹல்வா சுட சுட அங்கேயே செய்து பேக் செய்து விற்று கொண்டு இருக்கிறார்கள், சரி கொஞ்சம் வாங்கி வரலாம் என்று நினைத்து நின்றதில்  அரபிகள் கூட்டம் கிட்ட நெருங்க முடியவில்லை திரும்ப  வந்துட்டேன் என்றார், சரி நான் நினைத்த்தும் அதே ஹல்வா தான அவர் சாப்பிட நினைத்த்தும் அதே ஹல்வா தான்.
இது வரை ரெசிபிக்காக யு டியுப் எல்லாம் தேடி செய்த்து கிடையாது என் இஷ்த்துக்கு எனக்கு தோணுவதை செய்வது தான் பழக்கம், முதல் முறையாக சரி செக் பண்ணுவோம் , கோதுமையா , மைதாவா, ஆனால் நல்ல கருப்பு நிறத்தில் வருமே என்று பார்த்த்தில் மைதாவும் இல்லை கோதுமையும் இல்லை , ரவை அல்லது கார்ன் மாவில் செய்கிறார்கள்.
கேக்குக்கு பயன் படுத்து பிரவுன் சுகர் சேர்த்து செய்கிறார்கள். மற்றொரு முறை முட்டை சேர்த்து செய்கிறார்கள். நான் முட்டை சேர்க்கவில்லை கொஞ்சம் தேன் சேர்த்து செய்து இருக்கிறேன்.
இந்த ஓமானி  ஹல்வா ஓமானியர்களின் பாரம்பர இனிப்பு இது, 1920 லிருந்து ஈத் மற்றும் கல்யாண விஷேஷங்களில் கண்டிப்பாக  இந்த ஹல்வா இல்லாமல் இருக்காது. இது நிறைய பெரிய இலுப்ப சட்டியில் போட்டு மொத்தமாக கிளறும் போது அதன் ருசியே தனிதான்.
நான்கு வருடம் முன் மஸ்கட் போகும் போது அங்கு சாப்பிட்ட்து, இடை இடையே டுப்ளிகேட் மஸ்கட் ஹல்வாவும் சாப்பிட்டு இருக்கிறேன்
ஒரு வழியா என் ஆசையும் நிறைவேறியது கணவருக்கு பிடித்த ஓமானி ஹல்வாவும் செய்துகொடுத்தாச்சு,  சர்பரைஸாக தான் செய்து வைத்தேன். உடனே அடுக்கி வைத்திருந்த எல்லாம் பெருநாள் மதியமே காலி. எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்த்து.

தேங்காய் பொட்டுகடலை தயிர் சட்னி 
ஓமானி ஹல்வா
எண்ணைக்கத்திர்க்காய்
ஸ்வீட் குக்கும்பர் சாலட்
டொமெடோ சல்சா
பூசணி ஹல்வா

யாராவது கெஸ்ட் வந்தால் உடனே தயாரிக்க கேசரி லட்டு அல்லது ஷீர் குருமா தான் செய்வேன். இனி  நட்ஸ்வகைகளும், சாப்ரானும் ரெடியாக இருந்தால் சட் பட் ரிச் ஸ்வீட் ஓமானி ஹல்வாதான்..









ஈத் ஸ்பெஷல் மதிய உணவு -   சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, எண்ணைக்கத்திரிக்காய், தேங்காய் பொட்டுகடலை தயிர் சட்னி, ஓமானி ஹல்வா

Friday, October 26, 2012

மஞ்சள் பூசணி ஹல்வா - Yellow Pumpkin Halwa


மஞ்சள் பூசணி ஹல்வா
தேவையானவை
துருவிய மஞ்சள் பூசணி – 200 கிராம்
பட்டர் – 1மேசை கரண்டி
ஏலக்காய் – 2
சூடான பால் – 25 மில்லி
குங்குமப்பூ – 3 இதழ்
சர்க்கரை – 100 கிராம்
பொடியாக நறுக்கிய முந்திரி – 6
கருப்பு காய்ந்த திராட்சை – 6
அலங்கரிக்க
பிஸ்தா பிளேக்ஸ்- 1 தேக்கரண்டி
முந்திரி – 3
பாதம்  - 6







செய்முறை
ஒரு வாயகன்ற பேனில் நெய்யை சூடாக்கி முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
சூடான பாலில் சாப்ரான் (குங்குமப்பூவை ஊறவைக்கவும்)
முந்திரி வருத்த அதே பேனில் பட்டர் சேர்த்து துருவிய மஞ்சள் பூசணி,
மற்றும்  ஏலக்காய் சேர்த்து பச்ச வாடை போகும் வரை வதக்கவும்.
அடுத்து  பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து கலந்து மீண்டும் 5 நிமிடம் வதக்கவும்.
கடைசியாக சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். வறுத்து வைத்த முந்திரி திராட்சையை சேர்த்து நெய் தனியாக பிரிந்து ஹல்வா பதம் வந்ததும் பிஸ்தா பிளேக்ஸ்,பாதம்  மற்றும் முந்திரி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான பூசணி ஹல்வா ரெடி.




அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.











Sunday, September 5, 2010

உருளை கிழங்கு ஹல்வாவும் இனிப்பு சோமாஸும்
















உருளை கிழங்கு - ஒன்று பெரியது
கடலை பருப்பு - இரண்டு மேசை கரண்டி
நெய் - முன்று தேக்கரண்டி
பாதம் - ஐந்து
பாதம் எஸன்ஸ் - இரண்டு சொட்டு
பால் - கால் கப்
ஏலக்காய் - இரண்டு
சாப்ரான் - இரண்டு பின்ச்
ரெட் கலர் பொடி - ஒரு பின்ச்

Method

1.உருளை கிழங்கை நன்கு வேக வைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.

2.கடலை பருப்பை களைந்து ஐந்து நிமிடம் ஊறவைத்து சுண்டல் பததில் கிள்ளு பதமாக வேக வைக்கவும்.

3.பாதத்தை ஊறவைத்து தோலெடுத்து வைக்கவும்.

4.மிக்சியில் வெந்த கடலை பருப்பு,ஏலக்காய்,பாதம், பால் சாஃரான் சேர்த்து அரைக்கவும்.

5.ஒரு வானலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் மசித்த உருளை கிழங்கு மறும் அரைத்த கடலை பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.

6.ஏற்கனவே வெந்து இருப்பதால் இரண்டு நிமிடம் கிளறி அதில் சர்க்கரை சேர்க்கவும்.

7.ரெட் கலர் பொடியும் சிறிது கரைத்து ஊற்றி கொள்ளவும்.8.கடைசியில் சிறிது பதம் எஸன்ஸும், மீதி நெய் சேர்த்து கிளறவும்.நன்கு கிளறி ஹல்வா பதம் வந்ததும் இறக்கவும்.








சோமாஸுக்கு மைதா ,பட்டர்,உப்பு, சர்க்கரை சேர்த்து குழைத்து இதை பூரணமாக உள்ளே வைத்து மூடி சுடவும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


குறிப்பு

************

அப்பா சூப்பர் ஹல்வா குழந்தைகளுக்கு வாயில் ஏதும் தட்டாமல் சப்பு கொட்டி கொண்டு உள்ளே போகும்.

இதில் நட்ஸ் உங்கள் இழ்டம் தான் கொஞ்சம் அதிகமாக சேர்ப்பதாக இருந்தாலும் சேர்த்து கொள்ளலாம்.

ஒன்பது மாதம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

இதை சோமாஸ் செய்ய பூரணமாகவும் பயன் படுத்தலாம்

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக தாயாரிக்கலாம்.

பட்டர் சேர்த்தால் இன்னும் நல்ல கிளற வரும்.