Monday, November 26, 2012

சோம்பு முட்டைகோஸ் பொரியல் - Fennel Seed Cabbage Poriyal


முட்டை கோஸ் - 100 கிராம்

தாளிக்க

எண்ணை - 1 தேக்கரண்டி
சோம்பு + கடுகு - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 2 பொடியாக அரிந்தது
பெருங்காயப்பொடி - அரை சிட்டிக்கை
காஞ்ச மிளகாய் - 1
கருவேப்பிலை - 5 இலை


துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 தேக்கரண்டி

செய்முறை

முட்டை கோஸை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.

தாளிக்க கொடுத்துள்ளவைகளை குக்கரில் தாளித்து முட்டை கோஸ் சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி உப்பு ,தேங்காய் துருவல், இரண்டு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து இரண்டு விசில் விட்டு இரக்கவும்.




பிளெயின் சாதத்துடன்  அல்லது ரொட்டி சப்பாத்தி, குபூஸுடன் ரோல் சாண்ட் விச் சாப்பிடலாம்.

பரிமாறும் அளவு : 1 நபருக்கு 

ஆயத்த நேரம் : 5 நிமிடம்
சமைக்கும் நேரம் - 5 நிமிடம்

இதை இங்கு நான் நடத்தும் என் பேச்சுலர் சமையல் ஈவண்டுக்கு இனைக்கிறேன்.

10 கருத்துகள்:

Unknown said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க -சி.பி. செந்தில்குமார் சிறப்பு பேட்டி
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி

Unknown said...

சிப்பிளி சூப்பர் அக்கா...

குழந்தைகளுக்கான ஓவிய போட்டி எனது வலைப்பூவில் kids-drawing-contest-win-cash-prizes more details:

http://en-iniyaillam.blogspot.com/2012/11/kids-drawing-contest-win-cash-prizes.html

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... குறிப்பிற்கு நன்றி...

Menaga Sathia said...

எளிமையான சூப்பர் குறிப்பு...

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கு. செஞ்சு பாத்துடறேன்.

Prema said...

yummy flavorful poriyal!!!Loved the recipe..

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

தேங்காய்ப்புச் சேர்க்கவில்லையோ ஜல் அக்கா... வித்தியாசமாக இருக்கு.

வலையுகம் said...

பகிர்வுக்கு நன்றி

இளமதி said...

வணக்கம் ஜலீலாக்கா...

உங்க தளத்துக்கு சகோ ஹைஷ் காலத்தில இங்கு வந்து பின்னூட்டம் போட்டிருக்கிறேன். பின்பும் இடையிடையே வந்திருக்கிறேன். பின்னூட்டம் தரவில்லை...;)

நல்ல நல்ல குறிப்புகள் தருகிறீங்கள். மிக்க நன்றி + வாழ்த்துக்கள்!

நான் குறுணியாக வெட்டிய இஞ்சி, மிளகு சீரகப்பொடி தூவி செஞ்சிருக்கேன். சோம்பு சேர்த்ததில்லை வித்தியாசமான ரேஸ்ட்டா இருக்கும் என நினைக்கிறேன். செய்து பார்க்கிறேன்.
நன்றி...:)

Vikis Kitchen said...

Very nice akka. Looks yummy! I too add sombu many times....makes cabbage delicious.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா