Thursday, November 15, 2012

ஆசியாவின் அன்பான அன்பளிப்பு





அமீரகத்தின் சுவையரசி போட்டியில் நானும் ஆசியாவும் சந்தித்த போது

மாஸ்டர் செஃப் வின்  பண்ணியதுக்கு ஆசியா கொடுத்த அன்பு பரிசு சுவையரசி போட்டி அன்று கிடைத்தது.

 எனக்கு  கிழே உள்ள  அழகிய பவுள் செட் அன்பளிப்பாக ஆசியா கொடுத்தாங்க  .மிக்க நன்றி + ரொம்ப  சந்தோஷம் ஆசியா.












துபாயில் நடந்த சுவையரசி போட்டிக்கு கலந்து கொள்ளும் படி பார்வேர்ட் மெயில் வந்து கொண்டிருந்தது. யாராவது துணைக்கு வந்தால் போகலாம் என்று ஆசியாவிடன் கேட்டேன் நான் போகலாம் என்று இருக்கேன் என்றார்கள் , நீங்க போவதாக இருந்தால் நானும் வருகிறேன் என்றேன். 

கணவரிடம் கேட்ட போது  வேண்டம் நேரம் இல்லை கடை வேலைகள் நிறைய இருக்கு போக முடியாது என்றார். 
ஆகையால் அதை பற்றி யோசிக்கவில்லை.

போட்டி நாளைக்கு என்றால் இன்று தீடீர் முடிவு  இவர் சரி என்று சொல்லி விட்டார் .  என்ன குறிப்பு  செய்வதுன்னு ஒன்றும் முடிவு பண்ணல.

 கடைசியில் முன்று வகையான ஹல்வா செலக்ட் செய்து அப்படி இல்லை  ஷீர் குருமா என்று முடிவு செய்தேன். பையன் கடல் பாசி தான் கலர் புல்லா நல்ல டெசர்ட் ஆக இருக்கும் அதை செய்யுங்க என்றான்.  கடைசி நேரத்தில்  முவர்ண கடல் பாசி செய்வோமுன்னு மாற்றிட்டேன்.


.
ஆனால் அங்கு ஷீர் குருமாவுக்கு தான் முன்றாவது பரிசு கிடைத்தது.(ஆஹா வடை போச்சே.. ) சரி பரவாயில்லை.. ஒரு ட்ரயல் தானே
நி்றைய போட்டோக்கள் எடுத்து வைத்து இருந்தேன். இங்கு பகிரலாம் என்று நினைத்து பல  மாதங்களும் கடந்து விட்டது இப்போதைக்கு நேரமும் இல்லை .

இதன் விளக்கம் ஆசியா விபரமாக போட்டு இருக்கிறாங்க இங்க பார்த்து கொள்ளுங்கள்.


இது ஆசியாவின் ஆப்பில் புட்டிங் கலர் ஃபுல்லாக ரொம்ப பார்க்க ரிச்சாக  இருந்தது.

முன்று ஜட்ஜ்கள் வந்திருந்தனர்.
 என்னுடையதையும் ஆசியாவுடையதையும் இன்னும் யார் யாருடையது என்று தெரியல  ஜட்ஜ்கள் ருசி பார்த்த மாதிரி தெரியல.

ஆனால் ஆசியாவின் மகள் ருமானா ஸ்ட்ராபெரி நட்ஸ் கடல் பாசி எடுத்து சாப்பிட்டுவிட்டு ரொம்ப சூப்பர் ஆண்டி என்றாள். எப்போதுமே எனக்கு பிள்ளைகள் சூப்ப்ரனுன்னு சொல்லிட்டா அதே பெரிய அவார்டு வாங்கினமாதிரி..

ஆனால் அங்கு 24 பேர் சுவையாக விருந்து படைத்து இருந்தார்கள்.பார்க்கவே இனிப்பு மனம் அருமையாக இருநதது.
லட்டும், அங்கு வைத்திருந்த ஷீர் குருமாவின் அலங்காரமும் அட்டகாசமாக இருந்தது.
பங்கு பெற்ற அனைவருக்கும் ஒரு ஹாட்பாக்ஸும், ஆச்சி மசாலாக்களும் கொடுத்தார்கள்.
முதல் முறை என்பதால் எப்படி இருக்கும் எப்படி ப்ரசண்ட் பண்ணனும் என்று எனக்கு எந்த  ஏதும் ஐடியாவும் இல்லை.

பங்கு பெற்ற அனைவருக்கும் ஆச்சிமசாலாக்களும், ஒரு ஹாட் பேக்கும் கிடைத்தது.





மூவர்ன ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் ரிச் அகர் அகர்  இந்த லிங்கை கிளிக் செய்து குறிப்பை பார்க்கவும்.

நிறைய சொதப்பல் நான் என் குறிப்பில் வர அவசரத்தில் சைடில் வைக்கும் ப்ரவுன் கலர் ஸ்டிக் வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டேன், மீதி இரண்டு பிரட் ஸ்டிக்கை மாற்றி கொண்டு வந்து விட்டேன். நடுவில் வைக்கும் ஜெம்ஸும் புளு கலர் வைத்ததும் கரைந்து விட்டது, கடைசியில் வேறு வைத்தேன்.
அங்கு சரியான வழிநடத்தலும் இல்லை.
சுவையரசி போட்டிய பற்றி சொல்லனுமுன்னா அங்கு நடந்த + ஐ விட  -- தான் மிக அதிகம்..  செய்து வைத்தவர்களில் ஒருவர் கூகிலில் தேடி செய்து அபப்டியே பிரிண்ட் எடுத்து செய்து வந்தேன் என்று சொன்னாங்க..அட டா இப்படி வேறையா?
அம்மா பொண்ணு , அம்மா பொண்ணு என்றும் செய்து எடுத்து வந்தார்கள்.பொண்ணு குறிப்பை அம்மாக்கள் ரொம்ப ஆர்வமாக அலங்கரித்து கொண்டு இருந்தாங்க.யார் செய்ததுன்னு தெரியல.

ஆனால் அமீரகதமிழ் மன்ற புரோகிராம் ரொம்ப  அருமையாக  இருந்தது.


அங்கு முதல் பரிசு வென்ற குறிப்பு  

இரண்டாம் பரிசு வென்ற குறிப்பு



முன்றாம் பரிசு வென்ற குறிப்பு.












அங்கு நடந்த மழலைகளின் கேட் வாக். சின்ன தாக ஒரு வீடியோ கிளிப் 






பேன்சி ட்ரெஸ்




பெண்ணியம் எனது பார்வையில் என்ற தலைப்பு கட்டுரையில் 
 நிறைய பேர் எழுதியதில் நம்ம ஹூஸைனாம்மாவுக்கு முன்றாம் பரிசு என்று அறிவித்திருந்தார்கள்.ரொம்ப சந்தோஷம். நானும் ஆசியாவும் நாம கூட இது போல் சமையல் போட்டி வைத்து மனோ அக்கவா ஜட்ஜாக போட்டு இன்னும் பலரை அழைக்கலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம். இனி பலருக்கும் தேவையான சமையல் குறிப்புக்கள் ஒரே இடத்தில் காணும் படியாக ஈவண்ட்கள் தமிழ் பிலாக்கிலேயே நடத்தலாம் என்று நினைத்து கொண்டோம்.


4 கருத்துகள்:

இமா க்றிஸ் said...

பாராட்டுக்கள் ஜலீ. அடுத்த போட்டியில் நிச்சயம் முதலிடம் கிடைக்குமாறு தயாராகிப் போங்க.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா.. சூப்பராக நடந்திருக்கே நிகழ்ச்சி. ஆசியா கொடுத்த பவுள் செட்டும் சூப்பர்... அப்படியே ஊக்கேக்கு அனுப்பி விடுங்கோவன்:).

முற்றும் அறிந்த அதிரா said...

பரிசு கிடைப்பது மட்டுமல்ல.. போட்டியில் பங்கேற்பதும் நல்ல விஷயம்தானே... அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.

Unknown said...

Valthukal akka... Photos ellam super

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா