குழந்தைகளுக்கு பல் வளர ஆரம்பிக்கும் போது எதை இழுத்து போட்டு கடிக்கலாம் என்று வாய் துருதுருன்னு இருக்கும் ,
துணி , பேப்பர், போன் வொயர், கிடைக்கும் பொருட்கள் எல்லாம் எடுத்து வாயில் போட தான் பார்ப்பார்கள்.
கீழே ஏதாவது உணவு துகள் கிடந்தால் அதை நோண்டி சாப்பிடுவார்கள்
இதனால் வயிற்று போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
மாம்பழ சீசன் ஆரம்பிக்கும் போது மஞ்சள் கலரை பார்த்ததும் சாப்பிட துடிப்பார்கள். அதுக்குன்னு மாம்பழம் சாப்பிடும் பொருள் எல்லாம் வாயில் தடவாதீர்கள். குழந்தைகள் எதை பார்த்தாலும் வாயை திறப்பார்கள். .அவர்கள் ஆ ஆன்னு கேட்கிறார்கள் என்று நீங்களுக்கும் எல்லா உணவுவகைகளையும் வாயில் தடவாதீர்கள்.இது நல்லதில்லை. இதனால் உடம்பில் புளிப்பு தன்மை ஏற்பட்டு மோஷன் போய் கொண்டே இருக்கும்.
பல் முளைக்க ஆரம்பிக்க்கும் போது நிற்கும் போது நடக்க ஆரம்பிக்கும் போது இது போல் வயிற்றுபோக்கு ஏற்பட வாய்ப்பிருக்கு, கொஞ்சம் கூடுதல் கவனம் கொள்ளவேண்டும்.
பெட்டின் ஓரங்களில் தான் அடிக்கடி பல்லை வைத்து கடிப்பார்கள் பல வளரும் போது அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது அப்படி கடிக்கும் போது தீடீரென குத்தி கொள்ளும்
பல் வளர ஆரம்பிக்கும் போது ரஸ்க் போன்றவைகளை கொடுத்தால் போதும் கடித்து ஊறி முழுங்க வசதியாக இருக்கும்.பிரெட் ஸ்டிக் இதுபோல் சாப்பிட கொடுக்கலாம்.
Tweet | ||||||
7 கருத்துகள்:
நான் தேடிய செய்தி பதிவாக..
நன்று.
அறிந்து கொள்ள வேண்டிய தகவல்...
நன்றி...
tm2
என் பையனுக்கு 1 3/4 வயதாகுது/.... அநேக பற்கள் வந்துவிட்டன... எந்நேரமும் பற்களை நறநறன்னு கடித்துக் கொண்டேயிருக்கிறான்.... இது ஏதாவது பிரச்சினைக்குரியதாக்கா?
முனைவர் இரா குணசீலன் உங்களுக்கு இந்த பதிவு பயன் பட்டதில் ரொம்ப சந்தோஷம்.
நன்றீ தனபாலன் சார்
என்றென்றும் பதினாறு ஆமாம் குளுமை இருந்தால் அப்படி பிள்ளைகள் பற்களை கடித்து கொண்டு இருப்பார்கள்.
என் குழந்தைக்கு 12 மாதம் ஆகிறது இன்னும் பல் முளைக்க எப்போது வளரும்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா