புது பொண்ணு மாப்பிள்ளைக்கு பாரம்பரியமாக கொடுத்து வருவதும் பாலும் பழமும்.தான்.
பூப்பெய்திய பெண்களுக்கு முதலில் கொடுபப்து பாலும் பழமும் தான்.
ஒரு சத்தான பானம் குடித்து விட்டு அவர்களும் தெம்பாக போவார்கள்.
குழந்தைகள் சாப்பாடு சரியா சாப்பிடலையா இதை ஒரு டம்ளர் கொடுங்கள் போதும் வயிறு நிரம்பிடும்
டிப்ஸ்: வாய் புண் அல்சர் உள்ளவர்கள் பாலும் பழத்துடன் சிறிது தேங்காய் பூவும் சேர்த்து தினம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
தேவையான பொருட்கள்
பால் - நான்கு டம்ளர்
சிறிய வாழை பழம் - நான்கு (அ) பெரியது 2
சர்க்கரை - எட்டு தேக்கரண்டி (தேவைக்கு)
செய்முறை
பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.
வாழை பழத்தை சர்க்கரயுடன் நன்கு ஃபோர்கால் அடிக்கவும்.
பிறகு பாலை சேர்த்து கலக்கவும்..
குறிப்பு:
சில பேர் பழத்தை போட்டு கையால் பிசைவார்கள், பார்கவே பிடிக்காது. வாழை பழத்தை முதலில் தோலுடன் கழுவிக்கொள்ளுங்கள். ஒரு நீளமான கைப்பிடி ஜக்கில் வாழைப்பழத்தை சர்க்கரையுடன் சேர்த்து நல்ல ஸ்பூன் (அ) ஃபோர்க், (அ) கட்டை கரன்டியால் அடித்து கலக்குங்கள் இப்போது ஆறிய பாலை கலந்து கொடுங்கள். பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்.
டிப்ஸ் : குழந்தைகளுக்கு இரவு நேர உணவிற்கு சாதத்த்தை மசித்து அதில் வாழைப்பழம் சிறிது சர்க்கரை , பால் சேர்த்து பிசைந்து ஊட்டினால் வயிறு நிறையும், இந்த பால் பழ சாப்பாடு முதலில் இருந்தே பழக்கத்தில் வைத்து கொண்டீர்களானால் பிள்ளைகள் விளையாடும் போது ஏற்படும் வாய் புண்ணு, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும் போது இந்த உணவு கொடுத்தால் நல்லது.
வயிறுக்கும் இதமாக இருக்கும், நல்ல பில்லிங்ககாக இருக்கும். இரவு நேரம் சும்மா எழுந்து அழாமால் நிம்மதியாக தூங்கி எழுந்திருப்பார்கள்.
பால்பழ சாதம்
சூடான மசித்த சாதம் - 3 மேசை கரண்டி
சூடான பால் - சிறிது
சிறிய வாழைப்பழம் - 1
நன்கு பிசைந்து உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டி விடவும்.
டிஸ்கி: என் பெரிய பையனுக்கு சின்ன வயதில் செரிலாக் மற்ற உணவுகள் பிடிக்காது , காலை பருப்பு சாதம் , கிச்சிடி என்று கொடுத்தாலும் இரவு இதை தான் கொடுத்தேன்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தேங்காய் பால் வாழைப்பழ ஜூஸ் இங்கு சென்று பார்கக்வும்.
Tweet | ||||||
13 கருத்துகள்:
Nalla iruku akka.. naan konjam mixce il poothu oru oothu oothi viduveen...
புதிய வகை அருமை
பகிர்வுக்கு நன்றி சகோ
நீங்கள் கூறியதுபோல பாலும் பழங்களும் சிறந்த உணவாக நமது பாரம்பரிய வழக்கத்தில் இருந்தது.
இதிலிருந்து வந்தவைதான் கீர், மில்ஷேக்குகள்.
அருமையான குறிப்பு ..potato masher வைத்துதான் நான் கீரை மசிப்பேன்
அதிலே இதை செய்து பார்க்கிறேன் ..உங்க ஊரில் பச்சை வாழைபழம் கிடைக்குதா ??..இங்கே மஞ்சளா இருக்கும் பச்சை பழ அளவுக்கு taste சுமார்தான் .அதில் செய்து பார்க்கிறேன்
அருமை....
நன்றி சகோதரி...
Saappaattudan serththu fruits saappiduvadhu nalldhillai nu solraangalE......
Saappaattukku one hour munbo pinbo thaan fruits saappida vendum ena kelvi pattirukkiren.
சாப்பாட்டுடன் பழமும் சேர்த்து சாப்பிட்டால் ஜீரண கோளாறு வரும் என்று டாக்டர்கள் கூறுகிறார்களே..... சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன்போபின்போ பழம் சாப்பிடுவதுதான் நல்லது என்று கேள்விப் பட்டிருக்கிறேன் .
Useful post jaleela Akka!
எதையுமே அளவாக சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது.
என் பையனுக்கு 6, 7 மாதத்தில் இருந்து 2 வயது வரை இரவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி தான் கொடுத்தேன்.
இப்ப அவருக்கு 22 வயது ஆகிறது நல்ல ஜீரண சக்தியுடன் ஆரோக்கியமாக தான் இருக்கிறார்,
உதாரணத்துக்கு
பொங்கல் என்றால் பல வகை பொங்கலும் ஃப்ருட் பொங்கலும் அடங்கும்.
அதே போல் வாழைபழ குழிபணியாரம்
ஸ்ட்ராபெர்ரி கேக் . ஃப்ரூட் கேசரி .
இது போல் பல உணவுகள்....
இல்லையா???
பல பழ பான் கேக்குகள். அமெரிக்கா, இத்தாலி , அரேபியர்கள் காலை உணவே பேன் கேக்குகள் தானே
மைதாவில் பழங்கள் சேர்த்து தானே தயாரிக்கிறார்கள்.
சாப்பாடு சாப்பிட்டு விட்டு உடனே தான் பழம் சாப்பிட கூடாது என்று டாக்டர் சொல்லி இருப்பாங்க.
வாழைபழம் பொதுவான பழம் அது பல வியாதிகளை குணப்படுத்துகிறது . என் பதிவிலேயே அதை பற்றி மெயில் தகவல் 4 பதிவு போட்டு உள்ளேன் வேண்டுமானால் பாருங்கள்.
இப்ப யாரு டயட்ட பாலோ பண்ணுகிறார்கள்
அப்படியே பாலோ பண்ணினாலும் குறைந்தது 1 மாதம் , 3 மாதம்
பிறகு வாழ்க்க்கை சூழல்
மாற்றிடும்.
ஜலீலா ..எங்கள் மகளுக்கு பேபி ரைஸ் என்று hipp products கிடைக்கும் அதில் வாழைபழம் அல்லது ஏதேனும் puree சேர்த்து கொடுக்க சொன்னாங்க .
மேலும் இதே Hipp இப்ப விற்கிறாங்க குட்நைட் brei என்று அதில் cereals மற்றும் வாழைபழம் சேர்த்திருக்கு .....எனக்கு இன்னொன்றும் நினைவுக்கு வருது அம்மா நாங்க சின்னபில்லைகளா இருக்கும்போது இரண்டு கிண்ணங்களில் பால் சாதம் போட்டு அதில் வாழைபழத்தை பிசைந்து தருவாங்க .எங்களுக்கு எந்த digestion பிரச்சினையும் வந்ததில்லை
//சாப்பாடு சாப்பிட்டு விட்டு உடனே தான் பழம் சாப்பிட கூடாது என்று டாக்டர் சொல்லி இருப்பாங்க.//ஆமாம் சரியா சொன்னீங்க .
இங்கே banana sandwich செய்வோம் ... bun/bread இரண்டா வெட்டி நடுவில் பட்டர் மற்றும் தேன் அல்லது acorn சிரப் தடவி சாப்பிடுவோம் ..உணவுடன் பழங்கள் சேர்த்து சாப்பிடலாம் .
பாலும்பழமும் யாருக்குத்தான் பிடிக்காது?சூப்பர்.
ரொம்ப அருமையான உணவு...எனக்கு ரொம்ப பிடிக்கும்...
சின்ன வயதில் சஹர் நேரங்களில் எங்க அம்மா முதலில் குழம்பு வைத்து சாதம் சாப்பிட சொல்வார்கள். பின்பு சிறிது சாதத்தில் சர்க்கரை, தயிர், வாழைப்பழம் போட்டு சாப்பிட சொல்வார்கள். வயிறுக்கு அவ்வளவு இதமாக, குளிர்ச்சியாக இருக்கும். (அப்போதெல்லாம் எனக்கு குழம்பு வைத்து சாப்பிடுவதைவிட, 'ஹ்ம்...அம்மா எப்படா தயிரும் பழமும் தருவாங்க'ன்னு மனதிற்குள்ளேயே நாக்கைத் தொங்க போட்டு கொண்டு காத்திட்டிருப்பேன். ;P.... )இப்படி சாப்பிடுவதால் நோன்பு நேரங்களில் தேவையற்ற உடல் உபாதைகளிலிருந்து தப்பிக்கலாம்; தப்பித்திருக்கிறோம் .... :))
சாப்பிட்ட பின், சாப்பிடுவதற்கு முன் பழம் சாப்பிடுவதை பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் சாப்பாட்டோடு சேர்த்து பழம் சாப்பிடுவதால் எங்களுக்கும் இதுவரை எந்த கெடுதலும் ஆனதில்லை. :)) (எனக்கு பால் பிடிக்காது என்பதால் நானும் அடிக்கடி பாலும் பழமும் தான் சாப்பிடுகிறேன்)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா