Sunday, April 7, 2024

கருப்பட்டி கடல்பாசி/ Jaggery Agar agar




கடல்பாசியில் சர்க்கரை  மற்றும் கண்டெண்ட் மில்க் சேர்த்து செய்வோம்சர்க்கரை வியாதிகாரகள் அதிகமாக சாப்பிட முடியாது அதற்கு என்ன செய்யலாம்ஒரு சேன்ஞ் க்கு கருப்பட்டி சேர்த்து செய்யலாம்.  


Friends please click below link and shupport by subscribe like share

 





கருப்பட்டி கடல்பாசி/ Jaggery Agar agar

 

தேவையான பொருட்கள்

Thick coconut milk or தேங்காய் தண்ணீர்  - 150 மில்லி 

தண்ணீர்  - 150 மில்லி

 கடல் பாசி – 5 கிராம்

கருப்பட்டி வெல்லம் - 50 கிராம்

 ( தேவைக்கு கூட்டி போட்டுகொள்ளலாம்)

உப்பு - அரை சிட்டிக்கை





செய்முறை

 

கருப்பட்டியை சிறிது தண்ணீரில் தூள் செய்து போட்டு காய்ச்சி வடிக்கட்டி வைக்கவும்.

தண்ணீர் +  coconut milk  or தேங்காய் தண்ணிரில் கடல் பாசியை உதிர்த்துபோட்டு 10 நிமிடம் ஊறவைத்து 

நன்கு கரைய காய்ச்சவும்.

 

கருப்பட்டியை சேர்த்து சூடு படுத்தி ஒரு சதுர வடிவ டப்பாவில் ஊற்றீ ஆறவைத்து குளிரூட்டியில் வைத்து குளிர வைத்து தேவைக்கு துண்டுகள் போட்டு சாப்பிடவும்.வித்தியாசமான ருசியில் அருமையாக இருக்கும்.



by jaleelakamal

Wednesday, April 3, 2024

மஷ்ரூம் மசாலா நோன்பு கஞ்சி ( குக்கர் முறை)




Ramadan 2024

தேவையானவை


பொடித்த நொய் (அரிசி பொடித்த்து) – அரை டம்ளர்

பாசி பருப்பு  – இரண்டு மேசைகரண்டி

கேரட் – ஒரு சிறிய துண்டு

மஷ்ரூம்  - 50 கிராம்

வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று

எண்ணை + நெய் - 1 தேக்கரண்டி

பட்டை - 1 

பச்ச மிளகாய் – ஒன்று

உப்பு – தேவைக்கு

பொடியாக அரிந்த இஞ்சி - அரை ஸ்பூன்

பொடியாக அரிந்த பூண்டு - முன்று

கொத்துமல்லி தழை – சிறிது

புதினா – சிறிது

மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

உப்பு – கால் தேக்கரண்டி

கடைசியாக தாளிக்க

 எண்ணை + நெய் - இரண்டு தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - ஆறு எண்ணிக்கை

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

கருவேப்பிலை - ஒரு சின்ன கொத்து

கொத்து மல்லி தழை -  கைக்கு ஒரு கொத்து

செய்முறை


அடுப்பின் மீது குக்கரை ஏற்றி  எண்ணை  ஊற்றி  சிறிது காய்ந்ததும் பட்டை  போட்டு தாளித்து வெங்கயம் + கேரட்டை போட்டு வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து பச்ச வாடை அடங்கியதும், கொத்துமல்லி புதினா, தக்காளி,பச்சமிளகாய் என்று ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்கவும்.


தக்காளி மடங்கியதும் மஷ்ரூமை நான்காக வெட்டி சேர்த்து,  மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு தூள், சேர்த்து நன்கு கிளறி தீயின் அளவை சிம்மில் வைத்து நன்கு மசாலா கூட்டாகும் வரை வேக வைத்து தண்ணீரை 4 டம்ளர் அளவிற்கு ஊற்றி கொதிக்க விட்டு கொதி வந்ததும் தேங்காய், அரிசி + பாசிபருப்பை தட்டி கட்டி பிடிக்காமல், அப்ப அப்ப கிளறி விட்டு குக்கரை மூடி இரண்டு முன்று விசில் வந்ததும் இரக்கவும். ஆவி அடங்கியதும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கலக்கி கட்டி பிடிக்காமல் கிளறி விட்டு கொதிக்க விடவும்.

தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து கஞ்சியில் கொட்டி கிளவும்.

 அரிசி ப‌ருப்பு இர‌ண்டும் வெந்து க‌ஞ்சி ப‌த‌ம் வ‌ந்த‌தும் இர‌க்க‌வும்.


கடைசியாக எண்ணை + நெய் விட்டு சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது கொத்துமல்லி கருவேப்பிலை போட்டு தாளித்து கஞ்சி யில் கொட்டி மீண்டும்கொதிக்க விட்டு இரக்கவும்.






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/