Sunday, February 28, 2010

பிரியாணி தம் போடும் டிப்ஸ்



பிரியாணி என்றாலே இஸ்லாமிய‌ர்க‌ளின் க‌ல்யாண‌ பிரியாணி என்றால் அனைவ‌ருக்கும் விருப்ப‌மே.

நிறைய பேருக்கு இந்த பிரியாணி தம் சந்தேகம் உண்டு இதில் சில டிப்ஸ்கள் கொடுத்து எனக்கு தெரிந்ததை விளக்கி உள்ளேன். இது அனைவருக்கும் பயன் படும் என்று நினைக்கிறேன்.


ம‌ற்ற‌ ச‌மைய‌லை விட‌ இது தான் செய்வ‌து ரொம்ப‌ சுல‌ப‌ம், ஈசியும் கூட‌.
பிரியாணிக்கு கூட்டு கிரேவி த‌யாரித்து விட்டு. கிரேவி த‌யாரிகும் போதே அரிசியை ஊற‌ போட்டு விட‌வேண்டும்.20 நிமிட‌ம் என்ப‌து போதுமான‌து, அத‌ற்கு அதிகமாக‌ ஊறினாலும் ப‌ர‌வாயில்லை. உலை கொதிக்கும் போது சீக்கிர‌த்தில் எடுத்து விட‌லாம்.
வ‌டித்து த‌ம் போட்டால் தான் ருசியான‌ பிரியாணி.

பிரியாணி செய்ய‌ தாளிக்க‌ உலை கொதிக்க‌ என்று இர‌ண்டு ச‌மமான‌ ச‌ட்டி தேவை., சின்ன‌ ச‌ட்டியில் உலை கொதிக்க‌ போட்டால் அரிசி சிக்கி பாதி வெந்து வேகாம‌ல் இருக்கும்.
த‌ண்ணீர் ந‌ன்றாக‌ கொதிக்கும் போது அரிசியை த‌ட்ட‌வேண்டும்.உட‌னே 7 லிருந்து ப‌த்து நிமிட‌த்திற்குள் முக்கால் பாக‌ம் வெந்து விடும், உட‌னே பெரிய‌ க‌ண் வ‌டிக‌ட்டியில் ஊற்றி க‌ஞ்சியை த‌னியாக‌ எடுத்து வைக்க‌னும்.



த‌ம் போடும் க‌ருவி த‌னியாக‌ விற்கிற‌து, அது கிடைக்காத‌வ‌ர்க‌ள்.

க‌ன‌மான‌ தோசைக்க‌ல்லை கேஸ் அடுப்பின் மேல் வைக்க‌லாம்.
அரிசி கொதிக்க வைக்க அதே அளவு சட்டி கிடைக்காதவர்கள்.


ஒரே அளவில் இரண்டு சட்டியில் சமமாக கொதிக்கவைத்தும் வடித்து தம் போடலாம்.
சாதம் ரொம்ப‌ வெந்த‌ பிற‌கு த‌ம் போட்டால் குழைந்து பிரியாணி க‌ளி, க‌ஞ்சியாகி விடும்.






தம் போடும் முறை (அந்த தம் கிடையாது)




கேஸ் அடுப்பில் தீயின் தனலை மிக‌ மெல்லிய‌ அள‌வில் வைத்து அத‌ன் மேல் த‌ம் போடும் க‌ருவி (அ) க‌ன‌மான‌ தோசைக‌ல்லை வைத்து அத‌ற்கு மேல் பிரியாணி ச‌ட்டியை வைத்து மூடி போட்டு வ‌டித்த‌ சுடு க‌ஞ்சியை ச‌ட்டியில் மேல் வைத்து 20 நிமிட‌ம் த‌ம்மில் விட‌வும்.

வெந்த‌தும் எடுத்து ரொம்ப‌ போட்டு கிள‌ற‌க்கூடாது. லேசாக‌ பிர‌ட்டி விட‌வேண்டும்.





இது பிரியாணி பதிவில் ரிஷி கேட்ட கேள்வி


(1. இந்த பாத்திரம் வைத்தாலும் பிரியாணி வெந்து கீழிறக்கும் வரை அடுப்பு சிம்மில் எரிய வேண்டுமா?

2. நேரடியாக அடுப்பில் வைப்பதற்கும் இந்த தம்போடும் கருவியில் வைப்பதற்கும் என்ன வித்தியாசம்? நெருப்பு நேரடியாக படாது ஆனால் சூடு மட்டும் செல்லும் என்று நினைக்கிறேன். சிலர் அகன்ற தண்ணீர் உள்ள பாத்திரத்தின் மேல் பிரியாணி சட்டியை வைக்க சொல்லி தம் போட சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனாலும் அப்படி செய்தால் பிரியாணி பொல பொலவென ட்ரையாக வருவதில்லை. )




1. தாளித்த கூட்டு தனியாக முதலே வைத்திருந்தால். அரிசி கொதித்து வடிக்கும் சமையத்தில் சிம்மில் வைத்து சூட்டுபடுத்தி தம்மில் ஏற்றும் போது முழுவதும் 20 நிமிடமும் தீ சிம்மில் எரிய வேண்டும்.

2. தம் போடும் கருவி அல்லது தோசை தவ்வா வைத்தால் அடிபிடிக்காது.நெருப்பு நேராக படாது.
சில‌ர் வாய‌க‌ன்ற‌ பாத்திர‌த்தில் த‌ண்ணீரை மேலே வைப்பார்க‌ள். இது த‌ண்ணீர் இல்லை வ‌டித்த‌ சூடான‌ க‌ஞ்சி. அப்ப‌டி இல்லையானால் க‌ன‌மான‌ பாத்திர‌மும் வைக்க‌லாம்.
சாதம் பொல பொலன்னு வரலை என்றால் நீங்கள் முக்கால் பதத்தில் வடிக்காமல் நல்ல வெந்து வடித்து இருப்பீர்கள்.



நிறைய சாதம் வைக்கும் போது தம் ஆகிக்கொண்டு இருக்கும் போது பாதியில் எடுத்து கிளறி பிரட்டி விட்டு மீண்டும் வைக்கவும்.
அரிசி கொதிக்க வைக்க பெரிய சட்டி இல்லாதவர்கள். கூட்டில் அரிசி ஒன்றுக்கு ஒன்னறை அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொதிக்கவிட்டு தண்ணீர் வற்றும் போது இதே போல் தீயை சிம்மில் வைத்து புழுங்க விட்டு இரக்கவும்


இதே ஹைத்ராபாத் பிரியாணி ஒரு தனி வகை, அதில் வெங்காயத்தை பொரித்து போடுவார்கள், தக்காளி சேர்க்கமாட்டார்கள், தக்காளிக்கு பதில் தயிர் அதிகம் சேர்ப்பார்கள். மற்றும் வாசனை பொருள்கள் அதிகம் இருக்கும்
குக்கரில் பிரியாணி வைப்பவர்கள் குறைந்த தனலில் முன்று விசிலில் இரக்கி விடவும்.

செட்டி நாடு பிரியாணி வகைகள் மிளகு, தேங்காய் பால், மற்ற மசாலாக்களை எல்லாம் அரைத்து சேர்த்து அப்படியே தண்ணீர் அளந்து ஊற்றி செய்வார்கள்.
கீழே உள்ள லிங்கில் முன்று வகையான பிரியாணி உள்ளது அதில் குக்கர் முறையும் இருக்கு
மீன் பிரியாணி
வெஜ் பிரியாணி

சென்னையில் கல்யாணஙகளில் 10 படி தேக்ஷாவில் தான் செய்வார்கள்,அவர்கள் தம் போட நெருப்பு மூட்டி தான் பிரியாணி செய்வார்கள். அதில் கீழே நெருப்பு எல்லாம் எடுத்து தேக் ஷா மூடியின் மேல் போட்டு விடுவார்கள். மீதி நெருப்பை அடுப்பை சுற்றி போடுவார்கள், அந்த தனலிலேயே வெந்து விடும், நிறைய ஆக்கும் கல்யாண பிரியாணியின் ருசிக்கு ஈடு இனை எதுவுமே இல்லை.

Saturday, February 27, 2010

ம‌சாலா மிக்ஸ்

மசாலா என்றதும் சமையலுக்கு மசாலா என்று நினைக்க வேண்டாம், எல்லோரும் அஞ்சறை பெட்டி, கொத்து பரோட்டா, டிரெங்கு பெட்டி என்று போடும் போது சரி நாமும் போடுவோமே. இது ஸாதிகா அக்கா ஜலீ நீங்களும் ஒரு கொத்து பரோட்டா போடுங்கள் என்று சொன்னதால் போட்டது. ஆனால் எப்படி தான் எல்லோரும் மொக்கை பதிவு, அஞ்சறை பெட்டி, கவுஜை எல்லாம் போடுகிறீர்களோ. சமையல் குறிப்பு, டிப்ஸ் என்றால் உடனே பத்து நிமிடத்தில் போட்டு விடலாம் போல ஆனால் இந்த பதிவு போடுவது எனக்கு ரொம்ப யோசிக்க வேண்டியதா போச்சு

அனுபவ மசாலா மிக்ஸ்.





எச்சரிக்கை

இப்ப துபாயிலும் அங்காங்கே முகமூடி கொள்ளை காரர்கள் ஆட்டம் தாங்க முடியல உஷாராக இருக்கனும்.
இத்தனை வருடமா சாமான் வாங்கி வரும் குராசரி ஷாப்பில், கிராசரியில் கெஷ் கவுட்ண்டரில் இருப்பவரை , இரண்டு வாரம் முன் இரண்டு பளுச்சி கார மூகமூடிகாரார்கள் , கத்தியால் அவரை கையில் கிழித்து விட்டு காசு 5,000 திர்ஹம்ஸ் எடுத்து கொண்டு போய் விட்டார்கள்.

வீட்டில் கூட கேஸ், பேப்பர், லான்ட்ரி,தண்ணீர் கொண்டு வருகிறவர்கள் வந்தால் ரொம்ப உஷாராக பார்த்து கதவை திறக்கனும்.

ஏமாற்றம்.


ஒரு பையன் பேனா விற்கிறென்னு வந்தான் ஒரு பேனா 10 திர்ஹம் என்றார், பேனாவ யார் காசு கொடுத்து வாங்குவார்கள். வேண்டாம் என்றேன். காலையில் இருந்து விற்கிறேன் ஒரு பேனாவும் விற்கல ஒன்று வாங்கி கொள்ளுங்கள். என்றான் பேனா வேண்டாம் என்றேன். உடனே ரொம்ப கெஞ்ச‌ ஆரம்பித்து விட்டான், காலையில் இருந்து ஒன்றுமே சாப்பிடல அப்படின்னு சொன்னதும் 10 திர்ஹம் எடுத்து கொடுத்தேன். உடனே ஆள் எஸ்கேப், பேனா கொடுக்கல. எல்லாம் திட்டினாங்க லூஸா நீங்க பேனாவாவது வாங்கி கொள்ள வேண்டியது தானே என்று, என் நினைப்பெல்லாம் இவ்வளவு சின்ன பையன் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கானே என்று ஒரு நிமிடம் யோசிப்பதற்குள். அவன் போய் விட்டான்.

க‌டுப்பு

அடுத்து இரண்டு வாரம் கழித்து அதே போல் வேறு ஒருவர் கோட் சூட் போட்டு கொண்டு ஒரு பெட்டியுடன் வந்தார், நேர பெட்டிய தூக்கி கொண்டு நுழைந்தார் நானும் சேல்ஸ் க்காக வந்து இருக்கிறார் என்று நினைத்தேன். ஒரு பேனாவை நீட்டி 10 திர்ஹம் என்றார், ஆஹா இப்ப ஏமாற கூடாது உஷாராகிடனும் என்று வேண்டாம் என்றேன்.
இப்ப துபாயில் கோட்டு சூட்டு போட்டு கொண்டு பிச்சை எடுக்கிறார்கள் அதை நினைத்தால் கடுப்பாக இருக்கிறது. விசாரித்தா ஓன்னு அழறார் காசு கேட்டு.
கண்டிப்பா வேண்டாம் என்று சொல்லி போக சொல்லிட்டேன்.
இப்படி பேனாவை தூக்கி கொண்டு குரூப்பா கிளம்பிட்டாங்க போல



ரொம்ப சந்தோஷம்

வருஷ வருஷம் ஷாப்பிங் பெஸ்டிவல் வந்த போக முடியாமல் போய் விடும், இருக்கிற டிராபிக்க நினைத்தாலே போகப்பிடிககது. போன வருடம் போய் விட்டு மாப்பிள்ளை ஊர்வலத்தைவிட மோசமா வண்டி நகர்ந்தது ஆகையால் உள்ளே போகாமல் வீடு திரும்பியாச்சு.

இந்த முறை மாமானார் மாமியார் வந்து இருந்ததால் அவர்களை கூப்பிட்டு போய் காண்பிக்கனும் என்று போனோம்.அவர்களுக்கு நடக்க கஷ்டமாக இருந்ததால், அங்கு உள்ள ரிக்ஷாவில் அவர்களை சாக்கிட்டு எல்லோரும். ஏறி ஒரு ரவுண்டு அடிச்சாச்சு, முன்பு சென்னையில் ரிக்ஷா தான், அதில் போகும் பொது ஊர்வலம் மாதிரி இருக்கும்.




அதுவும் ரொம்ப சுற்றி பார்க்க முடியல, சில நாடுகள் வரை சரி உள்ளேவாவது நுழைந்தோமே என்று ஒரு திருப்தி அங்கு என்ன சுற்றி பார்க்கவா வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் அவரவர் நாட்டு சாப்பாடு முக்கை துளைத்து கொண்டு இருக்கு.


இந்த அரபி பெண்கள் அபாயா போடுவது துபாய கூட்டி பெருக்க போல எவ எவன் துப்பிவைத்ததெல்லாம் அப்படியே பெருக்கி கொண்டு போகிறார்கள். பெரிய ஷாப்பிங் மாலில் துத்தமாக துடைத்து கொண்டே இருப்பார்கள் அங்க பெருக்குவது ஒகே, இங்க ஷாப்பிங் பெஸ்டிவலில் ஐய்யோ பார்க்க சகிக்கல, கொஞ்சம் சரியான அளவில் தைத்து போடலாம். அவர்கள் உயரத்தை விட 5" அதிகமாக பெருக்கி கொண்டு போகுது.


எரிச்சல்

முதல் எரிச்சல் டெலிபோன் பேசிக்கொண்டு இருக்கும் போது எதிரில் உள்ளவரின் சைகை சரியான எரிச்சலை அடையவைக்கும்.
அதே போல் யார் மேல கோபம் இருந்தா என்ன எதிர் முனையில் பேசிக்கொண்டு இருப்பவர்கள். காது ஜவ்வு கிழியும் அளவிற்கு போன பட்டாருன்னு வைப்பது செம்ம எரிச்சல்.



ஆச்சரியம்

என் பையன் உண்மை பேசுவதில் காந்திஜி வீட்டுக்கு பக்கத்து வீடுன்னு சொல்லலாம். என்னதான் காந்திய போல உண்மை பேசினாலும், சென்னையில் கம்பியுட்டரில் உட்காரும் போது ஒரு பிளெயின் கிளாஸ் போட்டு கொள்ள சொன்னார் டாக்டர் அங்கு போய் காந்திஜி போட்டரே அதே மாதிரி பிரேம் இருக்கான்னு கேட்கிறான். டேய் ஏன் அவர் போட்டமாதிரி கேட்கிற எல்லாம் கிண்டல் பண்ண போறாங்க என்றேன், யார் கிண்டல் பண்ணாலும் எனக்கு கவலை இல்லை என்றான். அதை கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

பயம்
என் கணவரின் தங்கை விசிட்டில் வந்திருந்த போது, தினம் எங்க வீடுக்கு வந்து விட்டு இரவு அவங்க கணவ‌ர் கார்ஸில் வேலை பார்த்தார் வந்ததும் போவாங்க, வர 11 மனிக்கு மேல் ஆகும்,. அப்ப நாங்க‌ வரை எல்லாம் ஒரே அறையில் படுத்து கொண்டு லைட்டும் ஆஃப் பண்ணியாச்சு, எனக்கு சின்ன சத்தம் வந்தாலும் பிடிகாது. காலண்டர் ச‌ரக் சரக் சத்தம் இருட்டில் கண்ணை மூடி கொண்டே எழுந்தேன், லைட்ட போட்டு , பெட்டுகு கீழ் இருக்கும் மாஸ்கிங் டேப், கத்திரி கோல் எடுத்து கொண்டு பெட்டு மேலே ஏறி நின்றேன், ஹஸ் உடைய தங்கை அண்ணனை தான் தூக்கத்தில் வெட்ட போறேன் என்று கதறி கொண்டு இருகிறார் நான் துக்க கலக்கத்தில் எதையும் கவனிக்கல. பெட்டு மேலே இருக்கும் காலண்டரில் கத்த்ரியால் மாஸ்கிங் டேப்பை வெட்டி ஒட்டிட்டு படுத்துட்டேன், காலையில் எழுந்து என் நாத்தானார் நான் கத்த கத்த நீங்க ஒன்றுமே சொல்லல , நடந்ததை சொனனர், நான் சொன்னேன், முழித்து விட்டால் மறுபடி தூக்கத்தை பிடிப்பது கஷ்டம் அதான் போய் படுத்து விட்டேன் என்றேன். அது இன்னும் சொல்லி சொல்லி சிரிப்பார்கள்.

மனவருத்தம்

சமீப காலமாக பரவி வரும் கேன்சருக்கு ஒரு தீர்வு கிடைக்கனும்.என் குடும்பத்தில் ஒருவருக்கு கேன்சர் ஏற்பட்டதில் இருந்து நான் சந்திக்கும் நபர்கள், என் சுற்றி உள்ளவர்கள் எங்கு பார்த்தாலும் கேன்சர், இது எனக்கு மிகவும் மனவருத்ததை தருகிறது. அந்த கொடிய நோய் யாருக்கும் வரக்கூடாது என்று ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

சிரிப்பு நகைச்சுவை

தம்பி கல்யாணத்துக்கு, என் தங்கைகள், மற்றும் தங்கை குழந்தைகளுடன் ஷாப்பிங் போன போது இரண்டு தங்கையின் குழந்தைகள் காக்ரா சோளி எடுத்து கொண்டு ட்ரையல் பார்க்க போனார்கள். ரொம்ப நேரம் ஆகியும் இருவரையும் காணும், வெளியில் கீவில் லைனா நிறைய பெண்களும் குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள், நான் போய் கதவை தட்டினேன், இரண்டும் வெளியில் கெக்கே புக்கேன்னு சிரித்து கொண்டேவருகிறார்கள். என்ன ஏன் லேட்டு என்றேன். உள்ளே நாலா பக்கமும் கண்ணாடி அதான் இரண்டு பேரும் ஸ்கூல் டே பங்ஷனில் ஆட இருக்கும் டான்ஸை உள்ளே ஆடி பார்த்துட்டு வந்தோம் என்று சொன்னார்கள்,அடப்பாவிகளா வெளியில் இத்தனை பேர் வெயிட் பண்றாங்க, என்று எல்லாம் சிரித்தோம்.





அதே போல் நான்கு வருடம் முன் கொழுந்தன் கல்யாணம் முடிந்து ஹாலில் எல்லோரும் மாமியார்,மாமனார், நாத்தார்கள் அவர்கள் குழந்தைகள் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது என் பையன் இப்ப சாச்சாக்கு கல்யாணம் முடிந்து விட்டது அடுத்து யாருக்கு கல்யாணம் நடக்கும் என்றான், மொய்தீன்,அனஸ்,ஜாபில்,சித்திக்,ஹகீம்,... பத்து பேர சொல்லிட்டு அப்பரன் ஹனிப் என்றது வாயெல்லாம் பல்லு தான்,, அப்ப எனக்கு எந்த பொண்ணு என்று கேட்டான், இப்படி பார்த்து விட்டு இருக்கிறதிலேயே சின்னவள் குடுமியுடன் உட்கார்ந்து சாப்பிட்டு கொன்டு இருந்தாள், இதோ இவ இருக்காளே இவள வேண்டுமான பொண்ணா வைத்து கொள்ளலாம் என்று உடனே அவள் சிரிச்சிக்கிட்டே ஐய்யோ நான் மாட்டே பா இப்பதான் நான் ஸ்கூல் சேர்ந்தேன் எக்ஜாம் இருக்கு மிச்(ஸ்) திட்டுவாங்க என்றாள், அந்த பொண்ணு அன்று சொன்னதை நினைத்து அப்ப‌ அப்ப‌ சிரிப்ப‌துண்டு.

கோப‌ம்

ரொம்ப‌ இன்ரெஸ்டா சமைத்து தாளிக்கும் நேர‌ம் பைய‌ன் ம‌ம்மி , ம‌ம்மி சீக்கிர‌ம் வாங்க‌ நானும் கீழே விழுந்துட்டான் போல‌ அப்ப‌டியே அடுப்ப‌ ஆஃப் ப‌ண்ணி விட்டு ஓடி போய் பார்த்தா, என்னுடைய‌ இர‌ண்டு ட‌வ‌லில் ஒரு ட‌வ‌லை காணும். எங்கே வ‌ச்சீங்க‌...இல்லை இந்த‌ டீ ஷ‌ர்ட் போட‌வா, அந்த‌ டீ ஷ‌ர்ட் போட‌வா என்று கேட்கும் போது வ‌ருமே கோப‌ம்...

Wednesday, February 24, 2010

மீலாது ஸ்பெஷல் மட்டன் சப்ஜி பிரியாணி

பாசுமதி அரிசி - ஒரு கிலோ ( ஐந்து டம்ளர் , 5 ஆழாக்கு)
மட்டன் - முக்கால் கிலோ
உருளை 150, கேரட் 100, பீன்ஸ் 50, - அரை கிலோ
வெங்காயம் - அரை கிலோ (நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்)
தக்காளி - அரை கிலோ (நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்)
தயிர் - 175 மில்லி (முக்கால் டம்ளர்)
எண்ணை - 225 மில்லி (ஒன்னே கால் டம்ளர்
நெய் - முன்று தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - அரை கட்டு
புதினா - கால் கட்டு
பச்ச மிளகாய் - ஆறு (இரண்டாக ஒடித்து கொள்ளவும்)








  ரெட் கலர் பொடி - கால் தேக்கரண்டி
எலுமிச்சை - ஒரு பழம்
பட்டை - இரண்டு அங்குலம் ஒன்று
கிராம்பு - நான்கு
ஏலம் - முன்று
பிரிஞ்சி இலை - இரண்டு
ஷா ஜீரா - ஒரு தேக்கரண்டி


இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஐந்து மேசை கரண்டி குவியலாக
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு






செய்முறை



1. தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக வைக்கவும்.
2. சட்டியை காயவைத்து எண்ணையை அளந்து ஊற்றவும்.பட்டை, பிரிஞ்சி இலை, ஷா ஜீரா, ஏலம் கிராம்பு எல்லாம் போட்டு வெடிய விடவும்.
3.நீளமாக அரிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் சுருண்டவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி நன்கு வாடை போய் கலர் மாறும் வரை வதக்கனும், இல்லை சிம்மில் கூட ஐந்து நிமிடம் வைக்கலாம்.
5.அடுத்து கொத்து மல்லி தழை புதினாவை போட்டு வதக்கி ஒரு நிமிடம் விடவும்.
6.தக்காளி அரிந்து போட்டு , பச்ச மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.
7.தக்காளியை மூடி போட்டு நன்கு மடங்க விட வேண்டும்.







8.அடுத்து மட்டனை போட்டு வதக்கவும்.







9.. மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் போட்டு நன்கு வதக்கி ஐந்து நிமிடம் விடவும்.


10.அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்








11. அடுத்து கேரட்,உருளை, பட்டானியை சேர்த்து வதக்கவும்.








12.பிறகு தயிரை கலக்கி சேர்க்கவும்.
13. பாதி எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.
14. கிளறி மூடி போட்டு நன்கு கூட்டு கிரிப்பாகி மட்டன், காய்களை வேக விடவும்










16.நல்ல தீயை குறைத்து வைத்து 20 நிமிடம் வேக விடவும். இடையில் இரு முறை எடுத்து கிளறி விடவும்.



17. இப்போது பிரியாணி கூட்டு ரெடி எண்ணை மேலே தெளிந்து வரும். எவ்வளவுக்கு எவ்வள்வு சிம்மில் வைத்து செய்கிறீர்கலோ அவ்வள்வு அடி பிடிக்காம இருக்கும்.






ஒரு பெரிய வாயகன்ற சட்டியில் முக்கால் பாக தண்ணீர் வைத்து கொதிக்க விட்டு அதில் சிறிது கொத்துமல்லி புதினாவை போடவும்.கொதி வந்ததும் அரிசியை அரிசியை தட்டி உப்பு சேர்த்து கிளறி விடவும்.
19. முக்கால் பாகம் வெந்ததும் அடுப்பை அனைக்கவும்.
20.ஒரு பெரிய கண் வடிகட்டியில் அரிசியை வடிக்கவும்.








22.அடுப்பை ஏற்றி தீயை சிம்மில் வைத்து அதன் மேல் தம் போடும் கருவியை வைக்கவும்.
23.இப்போது மட்டன் கூட்டு உள்ள சட்டியை ஏற்றி அதில் வடித்த அரிசியை தட்டவும்.
24.லேசாக பிறட்டி விடவும்.
25.அரை பழ எலுமிச்சை சாற்றில் சிறிது ரெட் கலர் பொடி, மற்றும் கால் டம்ளர் வடித்த சூடான கஞ்சியை சேர்த்து சாதத்தின் மேல் வட்ட வடிவமாக ஊற்றவும்.
26.மூடி போட்டு வடித்த சூடான கஞ்சியை அதன் மேல் ஏற்றி 20 நிமிடம் தம்மில் விடவும்.












27.நன்கு அடியில் இருந்து மேல் வரை சாதத்தை மிலாய்க்கவும்(பிறட்டவும்).
28 சுவையான பிரியாணி ரெடி.
29.சுவையாண மீலாது ஸ்பெஷல் மட்டன் சப்ஜி பிரியாணி ரெ







குறிப்பு:


இது மீலாது விஷாவில் (நபிகள் பிறந்த நாளையொட்டி) முன்பு 20 வருடம் முன் இப்ப ஓதுகிறார்களா இல்லையான்னு தெரியல.ஒவ்வொரு தெருவில் உள்ளவர்களும் ஒன்று சேர்ந்து மவுலூது ஓதி (அவர் புகழ் பாடி) எல்லோருக்கும் ஒரு தொன்னையில் விளம்புவர்கள். அப்போது சாப்பிட்ட‌ பிரியாணி இந்த டேஸ்டில் தான் இருக்கும்.
இது சாதராணமா அடிக்கடி வீட்டில் செய்வது தான்,அப்போது சாப்பிட்ட‌ பிரியாணி இந்த டேஸ்டில் தான் இருக்கும். ஆகையால் இதில் மீலாது ஸ்பெஷ‌ல் பிரியாணி என்று கொடுத்துள்ளேன். இதை ஏற்க‌ன‌வே போன‌ வ‌ருட‌ம் த‌மிழ் குடும்ப‌த்திலும் கொடுத்துள்ளேன்.


இது இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கும் பல வகை பிரியாணியில் இதுவும் ஒரு வகை, இது வடித்து தம் போடுவது.
அதே அளவு சட்டி இல்லாதவர்கள் அரிசி ஒரு பங்கிற்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றி கொதிக்கவிட்டு அரிசியை அப்படியே அதில் சேர்த்து இதே போல் தம் போடவும்.
இதை சிக்கனிலும் செய்யலாம், சிக்கனில் செய்யும் போது ரொம்ப நேரம் வேகவிடதேவையில்லை இல்லை என்றால் கரைந்து எலும்பு தான் தேரும். இதற்கு அரைகிலோ மட்டன் கூட போதுமானது.
இதற்கு தொட்டு கொள்ள தால்சா கட்டியாக செய்தது, எண்ணை கத்திரிக்காய், தயிர் சட்னி,போன்றவை ஆகும்.
அதில் செய்யும் ஸ்வீட் மிட்டாகானா (அ) கேசரி) வீட்டில் நாம் நமக்கு பிடித்த தக்காளி ஹல்வா, கேரட் ஹல்வா,பீட்ரூட் ஹல்வா, பீர்னி, ஷீர் குருமா,இதில் ஏதாவது ஒன்றை செய்து கொள்ளலாம்


இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையல்










இலவச யோகா கற்று கொள்ள‌னுமா?


துபாயில் டேராவில் உள்ள Abra Camel Park kil யோகா இலவசமாக கற்று கொடுக்கிறார்கள்.

யாருக்கெல்லாம் யோகா செய்ய விருப்பம் இருக்கோ அவர்கள். காலை (4.30 லிருந்து 5.30 வரையில்) இரவு 7.30 யிலிருந்து 8.30 வரை சொல்லி கொடுக்கிறார்கள்.


இதே காசு கொடுத்து செய்யனும் என்றால் மாதத்திற்கு 500 திர்ஹம் ஆகும்.
Deira bazar area சுற்றி இருப்பவர்கள் போய் யோக செய்து பயனடைந்து கொள்ளூங்கள்.


பத்து நிமிடம் படுத்து ரெஸ்ட் எடுக்கிற யோகாவும் இருக்காம்,போகிறவர்கள் ஒரு பாய் தலையனை கண்டிப்பா கொண்டு போங்க. குளிரா இருப்பதால் தலைக்கு கேப், மஃப்ளரும் எடுத்து போங்க.


இதே காசு கொடுத்து செய்யனும் என்றால் மாதத்திற்கு 500 திர்ஹம் ஆகும்.


Deira bazar area சுற்றி இருப்பவர்கள் போய் யோக செய்து பயனடைந்து கொள்ளூங்கள்


Tuesday, February 23, 2010

School days Superb


வாங்க கொஞ்சம் சிரிக்கலாம். அப்படியே அழகு குழந்தைகளை பார்த்து ரசிக்கலாம். கவலையை மறக்கலாம்

Teacher: What happened in 1869?

Student:Gandhi ji was born.

Teacher :What happened in 1873?

Student:Gandhiji was four years old



Question:What is the fullform of maths.


Answer: Mentally affected teachers harassing students



Teacher : Now children , if I saw a man beating a donkey and stopped him then what virtue would I be showing ?


Student : BROTHERLY LOVE



Teacher :Because of Gandhiji's hard work what do we get on 15th August.


Student:A holiday





Teacher :Tomorrow there will be a lecture on Sun.Everyone must attend it.


Raju:No ma'm! I will not be able to attend it.


Teacher :Why?


Raju:My mother will not allow me to go so far!!!














Teacher:"Can anyone give me an example of Coincidence? "


Johnny:"Sir, my mother and father got married on the same day same time."










ஆஹா ஏசியே தேவையில்லை, இங்கேயே ஒளிஞ்சிக்காலம் போல இருக்கே. அம்மா சாக்லேட் எங்கே ஒளிச்சு வைத்து இருக்காங்க

அக்கார வடிசல் - sweet pongal





//இது நிறைய‌ பேருக்கு ம‌ற‌ந்து போன‌ ஐய‌ர் ஆத்து வ‌டிச‌ல், ச‌ர்க்க‌ரை பொங்க‌ல் போல் தான் கொஞ்ச‌ம் வித்தியாச‌ம்.


இந்த‌ குறிப்பு முன்பே பொங்க‌ல் அன்று போட்டேன், தெரியாம‌ல் டெலிட் ஆகிவிட்டது , ம‌ற்ற‌ குறிப்புக‌ளை விட‌ இத‌ற்கு தான் நிறைய‌ க‌ருத்துக‌க்ள் வ‌ந்திருந்த‌து, நிறைய ஓட்டுக்க‌ளும் கிடைத்திருந்த‌து, டெம்லேட் மாற்றும் போது டெலிட் ஆகிவிட்ட‌து, ஆகையால் ம‌றுப‌டி போட்டுள்ளேன்.



தேவையான‌ பொருட்க‌ள்






பச்சரிசி = ஒரு கப்
வெல்லம் = அரை கப்
கடலை பருப்பு = ஒரு மேசை கரண்டி
பச்சபருப்பு = கால் கப்
ஏலக்காய் பொடி = அரை தேக்கரண்டி
பால் = அரை கப்
தண்ணீர் = இரண்டு கப்
தேன் = ஒரு குழி கரண்டி
முந்திரி, பாதம், பிஸ்தா = பொடியாக அரிந்தது முன்று மேசை கரண்டி
கிஸ்மிஸ் பழம் = 10
நெய் = முன்று மேசை கரண்டி












செய்முறை




1. அரிசி பருப்பு வகைகளை களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து முக்கால் பதம் பாகு வரும் போது அதில் உள்ள மண்ணை வடிக்கவும். பாலை காய்ச்சி ஆறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து குக்கரில் ஒரு மேசை கரண்டி நெய் சேர்த்து வதக்கவும்.











2.பால்+ வெல்லம் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.




3.முக்கால் பாகம் வெல்லம் தண்ணீரை வற்ற விடவும்







4.ஒரு பாத்திரத்தில் நட்ஸ் வகைகளை நெயில் வறுக்கவும்






5.வறுத்த நட்ஸ் வகைகளை குக்கரில் சேர்க்கவும்









6. குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் முன்றாவது விசிலில் அடுப்பை அனைக்கவும். தேன் கடைசியாக சேர்த்து கிளற வேண்டும்.










குறிப்பு






ஒரு கப் அரிசிக்கு முக்கால் கப் வெல்லம் தேவைப்படும், இதில் தேன் சேர்ப்ப‌தால் அரை கப் போட்டுள்ளேன். நட்ஸ் வகைகள் அவரவர் விருப்பம். வெரும் முந்திரி, கிஸ்மிஸ் பழம் கூட போடலாம்.வேர்கடலையும் வருத்து போடலாம்.நெய் = இதற்கு முன்று குழிகரண்டி தேவைப்படும் நான் முன்று மேசை கரண்டி தான் போட்டுள்ளேன்.




இதில் படம் 1 நல்ல குழைவாக இருக்கு,படம் 2 கொஞ்சம் நெத்துன்னு இருக்கு தண்ணீர் அளவு ஒன்றுக்கு இரண்டு இரண்டரை அளவு வைத்து நன்கு கொதிக்க விட்டு குக்கர் வெயிட் போட்டு ஆப் செய்ததும் சிறிது நேரம் கழித்து திறந்தால் சரியாக இருக்கும்.


இனிப்பு சுல்லுன்னு அதிகம் தேவைபடுபவர்கள், வெல்லத்தை கொஞ்சம்அதிகமாக போட்டுகொள்ளலாம். இதில் அரை கப் வெல்லமும், தேனும் போட்டுள்ளேன்
வெண் பொங்கலை இங்கு சென்று பார்த்து கொள்ளலாம்.







Monday, February 22, 2010

காதில் ப‌ட்ஸ் ம‌ற்றும் கொண்டை ஊசி போடுவ‌தால் ஆப‌த்து

காதில் தண்ணீர் நின்றால், காதில் கிச்சு கிச்சு வந்தால் பட்ஸ் அல்லது கொண்டை ஊசி, ஹேர் கிளிப் போட்டு குடையாதீர்கள். இது பெரும் ஆபத்தில் கொண்டு போய் விடும்.

காதில் த‌ண்ணீர் நிற்கிற‌து என்று எல்லோரும் காதில் ப‌ட்ஸை போட்டு கிளீன் செய்வ‌தால் உள்ள‌ சின்ன‌ செவிப்ப‌ரை கிழிந்து இறைச்ச‌ல் ஏற்ப‌டுகிற‌து.காது இறைச்ச‌ல் என்றால் அது காதினுள் க‌ட‌லின் ஓசை போல் ச‌த்த‌ம் வ‌ரும்.
இந்த‌ இறைச்ச‌ல் நாளைடைவில் அதிக‌மாகி காதின் பின்புற‌ம் உள்ள‌ ந‌ர‌ம்பு வ‌லிக்க‌ ஆர‌ம்பிக்கும்.


காதில் பட்ஸ் போட போட அப்படிமெய் மறந்து துக்கம் கூட வரும்.
சுகமா போட போட நல்ல இருப்பதால் எல்லோரும் இதை தான் பயன் படுத்துகிறார்கள்.

அதுவும் இரண்டு முன்று பிள்ளைகள் இருக்கும் இடத்தில் காதை குடைந்தால், கை தவறி அவர்கள் கையில் பட்டு விட்டால் உடனே பட்ஸ் அல்லது ஹேர்பின் காதின் உள்ளே போய் குத்தி இரத்தமும் வரும்.



பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு மெல்லிய‌ காட்ட‌ன் துணியை கையில் வைத்து சுருட்டி அத‌ன் மூல‌ம் துடைத்து எடுங்க‌ள்.அவ‌ர்க‌ள் வ‌ள‌ர்ந்த‌தும் அவ‌ர்க‌ள் சுண்டு விர‌லால் மெல்லிய‌ ட‌வ‌ல் அல்ல‌து ம‌ல் துணி மூல‌ம் துடைக்க‌ க‌ற்று கொடுத்து பழ‌குங்க‌ள்.
பெரிய‌ பிள்ளைக‌ளுக்கும் இதை ப‌ற்றி எடுத்து சொல்லி க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ சொல்ல‌னும்.



இத‌னால் கேட்கும் திறனையும் இழ‌க்க வேண்டி வ‌ரும்.உள்ளே சீழ் கோர்த்து த‌லை முழுவ‌தும் வ‌லி ஏற்ப‌ட்டு ஆப்ரேஷ‌ன் ப‌ண்ணும் நிலை ஏற்ப‌டும்.



இது போல் என‌க்கு தெரிந்த‌ ஒரு ப‌த்து பேருக்கு இருக்கு.அதில் முன்று பேர் ஆப்ரேஷ‌ன் செய்துள்ளார்க‌ள். காதில் சின்ன‌ ஜ‌வ் என்ப‌தால் க‌ண், மூளை, ந‌ர‌ம்புக‌ள் எல்லாம் பாதிக்க‌ ப‌டும்.





ஆப்ரேஷ‌ன் செய்து கொண்ட நபர் கோமா ஸ்டேஜில் போய் மீண்டு வ‌ந்தார், ம‌ற்றொருவ‌ர் நாள் முழுவ‌து ம‌ய‌க்க‌த்தில் இருந்து உயிர் பிழைத்தார். இல்லை இத‌ற்கு ப‌ய‌ந்து அப்ப‌டியே க‌வ‌னிக்காம‌ல் விட்டு விட்டால் அது கேன்ச‌ராக‌ கூட‌ மாறும்.
ஆகையால் ஷ‌வ‌ரில் குளிக்கும் போது க‌ட‌லில் குளிக்கும் போது ம‌ழையில் ந‌னையும் போது காதினுள் த‌ண்ணீர் சென்றால் அதை ப‌ட்ஸ் போட்டு குடையாதீர்க‌ள்.





காதிலுள் த‌ண்ணீரை துடைக்க‌ உங்க‌ள் சுண்டுவிரலை ஒரு மெல்லிய‌ காட்ட‌ன் துணி கொண்டு சுற்றி துடைத்து எடுங்க‌ள்.


அடிக்க‌டி இந்த‌ பிராப்ள‌ம் வ‌ருகிற‌வ‌ர்க‌ள்,இர‌ண்டு காதிலும் ப‌ஞ்சை அடைத்து வைத்து குளிக்க‌லாம்.இப்ப‌டி காதிலுள் த‌ண்ணீர் செல்வ‌தால் சைன‌ஸ் பிர‌ப்ளம் கூட‌ வ‌ரலாம்.





நான் சொன்ன‌ ப‌த்து பேரில் முன்று பேருக்கு தான் ஆப்ரேஷ‌ன் முடிந்துள்ள‌து, இன்னும் முன்று பேருக்கு காது ச‌ரி வ‌ர‌ கேட்க‌வில்லை, மீதி பேர் இதெல்லாம் கேள்வி ப‌ட்டு கொண்டு டாக்ட‌ரிட‌ம் செல்ல‌ ப‌ய‌ந்து கொண்டு இருக்கிறார்க‌ள்.

காதில் ஏதாவது பிராப்ளம் என்றால் உடனே மருத்துவரை அனுகி ஆவன செய்யுஙங்கள்.
மீதி தகவல்களை வேலன் சாரின் பதிவான பட்ஸ் எனும் பயங்கரவாதி யை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

Saturday, February 20, 2010

ஜோவர் ஆட்டா தோக்ளா - jowar atta dhokla



தோக்ளா இது குஜாரத்தி அயிட்டம்,வெரும் கடலைமாவில் தயிர் சேர்த்து செய்வது ஒரு விதம், மற்றொன்று ரவை அரிசி மாவில் தயிர் சேர்க்காமல் செய்வது மற்றொரு விதம், ரொம்ப நாளா இத செய்து பார்க்கனும் என்று செய்து பார்த்தாச்சு.

இது இட்லி தோசை , பூரி கிழங்கு,பொங்கல் வடை சாப்பிடுவர்கள் வாய்க்கு இது பிடிக்காது.

மோர்களி, மோர் ரசம், தயிர் சம்பந்தப்பட்ட உணவு சாப்பிடுபவகளுக்கு இது ரொம்ப பிடிக்கும்.
இது நம்மூர் இட்லி, அல்லது உப்புமா போல் தான்.



தேவையான பொருட்கள்

ஊறவைக்க‌

ஜோவர் ஆட்டா + கோதுமை மாவு = முன்று மேசைகரண்டி
கடலைமாவு = இரண்டு தேக்கரண்டி
ரவை = இரண்டு தேக்கரண்டி
உப்பு = சிறிது
மஞ்சள் பொடி = இரண்டு சிட்டிக்கை
தயிர் = இரண்டு மேசை கரண்டி
தண்ணீர் = இரண்டு மேசை கரண்டி

மாவில் கலக்க‌


இஞ்சி துருவல் = அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் = ஒன்று
எலுமிச்சை சாறு = அரை தேக்கரண்டி
வெங்காயம் = அரை
கொத்து மல்லி தழை பொடியாக அரிந்தது = ஒரு தேக்கரண்டி
எண்ணை (நல்லெண்ணை) = ஒரு தேக்கரண்டி

தாளிக்க‌


எண்ணை = ஒரு தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி = ஒரு சிட்டிக்கை
கருவேப்பிலை = 5 ஆர்க்





ஜோவர் ஆட்டா+கோதுமை மாவு,கடலை மாவு,ரவை,உப்பு, மஞ்சள் பொடி, தயிர், தண்ணீர் எல்லாவற்றையும் கலக்கி ஊறவைக்கவும். ( நான் இதை இரவே ஊறவைத்து விட்டேன்).

காலையில் லெமன் சாறு, கொத்துமல்லி தழை,வெங்காயம்,இஞ்சி துருவல் , எண்ணை சேர்த்து கலக்கி ஒரு சதுர வடிவ டிபனில் வைத்து இட்லி பானையில் வைத்து அவிக்கவும்.


சிறிது துண்டு போட வரும் போது கியுபுகளாக கட் செய்யவும்.


தனியாக வானலியில் எண்ணை,கடுகு,பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து இந்த தோக்ளாக்களை போட்டு பிரட்டி எடுக்கவும்.


தொட்டு கொள்ள கெட்சப் நல்ல இருக்கும், புதினா துவையலும் சூப்பராக இருக்கும்.


குறிப்பு

//டயட்டில் உள்ளவர்களுக்கு நல்ல டிஷ் இது, டயட்டில் இல்லாதவர்கள், இதில் எண்ணைக்கு பதில் நெய் விட்டு கொள்ளலாம், ஒரு மேசை கரண்டி தேங்காய் துருவல் சேர்த்தாலும் சுவை அமோகமாக இருக்கும்.//
Jaleela Banu, Dubai

Thursday, February 18, 2010

தோசை வடகறி/வடைகறி - dosai vadai kaRi

எல்லோரும் இட்லிக்கு தான் வடகறி வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் எனக்கு தோசைக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப பிடிக்கும்.




  தேவையான பொருட்கள் தோசை மாவு = தோசை சுட தேவையான அளவு


வ‌டைக்கு 

கடலை பருப்பு = அரை கப் 
சோம்பு கால் தேக‌க்ர‌ண்டி 
இஞ்சி = ஒரு துண்டு
 பூண்டு = ஒரு துண்டு 
உப்பு = சிறிது
 வெங்காய‌ம் = ஒன்று (பொடியாக அரிந்தது) 
ப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று (பொடியாக‌ அரிந்த‌து) 

தாளிக்க‌ எண்ணை = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
 ப‌ட்டை = ஒன்று சிறியது
 சோம்பு கால் தேக்க‌ர‌ண்டி 
வெங்காய‌ம் = 3 பொடியாக‌ அரிந்தது 
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்கரண்டி 
க‌ருவேப்பிலை = சிறிது 
க‌ர‌ம் ம‌சாலா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி (ப‌ட்டை,கிராம்பு,ஏல‌ம் தூள்)
 த‌க்காளி = அரை ப‌ழம் 
தனியா தூள் (கொத்துமல்லி தூள்) = ஒரு தேக்கரண்டி 
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு 

அரைக்க‌ ப‌ச்ச‌மிள‌காய் = 2 சோம்பு அரை தேக்க‌ர‌ண்டி

  செய்முறை
கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து அத்துடன் உப்பு, இஞ்சி,பூண்டு,சோம்பு சேர்த்து அரைத்து வெங்காயம் பச்ச மிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து வடைகளாக சுட்டு வைக்கவும். 

 தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை (எண்ணை+ பட்டை+சோம்பு, வெங்காயம், கருவேப்பிலை மசாலாக்களை (தனியாத்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து ஊற்றி மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி தீயின் தனலை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

 
10 நிமிடம் போதுமானது வடைகளை உதிர்த்து சேர்த்து கரம் மசாலா தூவி மேலும் முன்று நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும்.
இந்த வடகறி சென்னையில் ரொம்ப பேமஸ் ஆனா இது ஒன்றுமில்ல , ஹோட்டலில் வடை ரொம்ப சுட்டு மீந்து போய் விட்டால் வடகறியாக்கிடுவார்கள்.சைதாப்பேட்டை வடைகறி