இந்த ஓமானி ஹல்வா ஓமானியர்களின் பாரம்பர இனிப்பு இது, 1920 லிருந்து ஈத் மற்றும் கல்யாண விஷேஷங்களில் கண்டிப்பாக இந்த ஹல்வா இல்லாமல் இருக்காது.
தேவையான பொருட்கள்
சோளமாவு – 100 கிராம்
தண்ணீர் – 200 மில்லி
ரெட் கலர் பொடி – சிறிது
சர்க்கரை - 150 கிராம்
தேன் – 25 மில்லி
தண்ணீர் – 300 மில்லி
சாப்ரான் – ஒரு மேசை கரண்டி
ஏலப்பொடி – 1 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் – 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – ஒரு தேக்கரண்டி
நட்ஸ் வகைகள்
முந்திரி – 100 கிராம்
பொடியாக நறுக்கிய பாதம் தேவைக்கு (8 பாதம்)
பிஸ்தா பிளேக்ஸ் – 2 மேசைக்கரண்டி
செய்முறை
ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் பேனில் முந்திரியை இரண்டாக அரிந்து நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.
அதே பாத்திரத்தில் தண்ணீர் சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் சோளமாவு (கார்ன் மாவு) கலர் பொடி சேர்த்து கலக்கி வைக்கவும்.
சர்க்கரை பாகு கொதிக்க ஆரம்பிக்கும் போது கரைத்து வைத்த கார்ன் மாவை ஊற்றி தீயின் தனலை குறைத்து வைத்து கைவிடாமல் கிளறவும்.
இடைஇடையே பட்டர் + நெய் சிறிது விட்டுகிளறவும்.
ரோஸ் வாட்டர் மற்றும் சாஃப்ரான் சேர்த்து நன்கு கிளறவும்
கடைசியாக தேன் வறுத்து வைத்துள்ள முந்திரி ,பொடியாக நறுக்கிய பாதம் , பிஸ்தா பிளேக்ஸ் சேர்த்து மேலும் கிளறி . ஒரு ட்ரேவில் பட்டர் அல்லது நெய் தடவி ஹல்வாவை கொட்டி சமப்படுத்தி ஆறவைக்கவும்.
ஆறியதும் துண்டுகள் போடவும்.,
சாஃப்ரான் மற்றும் ஏலப்பொடி மனத்துடன் நட்ஸுடன் கூடிய ரிச் ஓமானி ஹல்வா ரெடி
ஓவ்வொரு ஈத்துக்கு வழமையாக செய்யும் ஸ்வீட்டுடன் ஏதாவது ஒரு புது ஸ்விட் + கடல் பாசி செய்வது வழக்கம்.
இந்த முறை மஸ்கோத், ஓமானி ஹல்வா, தான் செய்யனும் என்று முதலே முடிவு பண்ணிட்டேன். ஓமானி ஹல்வா கோதுமையில் செய்வார்களோ என்று நினைத்து சாஃப்ரான் நட்ஸ் சேர்த்து செய்ய இருந்தேன்.
எப்பவும் என் ஹஸ்ஸிடம் கேட்கமாட்டேன் என்னை பொறுத்த வரை என் இழ்ட்த்துக்கு நானே தான் எல்லோரின் விருப்பமான ஸ்வீட்டை தேர்ந்தெடுத்து செய்வேன். இந்த முறை பையனிடமும், ஹஸ் ஸிடமும் ஒரு வார்த்தை கேட்போம் என்று நாளைக்கு பெருநாளைக்கு என்ன ஸ்வீட் ஆல்ரெடி காலையில் ஷீர் குருமா. மதியம் மஞ்சள் பூசணி ஹல்வாவும் , இன்னும் ஏதாவது புதிதாக ஒரு ஸ்வீட் செய்யலாம் என்று இருக்கேன் பையன் கேரட் ஹல்வா என்றான். ஹஸ்ஸிடம் கேட்ட்தற்கு, இது வரை பெருநாளுக்கு வெளியில் இனிப்பு வாங்கியதில்லை, எனக்கு சுளு செய்வதாக நினைத்து கொண்டு பஜாரில் ஓமானி கடையில் ஓமானி ஹல்வா சுட சுட அங்கேயே செய்து பேக் செய்து விற்று கொண்டு இருக்கிறார்கள், சரி கொஞ்சம் வாங்கி வரலாம் என்று நினைத்து நின்றதில் அரபிகள் கூட்டம் கிட்ட நெருங்க முடியவில்லை திரும்ப வந்துட்டேன் என்றார், சரி நான் நினைத்த்தும் அதே ஹல்வா தான அவர் சாப்பிட நினைத்த்தும் அதே ஹல்வா தான்.
இது வரை ரெசிபிக்காக யு டியுப் எல்லாம் தேடி செய்த்து கிடையாது என் இஷ்த்துக்கு எனக்கு தோணுவதை செய்வது தான் பழக்கம், முதல் முறையாக சரி செக் பண்ணுவோம் , கோதுமையா , மைதாவா, ஆனால் நல்ல கருப்பு நிறத்தில் வருமே என்று பார்த்த்தில் மைதாவும் இல்லை கோதுமையும் இல்லை , ரவை அல்லது கார்ன் மாவில் செய்கிறார்கள்.
கேக்குக்கு பயன் படுத்து பிரவுன் சுகர் சேர்த்து செய்கிறார்கள். மற்றொரு முறை முட்டை சேர்த்து செய்கிறார்கள். நான் முட்டை சேர்க்கவில்லை கொஞ்சம் தேன் சேர்த்து செய்து இருக்கிறேன்.
இந்த ஓமானி ஹல்வா ஓமானியர்களின் பாரம்பர இனிப்பு இது, 1920 லிருந்து ஈத் மற்றும் கல்யாண விஷேஷங்களில் கண்டிப்பாக இந்த ஹல்வா இல்லாமல் இருக்காது. இது நிறைய பெரிய இலுப்ப சட்டியில் போட்டு மொத்தமாக கிளறும் போது அதன் ருசியே தனிதான்.
நான்கு வருடம் முன் மஸ்கட் போகும் போது அங்கு சாப்பிட்ட்து, இடை இடையே டுப்ளிகேட் மஸ்கட் ஹல்வாவும் சாப்பிட்டு இருக்கிறேன்
ஒரு வழியா என் ஆசையும் நிறைவேறியது கணவருக்கு பிடித்த ஓமானி ஹல்வாவும் செய்துகொடுத்தாச்சு, சர்பரைஸாக தான் செய்து வைத்தேன். உடனே அடுக்கி வைத்திருந்த எல்லாம் பெருநாள் மதியமே காலி. எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்த்து.
தேங்காய் பொட்டுகடலை தயிர் சட்னி
ஓமானி ஹல்வா
எண்ணைக்கத்திர்க்காய்
ஸ்வீட் குக்கும்பர் சாலட்
டொமெடோ சல்சா
பூசணி ஹல்வா
யாராவது கெஸ்ட் வந்தால் உடனே தயாரிக்க கேசரி லட்டு அல்லது ஷீர் குருமா தான் செய்வேன். இனி நட்ஸ்வகைகளும், சாப்ரானும் ரெடியாக இருந்தால் சட் பட் ரிச் ஸ்வீட் ஓமானி ஹல்வாதான்..
ஈத் ஸ்பெஷல் மதிய உணவு - சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, எண்ணைக்கத்திரிக்காய், தேங்காய் பொட்டுகடலை தயிர் சட்னி, ஓமானி ஹல்வா
12 கருத்துகள்:
ஓமானி ஹல்வா ..பார்க்க ரொம்ப அருமையா இருக்கு .shall try it .
ஓமானி ஹல்வா சூப்பர் ஜலீலாக்கா! ஈத்-க்கு சுவையான விருந்து, சர்ப்ரைஸ் ஹல்வா-னு தூள் கிளப்பிட்டீங்க! பின்னே,சமையல் அட்டகாசமா,சும்மாவா? :)))
கம்பியிட்டர், நெட் ஏதோ பிராப்ளம் போல இருக்கு, என்னால் போஸ்ட் எடிட் பண்ணவே ரொம்ப லேட் ஆகுது, மற்றவர்கள் பதிவும் ஓப்பன் ஆக ரொம்ப லேட் ஆகுது. முடிந்த போது உங்கள் பதிவுகளுக்கு வருகிறேன்.
ரொம்ப்ப்பா நன்றி அக்கா.. எனக்கும் ஒமானி ஹல்வா ரொம்ப பிடிக்கும்.. எப்படி வீட்டுல செய்றதுன்னு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்,, ந,ல்லவேளை!
அருமையான படங்கள்.
அற்புதமான விளக்கங்கள்.
ருசியோ ருசியான பகிர்வு.
பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.
அன்புடன் VGK
parkave supera irruku akka :)
ஒமானி ஹல்வா சூப்பர்.ஈசியாக இருக்கு.பெருநாள் விருந்து அருமை.
அருமை... படங்களும் சூப்பர்...
குறிப்பிற்கு நன்றி...
ஹல்வா சுவையொ சுவை பேருதான் வித்யாசமா இருக்கு
ஓமானி ஹல்வா என்றவுடன் ஏதோ புது ரெஸிபி என நினைத்தேன்.... மஸ்கோத் அல்வாவா?எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது... ஊரிலிருந்து நிறைய வாங்கி வந்தேன். சாப்பிட பயமாக இருக்கிறது. அதிக நெய்வசமாக இருக்கிறது. 1 1/2 வயதாகும் என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.
உங்க க்கு ரொம்ப நன்றிக்கா... இனி வீட்டில் ட்ரை செய்கிறேன்.
சொன்னீங்க செய்தேன்னு ஆனால் இவ்வளவு பக்குவமா வந்திருக்கும்னு நினைக்கலை..கடை ஹல்வா போலவே மின்னுது கண்ணாடி போல ..கண்டிப்பா செய்து பார்க்கணும்..அந்த கத்தரிக்காய் டிஷ் மேல எனக்கு ஒரு கண்ணு இருந்துட்டே இருக்கு
---------- Forwarded message ----------
From: Priya Kannan
Date: Sun, Jan 12, 2014 at 8:41 PM
Subject: Hello madam
To: Jaleela Kamal Jaleela
Samayal attakasam.blogspot la irunthu ungal halwa seithen today..romba superb..(omaniya halwa).enakkellam enga nalla vara pokuthu nu nenaichen..bt very tasty..
Thanks for ur reciepies.
Regards priya..
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா